சங்கீதங்கள் 66

Psalms 66
சங்கீதம் 66

இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த ஒரு துதிப் பாடல்.

பூமியின் குடிகளே, நீங்கள் எல்லோரும் தேவனுக்கு முன்பாகக் 1 நாளாக 16:23-24சங் 100:1சங் 98:4சங் 150:6சங் 81:11 நாளாக 15:28சங் 117:1-2சங் 95:1-2

கெம்பீரமாகப் பாடுங்கள்.

அவர் பெயரின் மகத்துவத்தைக் புகழ்ந்துபாடி, சங் 105:2-3ஏசா 49:13வெளி 5:13ஏசா 42:12ஏசா 12:4-6நெகே 9:5சங் 107:22வெளி 4:8-11

அவருடைய துதியின் மகிமையைக் கொண்டாடுங்கள்.

தேவனை நோக்கி: உமது செயல்களில் எவ்வளவு பயங்கரமாக இருக்கிறீர்; சங் 18:44சங் 65:5சங் 81:15சங் 47:2ஏசா 2:19எரே 10:10சங் 22:28-29சங் 78:35-36

உமது மகத்துவமான வல்லமைக்காக உம்முடைய எதிரிகள்

உமக்கு வஞ்சகம் பேசி அடங்குவார்கள்.

பூமியின் மீதெங்கும் உம்மைப் பணிந்துகொண்டு உம்மைத் துதித்துப் பாடுவார்கள்; சங் 22:27சங் 117:1சங் 96:1-2மல்கி 1:11வெளி 15:4தானி 7:14ஏசா 2:2-4ஏசா 42:10-12

அவர்கள் உம்முடைய பெயரைத் துதித்துப் பாடுவார்கள் என்று சொல்லுங்கள். (சேலா)

தேவனுடைய செய்கைகளை வந்து பாருங்கள்; சங் 126:1-3எண் 23:23சங் 111:2சங் 46:8சங் 66:16சங் 66:3சங் 106:22சங் 99:3

அவர் மனிதர்களிடத்தில் நடப்பிக்கும் செயல்களில் பயங்கரமானவர்.

கடலை உலர்ந்த தரையாக மாற்றினார்; யோசு 3:16யாத் 14:21-22யாத் 15:1-21யோசு 3:14சங் 78:13சங் 106:8-12சங் 136:13-14ஏசா 63:13-14

ஆற்றைக் கால்நடையாகக் கடந்தார்கள்;

அங்கே அவரில் சந்தோஷமடைந்தோம்.

அவர் தம்முடைய வல்லமையினால் என்றென்றைக்கும் அரசாளுகிறார்; சங் 11:42 நாளாக 16:9மத் 28:18தானி 4:35தானி 5:20-28யோபு 9:4சங் 140:8சங் 33:13

அவருடைய கண்கள் தேசத்தின்மேல் நோக்கமாக இருக்கிறது;

துரோகிகள் தங்களை உயர்த்தாமல் இருப்பார்களாக. (சேலா)

மக்களே, நம்முடைய தேவனைத் துதித்து, அவரைத் துதிக்கும் சத்தத்தைக் கேட்கச்செய்யுங்கள். சங் 98:4எரே 33:11சங் 47:1சங் 66:2வெளி 19:1உபா 32:43வெளி 19:5-6வெளி 5:11-14

அவர் நம்முடைய கால்களைத் தள்ளாடவிடாமல், சங் 121:3சங் 112:6சங் 94:181 சாமு 2:9சங் 37:23-241 சாமு 25:29அப் 17:28கொலோ 3:3-4

நம்முடைய ஆத்துமாவை உயிரோடு வைக்கிறார்.

தேவனே, எங்களைச் சோதித்தீர்; ஏசா 48:10சங் 17:31 பேது 1:6-7நீதி 17:3யோபு 23:10சகரி 13:9உபா 13:3உபா 8:16

வெள்ளியைப் புடமிடுகிறதுபோல எங்களைப் புடமிட்டீர்.

எங்களை வலையில் அகப்படுத்தி, புலம் 1:13எசேக் 12:13ஓசி 7:12யோபு 19:6உபா 33:11புலம் 3:2-66மத் 6:13

எங்களுடைய இடுப்புகளின்மேல் வருத்தமான பாரத்தை ஏற்றினீர்.

மனிதர்களை எங்களுடைய தலையின்மேல் ஏறிப்போகச்செய்தீர்; ஏசா 43:1-2ஏசா 51:23யாக் 5:11சங் 40:2-31 தெச 3:3-4அப் 14:22யோபு 36:16வெளி 7:14-17

தீயையும் தண்ணீரையும் கடந்து வந்தோம்;

செழிப்பான இடத்தில் எங்களைக் கொண்டுவந்து விட்டீர்.

சர்வாங்க தகனபலிகளோடு உமது ஆலயத்திற்குள் நுழைவேன்; பிரச 5:4சங் 100:4சங் 56:12சங் 116:17-19எபி 13:15சங் 116:14சங் 118:19யோனா 2:9

என்னுடைய இக்கட்டில் நான் என்னுடைய உதடுகளைத் திறந்து, 1 சாமு 1:11நியாயாதி 11:35-36சங் 18:62 சாமு 22:7எண் 30:2எண் 30:8ஆதி 28:20-22ஆதி 35:3

என்னுடைய வாயினால் சொல்லிய என்னுடைய பொருத்தனைகளை

உமக்குச் செலுத்துவேன்.

ஆட்டுக்கடாக்களின் சுகந்தவாசனையுடனே கொழுமையானவைகளை உமக்குத் தகனபலியாக செலுத்துவேன்; சங் 51:191 நாளாக 16:1-32 சாமு 6:132 சாமு 6:17-19எரே 41:5எண் 6:14

காளைகளையும் செம்மறியாட்டுக் கடாக்களையும் உமக்குப் பலியிடுவேன். (சேலா)

தேவனுக்குப் பயந்தவர்களே, நீங்கள் எல்லோரும் வந்து கேளுங்கள்; சங் 34:11சங் 71:15மல்கி 3:16சங் 71:181 யோவா 1:3சங் 66:5சங் 71:20சங் 71:24

அவர் என்னுடைய ஆத்துமாவுக்குச் செய்ததைச் சொல்லுவேன்.

அவரை நோக்கி என்னுடைய வாயினால் கூப்பிட்டேன், சங் 34:6சங் 116:1-2சங் 116:12சங் 30:1சங் 145:1சங் 30:8சங் 34:3-4

என்னுடைய நாவினால் அவர் புகழப்பட்டார்.

என்னுடைய இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தேனானால், யோவா 9:31நீதி 28:9நீதி 15:29நீதி 15:8ஏசா 1:15யாக் 4:3நீதி 21:13யோபு 27:8-9

ஆண்டவர் எனக்குச் செவிகொடுக்கமாட்டார்.

மெய்யாக தேவன் எனக்குச் செவிகொடுத்தார், சங் 116:1-2எபி 5:7புலம் 3:55-56சங் 6:91 யோவா 3:20-22சங் 34:6

என்னுடைய ஜெபத்தின் சத்தத்தைக் கேட்டார்.

என்னுடைய ஜெபத்தைத் தள்ளாமலும், சங் 86:12-13சங் 68:35சங் 51:112 சாமு 7:14-15சங் 22:24

தமது கிருபையை என்னைவிட்டு விலக்காமலும்

இருந்த தேவனுக்கு நன்றி உண்டாகட்டும்.