மோசேயின் பாடல்
“வானங்களே, செவிகொடுங்கள், நான் பேசுவேன்; ஏசா 1:2உபா 4:26எரே 22:29சங் 49:1உபா 30:19உபா 31:28எரே 6:19சங் 50:4
பூமியே, என் வாய்மொழிகளைக் கேட்பாயாக.
மழையானது இளம்பயிரின்மேல் பொழிவதுபோல, என் உபதேசம் பொழியும்; ஏசா 55:10-11சங் 72:6மீகா 5:7யோபு 29:22-23ஓசி 14:51 கொரி 3:6-82 சாமு 23:4எபி 6:7
பனித்துளிகள் புல்லின்மேல் இறங்குவதுபோல, என் வசனம் இறங்கும்.
யெகோவாவுடைய நாமத்தை பிரபலப்படுத்துவேன்; எரே 10:6சங் 150:2உபா 5:24எபே 1:191 நாளாக 29:11உபா 3:24யாத் 33:19யாத் 6:3
நம்முடைய தேவனுக்கு மகத்துவத்தைச் செலுத்துங்கள்.
“அவர் கன்மலை; சங் 18:30-31சங் 92:15ஏசா 26:42 சாமு 22:31-32சங் 18:2தானி 4:37வெளி 15:3-4உபா 32:30-31
அவருடைய செயல் உத்தமமானது;
அவருடைய வழிகளெல்லாம் நியாயம்,
அவர் அநீதி இல்லாத சத்தியமுள்ள தேவன்;
அவர் நீதியும் செம்மையுமானவர்.
அவர்களோ தங்களைக் கெடுத்துக்கொண்டார்கள், அவர்கள் அவருடைய பிள்ளைகள் அல்ல; பிலி 2:15ஏசா 1:4உபா 31:29மத் 17:17லூக் 9:41ஓசி 9:9மத் 16:4சங் 78:8
இதுவே அவர்களுடைய காரியம்;
அவர்கள் மாறுபாடும் தாறுமாறுமுள்ள சந்ததியார்.
விவேகமில்லாத மதிகெட்ட மக்களே, ஏசா 63:161 யோவா 3:1ஏசா 44:2ஏசா 64:8சங் 74:21 கொரி 6:202 பேது 2:1அப் 20:28
இப்படியா யெகோவாவுக்குப் பதிலளிக்கிறீர்கள்,
உன்னை ஆட்கொண்ட தகப்பன் அவரல்லவா?
உன்னை உண்டாக்கி உன்னை நிலைப்படுத்தினவர் அவரல்லவா?
ஆரம்பநாட்களை நினை; சங் 78:3-4யோபு 8:8-10சங் 44:1ஏசா 46:9சங் 77:5-6உபா 4:32யாத் 13:14ஏசா 63:11
தலைமுறை தலைமுறையாக கடந்துபோன வருடங்களைக் கவனித்துப்பார்;
உன் தகப்பனைக் கேள்,
அவன் உனக்கு அறிவிப்பான்;
உன் மூப்பர்களைக் கேள், அவர்கள் உனக்குச் சொல்லுவார்கள்.
உன்னதமான தேவன் மக்களுக்குச் சொத்துக்களைப் பங்கிட்டு, அப் 17:26ஆதி 11:8-9தானி 4:17ஆதி 10:25ஆதி 15:18-21சங் 115:16ஆதி 10:15சங் 91:1
ஆதாமின் பிள்ளைகளை வெவ்வேறாகப் பிரித்த காலத்தில்,
இஸ்ரவேல் மக்களுடைய எண்ணிக்கைக்குத்தக்கதாக,
அனைத்து மக்களின் எல்லைகளைத் திட்டம்செய்தார்.
யெகோவாவுடைய மக்களே அவருடைய பங்கு; எரே 10:161 பேது 2:9-101 இராஜா 8:511 இராஜா 8:53யாத் 19:5-6எரே 51:19உபா 26:18-19ஏசா 43:21
யாக்கோபு அவருக்குச் சொந்தமானவர்கள்.
“பாழான நிலத்திலும் ஊளையிடுதலுள்ள வெறுமையான வெட்டவெளியிலும் அவர் அவனைக் கண்டுபிடித்தார், உபா 8:15-16சங் 17:8சகரி 2:8ஓசி 13:5எரே 2:6நெகே 9:19-21சங் 32:7-10நீதி 7:2
அவனை நடத்தினார்,
அவனை உணர்த்தினார், அவனைத் தமது கண்மணியைப் போலக் காத்தருளினார்.
கழுகு தன் கூட்டைக் கலைத்து, யாத் 19:4ஏசா 46:4ஏசா 63:9ஏசா 40:31ஏசா 31:5எபி 11:3வெளி 12:4
தன் குஞ்சுகளின்மேல் அசைவாடி,
தன் இறக்கைகளை விரித்து,
குஞ்சுகளை எடுத்து, அவைகளைத் தன் இறக்கைகளின்மேல் சுமந்துகொண்டுபோகிறதுபோல,
யெகோவா ஒருவரே அவனை வழிநடத்தினார், ஏசா 46:4சங் 78:52-53ஏசா 44:7-8உபா 1:31ஏசா 43:11-12ஏசா 63:9-13சங் 136:16சங் 78:14
அந்நிய தெய்வம் அவருடன் இருந்ததில்லை.
பூமியிலுள்ள உயர்ந்த இடங்களின்மேல் அவனை ஏறிவரச்செய்தார்; ஏசா 58:14யோபு 29:6சங் 81:16உபா 33:26உபா 33:29எசேக் 36:2ஏசா 48:21எசேக் 21:17
வயலில் விளையும் பலனை அவனுக்குச் சாப்பிடக் கொடுத்தார்;
கன்மலையிலுள்ள தேனையும் கற்பாறையிலிருந்து வடியும் எண்ணெயையும்
அவன் சாப்பிடும்படி செய்தார்.
பசுவின் வெண்ணெயையும், ஆட்டின் பாலையும், ஆதி 49:11சங் 81:16சங் 147:142 சாமு 17:29ஆமோ 4:1எசேக் 39:18ஆதி 18:8ஏசா 7:15
பாசானில் மேயும் ஆட்டுக்குட்டிகள், ஆட்டுக்கடாக்கள்,
வெள்ளாட்டுக்கடாக்கள் இவைகளுடைய கொழுப்பையும்,
கொழுமையான கோதுமையையும்,
இரத்தம்போன்ற பொங்கிவழிகிற திராட்சைரசத்தையும் சாப்பிட்டாய்.
“யெஷூரன் 1 கொழுத்துப்போய் உதைத்தான்; உபா 31:20ஓசி 13:6உபா 33:51 சாமு 2:29அப் 28:27சங் 89:26எரே 5:28உபா 31:16
கொழுத்து, பருத்து, கொழுப்பு அதிகமானதால்,
தன்னை உண்டாக்கின தேவனைவிட்டு,
தன் இரட்சிப்பின் கன்மலையை அசட்டைசெய்தான்.
அந்நிய தெய்வங்களால் அவருக்கு எரிச்சலை மூட்டினார்கள்; சங் 78:581 கொரி 10:221 இராஜா 14:222இராஜா 23:13உபா 5:9உபா 7:25லேவி 18:27நாகூ 1:1-2
அருவருப்பானவைகளினால் அவரைக் கோபப்படுத்தினார்கள்.
அவர்கள் தேவனுக்குப் பலியிடவில்லை; உபா 28:64நியாயாதி 5:8லேவி 17:71 தீமோ 4:1உபா 32:21ஏசா 44:8சங் 106:37-381 கொரி 10:19-20
தாங்கள் அறியாதவைகளும்,
தங்கள் முற்பிதாக்கள் பயப்படாதவைகளும்,
புதுமையாகத் தோன்றிய புது தெய்வங்களுமாகிய பேய்களுக்கே பலியிட்டார்கள்.
உன்னை பிறக்கச் செய்த கன்மலையை நீ நினைக்காமற்போனாய்; ஏசா 17:10எரே 2:32உபா 32:4சங் 106:21உபா 32:15உபா 6:12உபா 8:11உபா 8:14
உன்னைப் பெற்ற தேவனை மறந்தாய்.
“யெகோவா அதைக்கண்டு, தமது மகன்களும், சங் 106:40ஏசா 1:2நியாயாதி 2:14சங் 5:4ஆமோ 3:2-3எரே 11:15எரே 44:21-23புலம் 2:6
மகள்களும் தம்மைக் கோபப்படுத்தியதால் மனச்சோர்வடைந்து,
அவர்களைப் புறக்கணித்து:
என் முகத்தை அவர்களுக்கு மறைப்பேன்; உபா 31:17-18உபா 32:5லூக் 7:31-32மத் 17:172 நாளாக 20:20உபா 31:29ஓசி 9:12ஏசா 30:9
அவர்களுடைய முடிவு எப்படியிருக்கும் என்று பார்ப்பேன்;
அவர்கள் மகா மாறுபாடுள்ள சந்ததி;
உண்மையில்லாத பிள்ளைகள்.
தெய்வம் அல்லாதவைகளினால் எனக்கு எரிச்சலை மூட்டி, ரோம 10:19ரோம 9:25ரோம 11:11-141 இராஜா 16:261 இராஜா 16:13சங் 78:58உபா 32:16யோனா 2:8
தங்களுடைய வீணான தீயசெயல்களினால் என்னைக் கோபப்படுத்தினார்கள்;
ஆகையால் மதிக்கப்படாத மக்களினால் அவர்களுக்கு எரிச்சலை உண்டாக்கி,
மதிகெட்ட மக்களால் அவர்களைப் கோபப்படுத்துவேன்.
என் கோபத்தினால் அக்கினி பற்றிக்கொண்டது, புலம் 4:11எரே 15:14ஏசா 24:19-20எரே 17:4யோபு 9:5-6மீகா 1:4எண் 16:35சங் 86:13
அது தாழ்ந்த நரகம்வரை எரியும்;
அது பூமியையும், அதின் பலனையும் அழித்து,
மலைகளின் அஸ்திபாரங்களை வேகச்செய்யும்.
“தீமைகளை அவர்கள்மேல் குவிப்பேன்; எசேக் 5:16சங் 7:12-13ஏசா 24:17-18உபா 28:15எசேக் 14:21ஏசா 26:15புலம் 3:13லேவி 26:24
என்னுடைய அம்புகளையெல்லாம் அவர்கள்மேல் பயன்படுத்துவேன்.
அவர்கள் பசியினால் வாடி, லேவி 26:22எசேக் 5:17ஆமோ 5:18-19ஆமோ 9:3உபா 28:22உபா 28:53எசேக் 14:15எசேக் 14:21
சுட்டெரிக்கும் வெப்பத்தினாலும், கொடிய தண்டனையினாலும் இறந்துபோவார்கள்;
கொடிய மிருகங்களின் பற்களையும்,
தரையில் ஊரும் பாம்புகளின் விஷத்தையும் அவர்களுக்குள் அனுப்புவேன்.
வெளியிலே பட்டயமும், எசேக் 7:15புலம் 1:202 நாளாக 36:172 கொரி 7:5ஏசா 30:16எரே 9:21புலம் 4:4லேவி 26:36-37
உள்ளே பயங்கரமும்,
வாலிபனையும், இளம்பெண்ணையும், குழந்தையையும்,
நரைத்த கிழவனையும் அழிக்கும்.
எங்கள் கை உயர்ந்ததென்றும், உபா 28:64ஏசா 63:16உபா 28:25உபா 28:37உபா 4:27லேவி 26:33லேவி 26:38சங் 34:16
யெகோவா இதையெல்லாம் செய்யவில்லை என்றும் அவர்களுடைய பகைவர்கள் தவறான எண்ணம்கொண்டு சொல்லுவார்கள் என்று,
நான் எதிரியின் கோபத்திற்கு பயப்படாமல் இருந்தேன் என்றால், எண் 14:15-161 சாமு 12:22யாத் 32:12யோசு 7:9சங் 140:8சகரி 1:14-15தானி 4:30-37எசேக் 20:13-14
நான் அவர்களை மூலைக்குமூலை சிதறடித்து,
மனிதர்களுக்குள் அவர்களுடைய பெயர் அழிந்துபோகச்செய்வேன் என்று சொல்லியிருப்பேன்.
“அவர்கள் யோசனை இல்லாத மக்கள், எரே 4:22ஓசி 4:6ஏசா 27:11யோபு 28:28நீதி 1:7உபா 32:6சங் 81:121 கொரி 3:19
அவர்களுக்கு உணர்வு இல்லை.
அவர்கள் ஞானமடைந்து, இதை உணர்ந்து, சங் 81:13உபா 5:29ஓசி 14:9லூக் 19:41-42லூக் 12:20சங் 107:43ஏசா 10:3ஏசா 47:7
தங்கள் முடிவைச் சிந்தித்துக்கொண்டால் நலமாயிருக்கும் என்றார்.
அவர்களுடைய கன்மலை அவர்களை விற்காமலும், லேவி 26:8யோசு 23:10ஏசா 30:17சங் 31:8சங் 44:12நியாயாதி 7:22-231 சாமு 14:15-172 நாளாக 24:24
யெகோவா அவர்களை ஒப்புக்கொடாமலும் இருந்தாரானால், ஒருவன் ஆயிரம்பேரைத் துரத்தி,
இரண்டுபேர் பத்தாயிரம்பேரைத் துரத்துவது எப்படி?
தங்கள் கன்மலை நம்முடைய கன்மலையைப்போல் அல்ல என்று நம்முடைய எதிரிகளே தீர்மானிக்கிறார்கள். 1 சாமு 4:8யாத் 14:251 சாமு 2:2தானி 2:47எரே 40:3தானி 3:29தானி 6:26-27எஸ்றா 1:3
அவர்களுடைய திராட்சைச்செடி, உபா 29:18எசேக் 16:45-51ஏசா 1:10ஏசா 5:4எரே 2:21எபி 12:15புலம் 4:6மத் 11:24
சோதோமிலும் கொமோரா நிலங்களிலும் பயிரான திராட்சைச்செடியிலும் குறைந்த தரமுள்ளதாக இருக்கிறது,
அவைகளின் பழங்கள் விஷமும் அவைகளின் குலைகள் கசப்புமாக இருக்கிறது.
அவர்களுடைய திராட்சைரசம் வலுசர்ப்பங்களின் விஷமும், சங் 58:4ரோம 3:13எரே 8:14யோபு 20:14-16சங் 140:3
விரியன் பாம்புகளின் கொடிய விஷமுமானது.
“இது என்னிடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, ஓசி 13:12யோபு 14:17எரே 2:22ரோம 2:51 கொரி 4:5வெளி 20:12-13
என் பொக்கிஷங்களில் இது முத்திரை போடப்பட்டு இருக்கிறதில்லையோ?
பழிவாங்குவதும் பதிலளிப்பதும் எனக்கு உரியது; ரோம 12:19எபி 10:30நாகூ 1:22 பேது 2:3சங் 73:17-192 பேது 3:8-10உபா 32:43எரே 23:12
ஏற்றகாலத்தில் அவர்களுடைய கால் தள்ளாடும்;
அவர்களுடைய ஆபத்துநாள் நெருங்கியிருக்கிறது;
அவர்களுக்கு சம்பவிக்கும் காரியங்கள் விரைவாக வரும்.
யெகோவா தம்முடைய மக்களை நியாயந்தீர்த்து, சங் 135:142இராஜா 14:26சங் 106:451 இராஜா 14:10உபா 30:1-3நியாயாதி 2:18எரே 31:20யோவே 2:14
அவர்கள் பெலன் போயிற்று என்றும்,
அடைக்கப்பட்டவர்களாவது விடுதலை பெற்றவர்களாவது ஒருவரும் இல்லையென்றும் காணும்போது,
தம்முடைய ஊழியக்காரர்கள்மேல் பரிதாபப்படுவார்.
அப்பொழுது அவர்: அவர்கள் பலியிட்ட பலிகளின் கொழுப்பைச் சாப்பிட்டு, எரே 2:28நியாயாதி 10:142இராஜா 3:13
பானபலிகளின் திராட்சைரசத்தைக் குடித்த அவர்களுடைய தெய்வங்களும்
அவர்கள் நம்பின கன்மலையும் எங்கே?
அவைகள் எழுந்து உங்களுக்கு உதவிசெய்து எசேக் 16:18-19நியாயாதி 10:14லேவி 21:21சங் 50:13ஓசி 2:8செப்ப 2:11
உங்களுக்கு மறைவிடமாயிருக்கட்டும்.
“நான் நானே அவர், 1 சாமு 2:6ஓசி 6:1யோபு 5:18ஏசா 45:5ஏசா 45:22ஏசா 43:13ஏசா 46:4ஏசா 45:18
என்னுடன் வேறே தேவன் இல்லை என்பதை இப்பொழுது பாருங்கள்;
நான் கொல்லுகிறேன், நான் உயிர்ப்பிக்கிறேன்;
நான் காயப்படுத்துகிறேன், நான் குணமாக்குகிறேன்;
என் கைக்குத் தப்புவிப்பவர் இல்லை.
நான் என் கையை வானத்திற்கு நேராக உயர்த்தி, ஆதி 14:22எபி 6:17-18எரே 4:2வெளி 10:5-6எண் 14:28-30யாத் 6:8
நான் என்றென்றைக்கும் உயிரோடிருக்கிறவர் என்கிறேன்.
மின்னும் என் பட்டயத்தை நான் கூர்மையாக்கி, ஏசா 66:16ஏசா 34:5-6யாத் 20:5ஏசா 27:1சங் 7:122 தீமோ 3:4உபா 32:35உபா 5:9
என் கையானது நியாயத்தைப் பிடித்துக்கொள்ளுமானால், என் எதிரிகளிடத்தில் பழிவாங்கி,
என்னைப் பகைக்கிறவர்களுக்குப் பதில்கொடுப்பேன்.
கொலைசெய்யப்பட்டும், சிறைப்பட்டும் போனவர்களுடைய இரத்தத்தாலே என் அம்புகளை வெறிகொள்ளச்செய்வேன்; உபா 32:23எரே 46:10எசேக் 38:21-22எரே 30:14புலம் 2:5எசேக் 35:6-8எரே 16:10எரே 46:14
என் பட்டயம் தலைவர்கள் முதற்கொண்டு சகல எதிரிகளின் மாம்சத்தையும் அழிக்கும்.
“மக்களே, அவருடைய மக்களுடன் மகிழ்ச்சியாயிருங்கள்; அவர் தமது ஊழியக்காரர்களின் இரத்தத்திற்குப் பழிவாங்கி, வெளி 19:2ரோம 12:19சங் 85:1வெளி 6:10உபா 32:35யோபு 13:24ரோம 15:9-132இராஜா 9:7
தம்முடைய எதிரிகளுக்குப் பதில்கொடுத்து,
தமது தேசத்தின்மேலும் தமது மக்களின்மேலும் கிருபையுள்ளவராக இருப்பார்”.
மோசேயும் நூனின் மகனாகிய யோசுவாவும் வந்து, இந்தப் பாட்டின் வார்த்தைகளையெல்லாம் மக்கள் கேட்கத்தக்கதாகச் சொன்னார்கள். எண் 13:16எண் 13:8உபா 31:22உபா 31:30 மோசே இந்த வார்த்தைகளையெல்லாம் இஸ்ரவேலர்கள் யாவருக்கும் சொல்லி முடித்தபின்பு, அவர்களை நோக்கி: “இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளின்படியெல்லாம் உங்கள் பிள்ளைகள் செய்யும்படி கவனமாயிருக்க, நீங்கள் அவர்களுக்குக் கற்பிக்கும்படி, நான் இன்று உங்களுக்குச் சாட்சியாக ஒப்புவிக்கிற வார்த்தைகளையெல்லாம் உங்கள் மனதிலே வையுங்கள். 1 நாளாக 22:19எசேக் 40:4உபா 11:18நீதி 3:1-4உபா 4:9உபா 6:6-7எபி 2:1லூக் 9:44 இது உங்களுக்கு பயனற்ற காரியம் அல்லவே; இது உங்கள் உயிராயிருக்கிறது, நீங்கள் சொந்தமாக்கிக்கொள்ள யோர்தானைக் கடந்துபோய்ச் சேரும் தேசத்தில் இதினால் உங்கள் நாட்களை நீடிக்கச்செய்வீர்கள்” என்றான். லேவி 18:5நீதி 4:222 பேது 1:161 பேது 3:10-12நீதி 3:22உபா 30:19-20நீதி 3:1-2நீதி 3:18
மோசேயின் மரணம்
அந்த நாளிலேதானே யெகோவா மோசேயை நோக்கி: எண் 27:12-13 “நீ எரிகோவுக்கு எதிரேயுள்ள மோவாப் தேசத்திலுள்ள இந்த அபாரீம் என்னும் மலைகளிலிருக்கிற நேபோ மலையில் ஏறி, நான் இஸ்ரவேல் சந்ததியாருக்கு சொந்தமாகக் கொடுக்கும் கானான் தேசத்தைப் பார்; எண் 27:122 கொரி 5:1உபா 34:1-5ஏசா 33:17எண் 33:47-48 நீங்கள் சீன் வனாந்திரத்திலுள்ள காதேசிலே மேரிபாவின் தண்ணீரின் அருகில் இஸ்ரவேல் மக்களுக்குள்ளே என்னைப் பரிசுத்தம்செய்யாமல், அவர்கள் நடுவே என் கட்டளைகளை மீறினதினாலே, ஆதி 25:8எண் 20:24-29எண் 33:38தானி 12:13ஆதி 15:15ஆதி 25:17ஆதி 49:33 உன் சகோதரனாகிய ஆரோன், ஓர் என்னும் மலையிலே மரணமடைந்து, தன் முன்னோர்களிடத்தில் சேர்க்கப்பட்டதுபோல நீயும் ஏறப்போகிற மலையிலே மரணமடைந்து, உன் முன்னோர்களிடத்தில் சேர்க்கப்படுவாய். எண் 27:14எண் 20:11-141 இராஜா 13:21-26உபா 3:23-27எண் 20:24லேவி 10:31 பேது 4:17ஏசா 8:13 நான் இஸ்ரவேல் மக்களுக்குக் கொடுக்கப்போகிற எதிரேயுள்ள தேசத்தை நீ பார்ப்பாய்; ஆனாலும் அதற்குள் நீ நுழைவதில்லை” என்றார். உபா 34:1-4உபா 1:37உபா 3:27உபா 32:49எபி 11:13எபி 11:39எண் 27:12