தேவதூதனும் புத்தகமும்
பின்பு, பலமுள்ள வேறொரு தூதன் வானத்திலிருந்து இறங்கி வருவதைப் பார்த்தேன்; மேகம் அவனைச் சுற்றியிருந்தது, அவனுடைய தலையின்மேல் வானவில் இருந்தது, அவனுடைய முகம் சூரியனைப்போலவும், அவனுடைய கால்கள் அக்கினித் தூண்களைப்போலவும் இருந்தது. எசேக் 1:28மத் 17:2வெளி 1:15-16தானி 10:6வெளி 5:2வெளி 4:3வெளி 8:13வெளி 8:2-5 திறக்கப்பட்ட ஒரு சிறிய புத்தகம் அவனுடைய கையில் இருந்தது; தன் வலது பாதத்தைக் கடலின்மேலும், தன் இடதுபாதத்தை பூமியின்மேலும் வைத்து, எசேக் 2:9-10வெளி 10:5வெளி 10:8-10வெளி 5:1-5மத் 28:18சங் 2:8சங் 65:5வெளி 6:3 சிங்கம் கெர்ச்சிக்கிறதுபோல அதிக சத்தமாக ஆர்ப்பரித்தான்; அவன் ஆர்ப்பரித்தபோது ஏழு இடிகளும் சத்தமிட்டு முழங்கின. ஏசா 31:4ஆமோ 1:2யோவே 3:16வெளி 4:5ஆமோ 3:8ஏசா 42:13ஏசா 5:29எரே 25:30 அந்த ஏழு இடிகளும் தங்களுடைய சத்தங்களை முழங்கினபோது நான் எழுதவேண்டுமென்று இருந்தேன். அப்பொழுது: ஏழு இடிமுழக்கங்கள் சொன்னவைகளை நீ எழுதாமல் அவைகள் இரகசியமாக இருக்க முத்திரைபோடு என்று வானத்திலிருந்து சொன்ன ஒரு சத்தத்தைக் கேட்டேன். தானி 12:4தானி 8:26தானி 12:9உபா 29:29வெளி 22:10ஆப 2:2-3ஏசா 29:11ஏசா 8:16 கடலின்மேலும் பூமியின்மேலும் நிற்கிறதாக நான் பார்த்த அந்த தூதன், தன் கையை வானத்திற்கு நேராக உயர்த்தி: தானி 12:7உபா 32:40அப் 14:15வெளி 10:2வெளி 14:7வெளி 16:17வெளி 4:11வெளி 1:18 இனி காலம் தாமதம் ஆகாது; ஆனாலும் தேவன் தம்முடைய ஊழியக்காரர்களாகிய தீர்க்கதரிசிகளுக்கு நற்செய்தியாக அறிவித்தபடி, ஏழாம் தூதனுடைய நாட்களிலே அவன் எக்காளம் ஊதப்போகிறபோது தேவ இரகசியம் நிறைவேறும் என்று, வெளி 4:11வெளி 16:17வெளி 4:9 வானத்தையும் அதில் இருப்பவைகளையும், பூமியையும் அதில் இருப்பவைகளையும், கடலையும் அதில் இருப்பவைகளையும் உண்டாக்கினவரும் எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறவருமானவர்மேல் ஆணையிட்டுச் சொன்னான். எபே 3:3-9ரோம 16:25லூக் 24:44-47ஆமோ 3:7அப் 3:21ரோம 11:25வெளி 11:15-18 நான் வானத்தில் இருந்து கேட்ட சத்தம் மீண்டும் என்னோடு பேசி: கடலின்மேலும் பூமியின்மேலும் நிற்கிற தூதனுடைய கையில் இருக்கும் திறக்கப்பட்ட சிறிய புத்தகத்தை நீ போய் வாங்கிக்கொள் என்று சொல்ல, வெளி 10:2வெளி 10:4-5ஏசா 30:21 நான் தூதனிடம்போய்: அந்தச் சிறிய புத்தகத்தை எனக்குத் தரவேண்டும் என்றேன். அதற்கு அவன்: நீ இதை வாங்கிச் சாப்பிடு; இது உன் வயிற்றுக்குக் கசப்பாக இருக்கும். ஆனால் உன் வாய்க்கு இது தேனைப்போலச் சுவையாக இருக்கும் என்றான். எசேக் 3:1-3எரே 15:16எசேக் 2:8எசேக் 3:14யோபு 23:12கொலோ 3:6 நான் அந்தச் சிறிய புத்தகத்தைத் தூதனுடைய கையிலிருந்து வாங்கி, அதைச் சாப்பிட்டேன்; என் வாய்க்கு அது தேனைப்போல இனிமையாக இருந்தது; நான் அதைச் சாப்பிட்டவுடனே என் வயிறு கசப்பானது. எசேக் 3:3நீதி 16:24சங் 119:103சங் 19:10சங் 104:34எசேக் 3:14எசேக் 2:10 அப்பொழுது அவன் என்னைப் பார்த்து: நீ மீண்டும் அநேக மக்களையும், தேசங்களையும், பல மொழிக்காரர்களையும், ராஜாக்களையும்குறித்துத் தீர்க்கதரிசனம் சொல்லவேண்டும் என்றான். எசேக் 37:4எரே 1:9-10எசேக் 37:9வெளி 11:9வெளி 14:6வெளி 17:15எரே 25:15-30