மக்களின் பாவ அறிக்கை
எஸ்றா இப்படி விண்ணப்பம்செய்து, அறிக்கையிட்டு அழுது, தேவனுடைய ஆலயத்திற்கு முன்பாகத் தாழவிழுந்துகிடக்கும்போது, இஸ்ரவேலில் ஆண்களும் பெண்களும் பிள்ளைகளுமான மகா பெரிய சபை அவனிடத்தில் வந்து கூடினது; மக்கள் மிகவும் அழுதார்கள். தானி 9:20சங் 119:136ரோம 9:21 யோவா 1:8-101 இராஜா 8:30தானி 9:3-4லூக் 19:41நெகே 8:9 அப்பொழுது ஏலாமின் மகன்களில் ஒருவனாகிய யெகியேலின் மகன் செக்கனியா எஸ்றாவை நோக்கி: நாங்கள் தேசத்து மக்களிலுள்ள அந்நியப் பெண்களைச் சேர்த்துக்கொண்டதால், எங்கள் தேவனுக்கு விரோதமாகப் பாவம்செய்தோம்; ஆகிலும் இப்பொழுது இந்தக் காரியத்திலே இன்னும் இஸ்ரவேலுக்காக நம்பிக்கை உண்டு. நெகே 13:27எஸ்றா 9:2யாத் 34:12எரே 3:12-131 யோவா 1:7-9யாத் 34:6-7எஸ்றா 10:26ஏசா 55:6-7 இப்பொழுதும் அந்தப் பெண்கள் எல்லோரையும், அவர்களிடத்தில் பிறந்தவர்களையும், என் ஆண்டவனுடைய ஆலோசனைக்கும், நமது தேவனுடைய கற்பனைக்கு நடுங்குகிறவர்களின் ஆலோசனைக்கும் ஏற்றபிரகாரம் அகற்றிப்போடுவோம் என்று நம்முடைய தேவனுடன் உடன்படிக்கை செய்வோமாக; நியாயப்பிரமாணத்தின்படியே செய்யப்படுவதாக. உபா 7:2-3எஸ்றா 9:41 கொரி 7:12-13யோசு 23:12-13சங் 119:1202 நாளாக 34:21உபா 29:12நெகே 9:38 எழுந்திரும்; இந்தக் காரியத்தை நடப்பிக்கிறது உமக்குரியது; நாங்களும் உம்மோடு இருப்போம்; நீர் திடன்கொண்டு இதைச் செய்யும் என்றான். 1 நாளாக 28:10பிரச 9:101 நாளாக 22:19எபி 10:24எபி 12:12-13ஏசா 35:3-41 நாளாக 22:16எஸ்றா 7:23-28 அப்பொழுது எஸ்றா எழுந்திருந்து, ஆசாரியர்களிலும் லேவியர்களிலும் முக்கியமானவர்களும் இஸ்ரவேல் அனைவரும் இந்த வார்த்தையின்படி செய்ய, அவர்களை ஆணையிடச் சொன்னான்; அவர்கள் ஆணையிட்டார்கள். நெகே 13:25நெகே 5:12எஸ்றா 10:3மத் 26:63நெகே 10:29நீதி 1:5நீதி 15:23நீதி 25:11-12 அதன்பின்பு எஸ்றா தேவனுடைய ஆலயத்திற்கு முன்னிருந்து எழுந்து, எலியாசிபின் மகனாகிய யோகனானின் அறைக்குள் சென்றான்; அங்கே வந்தபோது, அவன் சிறையிருப்பிலிருந்து வந்தவர்களுடைய குற்றத்தினால் அப்பம் சாப்பிடாமலும் தண்ணீர் குடிக்காமலும் துக்கப்பட்டுக்கொண்டிருந்தான். உபா 9:18யோவா 4:31-34நெகே 12:22நெகே 3:1தானி 9:3யாத் 34:28எஸ்றா 10:1எஸ்றா 9:4 அப்பொழுது சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் எல்லோரும் எருசலேமிலே வந்து கூடவேண்டும் என்றும், 2 நாளாக 30:5எஸ்றா 1:1 மூன்று நாட்களுக்குள்ளே பிரபுக்கள் மூப்பர்களுடைய ஆலோசனையின்படியே எவனாகிலும் வராமல்போனால், அவனுடைய பொருட்களெல்லாம் பறிமுதல் செய்யப்பட்டு, சிறையிருப்பிலிருந்து வந்த சபையிலிருந்து அவன் விலக்கப்படுவான் என்றும், யூதாவிலும் எருசலேமிலும் விளம்பரம் செய்தார்கள். எஸ்றா 7:261 கொரி 5:131 சாமு 11:7நியாயாதி 21:5யோவா 16:2யோவா 9:22யோவா 9:34யோசு 6:19 அப்படியே யூதா பென்யமீன் கோத்திரத்தார் எல்லோரும் மூன்று நாட்களுக்குள்ளே எருசலேமிலே கூடினார்கள்; அது ஒன்பதாம் மாதம் இருபதாம் தேதியாயிருந்தது; மக்கள் எல்லோரும் தேவனுடைய ஆலயத்தின் வீதியிலே அந்தக் காரியத்தினாலும் அடைமழையினாலும் நடுங்கிக்கொண்டிருந்தார்கள். 1 சாமு 12:17-18எஸ்த 2:16எஸ்றா 7:8-9எரே 10:10எரே 10:13 அப்பொழுது ஆசாரியனாகிய எஸ்றா எழுந்திருந்து அவர்களை நோக்கி: நீங்கள் இஸ்ரவேலின்மேல் இருக்கிற குற்றத்தை அதிகரிக்கச்செய்ய, வேறு இனப் பெண்களைத் திருமணம்செய்ததால் பாவம் செய்தீர்கள். 2 நாளாக 28:13எஸ்றா 9:6யோசு 22:17-18மத் 23:32எண் 32:14 இப்பொழுதும் நீங்கள் உங்கள் முன்னோர்களின் தேவனாகிய கர்த்தரிடத்தில் அறிக்கையிட்டு, அவருடைய பிரியத்தின்படியே செய்து, தேசத்தின் மக்களையும், வேறு இனப் பெண்களையும் விட்டுவிலகுங்கள் என்றான். ரோம 12:2உபா 7:3-4எஸ்றா 10:3ஏசா 1:16-18யோசு 7:19லேவி 26:40-42நீதி 28:131 யோவா 1:7-9 அப்பொழுது சபையார் அனைவரும் மகா சத்தத்தோடே மறுமொழியாக: ஆம், நீர் சொன்ன வார்த்தைகளின்படியே செய்யவேண்டியதுதான். எஸ்றா 10:3-4நெகே 13:23சங் 78:37சங் 78:57 ஆனாலும் மக்கள் திரளாயிருக்கிறார்கள், இது மழைக்காலமுமாக இருக்கிறது, இங்கே வெளியிலே நிற்க எங்களாலே முடியாது; இது ஒருநாள் இரண்டுநாள் வேலையல்ல; இந்தக் காரியத்திலே கட்டளையை மீறினவர்களாகிய நாங்கள் அநேகர். எஸ்றா 10:18-44மத் 7:13-14 ஆகையால் இதற்கு சபையெங்கும் எங்கள் பிரபுக்கள் விசாரிப்புக்காரர்களாக ஏற்படுத்தப்படவேண்டும்; இந்தக் காரியத்தினால் நம்முடைய தேவனுக்கு இருக்கிற கடுங்கோபம் எங்களைவிட்டுத் திரும்பும்படி, எங்கள் பட்டணங்களில் வேறு இனமான பெண்களைக்கொண்ட அனைவரும் ஒவ்வொரு பட்டணத்தின் மூப்பரோடும் நியாயாதிபதிகளோடும் குறித்தகாலங்களில் வரவேண்டும் என்றார்கள். 2 நாளாக 29:102 நாளாக 30:8எண் 25:42 நாளாக 19:5-7உபா 13:17உபா 17:18-19உபா 17:9ஏசா 12:1 ஆசகேலின் மகன் யோனத்தானும், திக்காவின் மகன் யக்சியாவும் மாத்திரம் அதை விசாரிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டார்கள்; மெசுல்லாமும், சப்பேதாயி என்னும் லேவியனும் அவர்களுக்கு உதவியாயிருந்தார்கள். நெகே 11:16நெகே 10:20நெகே 12:33நெகே 3:6 சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் இந்தப்பிரகாரம் செய்தார்கள்; ஆசாரியனாகிய எஸ்றாவும் தங்கள் பிதாக்களுடைய குடும்பத்தின்படியே பேர்பேராக அழைக்கப்பட்ட பிதாக்களுடைய வம்சங்களின் தலைவர்கள் அனைவரும், இந்தக் காரியத்தை விசாரிக்கும்படி, பத்தாம் மாதம் முதல் தேதியிலே, தனித்து உட்கார்ந்து, உபா 13:14யோவா 7:51யோபு 29:16 வேறு இனமான பெண்களைத் திருமணம் செய்தவர்கள் எல்லோருடைய காரியத்தையும் முதலாம் மாதம் முதல் தேதியிலே விசாரித்து முடித்தார்கள்.
கலப்புத் திருமணம் செய்துகொண்டவர்கள்
ஆசாரிய புத்திரரில் மறு ஜாதியான மனைவிகளைக் கொண்டவர்களாகக் காணப்பட்டவர்கள் யாரென்றால்: யோசதாக்கின் மகனாகிய யெசுவாவின் மகன்களிலும் அவனுடைய சகோதரர்களிலும், மாசெயா, எலியேசர், யாரீப், கெதலியா என்பவர்கள். எஸ்றா 2:2எஸ்றா 3:2எஸ்றா 5:2ஆகா 1:1சகரி 3:11 நாளாக 6:14-151 சாமு 2:22-241 தீமோ 3:11 இவர்கள் தங்கள் பெண்களைத் தள்ளிவிடுவோம் என்று உறுதிமொழி கொடுத்து; தாங்கள் குற்றவாளிகளானதால் குற்றநிவாரணபலியாக ஒரு ஆட்டுக்கடாவைச் செலுத்தினார்கள். லேவி 6:62இராஜா 10:151 நாளாக 29:242 நாளாக 30:8கலா 2:9புலம் 5:6லேவி 5:15-16லேவி 6:4 இம்மேரின் மகன்களில் அனானியும், செபதியாவும், எஸ்றா 2:371 நாளாக 24:14நெகே 7:40 ஆரீமின் மகன்களில் மாசெயா, எலியா, செமாயா, யெகியேல், உசியா என்பவர்களும்; 1 நாளாக 24:8எஸ்றா 2:39நெகே 7:42 பஸ்கூரின் மகன்களில் எலியோனாய், மாசெயா, இஸ்மவேல், நெதனெயேல், யோசபாத், எலாசா என்பவர்களும்; 1 நாளாக 9:12எஸ்றா 2:38நெகே 7:41 லேவியர்களில் யோசபாத், சிமேயி, கெலிதா என்னும் பெயர்கொண்ட கெலாயா, பெத்தகியா, யூதா, எலியேசர் என்பவர்களும்; எஸ்றா 8:33நெகே 10:10நெகே 11:16 பாடகர்களில் எலியாசிபும், வாசல் காவலாளர்களில் சல்லூம், தேலேம், ஊரி என்பவர்களும்; மற்ற இஸ்ரவேலருக்குள்ளே பாரோஷின் மகன்களில் ரமீயா, யெசியா, மல்கியா, மியாமின், எலெயாசார், மல்கிஜா, பெனாயா என்பவர்களும்; எஸ்றா 2:3நெகே 7:8 ஏலாமின் மகன்களில் மத்தனியா, சகரியா, யெகியேல், அப்தி, யெரிமோத், எலியா என்பவர்களும்; எஸ்றா 10:2எஸ்றா 2:31எஸ்றா 2:7எஸ்றா 8:7நெகே 7:12நெகே 7:34 சத்தூவின் மகன்களில் எலியோனாய், எலியாசிப், மத்தனியா, யெரிமோத், சாபாத், அசிசா என்பவர்களும்; எஸ்றா 2:8நெகே 7:13 பெபாயின் மகன்களில் யோகனான், அனனியா, சாபாயி, அத்லாயி என்பவர்களும்; எஸ்றா 2:11எஸ்றா 8:11நெகே 7:16 பானியின் மகன்களில் மெசுல்லாம், மல்லூக், அதாயா, யாசுப், செயால், ராமோத் என்பவர்களும், எஸ்றா 2:10நெகே 10:4நெகே 7:15 பாகாத்மோவாபின் மகன்களில் அத்னா, கெலால், பெனாயா, மாசெயா, மத்தனியா, பெசலெயேல், பின்னூயி, மனாசே என்பவர்களும்; எஸ்றா 2:6எஸ்றா 8:4நெகே 7:11 ஆரீமின் மகன்களில் எலியேசர், இஷியா, மல்கியா, செமாயா, ஷிமியோன், நெகே 3:11எஸ்றா 2:32நெகே 7:35 பென்யமீன், மல்லூக், செமரியா என்பவர்களும்; ஆசூமின் மகன்களில் மதனாய், மத்தத்தா, சாபாத், எலிப்பெலேத், எரெமாயி, மனாசே, சிமேயி என்பவர்களும்; எஸ்றா 2:19நெகே 7:22 பானியின் மகன்களில் மாதாயி, அம்ராம், ஊவேல், பெனாயா, பெதியா, கெல்லூ, வனியா, மெரெமோத், எலியாசிப், மத்தனியா, மதனாய், யாசாய், பானி, பின்னூயி, சிமெயி, செலேமியா, நாத்தான், அதாயா, மக்நாத்பாயி, சாசாயி, சாராயி, அசரெயேல், செலேமியா, செமரியா, சல்லூம், அமரியா, யோசேப் என்பவர்களும்; நேபோவின் மகன்களில் ஏயெல், மத்தித்தியா, சாபாத், செபினா, யதாய், யோவேல், பெனாயா என்பவர்களுமே. எஸ்றா 2:29நெகே 7:33 இவர்கள் எல்லோரும் வேறு இனமான பெண்களைத் திருமணம் செய்தவர்கள்; 1இவர்களில் சிலர் திருமணம்செய்த பெண்களிடத்தில் பிள்ளைகளைப் பெற்றிருந்தார்கள். எஸ்றா 10:3நீதி 2:16நீதி 5:20நீதி 5:3