கோராகின் குடும்பத்தின் இராகத் தலைவனுக்கு அளிக்கப்பட்ட ஒரு பாடல்.
எல்லா மக்களே, கைகொட்டி, சங் 98:4எரே 31:7சங் 106:47சங் 46:1வெளி 19:1-22 சாமு 6:15சங் 47:5சகரி 9:9
தேவனுக்கு முன்பாகக் கெம்பீரசத்தமாக ஆர்ப்பரியுங்கள்.
உன்னதமான தேவனாகிய யெகோவா பயங்கரமானவரும், சங் 95:3சங் 99:3மல்கி 1:14உபா 7:21சங் 66:3-5சங் 68:35நெகே 1:5சங் 47:7
பூமியின் மீதெங்கும் மகத்துவமான ராஜாவுமாக இருக்கிறார்.
மக்களை நமக்கு கீழ்படுத்தி, 1 கொரி 15:25சங் 18:47சங் 81:14சங் 110:1யோசு 10:24-25பிலி 3:21உபா 33:29யோசு 21:44
தேசங்களை நம்முடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்துவார்.
தமக்குப் பிரியமான யாக்கோபின் சிறப்பான தேசத்தை நமக்குச் உரிமைச்சொத்தாக தெரிந்தளிப்பார். (சேலா) 1 பேது 1:4ஆமோ 6:8நாகூ 2:21 யோவா 4:9-10ஆமோ 8:7ஓசி 14:4உபா 7:6-8எபே 2:4-5
தேவன் ஆர்ப்பரிப்போடும், யெகோவா எக்காள சத்தத்தோடும் உயர எழுந்தருளினார். சங் 68:331 கொரி 15:521 தெச 4:16சங் 24:7-10சங் 78:65வெளி 11:152 சாமு 6:15யோசு 6:5
தேவனைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள்; ஏசா 12:4-6மத் 25:34சங் 117:1-2சங் 68:41 நாளாக 16:9ஏசா 33:22மத் 27:37சங் 145:1
நம்முடைய ராஜாவைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள்.
தேவன் பூமியனைத்திற்கும் ராஜா; கருத்துடனே அவரைப் போற்றிப் பாடுங்கள். சகரி 14:9கொலோ 3:16சங் 47:8சங் 47:2வெளி 11:151 கொரி 14:14-15
தேவன் தேசங்களின்மேல் அரசாளுகிறார்; 1 நாளாக 16:31வெளி 19:6சங் 45:6-7சங் 93:1சங் 110:6சங் 22:27-29சங் 89:14சங் 9:4
தேவன் தமது பரிசுத்த சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கிறார்.
மக்களின் பிரபுக்கள் ஆபிரகாமின் தேவனுடைய மக்களாகச் சேர்க்கப்படுகிறார்கள்; சங் 89:18ஆதி 49:10சங் 72:7-9யாத் 3:6ஆதி 17:7-8ஏசா 41:8-10யாத் 3:15கலா 3:29
பூமியின் கேடகங்கள் தேவனுடையவைகள்;
அவர் மகா உன்னதமான தேவன்.