மீகா 3

Micah 3
அத்தியாயம் 3

துன்மார்க்கர்களான தலைவர்களும் தீர்க்கதரிசிகளும்

நான் சொன்னது: யாக்கோபின் தலைவர்களே, இஸ்ரவேல் வம்சத்து அதிபதிகளே, நியாயம் இன்னதென்று அறிவது உங்களுக்கு அல்லவோ உரியது. ஓசி 5:1ஏசா 1:10எரே 5:4-5சங் 82:1-51 கொரி 6:52 நாளாக 19:5-10ஆமோ 4:1உபா 1:13-17 ஆனாலும் நன்மையை வெறுத்து, தீமையை விரும்பி, அவர்கள்மேல் இருக்கிற அவர்களுடைய தோலையும், அவர்களுடைய எலும்புகள்மேல் இருக்கிற சதையையும் பிடுங்கி, எசேக் 22:27நீதி 28:4சங் 53:41 இராஜா 21:201 இராஜா 22:6-82 நாளாக 19:2ரோம 12:92 தீமோ 3:3 என் மக்களின் சதையைத் தின்று, அவர்கள்மேல் இருக்கிற அவர்களுடைய தோலை உரிந்துகொண்டு, எலும்புகளை முறித்து, பானையிலே போடுவதுபோலவும் இறைச்சியைக் கொப்பரைக்குள்ளே போடுவதுபோலவும் அவைகளை வெட்டுகிறார்கள். சங் 14:4எசேக் 11:3எசேக் 11:6-7செப்ப 3:3 அப்பொழுது அவர்கள் யெகோவாவை நோக்கிக் கூப்பிடுவார்கள்; ஆனாலும் அவர்கள் தங்கள் செயல்களில் பொல்லாதவர்களாக இருப்பதினால், அவர் அவர்களுக்கு மறுமொழி கொடுக்காமல், தமது முகத்தை அக்காலத்திலே அவர்களுக்கு மறைத்துக்கொள்ளுவார். ஏசா 1:15நீதி 1:28எசேக் 8:18சங் 18:41உபா 31:17-18உபா 32:19-20மத் 7:22ஏசா 3:11 தங்கள் பற்களினால் கடிக்கிறவர்களாயிருந்து, சமாதானமென்று சொல்லி, தங்கள் வாய்க்கு உணவைக் கொடுக்காதவனுக்கு விரோதமாகச் சண்டைக்கு ஆயத்தமாகி, என் மக்களை மோசம்போக்குகிற தீர்க்கதரிசிகளுக்கு விரோதமாகக் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: எரே 14:14-15எரே 6:14எசேக் 13:10-16எசேக் 22:25-29ஏசா 9:15-16எரே 23:32எரே 23:9-17எரே 28:15-17 தரிசனம் காணமுடியாத இரவும், குறிசொல்லமுடியாத அந்தகாரமும் உங்களுக்கு வரும்; தீர்க்கதரிசிகளின்மேல் சூரியன் மறைந்து, அவர்கள்மேல் பகல் மிகவும் இருளாகப்போகும். ஏசா 8:20-22ஆமோ 8:9-10ஏசா 29:10ஏசா 59:10எசேக் 13:22-23எரே 13:16எரே 15:9சங் 74:9 தரிசனம்பார்க்கிறவர்கள் வெட்கப்பட்டு, குறிசொல்லுகிறவர்கள் நாணமடைந்து, உத்திரவுகொடுக்கிற தேவன் இல்லாததினால் அவர்கள் அனைவரும் தங்கள் வாயை மூடிக்கொள்வார்கள். ஏசா 44:25சகரி 13:41 சாமு 28:6ஆமோ 8:11எசேக் 24:17ஏசா 47:12-14லேவி 13:451 சாமு 14:37 நானோ, யாக்கோபுக்கு அவனுடைய மீறுதலையும், இஸ்ரவேலுக்கு அவனுடைய பாவத்தையும் அறிவிப்பதற்காக, யெகோவாவுடைய ஆவி அருளிய பலத்தினாலும், நியாயத்தினாலும், பராக்கிரமத்தினாலும் நிரப்பப்பட்டிருக்கிறேன். ஏசா 58:11 கொரி 2:12-131 கொரி 2:4ஏசா 11:2-3அப் 18:9-11அப் 4:8-12அப் 7:54-57எசேக் 16:2 நியாயத்தை வெறுத்து, ஒழுங்கானவைகளையெல்லாம் கோணலாக்கி, ஏசா 1:23சங் 58:1-2நீதி 17:15உபா 27:19யாத் 3:16ஓசி 5:1எரே 5:28லேவி 26:15 சீயோனை இரத்தப்பழியினாலும், எருசலேமை அநியாயத்தினாலும் கட்டுகிற யாக்கோபு வம்சத்துத் தலைவர்களே, இஸ்ரவேல் வம்சத்து அதிபதிகளே, இதைக் கேளுங்கள். ஆப 2:9-12எரே 22:13-17மத் 27:25எசேக் 22:25-28யோவா 11:50செப்ப 3:3 அதின் தலைவர்கள் லஞ்சத்திற்கு நியாயந்தீர்க்கிறார்கள்; அதின் ஆசாரியர்கள் கைக்கூலிக்கு உபதேசிக்கிறார்கள்; அதின் தீர்க்கதரிசிகள் பணத்திற்குக் குறிசொல்லுகிறார்கள்; ஆகிலும் அவர்கள் யெகோவாவைச் சார்ந்துகொண்டு: யெகோவா எங்கள் நடுவில் இல்லையோ? தீங்கு எங்கள்மேல் வராது என்கிறார்கள். எரே 6:13ஏசா 1:23மீகா 3:5அப் 8:18-20எரே 7:4தீத் 1:111 பேது 5:2ஏசா 48:2 ஆகையால் உங்களால் சீயோன் வயல்வெளியைப்போல உழப்பட்டு, எருசலேம் மண்மேடுகளாகப்போகும், ஆலயத்தின் மலை, காட்டு மேடுகளைப்போலாகும். எரே 26:18சங் 79:1மீகா 4:1-2மத் 24:2மீகா 1:6சங் 107:34அப் 6:13-14ஏசா 2:2-3