சங்கீதங்கள் 32

Psalms 32
சங்கீதம் 32

மஸ்கீல் என்னும் தாவீதின் பாடல்.

எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, ரோம 4:6-8ஏசா 44:22சங் 85:2அப் 13:38-39ஏசா 43:25மீகா 7:18-19வெளி 22:14ஏசா 1:18

எவனுடைய பாவம் மூடப்பட்டதோ,

அவன் பாக்கியவான்.

எவனுடைய அக்கிரமத்தைக் யெகோவா எண்ணாமலிருக்கிறாரோ, யோவா 1:472 கொரி 5:19-21வெளி 14:51 பேது 2:1-22 கொரி 1:12லேவி 17:4ரோம 5:13

எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ, அவன் பாக்கியவான்.

நான் அடக்கிவைத்தவரையில், நீதி 28:13சங் 38:3சங் 38:8சங் 22:1புலம் 3:8ஓசி 7:14யோபு 30:30சங் 31:9-10

எப்பொழுதும் என் கதறுதலினாலே என் எலும்புகள் உலர்ந்துபோயிற்று.

இரவும் பகலும் என்மேல் உம்முடைய கை பாரமாக இருந்ததினால், 1 சாமு 5:11சங் 38:2-8யோபு 33:7சங் 39:10-11சங் 22:15சங் 102:3-4சங் 90:6-71 சாமு 5:6-7

என் பெலன் கோடைக்கால வறட்சிபோல வறண்டுபோயிற்று. (சேலா)

நான் என் அக்கிரமத்தை மறைக்காமல், என் பாவத்தை உமக்கு அறிவித்தேன்; நீதி 28:132 சாமு 12:13சங் 51:3-5சங் 38:18ஏசா 65:24சங் 30:51 யோவா 1:8-10ஓசி 6:1

என் மீறுதல்களைக் யெகோவாவுக்கு அறிக்கையிடுவேன் என்றேன்;

தேவனே நீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர். (சேலா)

இதற்காக உம்மைக் காணும் காலத்தில் பக்தியுள்ளவனெவனும் உம்மை நோக்கி விண்ணப்பம் செய்வான்; ஏசா 55:6ஏசா 43:22 கொரி 6:2நீதி 1:28சங் 34:2-5சங் 4:3மத் 7:24-27யோவா 7:34

அப்பொழுது மிகுந்த வெள்ளம் வந்தாலும் அது அவனை அணுகாது.

நீர் எனக்கு மறைவிடமாயிருக்கிறீர்; சங் 91:1சங் 119:114சங் 27:5சங் 9:9சங் 143:9சங் 31:202 சாமு 22:1சங் 98:1

என்னை நீர் இக்கட்டுக்கு விலக்கிக்காத்து,

இரட்சிப்பின் பாடல்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளும்படி செய்வீர். (சேலா)

நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; நீதி 3:5-6சங் 33:18சங் 25:8-10மத் 11:29நீதி 8:10-11ஏசா 49:10நீதி 3:1சங் 34:11

உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.

வாரினாலும் கடிவாளத்தினாலும் வாய் கட்டப்பட்டாலொழிய, நீதி 26:3எரே 4:22யோபு 35:11யாக் 3:3யாக் 4:7-10எரே 8:6-7எரே 31:18

உன் அருகில் சேராத புத்தியில்லாத குதிரையைப்போலவும்

கோவேறு கழுதையைப்போலவும் இருக்கவேண்டாம்.

துன்மார்க்கனுக்கு அநேக வேதனைகளுண்டு; நீதி 16:20ஏசா 12:2-3நீதி 13:21சங் 147:11ரோம 2:8-91 தீமோ 6:10சங் 146:5சங் 34:19-21

யெகோவாவை நம்பியிருக்கிறவனையோ கிருபை சூழ்ந்து கொள்ளும்.

நீதிமான்களே, யெகோவாவுக்குள் மகிழ்ந்து களிகூருங்கள்; சங் 64:10பிலி 4:4சங் 97:12சங் 5:11உபா 12:12சங் 68:3சங் 97:11 சாமு 2:1

செம்மையான இருதயமுள்ளவர்களே,

நீங்கள் எல்லாரும் ஆனந்தமுழக்கமிடுங்கள்.