நீதிமொழிகள் 2

Proverbs 2
அத்தியாயம் 2

ஞானத்தின் நற்பலன்கள்

என் மகனே, நீ உன்னுடைய செவியை ஞானத்திற்குச் சாய்த்து, நீதி 3:1நீதி 1:3யோவா 12:47-48நீதி 4:1உபா 6:6-9நீதி 7:1நீதி 4:20-22நீதி 6:21

உன்னுடைய இருதயத்தைப் புத்திக்கு அமையச்செய்வதற்காக,

நீ என்னுடைய வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, நீதி 23:12நீதி 18:1மத் 13:9சங் 119:111-112சங் 90:12நீதி 22:17-21அப் 17:11பிரச 7:25

என்னுடைய கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்தி,

ஞானத்தை வா என்று கூப்பிட்டு, புத்தியைச் சத்தமிட்டு அழைத்து, யாக் 1:5எபே 1:17-18நீதி 3:61 இராஜா 3:9-12சங் 25:4-5சங் 119:125சங் 119:1691 நாளாக 22:12

அதை வெள்ளியைப்போல் நாடி, மத் 13:44மத் 19:29நீதி 16:16யோபு 28:12-20யோபு 3:21நீதி 8:18-19பிரச 4:8லூக் 16:8

புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடினால்,

அப்பொழுது யெகோவாவுக்குப் பயப்படுதல் இன்னதென்று நீ உணர்ந்து, நீதி 1:7எரே 24:71 யோவா 5:202 நாளாக 1:10-12எரே 32:40-41லூக் 10:22லூக் 11:9-13எரே 9:24

தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய்.

யெகோவா ஞானத்தைத் தருகிறார்; எபே 1:17-18யாக் 1:5லூக் 21:15ஏசா 54:13யோபு 32:8சங் 119:98யோவா 6:451 இராஜா 3:12

அவருடைய வாயிலிருந்து அறிவும் புத்தியும் வரும்.

அவர் நீதிமான்களுக்கென்று மெய்ஞானத்தை வைத்திருக்கிறார்; யாக் 3:15-17நீதி 30:5சங் 84:111 கொரி 3:18-191 கொரி 1:192 தீமோ 3:15-171 கொரி 1:30நீதி 28:18

உத்தமமாக நடக்கிறவர்களுக்கு அவர் கேடகமாக இருக்கிறார்.

அவர் நியாயத்தின் வழிகளைத் தற்காத்து, சங் 23:31 சாமு 2:9யோவா 10:28-29சங் 145:20சங் 66:9சங் 37:23-24யூதா 1:24சங் 37:28

தம்முடைய பரிசுத்தவான்களின் பாதையைக் காப்பாற்றுகிறார்.

அப்பொழுது நீதியையும், நியாயத்தையும், நிதானத்தையும், எரே 6:16ஏசா 48:17மத் 7:13-14சங் 143:8-10நீதி 1:2-6யோவா 14:6சங் 119:99சங் 25:8-9

எல்லா நல்வழிகளையும் அறிந்துகொள்வாய்.

ஞானம் உன்னுடைய இருதயத்தில் நுழைந்து, எரே 15:16கொலோ 3:16யோபு 23:12நீதி 18:1-2நீதி 24:13-14சங் 104:34சங் 119:162சங் 19:10

அறிவு உன்னுடைய ஆத்துமாவுக்கு இன்பமாக இருக்கும்போது,

நல்யோசனை உன்னைக் காப்பாற்றும், எபே 5:15நீதி 4:6சங் 25:21பிரச 10:10சங் 119:9-11பிரச 9:15-18நீதி 6:22-24

புத்தி உன்னைப் பாதுகாக்கும்.

அதினால் நீ துன்மார்க்கர்களுடைய வழிக்கும், 1 கொரி 15:33நீதி 13:20நீதி 8:132 கொரி 6:17ஏசா 59:3-5அப் 20:30நீதி 1:10-19நீதி 16:28-30

மாறுபாடு பேசுகிற மனிதனுக்கும்,

இருளான வழிகளில் நடக்க நீதிநெறிகளைவிட்டு, யோவா 3:19-20நீதி 4:191 யோவா 2:192 பேது 2:20-22நீதி 21:161 தெச 5:5-72 தீமோ 4:10எசேக் 18:26

தீமைசெய்ய மகிழ்ந்து, துன்மார்க்கர்களுடைய மாறுபாடுகளில் களிகூருகிறவர்களுக்கும், நீதி 10:23ரோம 1:32எரே 11:151 கொரி 13:6லூக் 22:4-5ஓசி 7:3செப்ப 3:11ஆப 1:15

மாறுபாடான பாதைகளிலும் கோணலான வழிகளிலும் நடக்கிறவர்களுக்கும் சங் 125:5நீதி 21:8உபா 32:5பிலி 2:15ஏசா 59:8ஏசா 30:8-13

நீ தப்புவிக்கப்படுவாய்.

தன்னுடைய இளவயதின் நாயகனை விட்டு, பிரச 7:26நீதி 22:14நீதி 23:27நீதி 6:24நீதி 7:5-23ஆதி 39:3-12நெகே 13:26-27நீதி 29:5

தன்னுடைய தேவனுடைய உடன்படிக்கையை மறந்து,

ஆசை வார்த்தைகளைப் பேசும் அந்நிய பெண்ணாகிய ஒழுங்கீனமானவளுக்கும் தப்புவிக்கப்படுவாய். எசேக் 16:59-60எசேக் 16:8எரே 3:4மல்கி 2:14-16நீதி 5:18

அவளுடைய வீடு மரணத்திற்கும், 1 கொரி 6:9-11நீதி 9:18எபே 5:5கலா 5:19-21நீதி 5:4-14வெளி 21:8நீதி 6:26-35நீதி 7:22-27

அவளுடைய பாதைகள் மரித்தவர்களிடத்திற்கும் சாய்கிறது.

அவளிடத்தில் போகிறவர்களில் ஒருவரும் திரும்புகிறதில்லை, பிரச 7:26சங் 81:12ஓசி 4:14மத் 19:24-26எபி 6:18எரே 13:23நீதி 4:18

வாழ்வின்பாதைகளில் வந்து சேருகிறதுமில்லை.

ஆதலால் நீ நல்லவர்களின் வழியிலே நடந்து, எபி 6:123 யோவா 1:11எரே 6:16நீதி 13:20சங் 119:115சங் 119:63உன்னத 1:7-8

நீதிமான்களின் பாதைகளைக் காத்துக்கொள்.

நன்மை செய்கிறவர்கள் பூமியிலே தங்குவார்கள்; சங் 84:11சங் 37:29சங் 37:9நீதி 10:30யோபு 42:12சங் 37:11சங் 37:22சங் 37:3

உத்தமர்கள் அதிலே தங்கியிருப்பார்கள்.

துன்மார்க்கர்களோ பூமியிலிருந்து துண்டிக்கப்பட்டுபோவார்கள்; சங் 52:5உபா 7:22ஏசா 3:10-11சங் 37:28உபா 28:63-64நீதி 10:30சங் 145:20யோபு 18:16-18

துரோகிகள் அதில் இல்லாதபடி அழிவார்கள்.