ஆரோனுடைய கோல் பாம்பாக மாறுதல்
யெகோவா மோசேயை நோக்கி: “பார், உன்னை நான் பார்வோனுக்கு தேவனாக்கினேன்; உன் சகோதரனாகிய ஆரோன் உன்னுடைய தீர்க்கதரிசியாக இருப்பான். யாத் 4:15-16சங் 82:6யோவா 10:35-36எரே 1:101 இராஜா 17:232இராஜா 6:32ஆதி 19:21பிரச 1:10 நான் உனக்குக் கட்டளையிடும் யாவையும் நீ சொல்லவேண்டும்; பார்வோன் இஸ்ரவேல் மக்களைத் தன்னுடைய தேசத்திலிருந்து அனுப்பிவிடும்படி உன்னுடைய சகோதரனாகிய ஆரோன் அவனிடம் பேசவேண்டும். யாத் 4:151 இராஜா 22:14அப் 20:27உபா 4:2யாத் 6:29எசேக் 3:10எசேக் 3:17எரே 1:17 நான் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தி, எகிப்துதேசத்தில் என்னுடைய அடையாளங்களையும் அற்புதங்களையும் மிகுதியாக நடப்பிப்பேன். யாத் 4:21யாத் 11:9அப் 2:22அப் 7:36யோவா 4:48சங் 105:27-36சங் 135:9சங் 78:43-51 பார்வோன் உங்களுடைய சொல்லைக்கேட்கமாட்டான்; ஆகையால் எகிப்திற்கு விரோதமாக நான் என்னுடைய கையை நீட்டி, கொடிய தண்டனையினால் என்னுடைய சேனைகளும் என்னுடைய மக்களுமாகிய இஸ்ரவேல் மக்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்வேன். யாத் 11:9யாத் 6:6யாத் 12:51யாத் 10:1யாத் 3:20யாத் 6:26யாத் 9:3எசேக் 14:21 நான் எகிப்தின்மேல் என்னுடைய கையை நீட்டி, இஸ்ரவேலர்களை அவர்கள் நடுவிலிருந்து புறப்படச்செய்யும்போது, நானே யெகோவா என்று எகிப்தியர்கள் அறிவார்கள்” என்றார். யாத் 14:18யாத் 7:17யாத் 8:22யாத் 14:4யாத் 3:20யாத் 8:10எசேக் 25:17எசேக் 28:22 மோசேயும் ஆரோனும் யெகோவா தங்களுக்குக் கட்டளையிட்டபடியே செய்தார்கள். யாத் 7:2யாத் 7:10ஆதி 6:22யாத் 12:28யாத் 39:43யாத் 40:16ஆதி 22:18யோவா 15:10 அவர்கள் பார்வோனோடு பேசும்போது, மோசேக்கு எண்பது வயதும், ஆரோனுக்கு எண்பத்துமூன்று வயதுமாக இருந்தது. உபா 34:7அப் 7:23அப் 7:30உபா 31:2உபா 29:5யாத் 2:23ஆதி 41:46சங் 90:10
ஆரோனுடைய கோல் பாம்பாக மாறியது.
யெகோவா மோசேயையும் ஆரோனையும் நோக்கி: “உங்களை ஒரு அற்புதம் காட்டுங்கள் என்று பார்வோன் உங்களோடு சொன்னால்; அப்பொழுது நீ ஆரோனை நோக்கி: உன்னுடைய கோலை எடுத்து அதைப் பார்வோனுக்கு முன்பாகப் போடு என்பாயாக; அது பாம்பாகும்” என்றார். யாத் 4:2ஏசா 7:11யோவா 2:18யாத் 4:17யோவா 6:30யாத் 10:13யாத் 4:20யாத் 7:10-12 மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் போய், யெகோவா தங்களுக்குக் கட்டளையிட்டபடி செய்தார்கள். ஆரோன் பார்வோனுக்கு முன்பாகவும், அவனுடைய வேலைக்காரர்களுக்கு முன்பாகவும் தன்னுடைய கோலைப் போட்டான், அது பாம்பானது. யாத் 4:3ஆமோ 9:3லூக் 10:19மாற் 16:18 அப்பொழுது பார்வோன் ஞானிகளையும், சூனியக்காரர்களையும் அழைத்தான். எகிப்தின் மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் அப்படிச் செய்தார்கள். யாத் 7:222 தீமோ 3:8யாத் 8:18யாத் 8:72 தெச 2:9தானி 2:2ஆதி 41:8தானி 5:7 அவர்கள் ஒவ்வொருவனாகத் தன் தன் கோலைப் போட்டபோது, அவைகள் பாம்புகளாயின; ஆரோனுடைய கோலோ அவர்களுடைய கோல்களை விழுங்கியது. 1 யோவா 4:4யாத் 8:18-19யாத் 9:11அப் 13:8-11அப் 19:19-20அப் 8:9-13 யெகோவா சொல்லியிருந்தபடி பார்வோனின் இருதயம் கடினப்பட்டது, அவர்களுடைய சொல்லைக் கேட்காமற்போனான். யாத் 4:21யாத் 8:15சகரி 7:11-12யாத் 10:1யாத் 10:20யாத் 10:27எபி 3:13எபி 3:7-8
1 வது வாதை-இரத்தமாகிய வாதை
அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “பார்வோனின் இருதயம் கடினமானது; மக்களை விடமாட்டேன் என்கிறான். யாத் 10:1யாத் 10:20யாத் 10:27யாத் 8:15யாத் 10:4யாத் 4:23யாத் 8:2யாத் 9:2 காலையில் நீ பார்வோனிடம் போ, அவன் நதிக்குப் புறப்பட்டு வருவான்; நீ அவனுக்கு எதிராக நதியோரத்தில் நின்று, பாம்பாக மாறின கோலை உன்னுடைய கையிலே பிடித்துக்கொண்டு, யாத் 8:20யாத் 2:5யாத் 7:10யாத் 4:2-4எசேக் 29:3 அவனை நோக்கி: வனாந்திரத்தில் எனக்கு ஆராதனைசெய்ய என்னுடைய மக்களை அனுப்பிவிடவேண்டும் என்று சொல்லும்படி எபிரெயர்களுடைய தேவனாகிய யெகோவா என்னை உம்மிடத்திற்கு அனுப்பியும், இது வரைக்கும் நீர் கேட்காமற்போனீர். யாத் 3:18யாத் 9:1யாத் 9:13யாத் 3:12யாத் 5:1-31 சாமு 4:6-9அப் 4:21-23யாத் 10:3 இதோ, என்னுடைய கையில் இருக்கிற கோலால் நதியில் இருக்கிற தண்ணீர்மேல் அடிப்பேன்; அப்பொழுது அது இரத்தமாக மாறி, யாத் 4:9யாத் 5:2யாத் 7:5எசேக் 38:23எசேக் 39:28சங் 9:161 இராஜா 20:281 சாமு 17:46-47 நதியில் இருக்கிற மீன்கள் செத்து, நதி நாறிப்போகும்; அப்பொழுது நதியில் இருக்கிற தண்ணீரை எகிப்தியர்கள் குடிக்கமுடியாமல் அருவருப்பார்கள்; இதினால் நானே யெகோவா என்பதை அறிந்துகொள்வாய் என்று யெகோவா சொல்லுகிறார்” என்று சொல் என்றார். யாத் 7:24யாத் 7:21எண் 11:20எண் 21:5 மேலும், யெகோவா மோசேயை நோக்கி: “நீ ஆரோனிடம் உன்னுடைய கோலை எடுத்துக்கொண்டு எகிப்தின் நீர்நிலைகளாகிய அவர்கள் வாய்க்கால்கள்மேலும், நதிகள்மேலும், குளங்கள்மேலும், தண்ணீர் நிற்கிற எல்லா இடங்கள்மேலும், அவைகள் இரத்தமாகும்படி, உன்னுடைய கையை நீட்டு; அப்பொழுது எகிப்து தேசம் எங்கும் மரப்பாத்திரங்களிலும், கற்பாத்திரங்களிலும் இரத்தம் உண்டாகும் என்று சொல்” என்றார். யாத் 14:21யாத் 10:12யாத் 10:21யாத் 14:26யாத் 8:16யாத் 8:5-6யாத் 9:22-23யாத் 9:33 யெகோவா கட்டளையிட்டபடி மோசேயும் ஆரோனும் செய்தார்கள்; பார்வோனுடைய கண்களுக்கு முன்பாகவும், அவனுடைய வேலைக்காரர்களின் கண்களுக்கு முன்பாகவும் கோலை ஓங்கி, நதியிலுள்ள தண்ணீரை அடிக்க, நதியிலுள்ள தண்ணீரெல்லாம் இரத்தமாக மாறியது. சங் 105:29சங் 78:44யாத் 17:5-6யாத் 17:9-12யாத் 7:17-18யோவா 2:9-11எண் 20:8-12வெளி 8:8 நதியின் மீன்கள் செத்து, நதி நாறிப்போனது; நதியின் தண்ணீரைக் குடிக்க எகிப்தியர்களுக்கு முடியாமற்போனது; எகிப்து தேசம் எங்கும் இரத்தமாக இருந்தது. யாத் 7:18வெளி 8:9 எகிப்தின் மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் அப்படிச் செய்தார்கள்; யெகோவா சொல்லியிருந்தபடி பார்வோனின் இருதயம் கடினப்பட்டது; அவர்களுடைய வார்த்தைகளை கேட்காமற்போனான். யாத் 7:112 தீமோ 3:8யாத் 8:7-8எரே 27:18 பார்வோன் இதையும் சிந்திக்காமல், தன்னுடைய வீட்டிற்குத் திரும்பிப்போனான். 1 சாமு 4:20ஆமோ 4:7-12உபா 32:46யாத் 9:21எசேக் 40:4ஆப 1:5ஏசா 26:11எரே 36:24 நதியின் தண்ணீர் குடிக்க உதவாதபடியால், குடிக்கத்தக்க தண்ணீருக்காக எகிப்தியர்கள் எல்லோரும் நதியோரத்தில் ஊற்று தோண்டினார்கள். யெகோவா நதியை அடித்து ஏழுநாட்கள் ஆனது. 2 சாமு 24:13யாத் 10:23யாத் 8:9-10