அறிவீனத்திற்கு எதிரான எச்சரிக்கை
என் மகனே, நீ உன்னுடைய நண்பனுக்காகப் பொறுப்பேற்று, நீதி 17:18நீதி 22:26நீதி 11:15நீதி 20:16ஆதி 43:9ஆதி 44:32-33எபி 7:22யோபு 17:3
அந்நியனுக்கு உறுதியளித்தால்,
நீ உன்னுடைய வாய்மொழிகளால் சிக்கிக்கொண்டாய், நீதி 18:7நீதி 12:13
உன்னுடைய வாயின் வார்த்தைகளால் பிடிபட்டாய்.
இப்பொழுது என் மகனே, உன்னுடைய நண்பனுடைய கையில் நீ அகப்பட்டுக்கொண்டதால், யாக் 4:102 சாமு 24:14சங் 31:82 நாளாக 12:52 நாளாக 36:12யாத் 10:3
நீ உன்னைத் தப்புவித்துக்கொள்ள ஒன்று செய்.
உன்னுடைய கண்ணுக்கு தூக்கத்தையும், சங் 132:4நீதி 6:10-11மாற் 13:35-36பிரச 9:10மத் 24:17-18
உன்னுடைய கண்ணிமைக்குத் தூக்கமும் வரவிடாமல்,
உன்னுடைய நண்பனிடத்தில் போய், உன்னைத் தாழ்த்தி,
அவனை வருந்திக் கேட்டுக்கொள்.
வெளிமான் வேட்டைக்காரனுடைய கைக்கும், குருவி வேடனுடைய கைக்கும் தப்புவதுபோல, சங் 91:3சங் 124:7நீதி 1:17சங் 11:1
நீ உன்னைத் தப்புவித்துக்கொள்.
சோம்பேறியே, நீ எறும்பினிடம் போய், நீதி 20:4நீதி 18:9நீதி 13:4நீதி 6:9எபி 6:12மத் 25:26நீதி 30:25ரோம 12:11
அதனுடைய வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள்.
அதற்குப் பிரபுவும், தலைவனும், அதிகாரியும் இல்லாமல் இருந்தும், யோபு 38:39நீதி 30:27யோபு 39:26-30யோபு 41:4-34
கோடைக்காலத்தில் தனக்கு ஆகாரத்தைச் சம்பாதித்து, நீதி 10:51 தீமோ 6:19நீதி 30:25
அறுப்புக்காலத்தில் தனக்குத் தானியத்தைச் சேர்த்துவைக்கும்.
சோம்பேறியே, நீ எவ்வளவு நேரம் படுத்திருப்பாய்? நீதி 24:33-34சங் 94:8எபே 5:14எரே 4:141 தெச 5:2-7நீதி 1:22ரோம 13:11யோவா 1:6
எப்பொழுது உன்னுடைய தூக்கத்தைவிட்டு எழுந்திருப்பாய்?
இன்னும் கொஞ்சம் தூங்கட்டும், இன்னும் கொஞ்சம் உறங்கட்டும், நீதி 24:33-34நீதி 6:6நீதி 23:33-34
இன்னும் கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு தூங்கட்டும் என்பாயோ?
உன்னுடைய தரித்திரம் வழிப்போக்கனைப் போலவும், நீதி 13:4நீதி 10:4நீதி 20:4நீதி 24:34
உன்னுடைய வறுமை ஆயுதம் அணிந்தவனைப்போலவும் வரும்.
வீணான மனிதனாகிய ஒரு துன்மார்க்கன் ஏளனம் பேசித்திரிகிறான். மத் 12:341 தீமோ 5:13நீதி 16:27நீதி 4:24சங் 52:2-4சங் 59:7அப் 20:30நீதி 17:4
அவன் தன்னுடைய கண்களால் சைகைகாட்டி, சங் 35:19யோபு 15:12நீதி 10:10நீதி 5:6
தன்னுடைய கால்களால் பேசி,
தன்னுடைய விரல்களால் போதனை செய்கிறான்.
அவனுடைய இருதயத்திலே பொய்யுண்டு; மீகா 2:1ரோம 16:17ஓசி 8:7நீதி 6:18-19நீதி 2:14நீதி 26:17-22சங் 36:4எசேக் 11:2
இடைவிடாமல் தீங்கைப் பிணைத்து,
வழக்குகளை உண்டாக்குகிறான்.
ஆகையால் திடீரென அவனுக்கு ஆபத்து வரும்; 2 நாளாக 36:16எரே 19:111 தெச 5:3ஏசா 30:13-14நீதி 1:27சங் 73:18-20நீதி 29:1சங் 50:22
உதவியில்லாமல் திடீரென நாசமடைவான்.
ஆறு காரியங்களைக் யெகோவா வெறுக்கிறார், சங் 11:5நீதி 8:13நீதி 11:20உபா 25:16நீதி 17:15நீதி 3:32நீதி 11:1உபா 24:4
ஏழும் அவருக்கு அருவருப்பானவைகள்.
அவையாவன: மேட்டிமையான கண், பொய்நாவு, சங் 120:2-3நீதி 12:22ஏசா 1:15சங் 101:5சங் 5:6உபா 27:25ஏசா 3:9நீதி 21:4
குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்தும் கை,
மிகக்கொடிய சிந்தனைகளைத் தூண்டுகின்ற இருதயம், ஆதி 6:5நீதி 1:16எரே 4:14சங் 36:4ரோம 3:15ஏசா 59:7சகரி 8:17மீகா 2:1
தீங்கு செய்வதற்கு விரைந்து ஓடும் கால்,
பொய்யானதைப் பேசும் பொய்ச்சாட்சி, நீதி 19:5நீதி 6:14யாக் 3:18நீதி 19:9சங் 27:12உபா 19:16-20யாக் 3:14-16நீதி 25:18
சகோதரர்களுக்குள்ளே விரோதத்தை உண்டாக்குதல் ஆகிய இவைகளே.
என் மகனே, உன்னுடைய தகப்பன் கற்பனையைக் காத்துக்கொள்; எபே 6:1உபா 27:16நீதி 7:1-4நீதி 1:8-9நீதி 23:22உபா 21:18நீதி 30:11
உன்னுடைய தாயின் போதகத்தைத் தள்ளாதே.
அவைகளை எப்பொழுதும் உன்னுடைய இருதயத்திலே அணிந்து, அவைகளை உன்னுடைய கழுத்திலே கட்டிக்கொள். நீதி 3:3நீதி 7:3-42 கொரி 3:3உபா 6:8யாத் 13:16நீதி 4:6நீதி 4:21
நீ நடக்கும்போது அது உனக்கு வழிகாட்டும்; சங் 119:11நீதி 3:23-24நீதி 2:11சங் 119:24சங் 119:97சங் 43:3சங் 119:148சங் 119:54
நீ படுக்கும்போது அது உன்னைக் காப்பாற்றும்;
நீ விழிக்கும்போது அது உனக்கு போதிக்கும்.
கட்டளையே விளக்கு, சங் 119:1052 பேது 1:19சங் 19:8நீதி 15:31நீதி 4:13நீதி 4:4எரே 21:8நீதி 15:24
வேதமே வெளிச்சம், போதகதண்டனையே வாழ்வின் வழி.
அது உன்னைத் துன்மார்க்கப் பெண்ணுக்கும், பிரச 7:26நீதி 2:16நீதி 5:3நீதி 7:5
ஆசை வார்த்தைகளைப் பேசும் நாக்கை உடைய ஒழுங்கீனமானவளுக்கும் விலக்கிக் காக்கும்.
உன்னுடைய இருதயத்திலே அவளுடைய அழகை ரசிக்காதே; யாக் 1:14-15மத் 5:282இராஜா 9:302 சாமு 11:2-5ஏசா 3:16உன்னத 4:9
அவள் தன்னுடைய கண்ணின் இமைகளினால் உன்னைப் பிடிக்கவிடாதே.
விபசாரியினால் ஒரு அப்பத்துண்டையும் இழக்கவேண்டியதாகும்; லூக் 15:30நீதி 29:31 சாமு 2:36ஆதி 39:14எசேக் 13:18எசேக் 13:8லூக் 15:13-15நீதி 29:8
விபசாரியானவள் அருமையான உயிரை வேட்டையாடுகிறாள்.
தன்னுடைய உடை வேகாமல் மடியிலே எவனாவது நெருப்பை வைத்துக்கொள்ளமுடியுமா? யோபு 31:9-12ஓசி 7:4-7யாக் 3:5
தன்னுடைய கால் சுடாமல் எவனாவது தழலின்மேல் நடக்கமுடியுமா?
பிறனுடைய மனைவியிடம் தவறான உறவுகொள்பவனும், 1 கொரி 7:12 சாமு 12:9-10எசேக் 22:11லேவி 20:10மல்கி 3:52 சாமு 11:3-42 சாமு 16:21ஆதி 12:18-19
அப்படியே அவளைத் தொடுகிற எவனும், தண்டனைக்குத் தப்பமாட்டான்.
திருடன் தன்னுடைய பசியை ஆற்றத் திருடினால் மக்கள் அவனை இகழமாட்டார்கள்; யோபு 38:39
அவன் கண்டுபிடிக்கப்பட்டால் ஏழு மடங்கு கொடுத்துத் தீர்க்கவேண்டும்; லூக் 19:82 சாமு 12:6யாத் 22:1-4யோபு 20:18மத் 18:25
தன்னுடைய வீட்டிலுள்ள பொருள்களையெல்லாம் கொடுக்கவேண்டியதாகும்.
பெண்ணுடனே விபசாரம்செய்கிறவன் மதிகெட்டவன்; நீதி 7:7எபி 13:4நீதி 7:22-23ரோம 1:22-24பிரச 7:25-26நீதி 2:18-19யாத் 20:14ஆதி 39:9-10
அப்படிச் செய்கிறவன் தன்னுடைய ஆத்துமாவைக் கெடுத்துப்போடுகிறான்.
வாதையையும் வெட்கத்தையும் அடைவான்; நீதி 5:9-111 இராஜா 15:5ஆதி 49:4நியாயாதி 16:19-21மத் 1:6நெகே 13:26சங் 38:1-8சங் 51:1
அவனுடைய நிந்தை ஒழியாது.
பெண்ணைப்பற்றிய எரிச்சல் ஆணுக்கு கடுங்கோபத்தை உண்டாக்கும்; எண் 5:14நீதி 27:4உன்னத 8:61 கொரி 10:22நியாயாதி 19:29-30எண் 25:11
அவன் பழிவாங்கும் நாளில் தப்பவிடமாட்டான்.
அவன் எந்த நஷ்டத்தையும் பார்க்கமாட்டான்; 2இராஜா 5:1ஏசா 2:9மல்கி 2:9நீதி 4:3நீதி 7:13நீதி 8:25
அநேகம் வெகுமதிகளைக் கொடுத்தாலும் அமர்ந்திருக்கமாட்டான்.