ஏசாயா 25

Isaiah 25
அத்தியாயம் 25

யெகோவாவுக்கு ஸ்தோத்திரம்

யெகோவாவே, நீரே என் தேவன்; உம்மை உயர்த்தி, உமது நாமத்தைத் துதிப்பேன்; நீர் அதிசயமானவைகளைச் செய்தீர்; உமது முந்தின ஆலோசனைகள் சத்தியமும் உறுதியுமானவைகள். யாத் 15:2சங் 118:28எண் 23:19சங் 98:1சங் 40:5ஏசா 28:29ஏசா 61:10எபே 1:11 நீர் எங்களுடைய எதிரியின் நகரத்தை மண்மேடும், பாதுகாப்பான பட்டணத்தைப் பாழுமாக்கினீர்; அந்நியரின் தலைநகரை நகரமாக இராதபடிக்கும், என்றைக்கும் கட்டப்படாதபடிக்கும் செய்தீர். ஏசா 13:22ஏசா 17:1ஏசா 25:12உபா 13:16ஏசா 14:23ஏசா 21:9ஏசா 23:13எரே 51:26 ஆகையால் பலத்த மக்கள் உம்மை மகிமைப்படுத்துவார்கள்; கொடூரமான தேசங்களின் நகரம் உமக்குப் பயப்படும். ஏசா 49:23-26சங் 46:10-11சகரி 14:16சகரி 14:9எசேக் 38:23எசேக் 39:21-22ஏசா 13:11ஏசா 60:10-14 கொடூரமானவர்களின் சீறல் மதிலை மோதியடிக்கிற பெருவெள்ளத்தைப்போல் இருக்கும்போது, நீர் ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும், பெருவெள்ளத்திற்குத் தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமானீர். செப்ப 3:12யாக் 2:5ஏசா 32:2மத் 7:25-27யோபு 5:15-16சங் 12:5ஏசா 29:19ஏசா 32:18-19 வறட்சியான இடத்தின் வெப்பம் மேகத்தினால் தணிவதுபோல், அந்நியரின் மும்முரத்தைத் தணியச்செய்வீர்; மேகத்தின் நிழலினால் வெயில் தணிகிறதுபோல் பெலவந்தரின் ஆரவாரம் தணியும். ஏசா 54:15-17தானி 11:36-45தானி 7:23-27எசேக் 32:18-32எசேக் 38:9ஏசா 10:32-34ஏசா 10:8-15ஏசா 13:11 சேனைகளின் யெகோவா இந்த மலையிலே சகல மக்களுக்கும் ஒரு விருந்தை ஆயத்தப்படுத்துவார்; அது கொழுமையான பதார்த்தங்களும், பழமையான திராட்சைரசமும், இறைச்சியும் கொழுப்புமுள்ள பதார்த்தங்களும், தெளிந்த பழமையான திராட்சைரசமும் நிறைந்த விருந்தாயிருக்கும். மத் 8:11எரே 31:12-13சங் 63:5சகரி 9:16-17லூக் 22:30வெளி 19:9எபி 12:22ஏசா 2:2-3 சகல மக்கள்மேலுமுள்ள முக்காட்டையும், சகல தேசங்களையும் மூடியிருக்கிற மூடலையும், இந்த மலையிலே அகற்றிப்போடுவார். எபே 4:18ஏசா 60:1-3மத் 27:512 கொரி 3:13-18எபி 10:19-21அப் 17:30எபே 3:5-6எபே 5:8 அவர் மரணத்தை ஜெயமாக விழுங்குவார்; கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து, தமது மக்களின் அவப்பெயரை பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார்; யெகோவாவே இதைச் சொன்னார். வெளி 21:4வெளி 7:171 கொரி 15:54ஓசி 13:141 கொரி 15:26ஏசா 35:10வெளி 20:142 தீமோ 1:10 அக்காலத்திலே: இதோ, இவரே நம்முடைய தேவன்; இவருக்காகக் காத்திருந்தோம், இவர் நம்மை காப்பாற்றுவார்; இவரே யெகோவா, இவருக்காகக் காத்திருந்தோம்; இவருடைய காப்பாற்றுதலால் களிகூர்ந்து மகிழுவோம் என்று சொல்லப்படும். சங் 27:14ஆதி 49:18மீகா 7:7ஏசா 26:8-9ஏசா 35:2சங் 20:5வெளி 1:7வெளி 19:1-7 யெகோவாவுடைய கரம் இந்த சீயோனின் மலையிலே தங்கும்; வைக்கோல் எருக்களத்தில் மிதிக்கப்படுவதுபோல, மோவாப் அவர்கீழ் மிதிக்கப்பட்டுப்போகும். ஆமோ 2:1-3ஏசா 18:4ஏசா 25:6ஏசா 26:6எரே 48:2செப்ப 2:9செப்ப 3:15-17ஏசா 10:31 நீந்துகிறவன் நீந்துவதற்காகத் தன் கைகளை விரிப்பதுபோல் அவர் தமது கைகளை அவர்கள் நடுவிலே விரித்து, அவர்களுடைய பெருமையையும், அவர்கள் கைகளின் சதித்திட்டங்களையும் தாழ்த்திவிடுவார். ஏசா 14:26ஏசா 16:14ஏசா 16:6ஏசா 2:11ஏசா 5:25கொலோ 2:15தானி 4:37ஏசா 65:2 அவர் உன் மதில்களுடைய உயர்ந்த பாதுகாப்பை கீழே தள்ளித் தாழ்த்தித் தரையிலே தூளாக அழிப்பார். ஏசா 26:5வெளி 18:212 கொரி 10:4-5எபி 11:30ஏசா 13:19-22ஏசா 14:23ஏசா 15:1எரே 51:58