ஏசாயா 27

Isaiah 27
அத்தியாயம் 27

இஸ்ரவேலின் விடுதலை

அக்காலத்திலே யெகோவா லிவியாதான் என்னும் நீண்ட பாம்பை, லிவியாதான் என்னும் கோணலான சர்ப்பத்தையே, மிக பெரியதும் பலத்ததுமான தமது பட்டயத்தால் தண்டிப்பார்; சமுத்திரத்தில் இருக்கிற வலுசர்ப்பத்தைக் கொன்றுபோடுவார். எசேக் 29:3ஏசா 51:9ஏசா 66:16வெளி 12:3யோபு 26:13சங் 104:26வெளி 20:2சங் 74:13-14 அக்காலத்திலே நல்ல திராட்சைரசத்தைத் தரும் திராட்சைத்தோட்டம் உண்டாயிருக்கும்; அதைக் குறித்துப் பாடுங்கள். எரே 2:21ஏசா 5:1-7லூக் 20:9-18மத் 21:33-46எண் 21:17சங் 80:8-19 யெகோவாவாகிய நான் அதைக் காப்பாற்றி, அடிக்கடி அதற்குத் தண்ணீர்ப்பாய்ச்சி, ஒருவரும் அதைச் சேதப்படுத்தாமலிருக்க அதை இரவும்பகலும் காத்துக்கொள்வேன். ஏசா 58:11யோவா 15:1-21 சாமு 2:9சங் 121:3-5எசேக் 34:11எசேக் 37:14எசேக் 34:24ஏசா 46:9 கோபம் என்னிடத்தில் இல்லை; முட்செடியையும் நெரிஞ்சிலையும் எனக்கு விரோதமாக போரில் கொண்டுவருகிறவன் யார்? நான் அவைகள்மேல் வந்து, அவைகளை எல்லாம் கொளுத்திவிடுவேன்; எபி 6:8ஏசா 10:17மத் 3:122 சாமு 23:6சங் 85:32 பேது 2:9எசேக் 16:63ஏசா 12:1 இல்லாவிட்டால் அவன் என்பெலனைப் பற்றிக்கொண்டு என்னுடன் ஒப்புரவாகட்டும்; அவன் என்னுடன் ஒப்புரவாவான். ஏசா 25:4யோபு 22:21எபே 2:16-172 கொரி 5:19-21கொலோ 1:20-21எசேக் 34:25-26எபி 6:18ஓசி 2:18-20 யாக்கோபு வேர்பற்றி, இஸ்ரவேல் பூத்துக்காய்த்து உலகத்தைப் பலனால் நிரப்பும் நாட்கள் வரும். ஏசா 37:31ஓசி 14:5-6ரோம 11:16-26ஓசி 2:23ஏசா 54:1-3சங் 92:13-15சகரி 2:11ஏசா 60:22 அவர் அவனை அடித்தவர்களை அடித்ததுபோல இவனை அடிக்கிறாரோ? அவர்கள் கொல்லப்படும் கொலையாக இவன் கொல்லப்படுகிறானோ? ஏசா 37:36-38தானி 2:31-35ஏசா 10:20-25ஏசா 14:22-23ஏசா 17:14ஏசா 17:3எரே 30:11-16எரே 50:33-34 தேவரீர் இஸ்ரவேல் மக்களைத் துரத்திவிடும்போது குறைவாக அதனுடன் வழக்காடுகிறீர் 1; கொண்டல் காற்றடிக்கிற நாளிலே அவர் தம்முடைய கடுங்காற்றினால் அதை விலக்கிவிடுகிறார். எசேக் 19:12ஓசி 4:1எரே 10:24எரே 4:111 பேது 1:6ஓசி 13:15ஓசி 6:1-2எரே 2:17-37 ஆகையால், அதினால் யாக்கோபின் அக்கிரமம் நீக்கப்படும்; தோப்புஉருவங்களும், சிலைகளும் இனி நிற்காமல் அவர்கள் பலிபீடங்களின் கற்களையெல்லாம் நொறுக்கப்பட்ட சுண்ணாம்பு கற்களாக்கிவிடும்போது, அவர்களுடைய பாவத்தை அவர் நீக்கிவிடுவாரென்பதே அதினால் உண்டாகும் பலன். ஏசா 48:10ரோம 11:27தானி 11:35ஏசா 17:81 கொரி 11:322 நாளாக 14:52 நாளாக 34:42 நாளாக 36:19 பாதுகாப்பான நகரம் வெட்டாந்தரையாகும், அந்த குடியிருப்பு தள்ளுண்டு வனாந்திரத்தைப்போல விட்டுவிடப்பட்டதாயிருக்கும்; கன்றுக்குட்டிகள் அங்கே மேய்ந்து, அங்கே படுத்துக்கொண்டு, அதின் தழைகளைத் தின்னும். ஏசா 17:2ஏசா 17:9ஏசா 32:13-14எரே 26:18எரே 26:6மீகா 3:12எசேக் 36:4ஏசா 25:2 அதின் கிளைகள் உலரும்போது ஒடிந்துபோகும்; பெண்கள் வந்து அவைகளைக் கொளுத்திவிடுவார்கள்; அது உணர்வுள்ள மக்களல்ல; ஆகையால் அதை உண்டாக்கினவர் அதற்கு இரங்காமலும், அதை உருவாக்கினவர் அதற்குக் கிருபை செய்யாமலும் இருப்பார். ஏசா 1:3ஏசா 43:1ஏசா 43:7ஏசா 44:24எரே 8:7எசேக் 9:10எரே 4:22யோவா 15:6 அக்காலத்திலே, யெகோவா ஆற்றங்கரையின் விளைவு துவங்கி எகிப்தின் நதிவரை போரடிப்பார்; இஸ்ரவேல் மக்களே, நீங்கள் ஒவ்வொருவராகச் சேர்க்கப்படுவீர்கள். ஆதி 15:18உபா 30:3-4ஏசா 56:8நெகே 1:9ஆமோ 9:9ஏசா 11:11-16ஏசா 17:6ஏசா 24:13-16 அக்காலத்திலே பெரிய எக்காளம் ஊதப்படும்; அப்பொழுது, அசீரியா தேசத்திலே சிதறடிக்கப்பட்டவர்களும், எகிப்துதேசத்திலே துரத்திவிடப்பட்டவர்களும் வந்து, எருசலேமிலுள்ள பரிசுத்த மலையிலே யெகோவாவைப் பணிந்துகொள்ளுவார்கள். மத் 24:31லேவி 25:9எபி 12:22ஏசா 19:23-251 நாளாக 15:24ஏசா 11:16லூக் 4:18சகரி 14:16