இறுதிக்காலங்கள்
உன் மக்களின் பாதுகாப்பிற்காக நிற்கிற பெரிய அதிபதியாகிய மிகாவேல் அக்காலத்திலே எழும்புவான். எந்தவொரு தேசத்தார்களும் தோன்றினதுமுதல் அக்காலம்வரை உண்டாயிராத ஆபத்துக்காலம் வரும்; அக்காலத்திலே புத்தகத்தில் எழுதியிருக்கிறவர்களாகக் காணப்படுகிற உன் மக்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள். எரே 30:7மத் 24:21மாற் 13:19வெளி 16:17-21லூக் 21:23-24தானி 10:13தானி 10:21வெளி 12:7 பூமியின் தூளிலே இறந்தவர்களாகிய அநேகரில் சிலர் நித்தியஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள். யோவா 5:28-29ஏசா 26:19மத் 25:46எசேக் 37:12வெளி 20:121 கொரி 15:51-54அப் 24:151 தெச 4:14 ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள். மத் 13:43நீதி 4:18யாக் 5:19-20தானி 11:33தானி 11:35நீதி 11:30எபி 5:12யோவா 4:36 தானியேலாகிய நீயோவென்றால், முடிவுகாலம்வரை இந்த வார்த்தைகளைப் புதைபொருளாக மறைத்துவைத்து, இந்தப் புத்தகத்தை முத்திரைபோடு; அப்பொழுது அநேகர் இங்கும் அங்கும் ஓடி ஆராய்வார்கள், அறிவும் பெருகிப்போகும் என்றான். தானி 12:9வெளி 22:10தானி 8:26தானி 8:17வெளி 10:4தானி 12:13ஏசா 32:3ஏசா 8:16 அப்பொழுது, தானியேலாகிய நான் நிற்கிற ஆற்றுக்கு இக்கரையில் ஒருவனும் ஆற்றுக்கு மறுகரையில் ஒருவனுமாக இரண்டுபேர் நிற்கக்கண்டேன். தானி 10:10தானி 10:16தானி 10:4-6 சணல்உடை அணிந்தவரும், ஆற்றின் தண்ணீர்களின்மேல் நிற்கிறவரை ஒருவன் நோக்கி: இந்த ஆச்சரியமானவைகளின் முடிவுவர எவ்வளவுகாலம் ஆகும் என்று கேட்டான். தானி 8:13எசேக் 9:2சகரி 1:12-13தானி 8:16தானி 10:5-61 பேது 1:12எபே 3:10சங் 74:9 அப்பொழுது சணல்உடை அணிந்தவரும் ஆற்றின் தண்ணீர்களின்மேல் நிற்கிறவருமாகிய மனிதன் தம்முடைய வலதுகரத்தையும் தம்முடைய இடதுகரத்தையும் வானத்திற்கு நேராக ஏறெடுத்து, ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமும் 1 ஆகும் என்றும்; பரிசுத்த மக்களின் வல்லமையைச் சிதறடித்தல், முடிவு பெறும்போதே இவைகளெல்லாம் நிறைவேறித் தீருமென்றும் என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவர்பேரில் ஆணையிடக்கேட்டேன். தானி 7:25வெளி 12:14தானி 8:24வெளி 10:5-7வெளி 13:5தானி 4:34எரே 4:2லூக் 21:24 நான் அதைக் கேட்டும், அதின் அர்த்தத்தை அறியவில்லை; ஆகையால்: என் ஆண்டவனே, இவைகளின் முடிவு எப்படியிருக்கும் என்று கேட்டேன். அப் 1:71 பேது 1:11தானி 10:14தானி 12:6யோவா 12:16லூக் 18:34 அதற்கு அவன்: தானியேலே, போகலாம்; இந்த வார்த்தைகள் முடிவுகாலம்வரை புதைபொருளாக வைக்கப்பட்டும் முத்திரிக்கப்பட்டும் இருக்கும். தானி 12:4தானி 8:26ஏசா 29:11ஏசா 8:16வெளி 10:4 அநேகர் சுத்தமும் வெண்மையுமாக்கப்பட்டு, புடமிடப்பட்டவர்களாக விளங்குவார்கள்; துன்மார்க்கர்களோ துன்மார்க்கமாக நடப்பார்கள்; துன்மார்க்கரில் ஒருவனும் உணரமாட்டான், ஞானவான்களோ உணர்ந்துகொள்வார்கள். வெளி 22:11தானி 11:35ஓசி 14:92 தெச 2:10-12யோவா 8:47வெளி 9:20-211 யோவா 5:20ஏசா 32:6-7 அனுதினபலி நீக்கப்பட்டு, பாழாக்கும் அருவருப்பு நிலைநிறுத்தப்படும் காலம்முதல் ஆயிரத்து இருநூற்றுத் தொண்ணூறு நாட்கள் ஆகும். தானி 11:31மத் 24:15தானி 9:27மாற் 13:14வெளி 11:2வெளி 13:5தானி 7:25தானி 8:11-14 ஆயிரத்து முந்நூற்று முப்பத்தைந்து நாட்கள்வரை காத்திருந்து சேருகிறவன் பாக்கியவான். ஏசா 30:18தானி 8:14ரோம 11:15வெளி 20:4 நீயோவென்றால் முடிவுவரும்வரை போயிரு; நீ இளைப்பாறிக்கொண்டிருந்து, நாட்களின் முடிவிலே உனக்குரிய பங்கைப்பெற எழுந்திருப்பாய் என்றான். வெளி 14:132 தீமோ 4:7-82 கொரி 5:1சகரி 3:7தானி 12:3ஏசா 57:1-2மத் 19:28யூதா 1:14-15