சகரியா 10

Zechariah 10
அத்தியாயம் 10

யூதாவும் இஸ்ரவேலும் சீர்படுத்தப்படுதல்

பின்மாரிகாலத்து மழையைக் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொள்ளுங்கள்; அப்பொழுது யெகோவா மின்னல்களை உண்டாக்கி, வயல்வெளியில் அவரவருக்குப் பயிருண்டாக அவர்களுக்கு மழையைக் கட்டளையிடுவார். யாக் 5:16-18ஏசா 44:3மத் 7:7-8உபா 28:23யாக் 5:7யோவா 16:23சங் 65:9எசேக் 36:37 சுரூபங்கள் பொய்யானதைச் சொல்லிற்று; குறிசொல்லுகிறவர்கள் பொய்யை கண்டார்கள்; சொப்பனக்காரர்கள் வீணானதைச் சொல்லி, பயனில்லாததைச் சொல்லி தேற்றினார்கள்; ஆகையால் மக்கள் ஆடுகளைப்போல சிதறி, மேய்ப்பனில்லாததினால் சிறுமைப்பட்டார்கள். மத் 9:36எரே 27:9எசேக் 34:5ஆதி 31:19எசேக் 34:8ஆப 2:18ஓசி 3:41 இராஜா 22:17 மேய்ப்பருக்கு விரோதமாக என் கோபம் மூண்டது; கடாக்களைத் தண்டித்தேன்; சேனைகளின் யெகோவா யூதா வம்சத்தாராகிய தமது மந்தையை விசாரித்து, அவர்களை யுத்தத்திலே தமது சிறந்த குதிரையாக நிறுத்துவார். எசேக் 34:7-10எசேக் 34:2எசேக் 34:16-17எசேக் 34:20-21எரே 23:1-2எரே 25:34சகரி 11:17செப்ப 2:7 அவர்களிலிருந்து மூலைக்கல்லும், அவர்களிலிருந்து கூடாரமுளையும், அவர்களிலிருந்து யுத்தவில்லும் வரும்; அவர்களிலிருந்து ஆளுகிற அனைவரும் ஒன்றாகப் புறப்படுவார்கள். சகரி 9:10எஸ்றா 9:8எண் 24:17வெளி 19:13-15சகரி 9:81 சாமு 14:382 கொரி 10:4-52 தீமோ 2:4 அவர்கள் போரிலே தங்கள் எதிரிகளை வீதிகளின் சேற்றில் மிதிக்கிற பராக்கிரமசாலிகளைப்போல இருந்து போர் செய்வார்கள்; யெகோவா அவர்களுடன் இருப்பார்; குதிரைகளின்மேல் ஏறிவருகிறவர்கள் வெட்கப்படுவார்கள். ஆகா 2:22சங் 20:7ரோம 8:31-37சகரி 12:8சகரி 9:131 சாமு 16:182 கொரி 10:42 சாமு 22:43 நான் யூதா வம்சத்தாரைப் பலப்படுத்தி, யோசேப்பு வம்சத்தாரை காப்பாற்றி, அவர்களைத் திரும்ப நிலைக்கச்செய்வேன்; நான் அவர்களுக்கு இரங்கினேன்; அவர்கள் என்னால் ஒருக்காலும் தள்ளிவிடப்படாதவர்களைப்போல இருப்பார்கள்; நான் அவர்களுடைய தேவனாகிய யெகோவா, நான் அவர்களுக்குச் செவிகொடுப்பேன். சகரி 10:12சகரி 13:9செப்ப 3:19-20எரே 3:18ஏசா 41:10எசேக் 36:37ஓசி 1:11சகரி 8:11 எப்பிராயீம் மக்கள் திறமையானவர்களைப்போல இருப்பார்கள்; மதுபானத்தால் களிப்பதுபோல, அவர்களுடைய இருதயம் களிக்கும்; அவர்களுடைய பிள்ளைகளும் அதைக் கண்டு மகிழுவார்கள்; அவர்கள் இருதயம் யெகோவாவுக்குள் களிகூரும். சகரி 9:151 பேது 1:8லூக் 1:47பிலி 4:41 சாமு 2:1அப் 2:13-18அப் 2:26ஆதி 18:19 நான் அவர்களைப் பார்த்து சைகைகாட்டி அவர்களைக் கூட்டிக்கொள்ளுவேன்; அவர்களை மீட்டுக்கொண்டேன்; அவர்கள் பெருகியிருந்ததுபோலவே பெருகுவார்கள். ஏசா 5:26ஏசா 7:18எரே 33:22எசேக் 36:10-11ஓசி 1:10ஏசா 55:1-3எரே 31:10-11மத் 11:28 நான் அவர்களை மக்களுக்குள்ளே சிதறடித்தபின்பு, அவர்கள் தூரதேசங்களிலே என்னை நினைத்து தங்கள் பிள்ளைகளுடன் பிழைத்துத் திரும்புவார்கள். எசேக் 6:9ஏசா 65:23நெகே 1:91 இராஜா 8:47-48எஸ்த 8:17ஓசி 2:23ஏசா 65:9எரே 31:27 நான் அவர்களை எகிப்து தேசத்திலிருந்து திரும்பிவரச்செய்து, அவர்களை அசீரியாவிலிருந்து கூட்டிக்கொண்டு, அவர்களைக் கீலேயாத் தேசத்திற்கும் லீபனோனுக்கும் வரச்செய்வேன்; அவர்களுக்கு இடம் போதாமலிருக்கும். ஓசி 11:11ஏசா 49:19-21எரே 50:19மீகா 7:14சகரி 8:7எசேக் 47:18-21ஏசா 11:11-16ஏசா 19:23-25 இடுக்கமென்கிற சமுத்திரத்தைக் கடக்கும்போது அவர் சமுத்திரத்தின் அலைகளை அடிப்பார்; அப்பொழுது நதியின் ஆழங்கள் எல்லாம் வறண்டுபோகும்; அசீரியாவின் கர்வம் தாழ்த்தப்படும், எகிப்தின் கொடுங்கோல் விலகிப்போகும். எசேக் 30:13ஏசா 43:2மீகா 5:5-6யாத் 14:21-22ஏசா 11:15-16ஏசா 51:10சங் 114:3சங் 66:10-12 நான் அவர்களைக் யெகோவாவுக்குள் பலப்படுத்துவேன்; அவர்கள் அவருடைய நாமத்திலே நடந்துகொள்ளுவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார். ஏசா 41:10ஏசா 2:5மீகா 4:5சகரி 10:62 தீமோ 2:1கொலோ 2:6கொலோ 3:17பிலி 4:13