ஆமோஸ் 2

Amos 2
அத்தியாயம் 2

இஸ்ரவேலின்மீது நியாயத்தீர்ப்பு

யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: மோவாபின் மூன்று பாவங்களுக்காகவும், நான்கு பாவங்களுக்காகவும், நான் அவனுடைய தண்டனையைத் திருப்பமாட்டேன்; அவன் ஏதோமுடைய ராஜாவின் எலும்புகளைச் சுட்டு சாம்பலாக்கிப் போட்டானே. செப்ப 2:8-9ஆமோ 1:3எசேக் 25:8-92இராஜா 3:26-27ஆமோ 2:4ஏசா 15:1-9ஏசா 25:10எரே 48:1-47 மோவாப் தேசத்தில் தீக்கொளுத்துவேன்; அது கீரியோத்தின் அரண்மனைகளை அழிக்கும்; மோவாபியர்கள் இரைச்சலோடும் ஆர்ப்பரிப்போடும் எக்காள சத்தத்தோடும் சாவார்கள். எரே 48:24எரே 48:41ஆமோ 1:14ஏசா 9:5எரே 48:34 நியாயாதிபதியை அவர்களுடைய நடுவில் இல்லாமல் நான் அழித்து, அவனோடு அவர்களுடைய பிரபுக்களையெல்லாம் கொன்றுபோடுவேன் என்று யெகோவா சொல்லுகிறார். எரே 48:7எண் 24:17ஏசா 40:23எரே 48:25சங் 2:10 மேலும்: யூதாவின் மூன்று பாவங்களுக்காகவும், நான்கு பாவங்களுக்காகவும், நான் அவர்களுடைய தண்டனையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் யெகோவாவுடைய வேதத்தை வெறுத்து, அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளாமல், தங்களுடைய முற்பிதாக்கள் பின்பற்றின பொய்களினால் மோசம்போனார்களே. எசேக் 20:24எசேக் 20:13எசேக் 20:16ஆப 2:18ஓசி 12:2ஏசா 28:15எரே 16:19-202இராஜா 17:19 யூதாவிலே நான் தீக்கொளுத்துவேன்; அது எருசலேமின் அரண்மனைகளை அழிக்கும் என்று யெகோவா சொல்லுகிறார். ஓசி 8:14எரே 17:27எரே 21:10எரே 37:8-10எரே 39:8எரே 52:13 மேலும்: இஸ்ரவேலின் மூன்று பாவங்களுக்காகவும், நான்கு பாவங்களுக்காகவும், நான் அவர்களுடைய தண்டனையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் நீதிமானைப் பணத்திற்கும், எளியவனை ஒரு ஜோடி காலணிகளுக்கும் விற்றுப்போட்டார்களே. யோவே 3:3ஆமோ 5:11-12மீகா 3:2-32இராஜா 17:7-182இராஜா 18:12ஆமோ 6:3-7ஆமோ 8:4-6எசேக் 23:5-9 அவர்கள் தரித்திரர்களுடைய தலையின்மேல் மண்ணைவாரி இறைத்து, சிறுமையானவர்களின் வழியைப் புரட்டுகிறார்கள்; என்னுடைய பரிசுத்த நாமத்தைக் கெடுக்கும்படி மகனும் தகப்பனும் ஒரு பெண்ணிடத்தில் உறவுகொள்ளுகிறார்கள். ஆமோ 5:12எசேக் 22:11ஏசா 10:21 கொரி 5:1மீகா 2:2மீகா 2:91 இராஜா 21:42 சாமு 12:14 அவர்கள் எல்லா பீடங்களின் அருகிலும் அடைமானமாக வாங்கின ஆடைகளின்மேல் படுத்துக்கொண்டு, பிணையமாக பிடிக்கப்பட்டவர்களுடைய மதுபானத்தைத் தங்களுடைய தெய்வங்களின் கோவிலிலே குடிக்கிறார்கள் என்று யெகோவா சொல்லுகிறார். உபா 24:12-17யாத் 22:26-27ஆமோ 6:61 கொரி 10:211 கொரி 10:71 கொரி 8:10ஆமோ 4:1ஆமோ 6:4 நானோ: கேதுருமரங்களைப்போல் உயரமும், கர்வாலி மரங்களைப்போல் வைரமுமாக இருந்த எமோரியனை அவர்களுக்கு முன்பாக அழித்தேன்; உயர இருந்த அவனுடைய கனியையும், தாழ இருந்த அவனுடைய வேர்களையும் அழித்துப்போட்டு, யோபு 18:16மல்கி 4:1உபா 2:24-33உபா 3:11உபா 9:1-3யாத் 34:11ஆதி 15:16எண் 13:28-29 நீங்கள் எமோரியனுடைய தேசத்தைக் கைப்பற்றும்படி உங்களை நான் எகிப்து தேசத்திலிருந்து வரவழைத்து, உங்களை நாற்பது வருடங்களாக வனாந்திரத்திலே வழிநடத்தி, உபா 2:7யாத் 12:51அப் 7:42ஆமோ 3:1அப் 13:18ஆமோ 9:7யாத் 3:8மீகா 6:4 உங்களுடைய மகன்களில் சிலரை தீர்க்கதரிசிகளாகவும், உங்களுடைய வாலிபர்களில் சிலரை நசரேயர்களாகவும் எழும்பச்செய்தேன்; இஸ்ரவேல் மக்களே, இப்படி நான் செய்யவில்லையா என்று யெகோவா கேட்கிறார். எண் 6:2-3எரே 7:251 இராஜா 17:11 இராஜா 18:41 இராஜா 19:161 இராஜா 20:131 இராஜா 20:351 இராஜா 20:41 நீங்களோ நசரேயர்களுக்குத் திராட்சைரசம் குடிக்கக் கொடுத்து, தீர்க்கதரிசிகளை நோக்கி: நீங்கள் தீர்க்கதரிசனம் சொல்லவேண்டாம் என்று கற்பித்தீர்கள். ஆமோ 7:13ஏசா 30:10எரே 11:21மீகா 2:6ஆமோ 7:16 இதோ, கோதுமைக்கட்டுகள் பாரமாக ஏற்றப்பட்ட வண்டியில் நெருக்குகிறதுபோல, நான் உங்களை நீங்கள் இருக்கிற இடத்தில் நெருக்குவேன். ஏசா 1:14எசேக் 16:43எசேக் 6:9ஏசா 43:24ஏசா 7:13மல்கி 2:17சங் 78:40 அப்பொழுது வேகமானவன் ஓடியும் புகலிடமில்லை; பலவான் தன் பலத்தினால் பலப்படுவதுமில்லை; பலசாலி தன் உயிரை காப்பாற்றுவதுமில்லை. எரே 9:23ஆமோ 9:1-3பிரச 9:11சங் 33:16ஏசா 30:16-17யோபு 11:20 வில்லைப் பிடிக்கிறவன் நிற்பதுமில்லை; வேகமானவன் தன்னுடைய கால்களால் தப்பிப்போவதுமில்லை; குதிரையின்மேல் ஏறுகிறவன் தன்னுடைய உயிரை காப்பாற்றிக்கொள்வதுமில்லை. சங் 33:16-17எசேக் 39:3 பலசாலிகளுக்குள்ளே தைரியமானவன் அந்த நாளிலே நிர்வாணியாக ஓடிப்போவான் என்று யெகோவா சொல்லுகிறார். மாற் 14:522இராஜா 7:8-20நியாயாதி 4:17எரே 48:41