தேவனுடைய விருப்பத்தினாலே இயேசுகிறிஸ்துவினுடைய அப்போஸ்தலனாகிய பவுல், எபேசுவிலே கிறிஸ்து இயேசுவிற்குள் விசுவாசிகளாக இருக்கிற பரிசுத்தவான்களுக்கு எழுதுகிறதாவது: கொலோ 1:22 கொரி 1:11 கொரி 1:1-2ரோம 1:1கலா 1:1வெளி 2:10ரோம 1:71 கொரி 4:17 நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், உங்களுக்குக் கிருபையும், சமாதானமும் உண்டாவதாக. ரோம 1:7கலா 1:3தீத் 1:42 கொரி 1:2
கிறிஸ்துவிற்குள் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள்
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவிற்குள் உன்னதங்களிலே ஆவியானவருக்குரிய எல்லா ஆசீர்வாதங்களினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார். 1 பேது 1:32 கொரி 1:3எபே 2:6வெளி 5:9-14ஆதி 22:18யோவா 10:29-30எபே 1:20எபே 6:12 அவருக்கு முன்பாக நாம் எல்லோரும் பரிசுத்தம் உள்ளவர்களும், குற்றம் இல்லாதவர்களுமாக இருப்பதற்கு, உலகம் உருவாக்கப்படுவதற்கு முன்பே கிறிஸ்துவிற்குள் அவர் நம்மைத் தெரிந்துகொண்டபடியே, 2 தீமோ 1:9ரோம 8:28-30எபே 2:10மத் 25:341 பேது 2:9யாக் 2:5யோவா 15:161 பேது 1:20 பிரியமானவருக்குள் அவர் நமக்கு அருளிய அவருடைய கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக, ரோம 8:29-30எபே 1:11கலா 4:5-6யோவா 1:121 யோவா 3:1ரோம 8:14-17கலா 3:26ரோம 8:23 அவருடைய தயவுள்ள விருப்பத்தின்படியே, இயேசுகிறிஸ்துவின் மூலமாக அவருக்குச் சொந்த பிள்ளைகளாகும்படி நம்மை முன்குறித்திருக்கிறார். ரோம 3:22-26கொலோ 1:13எபே 1:12பிலி 4:19மத் 3:17எபே 1:7-81 பேது 2:9எபே 1:14 தேவனுடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே இயேசுகிறிஸ்துவினுடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது. 1 பேது 2:24ரோம 3:24கொலோ 1:141 யோவா 1:7-91 பேது 1:18-19எபி 9:22எபி 9:12-15மத் 26:28 அந்தக் கிருபையை அவர் எல்லா ஞானத்திலும் புத்தியிலும் எங்களுக்குள் பெருகப்பண்ணினார். வெளி 5:12கொலோ 2:3எபே 3:10ரோம 5:151 கொரி 1:19-241 கொரி 2:7தானி 2:20-21எபே 1:11 காலங்கள் நிறைவேறும்போது விளங்கும் ஒழுங்கின்படி பரலோகத்திலிருக்கிறவைகளும் பூலோகத்திலிருக்கிறவைகளுமாகிய எல்லாம் கிறிஸ்துவிற்குள்ளே ஒன்று சேர்க்கப்படவேண்டுமென்று, கொலோ 1:26-28ரோம 16:25-27எபே 3:3-92 தீமோ 1:9எபே 1:11கலா 1:12ரோம 8:28எபே 3:11 தமக்குள்ளே தீர்மானித்திருந்த அவருடைய தயவுள்ள திட்டத்தின் இரகசியத்தை எங்களுக்கு அறிவித்தார். கொலோ 1:20பிலி 2:9-10கலா 4:4தானி 2:44மாற் 1:15எபி 1:2ஏசா 2:2-4கொலோ 1:16 மேலும் கிறிஸ்துவின்மேல் முன்பு நம்பிக்கையாக இருந்த நாங்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக இருப்பதற்காக, ரோம 8:281 பேது 1:4ஏசா 46:10-11எபே 1:14எபே 1:5எபே 3:11கொலோ 1:12கலா 3:18 அவருடைய விருப்பத்தின் ஆலோசனைக்குத்தக்கதாக எல்லாவற்றையும் நடப்பிக்கிற அவருடைய தீர்மானத்தின்படியே நாங்கள் முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்துவிற்குள் அவருடைய உரிமைப்பங்காகும்படி தெரிந்துகொள்ளப்பட்டோம். எபே 1:6எரே 17:5-7எபே 1:13-14எபே 3:21ஏசா 12:2ஏசா 42:1-4ஏசா 45:23எரே 23:6 நீங்களும் உங்களுடைய இரட்சிப்பின் நற்செய்தியாகிய சத்திய வசனத்தைக்கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியானவரால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள். 2 கொரி 1:22எபே 4:302 தீமோ 2:191 தெச 2:13கலா 3:14ரோம 4:11ரோம 1:16தீத் 2:11 அவருக்குச் சொந்தமானவர்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக மீட்கப்படுவார்கள் என்பதற்கு ஆவியானவர் நம்முடைய உரிமைப்பங்கின் உத்திரவாதமாக இருக்கிறார். 2 கொரி 1:222 கொரி 5:5எபே 4:30கலா 4:6ரோம 8:15-17ரோம 8:23எபே 1:121 பேது 2:9
நன்றிசெலுத்துதலும் ஜெபமும்
எனவே, கர்த்தராகிய இயேசுவின்மேல் உள்ள உங்களுடைய விசுவாசத்தையும், பரிசுத்தவான்கள் எல்லோர்மேலும் உள்ள உங்களுடைய அன்பையும்குறித்து நான் கேள்விப்பட்டு, பிலே 1:5கொலோ 1:3-42 தெச 1:3எபி 6:101 யோவா 3:171 யோவா 4:211 பேது 1:221 தெச 1:3 இடைவிடாமல் உங்களுக்காக ஸ்தோத்திரம்பண்ணி, என் ஜெபங்களில் உங்களை நினைத்து, ரோம 1:8-9கொலோ 1:92 தெச 1:3கொலோ 1:31 சாமு 12:23பிலி 1:3-41 சாமு 7:81 தெச 1:2 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை நீங்கள் அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தந்தருளவேண்டுமென்றும், ஏசா 11:2யாக் 3:17-18கொலோ 1:9-10நீதி 2:52 பேது 1:3எபே 3:18-192 பேது 3:18யோவா 17:3 அவர் நம்மை அழைத்ததினாலே நமக்கு உண்டாயிருக்கிற நம்பிக்கை என்னவென்றும், பரிசுத்தவான்களிடத்தில் தமக்கு உண்டாயிருக்கிற உரிமைப்பங்கினுடைய மகிமையின் ஐசுவரியம் என்னவென்றும்; அப் 26:182 கொரி 4:6லூக் 24:451 யோவா 3:1-3எபே 1:7சங் 119:18எபே 3:16எபே 5:8 தாம் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பி, அவரிடத்தில் நடப்பித்த தமது பலத்த வல்லமையின்படியே விசுவாசிக்கிறவர்களாகிய நம்மிடம் காண்பிக்கும் அவருடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் என்னவென்றும், நீங்கள் அறியும்படிக்கு, அவர் உங்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டும் என்றும் வேண்டிக்கொள்ளுகிறேன். பிலி 2:13கொலோ 2:12எபே 3:202 கொரி 4:7கொலோ 1:29எபே 6:10எபே 3:7எபே 2:10 எல்லா ஆளுகைக்கும், அதிகாரத்திற்கும், வல்லமைக்கும், கர்த்தத்துவத்திற்கும், இக்காலத்தில் மட்டுமல்ல வருங்காலத்திற்கும் பெயர்பெற்றிருக்கும் எல்லா நாமத்திற்கும் மேலாக அவர் உயர்ந்திருக்கத்தக்கதாக, எபி 10:12மாற் 16:19சங் 110:1அப் 2:24-36எபி 1:3மத் 22:43-45மத் 28:18கொலோ 3:1 அவரை உன்னதங்களில் தம்முடைய வலதுபக்கத்தில் உட்காரும்படிச் செய்து, பிலி 2:9-11கொலோ 2:10கொலோ 1:15-161 பேது 3:22எபி 1:4தானி 7:27அப் 4:12கொலோ 2:15 எல்லாவற்றையும் அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தி, கொலோ 1:18கொலோ 2:101 கொரி 15:25-27சங் 8:6-8கொலோ 2:19எபி 2:81 கொரி 11:3எபே 4:15-16 எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய சரீரமான சபைக்கு அவரை எல்லாவற்றிற்கும் மேலான தலையாகத் தந்தருளினார். கொலோ 1:18-19யோவா 1:16கொலோ 2:9-10எபே 4:12எபே 3:19எபே 4:101 கொரி 15:28கொலோ 1:24