நீதிமொழிகள் 5

Proverbs 5
அத்தியாயம் 5

விபசாரத்திற்கு எதிரான எச்சரிக்கை

என் மகனே, என்னுடைய ஞானத்தைக் கவனித்து, நீதி 22:17நீதி 2:1நீதி 4:20வெளி 2:11மாற் 4:23வெளி 2:17வெளி 3:13யாக் 1:19

என்னுடைய புத்திக்கு உன்னுடைய செவியைச் சாய்;

அப்பொழுது நீ விவேகத்தைப் பேணிக்கொள்வாய், மல்கி 2:6-7நீதி 15:7நீதி 16:23உன்னத 4:11நீதி 10:21நீதி 15:2சங் 119:13சங் 45:2

உன்னுடைய உதடுகள் அறிவைக் காத்துக்கொள்ளும்.

ஒழுங்கீனமானவளின் உதடுகள் தேன்கூடுபோல் ஒழுகும்; நீதி 2:16நீதி 6:24நீதி 7:21நீதி 7:5சங் 55:21வெளி 17:2-6

அவளுடைய வாய் எண்ணெயைவிட மிருதுவாக இருக்கும்.

அவளுடைய செயல்களின் முடிவோ எட்டியைப்போலக் கசப்பும், பிரச 7:26சங் 55:21சங் 57:4எபி 4:12நீதி 9:18எபி 12:15-16நியாயாதி 16:15-21நியாயாதி 16:4-6

இருபுறமும் கூர்மையுள்ள பட்டயம்போல் கூர்மையுமாக இருக்கும்.

அவளுடைய காலடிகள் மரணத்திற்கு இறங்கும்; நீதி 7:27நீதி 2:18-19

அவளுடைய நடைகள் பாதாளத்தைப் பற்றிப்போகும்.

நீ வாழ்வின் வழியைச் சிந்தித்துக்கொள்ளாதபடி, நீதி 4:26நீதி 5:21சங் 16:11நீதி 30:20நீதி 6:12-13சங் 119:592 தெச 2:9-10நீதி 11:19

அவளுடைய நடைகள் மாறிமாறி அலையும்; அவைகளை அறியமுடியாது.

ஆதலால் பிள்ளைகளே; இப்பொழுது எனக்குச் செவிகொடுங்கள்; நீதி 4:1நீதி 22:17-21நீதி 7:24எபி 12:25நீதி 3:21நீதி 4:21நீதி 8:32-36

என்னுடைய வாயின் வசனங்களைவிட்டு நீங்காமல் இருங்கள்.

உன்னுடைய வழியை அவளுக்குத் தூரப்படுத்து; எபே 5:11நீதி 7:25மத் 6:13நீதி 4:15நீதி 6:27-28

அவளுடைய வீட்டின் வாசலுக்கு அருகில் சேராதே.

சேர்ந்தால் உன்னுடைய மேன்மையை அந்நியர்களுக்கும், நெகே 13:26ஓசி 4:13-14ஆதி 38:23-26நியாயாதி 16:19-21நீதி 6:29-35

உன்னுடைய ஆயுளின் காலத்தைக் கொடூரமானவர்களுக்கும் கொடுத்துவிடுவாய்.

அந்நியர்கள் உன்னுடைய செல்வத்தினால் திருப்தியடைவார்கள்; ஓசி 7:9நீதி 6:35நீதி 31:3லூக் 15:30

உன்னுடைய உழைப்பின் பலன் மற்றவர்களுடைய வீட்டில் சேரும்.

முடிவிலே உன்னுடைய மாம்சமும் உன்னுடைய சரீரமும் உருவழியும்போது நீ துக்கித்து: ரோம 6:21வெளி 22:15எபி 13:4எண் 5:271 கொரி 5:4-5உபா 32:29எரே 5:31நீதி 7:23

ஐயோ, போதகத்தை நான் வெறுத்தேனே, நீதி 12:1நீதி 1:22நீதி 1:25நீதி 1:7நீதி 15:5யாத் 2:13-14எரே 44:4யோவா 3:19-20

கடிந்துகொள்ளுதலை என் மனம் அலட்சியம் செய்ததே!

என்னுடைய போதகரின் சொல்லை நான் கேட்காலும், 1 தெச 4:8எபி 13:7லூக் 15:181 தெச 5:12-13

எனக்கு உபதேசம்செய்தவர்களுக்கு செவிகொடுக்காமலும் போனேனே!

சபைக்குள்ளும் சங்கத்திற்குள்ளும் கொஞ்சம்குறைய நீதி 13:201 கொரி 10:6-82 பேது 2:10-18ஓசி 4:11-14எண் 25:1-6யூதா 1:7-13

எல்லாத் தீமைக்கும் உள்ளானேனே! என்று முறையிடுவாய்.

உன்னுடைய கிணற்றிலுள்ள தண்ணீரையும், 1 கொரி 7:2-5எபி 13:4நீதி 5:18-19

உன்னுடைய ஊற்றில் ஊறுகிற நீரையும் குடி.

உன்னுடைய ஊற்றுகள் வெளியிலும் சங் 128:3சங் 127:3உபா 33:28ஆதி 24:60ஏசா 48:21நியாயாதி 12:9சங் 68:26

உன்னுடைய வாய்க்கால்கள் வீதிகளிலும் பாய்வதாக.

அவைகள் அந்நியருக்கும் உரியவைகளாக இல்லாமல்,

உனக்கே உரியவைகளாக இருப்பதாக.

உன்னுடைய ஊற்றுக்கண் ஆசீர்வதிக்கப்படுவதாக; பிரச 9:9மல்கி 2:14-15உன்னத 4:15உன்னத 4:12

உன்னுடைய இளவயதின் மனைவியோடு மகிழ்ந்திரு.

அவளே நேசிக்கப்படக்கூடிய பெண்மானும், உன்னத 7:3உன்னத 2:9உன்னத 4:5உன்னத 8:14நீதி 5:15உன்னத 2:172 சாமு 12:4

அழகான வரையாடும்போல இருப்பாளாக;

அவளுடைய மார்புகளே எப்பொழுதும் உன்னைத் திருப்தியாக்கும்;

அவளுடைய நேசத்தால் நீ எப்பொழுதும் மயங்கியிரு.

என் மகனே, நீ ஒழுங்கீனமானவளின்மேல் மயங்கித் திரிந்து, நீதி 6:24நீதி 7:51 இராஜா 11:1நீதி 22:14நீதி 23:27-28நீதி 23:33நீதி 2:16-19

அந்நிய பெண்ணின் மார்பைத் தழுவவேண்டியது என்ன?

மனிதனுடைய வழிகள் யெகோவாவின் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; எபி 4:13நீதி 15:3எரே 32:19யோபு 34:21ஓசி 7:2எரே 16:17எரே 23:24சங் 11:4

அவனுடைய வழிகள் எல்லாவற்றையும் அவர் சீர்தூக்கிப்பார்க்கிறார்.

துன்மார்க்கனை அவனுடைய அக்கிரமங்களே பிடித்துக்கொள்ளும்; நீதி 1:31-32நீதி 11:5எபே 5:5-6ஓசி 4:11-14எண் 32:23நீதி 1:18சங் 9:151 கொரி 5:9-10

தன்னுடைய பாவக்கயிறுகளால் கட்டப்படுவான்.

அவனுடைய புத்தியைக் கேட்காததினால் இறந்து, யோபு 36:12யோபு 4:212 பேது 2:15-22நீதி 10:21நீதி 14:32நீதி 14:14சங் 81:12

தன்னுடைய மதிகேட்டின் மிகுதியினால் மயங்கிப்போவான்.