சகரியா 8

Zechariah 8
அத்தியாயம் 8

எருசலேம் பரிசுத்த நகரம்

சேனைகளுடைய யெகோவாவின் வார்த்தை உண்டாகி, அவர்: நான் சீயோனுக்காக கடும் வைராக்கியங்கொண்டேன்; அதற்காக மகா உக்கிரமான வைராக்கியங்கொண்டேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். யோவே 2:18சங் 78:58-59சகரி 1:14-16ஏசா 42:13-14நாகூ 1:2எசேக் 36:5-6ஏசா 59:17ஏசா 63:15 நான் சீயோனிடத்தில் திரும்பி, எருசலேமின் நடுவிலே வாசம்செய்வேன்; எருசலேம் சத்திய நகரம் என்றும், சேனைகளுடைய யெகோவாவின் மலை பரிசுத்த மலை என்றும் அழைக்கப்படும் என்று யெகோவா சொல்லுகிறார். யோவா 1:14சகரி 1:162 கொரி 6:16கொலோ 2:9எபே 2:21-22ஏசா 1:26ஏசா 66:20எரே 30:10-11 திரும்பவும் எருசலேமின் வீதிகளில் முதிர்வயதினாலே தங்கள் கைகளில் கோலைப்பிடித்து நடக்கிற வயதான ஆண்களும் பெண்களும் குடியிருப்பார்கள். ஏசா 65:20-22யோபு 42:171 சாமு 2:31எபி 12:22யோபு 5:26புலம் 5:11-15புலம் 2:20-22 நகரத்தின் தெருக்களிலே விளையாடுகிற ஆண்பிள்ளைகளும் பெண்பிள்ளைகளும் அதின் வீதிகளில் நிறைந்திருக்கும் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். எரே 31:13எரே 30:19-20எரே 31:27எரே 33:11புலம் 2:19மத் 11:16-17சங் 128:3-4சங் 144:12-15 சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: அது இந்த மக்களில் மீதியானவர்களின் பார்வைக்கு இந்நாட்களில் ஆச்சரியமாயிருந்தாலும், என் பார்வைக்கும் ஆச்சரியமாயிருக்குமோ என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். எரே 32:27லூக் 1:37லூக் 18:27ரோம 4:20-212இராஜா 7:2ஆதி 18:14எரே 32:17லூக் 1:20 இதோ, கிழக்குதேசத்திலும் தெற்கு தேசத்திலுமிருந்து என் மக்களை நான் காப்பாற்றி, எரே 31:8ஆமோ 9:14-15ஏசா 27:12-13ஏசா 43:5-6ஏசா 49:12மல்கி 1:11எசேக் 37:19-25ஓசி 11:10-11 அவர்களை அழைத்துக்கொண்டு வருவேன்; அவர்கள் எருசலேமின் நடுவிலே குடியிருப்பார்கள்; அவர்கள் எனக்கு உண்மையும் நீதியுமான மக்களாயிருப்பார்கள், நான் அவர்களுக்கு தேவனாயிருப்பேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். எசேக் 36:28எசேக் 11:20எரே 31:33எரே 4:2வெளி 21:3வெளி 21:72 கொரி 6:16-18சகரி 13:9 சேனைகளுடைய யெகோவாவின் வீடாகிய ஆலயம் கட்டப்படும்படிக்கு அதின் அஸ்திபாரங்கள் போடப்பட்ட நாள்முதற்கொண்டிருக்கிற தீர்க்கதரிசிகளின் வாயினால் இந்த வார்த்தைகளை இந்நாட்களில் கேட்டுவருகிறவர்களே, உங்கள் கைகள் திடப்படக்கடவது என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். ஏசா 35:41 நாளாக 22:132 தீமோ 2:1எபே 6:10எஸ்றா 5:1-2ஆகா 2:211 நாளாக 28:20ஆகா 1:1 இந்நாட்களுக்கு முன்னே மனிதனுடைய வேலையால் பலனுமில்லை, மிருகஜீவனுடைய வேலையால் பலனுமில்லை; போகிறவனுக்கும் வருகிறவனுக்கும் நெருக்கடியினிமித்தம் சமாதானமுமில்லை; எல்லா மனிதர்களையும் ஒருவரையொருவர் விரோதிக்கச்செய்தேன். ஆகா 1:6-11ஆமோ 9:4ஏசா 19:2ஆமோ 3:6ஆகா 2:16-18நியாயாதி 5:11நியாயாதி 5:6-7எரே 16:16 இப்போதோ இந்த மக்களில் மீதியானவர்களுக்கு நான் முந்தின நாட்களில் இருந்ததுபோல இருக்கமாட்டேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். ஏசா 12:1ஆகா 2:19சங் 103:9சகரி 8:8-9ஏசா 11:13மல்கி 3:9-11 விதைப்பு சமாதானமுள்ளதாயிருக்கும்; திராட்சைச்செடி தன் கனியைத் தரும்; பூமி தன் பலனைத் தரும்; வானம் தன் பனியைத் தரும்; இந்த மக்களில் மீதியானவர்கள் இதையெல்லாம் சொந்தமாக்கிக்கொள்ள கட்டளையிடுவேன். லேவி 26:4-5உபா 33:13ஆதி 27:28மத் 6:33எசேக் 34:26-27எசேக் 36:30ஆகா 1:10ஆகா 2:19 சம்பவிப்பதென்னவென்றால்: யூதா வம்சத்தாரே, இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் புறஜாதிகளுக்குள்ளே சாபமாயிருந்ததுபோலவே, ஆசீர்வாதமாயிருப்பதற்காக நான் உங்களைக் காப்பாற்றுவேன்; பயப்படாதேயுங்கள், உங்கள் கைகள் திடப்படக்கடவது. 1 கொரி 16:13ஆதி 12:2-3சங் 72:17சகரி 8:9செப்ப 3:20எசேக் 5:15ரூத் 4:11-12கலா 3:28-29 சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: உங்கள் முன்னோர்கள் எனக்குக் கோபமூட்டினபோது நான் உங்களைத் தண்டிக்க நினைத்து, மனம் மாறாமல் இருந்ததுபோல, எசேக் 24:14எரே 31:28எரே 4:282 நாளாக 36:16ஏசா 14:24எரே 15:1-6எரே 20:16சங் 33:11 இந்நாட்களில் எருசலேமிற்கும் யூதாவிற்கும் நன்மைசெய்யும்படித் திரும்ப நினைத்தேன்; பயப்படாதேயுங்கள். சகரி 8:13மீகா 7:18-20லூக் 12:32எரே 29:11-14எரே 32:42மீகா 4:10-13ஏசா 43:1-2செப்ப 3:16-17 நீங்கள் செய்யவேண்டிய காரியங்கள் என்னவென்றால்: அவனவன் பிறனுடன் உண்மையைப் பேசுங்கள்; உங்கள் வாசல்களில் சத்தியத்திற்கும் சமாதானத்திற்கும் ஏற்றபடி நியாயந்தீருங்கள். எபே 4:25சகரி 7:9சங் 15:2உபா 10:12-13லூக் 3:8-14ஏசா 9:7மத் 5:9நீதி 12:17 ஒருவனும் பிறனுக்கு விரோதமாகத் தன் இருதயத்தில் தீங்கு நினைக்காமலும், பொய் சத்தியத்தின்மேல் பிரியப்படாமலும் இருங்கள்; இவைகளெல்லாம் நான் வெறுக்கிற காரியங்கள் என்று யெகோவா சொல்லுகிறார். நீதி 6:16-19ஆப 1:13எரே 4:14எரே 44:4மல்கி 3:5மீகா 2:1-3நீதி 3:29சங் 10:3 சேனைகளுடைய யெகோவாவின் வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: நான்காம் மாதத்தின் உபவாசமும், ஐந்தாம் மாதத்தின் உபவாசமும், ஏழாம் மாதத்தின் உபவாசமும், பத்தாம் மாதத்தின் உபவாசமும், யூதா வம்சத்தாருக்கு மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் நல்ல பண்டிகைகளாகவும் மாறிப்போகும்; ஆகையால் சத்தியத்தையும் சமாதானத்தையும் சிநேகியுங்கள் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். எரே 39:2சகரி 8:16சகரி 7:3சகரி 7:52இராஜா 25:25எரே 52:4சங் 30:112இராஜா 25:3-4 இன்னும் மக்களும் அநேகம் பட்டணங்களின் குடிகளும் வருவார்கள் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். ஏசா 2:2-3மீகா 4:1-2சகரி 2:11ஏசா 60:3-12எரே 16:19மத் 8:111 இராஜா 8:411 இராஜா 8:43 ஒரு பட்டணத்தின் குடிகள் மறுபட்டணத்தின் குடிகளிடத்தில் போய், நாம் யெகோவாவுடைய சமுகத்தில் விண்ணப்பம்செய்யவும் சேனைகளின் யெகோவாவை தேடவும், துரிதமாகப்போவோம் வாருங்கள்; நாங்களும் போவோம் என்று சொல்லுவார்கள். சகரி 7:2சங் 146:1-2ஓசி 6:3சங் 103:22சங் 122:1-9 அநேக மக்களும் பலத்த ஜாதிகளும் எருசலேமிலே சேனைகளின் யெகோவாவை தேடவும், யெகோவாவுடைய சமுகத்தில் விண்ணப்பம் செய்யவும் வருவார்கள். சகரி 8:21ஏசா 25:7ஏசா 60:3-22வெளி 15:4வெளி 21:24கலா 3:8ஏசா 55:5ஆகா 2:7 அந்நாட்களில் பலவித மொழிகளைப் பேசுகிறவர்களாகிய அன்னியமக்களில் பத்து மனிதர்கள் ஒரு யூதனுடைய ஆடையின் தொங்கலைப் பிடித்துக்கொண்டு: தேவன் உங்களுடன் இருக்கிறார் என்று கேள்விப்பட்டோம்; ஆகையால் உங்களோடேகூடப் போவோம் என்று சொல்லி, அவனைப் பற்றிக்கொள்வார்கள் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார் என்றார். ஏசா 55:51 கொரி 14:25ஏசா 45:14ஏசா 60:3அப் 13:47-481 இராஜா 8:42-43ஏசா 66:18யோசு 2:9-13