இராகத் தலைவனுக்கு தாவீதின் பாடல்.
யெகோவாவுக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; சங் 27:13-14சங் 37:7யாக் 5:7-11சங் 116:2சங் 34:15தானி 9:18சங் 130:2
அவர் என்னிடமாகச் சாய்ந்து,
என்னுடைய கூப்பிடுதலைக் கேட்டார்.
பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து என்னைத் தூக்கியெடுத்து, சங் 37:23சங் 119:133சங் 27:5மத் 7:24-25சங் 61:2சங் 71:20யோனா 2:5-6சங் 69:2
என்னுடைய கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி,
என்னுடைய கால் அடிகளை உறுதிப்படுத்தி,
நமது தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை அவர் என் வாயிலே கொடுத்தார்; சங் 33:3சங் 103:1-5சங் 34:1-6சங் 52:6ஏசா 12:1-4சங் 144:9சங் 35:27வெளி 14:3
அநேகர் அதைக் கண்டு, பயந்து, யெகோவாவை நம்புவார்கள்.
பெருமைக்காரர்களையும் பொய்யைச் 1 சார்ந்திருக்கிறவர்களையும் பார்க்காமல், எரே 17:7-8சங் 84:11-12சங் 125:5சங் 34:8சங் 118:8-9சங் 2:12ரோம 15:12-132 தெச 2:9-11
யெகோவாவையே தன்னுடைய நம்பிக்கையாக வைக்கிற மனிதன் பாக்கியவான்.
என் தேவனாகிய யெகோவாவே, எரே 29:11யாத் 15:11சங் 139:17-18சங் 71:15சங் 92:5சங் 136:4ஏசா 55:8-9யோபு 9:10
நீர் எங்களுக்காக செய்த உம்முடைய அதிசயங்களும் உம்முடைய யோசனைகளும் அநேகமாக இருக்கிறது;
ஒருவரும் அவைகளை உமக்கு விவரித்துச் சொல்லி முடியாது.
நான் அவைகளைச் சொல்லி அறிவிக்கவேண்டுமானால் அவைகள் எண்ணிக்கைக்கு மேலானவைகள்.
பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பாமல், எபி 10:5-12ஏசா 1:111 சாமு 15:22சங் 51:16ஓசி 6:6மத் 9:13மத் 12:7ஆமோ 5:22
என் காதுகளைத் திறந்தீர்;
சர்வாங்க தகனபலியையும் பாவநிவாரணபலியையும் நீர் கேட்கவில்லை.
அப்பொழுது நான்: இதோ, வருகிறேன், புத்தகச்சுருளில் என்னைக் குறித்து எழுதியிருக்கிறது; எபி 10:7-9லூக் 24:44யோவா 5:39லூக் 24:271 கொரி 15:3-41 பேது 1:10-11அப் 10:43வெளி 19:10
என் தேவனே, உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன்; ரோம 7:22யோவா 4:34எரே 15:16சங் 119:16சங் 119:24சங் 119:47சங் 37:30-31எரே 31:33
உமது நியாயப்பிரமாணம் என்னுடைய உள்ளத்திற்குள் இருக்கிறது என்று சொன்னேன்.
மகா சபையிலே நீதியைப் பிரசங்கித்தேன்; சங் 22:25மாற் 16:15-16சங் 22:22சங் 71:15-18எபி 2:12சங் 119:13சங் 35:18லூக் 4:16-22
என்னுடைய உதடுகளை மூடமாட்டேன்,
யெகோவாவே, நீர் அதை அறிவீர்.
உம்முடைய நீதியை நான் என்னுடைய இருதயத்திற்குள் மறைத்து வைக்கவில்லை; ரோம 1:16-17அப் 20:20-211 தீமோ 1:15ரோம 10:9-101 தெச 1:8லூக் 2:30-32அப் 13:32-33அப் 20:26-27
உமது சத்தியத்தையும் உமது இரட்சிப்பையும் சொல்லியிருக்கிறேன்;
உமது கிருபையையும் உமது உண்மையையும் மகா சபைக்கு அறிவிக்காதபடிக்கு நான் ஒளித்துவைக்கவில்லை.
யெகோவாவே நீர் உம்முடைய இரக்கங்களை எனக்குக் கிடைக்காமல் போகச்செய்யவேண்டாம்; சங் 23:6சங் 43:3சங் 57:3நீதி 20:28சங் 69:16சங் 61:7சங் 69:13சங் 85:10
உமது கிருபையும் உமது உண்மையும் எப்பொழுதும் என்னைக் காக்கட்டும்.
எண்ணிக்கைக்கு அடங்காத தீமைகள் என்னைச் சூழ்ந்துகொண்டது, சங் 38:4சங் 73:26சங் 69:4ஏசா 53:6லூக் 18:13-14சங் 116:3சங் 19:121 பேது 3:18
என்னுடைய அக்கிரமங்கள் என்னைத் தொடர்ந்து பிடித்தது, நான் நிமிர்ந்து பார்க்கமுடியாமல் இருக்கிறது,
அவைகள் என்னுடைய தலைமுடியிலும் அதிகமாக இருக்கிறது,
என்னுடைய இருதயம் சோர்ந்துபோகிறது.
யெகோவாவே, என்னை விடுவித்தருளும்; சங் 25:17-18சங் 38:22சங் 70:1-5மத் 26:36-44சங் 22:19சங் 71:12
யெகோவாவே, எனக்கு உதவிசெய்ய விரைந்துவாரும்.
என்னுடைய உயிரை அழிக்கத் தேடுகிறவர்கள் ஒன்றாக வெட்கி நாணி, சங் 35:26சங் 35:4ஏசா 45:24யோவா 18:6சங் 71:13சங் 31:17-18சங் 9:3அப் 12:23-24
எனக்குத் தீங்குசெய்ய விரும்புகிறவர்கள் பின்னிட்டு அவமானமடைவார்களாக.
என்னுடைய பெயரில் ஆ ஆ! ஆ ஆ! என்று சொல்லுகிறவர்கள், சங் 35:21சங் 35:25சங் 69:24-25லூக் 19:43-44லூக் 21:23-24சங் 109:6-20சங் 70:3-4சங் 73:19
தங்களுடைய வெட்கத்தின் பலனையடைந்து கைவிடப்படுவார்களாக.
உம்மைத் தேடுகிற அனைவரும் உமக்குள் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்களாக; சங் 35:27சங் 68:3அப் 19:17சங் 119:123ஏசா 65:13-14லூக் 1:46-47பிலி 3:7-9சங் 105:3
உம்முடைய இரட்சிப்பை விரும்புகிறவர்கள் யெகோவாவுக்கு மகிமை உண்டாவதாக என்று
எப்பொழுதும் சொல்வார்களாக.
நான் ஏழ்மையும் தேவையுமுள்ளவன், சங் 70:5எபி 13:6ஏசா 41:171 பேது 5:7சங் 34:6சங் 54:4சங் 86:11 பேது 2:23
யெகோவாவோ என்மேல் நினைவாக இருக்கிறார்;
தேவனே நீர் என்னுடைய துணையும் என்னை விடுவிக்கிறவருமாக இருக்கிறீர்;
என் தேவனே, தாமதிக்க வேண்டாம்.