ஆமோஸ் 3

Amos 3
அத்தியாயம் 3

இஸ்ரவேலுக்கு விரோதமாக சாட்சிகளை வரவழைத்தல்

இஸ்ரவேல் மக்களே, யெகோவாகிய நான் எகிப்து தேசத்திலிருந்து வரவழைத்த முழுக்குடும்பமாகிய உங்களுக்கு விரோதமாகச் சொல்லிய இந்த வசனத்தைக் கேளுங்கள். ஆமோ 2:10எரே 8:3மீகா 3:12 நாளாக 20:15எசேக் 37:16-17ஓசி 4:1ஏசா 48:12எரே 31:1 பூமியின் எல்லா வம்சங்களுக்குள்ளும் உங்களைமட்டும் அறிந்துகொண்டேன்; ஆகையால் உங்களுடைய எல்லா அக்கிரமங்களுக்காக உங்களைத் தண்டிப்பேன். உபா 7:6யாத் 19:5-6உபா 10:151 பேது 4:17சகரி 14:17-18உபா 32:9எரே 14:10எரே 9:25 இரண்டுபேர் ஒருமனப்படாமல் இருந்தால் ஒன்றுசேர்ந்து நடந்துபோவார்களோ? 2 கொரி 6:14-16ஆதி 17:1ஆதி 5:22ஆதி 6:9 தனக்கு இரை அகப்படாமல் இருக்கக் காட்டிலே சிங்கம் கெர்ச்சிக்குமோ? இரைபிடிக்காமல் இருக்கும்போது பாலசிங்கம் தன்னுடைய குகையிலிருந்து சத்தமிடுமோ? ஓசி 11:10சங் 104:21ஆமோ 1:2ஆமோ 3:8ஓசி 5:14 குருவிக்குத் தரையிலே சுருக்குப் போடப்படாமல் இருந்தால், அது கண்ணியில் அகப்படுமோ? ஒன்றும் அகப்படாமல் இருக்கும்போது, கண்ணி தரையிலிருந்து எடுக்கப்படுமோ? பிரச 9:12தானி 9:14எரே 31:28 ஊரில் எக்காளம் ஊதினால், மக்கள் கலங்காமல் இருப்பார்களோ? யெகோவாவுடைய செயல் இல்லாமல் ஊரில் தீங்கு உண்டாகுமோ? ஏசா 45:7ஏசா 14:24-27செப்ப 1:162 கொரி 5:11ஆதி 50:20எரே 10:7அப் 2:23எரே 4:5 யெகோவாகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரர்களுக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யமாட்டார். யோவா 15:15ஆதி 18:17சங் 25:14வெளி 1:1தானி 9:22-27ஆதி 6:13தானி 10:21வெளி 4:1 சிங்கம் கெர்ச்சிக்கிறது, யார் பயப்படாமல் இருப்பான்? யெகோவாகிய ஆண்டவர் பேசுகிறார், யார் தீர்க்கதரிசனம் சொல்லாதிருப்பான்? அப் 4:20ஆமோ 3:4எரே 20:9ஆமோ 1:21 கொரி 9:16ஆமோ 2:12ஆமோ 7:12-17வெளி 5:5 நீங்கள் சமாரியாவின் மலைகளில் கூடிவந்து, அதின் நடுவில் நடக்கிற பெரிய கலகங்களையும் அதற்குள் செய்யப்படுகிற இடுக்கண்களையும் பாருங்கள் என்று அஸ்தோத்தின் அரண்மனைகள்மேலும், எகிப்துதேசத்தின் அரண்மனைகள்மேலும் கூறுங்கள். ஆமோ 4:1ஆமோ 6:1ஆமோ 1:81 சாமு 5:1ஆமோ 8:6எரே 22:8-9எரே 31:5எரே 50:2 அவர்கள் செம்மையானதைச் செய்ய அறியாமல், தங்களுடைய அரண்மனைகளில் கொடுமையையும் கொள்ளையையும் குவித்துக்கொள்ளுகிறார்கள் என்று யெகோவா சொல்லுகிறார். எரே 4:22செப்ப 1:9சங் 14:4சகரி 5:3-42 பேது 3:5ஆமோ 5:7ஆமோ 6:12ஆப 2:8-11 ஆகையால் எதிரி வந்து, தேசத்தைச் சூழ்ந்துகொண்டு, உன்னுடைய பெலத்தை உன்னிலிருந்து அகன்றுபோகச் செய்வான்; அப்பொழுது உன்னுடைய அரண்மனைகள் கொள்ளையிடப்படும் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். 2இராஜா 18:9-112இராஜா 15:192இராஜா 17:3-6ஆமோ 2:5ஆமோ 6:142 நாளாக 36:192இராஜா 15:29ஆமோ 3:10 மேலும்: ஒரு மேய்ப்பன் இரண்டு கால்களையோ ஒரு காதின் துண்டையோ 1 சிங்கத்தின் வாயிலிருந்து பிடுங்கித் தப்புவிப்பதைப்போல, சமாரியாவில் குடியிருக்கிற இஸ்ரவேல் மக்கள் ஒரு படுக்கையின் மூலையிலிருந்தும், ஒரு மெத்தையின் மேலிருந்தும் தப்புவிக்கப்படுவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார். 1 சாமு 17:34-37ரோம 11:4-5ஏசா 31:41 இராஜா 20:301 இராஜா 20:341 இராஜா 22:252இராஜா 16:9ஆமோ 9:2-3 நீங்கள் கேட்டு யாக்கோபு வம்சத்தாருக்குள்ளே சாட்சியாக அறிவிக்கவேண்டியது: சேனைகளின் தேவனாக இருக்கிற யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், 1 தெச 4:62 நாளாக 24:192இராஜா 17:132இராஜா 17:15அப் 18:5-6அப் 2:40அப் 20:21ஆமோ 5:27 நான் இஸ்ரவேலுடைய பாவங்களுக்காக அவனை விசாரிக்கும் நாளிலே நான் பெத்தேலின் பலிபீடங்களை விசாரிப்பேன்; பலிபீடத்தின் கொம்புகள் வெட்டப்பட்டு தரையிலே விழும். 2இராஜா 23:15ஓசி 10:5-82 நாளாக 34:6-7ஓசி 10:14-15ஆமோ 5:5-61 இராஜா 13:2-52 நாளாக 31:1ஆமோ 9:1 மழைகாலத்து வீட்டையும் கோடைக்காலத்து வீட்டையும் அழிப்பேன்; அப்பொழுது யானைத்தந்தத்தால் செய்யப்பட்ட வீடுகள் அழியும்; பெரிய வீடுகளுக்கும் முடிவு வரும் என்று யெகோவா சொல்லுகிறார். 1 இராஜா 22:39எரே 36:22ஆமோ 6:11ஏசா 5:9நியாயாதி 3:20சங் 45:8ஆமோ 3:11