யோபு 27

Job 27
அத்தியாயம் 27

யோபு பின்னும் தன் பிரசங்கவாக்கியத்தைத் தொடர்ந்து சொன்னது: யோபு 29:1எண் 23:7எண் 24:15எண் 24:3நீதி 26:7சங் 78:2சங் 49:4

“என் சுவாசம் என்னிலும், யோபு 34:52இராஜா 4:27எண் 14:211 இராஜா 17:11 இராஜா 18:151 சாமு 14:391 சாமு 14:451 சாமு 20:21

தேவன் தந்த ஆவி என் மூக்கிலும் இருக்கும்வரை,

என் உதடுகள் அநீதியைச் சொல்வதுமில்லை; ஆதி 2:7யோபு 33:4ஏசா 2:22யோபு 32:8அப் 17:25

என் நாக்கு பொய் பேசுவதுமில்லையென்று,

என் நியாயத்தைத் தள்ளிவிடுகிற தேவனும், யோபு 13:72 கொரி 11:10யோவா 8:55யோபு 34:6யோபு 6:28

என் ஆத்துமாவைக் கசப்பாக்குகிற சர்வவல்லமையுள்ள தேவனுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.

நீங்கள் பேசுகிறது நீதியென்று நான் ஒத்துக்கொள்வது எனக்குத் தூரமாயிருப்பதாக; யோபு 2:9யோபு 13:15யோபு 42:7நீதி 17:15உபா 25:1யோபு 29:14கலா 2:11யோபு 32:3

என் ஆவி பிரியும்வரை என் உத்தமத்தை என்னைவிட்டு விலக்கமாட்டேன்.

என் நீதியை உறுதியாகப் பிடித்திருக்கிறேன்; யோபு 2:31 யோவா 3:20-21அப் 24:162 கொரி 12:11நீதி 4:13சங் 18:20-23

அதை நான் விட்டுவிடமாட்டேன்; நான் உயிரோடிருக்கும்வரை என் இருதயம் என்னை நிந்திக்காது.

என் பகைவன் ஆகாதவனைப்போலவும், தானி 4:191 சாமு 25:262 சாமு 18:32

எனக்கு விரோதமாக எழும்புகிறவன் அக்கிரமக்காரனைப்போலவும் இருப்பானாக.

அக்கிரமக்காரன் பொருளைத் தேடி வைத்திருந்தாலும், மத் 16:26யோபு 8:13யோபு 11:20லூக் 12:20-211 தீமோ 6:9-10ஏசா 33:14-15யாக் 5:1-3யோபு 13:16

தேவன் அவனுடைய ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்போது 1,

அவனுடைய நம்பிக்கையினால் லாபம் என்ன?

ஆபத்து அவன்மேல் வரும்போது, எரே 14:12ஏசா 1:15நீதி 1:28யோபு 35:12-13மீகா 3:4சங் 18:41எசேக் 8:18ஓசி 7:14

தேவன் அவனுடைய கூப்பிடுதலைக் கேட்பாரோ?

அவன் சர்வவல்லமையுள்ள தேவன் மேல் மனமகிழ்ச்சியாயிருப்பானோ? யோபு 22:26-27சங் 37:4ஆப 3:181 தெச 5:17அப் 10:2எபே 6:18லூக் 18:1மத் 13:21

அவன் எப்பொழுதும் தேவனைத் தொழுதுகொண்டிருப்பானோ?

தேவனுடைய கரத்தின் கிரியையைக் குறித்து உங்களுக்கு போதிப்பேன்; சங் 71:17ஏசா 8:11யோபு 4:3-4உபா 4:5யோபு 6:10அப் 20:20யோபு 32:8-10

சர்வவல்லவரிடத்தில் இருக்கிறதை நான் மறைக்கமாட்டேன்.

இதோ, நீங்கள் எல்லோரும் அதைக் கண்டிருந்தும், நீங்கள் இத்தனை வீண் எண்ணங்கொண்டிருக்கிறது என்ன? யோபு 16:3யோபு 19:2-3யோபு 21:3பிரச 8:14பிரச 9:1-3யோபு 13:4-9யோபு 17:2யோபு 21:28-30

பொல்லாத மனிதனுக்கு தேவனிடத்திலிருந்து வருகிற பங்கும், யோபு 20:19-292 பேது 2:9ஏசா 3:11யோபு 15:20-35பிரச 8:13யாக் 5:4-6யோபு 31:3மல்கி 3:5

கொடூரக்காரர் சர்வவல்லவரால் அடைகிற பங்கும் என்னவெனில்,

அவனுடைய மகன்கள் பெருகினால் பட்டயத்திற்கு இரையாவார்கள்; உபா 28:41யோபு 20:10லூக் 23:291 சாமு 2:52இராஜா 10:6-102இராஜா 9:7-8உபா 28:32எஸ்த 5:11

அவனுடைய கர்ப்பப்பிறப்புகள் ஆகாரத்தினால் திருப்தியாவதில்லை.

அவனுக்கு மீதியானவர்கள் செத்துப் புதைக்கப்படுவார்கள்; சங் 78:641 இராஜா 14:10-111 இராஜா 16:3-41 இராஜா 21:21-24எரே 22:18

அவர்களுடைய விதவைகளும் 2 புலம்புவதில்லை.

அவன் புழுதியைப்போலப் பணத்தைக் குவித்துக்கொண்டாலும், சகரி 9:3மத் 6:191 இராஜா 10:27ஆப 2:6யாக் 5:2யோபு 22:24

மண்ணைப்போல ஆடைகளைச் சம்பாதித்தாலும்,

அவன் சம்பாதித்ததை நீதிமான் உடுத்திக்கொண்டு, நீதி 13:22பிரச 2:26நீதி 28:8

குற்றமில்லாதவன் அவன் பணத்தைப் பகிர்ந்துகொள்ளுவான்.

அவனுடைய வீடு சிலந்திப்பூச்சி கட்டின வீட்டைப்போலவும், ஏசா 1:8யோபு 8:14-15ஏசா 51:8ஏசா 38:12புலம் 2:6

காவல்காக்கிறவன் போட்ட குடிசையைப் போலாகும்.

அவன் ஐசுவரியவானாகத் தூங்கிக் கிடந்து, யோபு 24:24சங் 58:9எரே 8:2சங் 73:19-20ஆதி 49:10யோபு 14:10யோபு 14:12-15யோபு 20:7-9

ஒன்றும் இழந்துவிடாமல் போனாலும், அவன் தன் கண்களைத் திறக்கும்போது ஒன்றுமில்லாதிருக்கும்.

வெள்ளத்தைப்போல பயங்கள் அவனை வாரிக்கொண்டுபோகும்; யோபு 15:21யோபு 18:112இராஜா 19:35யாத் 12:29யோபு 20:23யோபு 21:18தானி 5:30யோபு 20:8

இரவுநேரத்தில் பெருங்காற்று அவனை அடித்துக்கொண்டுபோகும்.

கிழக்குக்காற்று அவனைத் தூக்கிக்கொண்டுபோக, அவன் போய்விடுவான்; சங் 11:6சங் 83:15யோபு 21:18யோபு 7:10சங் 58:9யாத் 9:23-25ஓசி 13:15எரே 18:17

அது அவனை அவனுடைய இடத்திலிருந்து தள்ளிக்கொண்டுபோகும்.

அவருடைய கைக்குத் தப்பியோடப் பார்ப்பான் 2 பேது 2:4-5எசேக் 24:14எசேக் 5:11யோபு 11:20ஆமோ 2:14ஆமோ 9:1-3உபா 32:23யாத் 14:25-28

ஆனால் அதை அவன்மேல் வரச்செய்து அவனைத் தப்பவிடாதிருப்பார்;.

மக்கள் அவனைப் பார்த்துக் கைகொட்டி நகைத்து, புலம் 2:151 இராஜா 9:8எரே 19:8நீதி 11:10செப்ப 2:15எஸ்த 9:22-25யோபு 18:18மீகா 6:16

அவனை அவனுடைய இடத்தை விட்டு விரட்டிவிடுவார்கள்.