அக்காலத்தில் நான் இஸ்ரவேலின் வம்சங்களுக்கெல்லாம் தேவனாயிருப்பேன், அவர்கள் என் மக்களாயிருப்பார்கள் என்று யெகோவா சொல்லுகிறார். எரே 30:22ஏசா 41:10எரே 30:24சகரி 13:9ஆதி 17:7-8எரே 3:18ரோம 11:26-29எசேக் 11:20 பட்டயத்திற்குத் தப்பியிருந்த, மக்கள் வனாந்திரத்தில் இரக்கம்பெற்றார்கள்; இஸ்ரவேலுக்கு இளைப்பாறுதலைக் கட்டளையிடப்போகிறேன் என்று யெகோவா சொல்லுகிறார். எண் 10:33சங் 95:11உபா 1:33மத் 11:28ஏசா 63:7-14உபா 1:30உபா 12:9உபா 2:7 பூர்வகாலமுதல் யெகோவா எனக்குக் காட்சியளித்தார் என்பாய்; ஆம் ஆதி அன்பினால் உன்னை நேசித்தேன்; ஆதலால் காருணியத்தால் உன்னை இழுத்துக்கொள்கிறேன். சங் 103:17ஏசா 54:8-9ஓசி 11:4எபே 2:4-5உபா 33:31 யோவா 4:19உபா 7:7-92 தீமோ 1:9 இஸ்ரவேல் என்னும் கன்னிகையே, மறுபடியும் உன்னைக் கட்டுவிப்பேன், நீ கட்டப்படுவாய்; மறுபடியும் நீ மேளவாத்தியத்தோடும் ஆடல்பாடல் செய்கிறவர்களின் களிப்புள்ள கூட்டத்தோடும் புறப்படுவாய். எரே 33:7எரே 31:13ஆமோ 5:2அப் 15:16எரே 30:18-19வெளி 21:10-272இராஜா 19:21புலம் 2:13 மறுபடியும் சமாரியாவின் மலைகளில் திராட்சைத்தோட்டங்களை நாட்டுவாய்; நாட்டுகிறவர்கள் அவைகளை நாட்டி, அதின் பலனை அநுபவிப்பார்கள். ஆமோ 9:14உபா 28:30ஏசா 65:21-22லேவி 19:23-25மீகா 4:41 சாமு 21:5உபா 20:6எசேக் 36:8 எழுந்திருங்கள், சீயோனில் நம்முடைய தேவனாகிய கர்த்தரிடத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எப்பிராயீமின் மலைகளிலுள்ள காவற்காரர் சொல்லும் காலம் வரும். எரே 50:4-5ஏசா 2:2-4ஏசா 52:7-8எரே 50:19மீகா 4:1-3சகரி 8:20-232 நாளாக 13:42 நாளாக 30:5-11 யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: யாக்கோபுக்காக மகிழ்ச்சியாய் கெம்பீரித்து, தேசங்களுடைய தலைவருக்காக ஆர்ப்பரியுங்கள்; சத்தத்தைக் கேட்கச்செய்து, துதித்து: யெகோவாவே, இஸ்ரவேலில் மீதியான உமது மக்களைக் காப்பாற்றும் என்று சொல்லுங்கள். சங் 28:9ஏசா 37:31சங் 14:7ஏசா 42:10-12எரே 23:3ஆமோ 5:15உபா 28:13உபா 32:43 இதோ, நான் அவர்களை வடதேசத்திலிருந்து வரவழைத்து, அவர்களைப் பூமியின் எல்லைகளிலிருந்து அழைத்துவருவேன்; குருடரும், சப்பாணிகளும், கர்ப்பவதிகளும், பிள்ளைத்தாய்ச்சிகளும் அவர்களில் இருப்பார்கள்; திரளான கூட்டமாக இவ்விடத்திற்குத் திரும்புவார்கள். எசேக் 34:16ஏசா 42:16எரே 23:8மீகா 4:6எசேக் 34:13எபி 12:12ஏசா 40:11எரே 3:18 அழுகையுடனும் விண்ணப்பங்களுடனும் வருவார்கள்; அவர்களை வழிநடத்துவேன்; அவர்களைத் தண்ணீருள்ள நதியருகில் தவறாத செம்மையான வழியில் நடக்கச்செய்வேன்; இஸ்ரவேலுக்கு நான் தகப்பனாயிருக்கிறேன், எப்பிராயீம் என் மூத்தமகனாயிருக்கிறான். யாத் 4:22எரே 3:4எரே 31:20எரே 50:4மத் 5:4ஏசா 64:8எரே 3:191 நாளாக 29:10 தேசங்களே, நீங்கள் யெகோவாவுடைய வார்த்தையைக்கேட்டு, தூரத்திலுள்ள தீவுகளில் அறிவித்து, இஸ்ரவேலைச் சிதறடித்தவர் அதைச் சேர்த்துக்கொண்டு, ஒரு மேய்ப்பன் தன் மந்தையைக் காப்பதுபோல அதைக் காப்பார் என்று சொல்லுங்கள். ஏசா 40:11எசேக் 34:12உபா 30:4ஏசா 66:19யோவா 11:52அப் 20:28-29எசேக் 11:16யோவா 10:27 யெகோவா யாக்கோபை மீட்டு, அவனிலும் பலவானுடைய கைக்கு அவனை விலக்கி விடுவிக்கிறார். ஏசா 44:23ஏசா 48:20தீத் 2:14ஏசா 49:24எரே 15:21சங் 142:6லூக் 11:21-22மத் 12:29 அவர்கள் வந்து, சீயோனின் உச்சியில் கெம்பீரித்து, யெகோவா அருளும் கோதுமை, திராட்சைரசம், எண்ணெய், ஆட்டுக்குட்டிகள், கன்றுக்குட்டிகள் என்பவைகளாகிய இந்த நன்மைகளுக்காக ஓடிவருவார்கள்; அவர்களுடைய ஆத்துமா நீர்ப்பாய்ச்சலான தோட்டம்போலிருக்கும்; அவர்கள் இனித் தொய்ந்துபோவதில்லை. ஏசா 35:10ஏசா 58:11யோவே 3:18ஏசா 60:20ஏசா 65:19யோவா 16:22எசேக் 17:23எரே 33:9-11 அப்பொழுது கன்னிகைகளும், வாலிபரும், முதியோருடன் ஆனந்தக்களிப்பாய் மகிழுவார்கள்; நான் அவர்கள் துக்கத்தைச் சந்தோஷமாக மாற்றி, அவர்களைத் தேற்றி, அவர்கள் சஞ்சலம் நீங்க அவர்களைச் சந்தோஷப்படுத்துவேன். சங் 30:11ஏசா 61:3ஏசா 51:11ஏசா 51:3எஸ்த 9:22ஏசா 60:20எரே 31:4சங் 149:3 ஆசாரியர்களின் ஆத்துமாவைக் கொழுமையானவைகளால் பூரிப்பாக்குவேன்; என் மக்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார். எரே 31:251 பேது 2:9எரே 33:9மத் 5:6வெளி 5:10வெளி 7:16-17உன்னத 5:12 நாளாக 6:41 ராமாவில் புலம்பலும் கசப்பான அழுகையுமாகிய கூக்குரல் கேட்கப்பட்டது; ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, தன் பிள்ளைகள் இல்லாததினால் அவைகளுக்காக ஆறுதல் அடையாதிருக்கிறாள் என்று யெகோவா சொல்லுகிறார். மத் 2:16-18சங் 77:2எரே 40:1ஆதி 35:19ஆதி 37:35ஏசா 22:4எரே 10:20ஆதி 42:13 நீ அழாமல் உன் சத்தத்தை அடக்கி, நீ கண்ணீர்விடாமல் உன் கண்களைக் காத்துக்கொள் என்று யெகோவா சொல்லுகிறார்; உன் செயல்களுக்குப் பலனுண்டென்று யெகோவா சொல்லுகிறார்; அவர்கள் எதிரியின் தேசத்திலிருந்து திரும்பிவருவார்கள். ரூத் 2:12எபி 6:10எரே 30:3எபி 11:6எரே 33:72 நாளாக 15:7பிரச 9:7எரே 30:18 உன் முடிவைப்பற்றி உனக்கு நம்பிக்கையுண்டு; உன் பிள்ளைகள் தங்கள் தேசத்திற்குத் திரும்பிவருவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார். புலம் 3:21ஓசி 3:5ஓசி 2:15எரே 29:11-16புலம் 3:18புலம் 3:26ரோம 11:23-26எசேக் 37:25 நீர் என்னைத் தண்டித்தீர், நான் பணியாத மாடுபோல் அடிக்கப்பட்டேன்; என்னைத் திருப்பும், அப்பொழுது திருப்பப்படுவேன்; நீரே என் தேவனாகிய யெகோவா. எரே 31:9சங் 80:3ஏசா 9:13எரே 17:14எரே 3:21-22யோபு 5:17அப் 3:26ஓசி 5:15 நான் திரும்பினபின்பு மனவேதனைப்பட்டுக்கொண்டிருக்கிறேன், நான் என்னை அறிந்துகொண்டதற்குப் பின்பு மார்பில் 1 அடித்துக்கொண்டிருக்கிறேன், வெட்கி தலைகுனிந்துகொண்டும் இருக்கிறேன், என் இளவயதின் நிந்தையைச் சுமந்துவருகிறேன் என்று எப்பிராயீம் துக்கித்துப் புலம்பிக்கொண்டிருக்கிறதை நிச்சயமாய்க் கேட்டேன். எசேக் 36:31எரே 3:25எசேக் 21:12லூக் 18:13உபா 30:22 கொரி 7:10-11எபே 2:3-5எஸ்றா 9:6 எப்பிராயீம் எனக்கு அருமையான மகன் அல்லவோ? அவன் எனக்குப் பிரியமான பிள்ளையல்லவோ? அவனுக்கு விரோதமாய்ப் பேசினதுமுதல் அவனை நினைத்துக்கொண்டே இருக்கிறேன்; ஆகையால் என் உள்ளம் அவனுக்காகக் கொதிக்கிறது; அவனுக்கு உருக்கமாய் இரங்குவேன் என்று யெகோவா சொல்லுகிறார். ஏசா 55:7மீகா 7:18-19ஏசா 63:15நியாயாதி 10:16புலம் 3:31-32சங் 103:13ஓசி 14:4லூக் 15:24 உனக்கு ஞாபகக்குறிகளை வை; உனக்குத் தூண்களை நாட்டு; நீ நடந்த வழியாகிய பாதையின்மேல் உன் மனதை வை; இஸ்ரவேலாகிய மகளே, திரும்பு; இந்த உன்னுடைய பட்டணங்களுக்கே திரும்பு. எரே 50:5ஏசா 62:10எசேக் 40:4ஆகா 1:5ஏசா 48:20ஏசா 52:11-12ஏசா 57:14எரே 3:14 முறைகெட்டுப்போன மகளே, எதுவரை விலகித் திரிவாய்? யெகோவா பூமியில் ஒரு புதுமையை உண்டாக்குவார், பெண்ணானவள் ஆணைச் சூழ்ந்துகொள்ளுவாள். எரே 49:4எரே 7:24லூக் 1:34-35மத் 1:21ஓசி 11:7ஓசி 4:16ஓசி 8:5எரே 2:18 இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: நான் அவர்கள் சிறையிருப்பைத் திருப்பும்போது, அவர்கள்: நீதியின் இருப்பிடமே, பரிசுத்த பர்வதமே, யெகோவா உன்னை ஆசீர்வதிக்கக்கடவரென்கிற வார்த்தையை யூதாவின் தேசத்திலும் அதின் பட்டணங்களிலும் சொல்லுவார்கள். சகரி 8:3ஏசா 1:26எரே 50:7ஏசா 1:21ஏசா 60:21எரே 23:5-8எரே 30:18மீகா 4:1 அதில் யூதாவும், அதனுடைய எல்லாப் பட்டணங்களின் மனிதரும் விவசாயிகளும், மந்தைகளை மேய்க்கிறவர்களும் ஒன்றாகக் குடியிருப்பார்கள். சகரி 8:4-8எசேக் 36:10எரே 33:11-13சகரி 2:4 நான் களைப்புற்ற ஆத்துமாவைச் சம்பூரணமடையச்செய்து, சோர்ந்துபோன எல்லா ஆத்துமாவையும் நிரப்புவேன். மத் 5:6மத் 11:28சங் 107:9யோவா 4:14எரே 31:14ஏசா 50:4லூக் 1:532 கொரி 7:6 இதற்காக நான் விழித்துப்பார்த்துக்கொண்டிருக்கிறேன்; என் நித்திரை எனக்கு இன்பமாயிருந்தது. சங் 127:2சகரி 4:1-2 இதோ, நாட்கள் வருமென்று யெகோவா சொல்லுகிறார், அப்பொழுது இஸ்ரவேல் மக்களையும், யூதா மக்களையும், மனிதவித்தினாலும் மிருகவித்தினாலும் விதைப்பேன். ஓசி 2:23எசேக் 36:11எசேக் 36:9சகரி 10:9எரே 30:19 அப்பொழுது நான் பிடுங்கவும், இடிக்கவும், நிர்மூலமாக்கவும், அழிக்கவும், தீங்குசெய்யவும் அவர்கள் பேரில் எப்படி எச்சரிக்கையாயிருந்தேனோ, அப்படியே கட்டவும், நாட்டவும் அவர்கள்பேரில் எச்சரிக்கையாயிருப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார். எரே 24:6எரே 1:10எரே 18:7-9எரே 44:27எரே 45:4அப் 15:16தானி 9:14பிரச 3:2-3 பிதாக்கள் திராட்சைக்காய்களைச் சாப்பிட்டார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசியது என்று அந்நாட்களில் சொல்லமாட்டார்கள். எசேக் 18:2-3புலம் 5:7எரே 31:30 அவனவன் தன்தன் அக்கிரமத்தினாலே இறப்பான்; எந்த மனிதன் திராட்சைக்காய்களை சாப்பிட்டானோ அவனுடைய பற்களே கூசிப்போகும். எசேக் 18:20ஏசா 3:11உபா 24:16கலா 6:5எசேக் 18:4எசேக் 3:18-19எசேக் 33:18எசேக் 33:13 இதோ, நாட்கள் வருமென்று யெகோவா சொல்லுகிறார், அப்பொழுது இஸ்ரவேல் மக்களுடனும் யூதா மக்களுடனும் புது உடன்படிக்கைசெய்வேன். எபி 10:16-17எசேக் 37:26எரே 31:31-34எரே 32:402 கொரி 3:6லூக் 22:20எபி 12:241 கொரி 11:25 நான் அவர்கள் முற்பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துவர கைப்பிடித்த நாளில் அவர்களுடன் செய்த உடன்படிக்கையைப்போல அல்ல; ஏனெனில் நான் அவர்களுக்கு நாயகராயிருந்தும், அந்த என் உடன்படிக்கையை அவர்கள் மீறி அவமாக்கிப்போட்டார்களே என்று யெகோவா சொல்லுகிறார். யாத் 24:6-8உபா 1:31உபா 5:3யாத் 19:5யோவா 3:29எசேக் 16:59-62எசேக் 16:8ஓசி 3:1 அந்நாட்களுக்குப்பிறகு, நான் இஸ்ரவேல் மக்களுடன் செய்யப்போகிற உடன்படிக்கையாவது; நான் என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் உள்ளத்தில் வைத்து, அதை அவர்கள் இருதயத்தில் எழுதி, நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் மக்களாயிருப்பார்கள் என்று யெகோவா சொல்லுகிறார். 2 கொரி 3:3எபி 10:16எபி 8:10எசேக் 11:19-20எரே 24:7எரே 32:40எசேக் 36:25-27சங் 40:8 இனி ஒருவன் தன் அருகில் உள்ளவனையும், ஒருவன் தன் சகோதரனையும் நோக்கி: யெகோவாவை அறிந்துகொள் என்று போதிப்பதில்லை; அவர்களில் சிறியவன்முதல் பெரியவன்வரை, எல்லோரும் என்னை அறிந்துகொள்வார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்; நான் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பேன். ஏசா 43:25எபி 8:121 யோவா 2:27ஏசா 54:13எரே 33:8எபி 10:17-18எரே 50:20யோவா 17:3 சூரியனைப் பகல் வெளிச்சத்துக்காகவும் சந்திரன், நட்சத்திரங்களை இரவு வெளிச்சத்துக்காகவும் கட்டளையிட்டவரும், அலைகள் கொந்தளிக்கும் விதத்தில் சமுத்திரத்தைக் குலுக்குகிறவரும், சேனைகளின் யெகோவா என்னும் பெயருடைய யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: ஏசா 51:15எரே 10:16சங் 136:7-9ஆதி 1:14-18எரே 50:34உபா 4:19ஏசா 54:5மத் 5:45 இந்த அமைப்புகள் எனக்கு முன்பாக இல்லாமல் ஒழிந்துபோனால், அப்பொழுது இஸ்ரவேல் சந்ததியும் எனக்கு முன்பாக என்றைக்கும் ஒரு தேசமாயிராமல் அகன்றுபோகும் என்று யெகோவா சொல்லுகிறார். ஏசா 54:9-10எரே 33:20-26சங் 89:36-37சங் 148:6ஆமோ 9:8-9உபா 32:26எரே 46:28சங் 102:28 யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: மேலே இருக்கிற வானங்கள் அளக்கப்படவும், கீழே இருக்கிற பூமியின் அஸ்திபாரங்கள் ஆராயமுடியுமானால், நான் இஸ்ரவேல் வம்சத்தார் அனைவரையும் அவர்கள் செய்த எல்லாவற்றிக்காகவும் வெறுத்துவிடுவேன் என்று யெகோவா சொல்லுகிறார். எரே 33:24-26ஏசா 40:12எரே 33:22ரோம 11:1-5ரோம 11:26-29எரே 46:28யோபு 11:7-9நீதி 30:4 இதோ, நாட்கள் வருமென்று யெகோவா சொல்லுகிறார்; அப்பொழுது இந்த நகரம், அனானெயேலின் கோபுரமுதல் கடைசிவாசல்வரை கர்த்தருக்கென்று கட்டப்படும். சகரி 14:102இராஜா 14:13எரே 30:182 நாளாக 26:9எரே 31:27தானி 9:25எசேக் 48:30-35ஏசா 44:28 பிறகு அளவுநூல் அதற்கு எதிராய்க் காரேப் என்னும் மேட்டின்மேல் சென்று கோவாத் புறமாக சுற்றிப்போகும். சகரி 2:1-2எசேக் 40:8 பிணங்களைப் புதைக்கிறதும், சாம்பலைக் கொட்டுகிறதுமான பள்ளத்தாக்குகள் அனைத்தும், கீதரோன் வாய்க்காலுக்கு இப்பக்கம் கிழக்கே இருக்கிற குதிரைவாசலின் கடைசிவரை இருக்கிற எல்லா நிலங்களும் யெகோவாவுக்குப் பரிசுத்தமாயிருக்கும்; பிறகு அது என்றென்றைக்கும் பிடுங்கப்படுவதுமில்லை இடிக்கப்படுவதுமில்லை என்கிறார். 2 சாமு 15:23யோவே 3:172 நாளாக 23:152இராஜா 11:16யோவா 18:12இராஜா 23:122இராஜா 23:6நெகே 3:28
எரேமியா 31
Jeremiah 31அத்தியாயம் 31