நூற்றுக்கு அதிபதியின் விசுவாசம்
இயேசு தம்முடைய வார்த்தைகளையெல்லாம் மக்கள் கேட்கும்படி சொல்லிமுடித்தபின்பு, கப்பர்நகூமுக்குப் போனார். மத் 8:5-13லூக் 7:1-10மத் 7:28-29 அங்கே நூறுபேர்கொண்ட படைப்பிரிவின் அதிபதி ஒருவனுக்குப் பிரியமான வேலைக்காரன் வியாதியால் மரணவேதனைப்பட்டான். 2இராஜா 5:2-3ஆதி 24:27யோவா 4:46-47கொலோ 3:22ஆதி 24:2-14ஆதி 24:35-49ஆதி 35:8ஆதி 39:4-6 அவன் இயேசுவைக்குறித்துக் கேள்விப்பட்டபோது, அவர் வந்து தன் வேலைக்காரனைக் குணமாக்கவேண்டும் என்று, அவரைக் கேட்டுக்கொள்ள யூதர்களுடைய ஆலய மூப்பர்களை அவரிடத்தில் அனுப்பினான். மத் 8:5யோவா 4:47லூக் 9:38பிலே 1:10லூக் 8:41 அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவரைத் தாழ்மையாக வேண்டிக்கொண்டு: நீர் அவனுக்கு இந்த தயவுசெய்கிறதற்கு அவன் தகுதி உடையவனாக இருக்கிறான். லூக் 7:6-7மத் 10:11மத் 10:37-38வெளி 3:4லூக் 20:35மத் 10:13 அவன் நம்முடைய மக்களை நேசித்து, நமக்கு ஒரு ஜெப ஆலயத்தையும் கட்டினான் என்றார்கள். 2 நாளாக 2:11-121 நாளாக 29:3-91 யோவா 3:141 யோவா 3:18-191 யோவா 5:1-31 இராஜா 5:1எஸ்றா 7:27-28கலா 5:6 அப்பொழுது இயேசு அவர்களோடு போனார். வீட்டிற்கு அருகில் சென்றபோது, அந்த படைஅதிபதி தன் நண்பரை நோக்கி: நீங்கள் இயேசுவிடம்போய், ஆண்டவரே! நீர் வருத்தப்படவேண்டாம்; நீர் என் வீட்டிற்குள் பிரவேசிக்க நான் தகுதியானவன் இல்லை; மாற் 5:24ஆதி 32:10யாக் 4:6லூக் 8:49மத் 3:11அப் 10:38லூக் 15:19-21லூக் 5:8 உம்மிடத்திற்கு வர நான் என்னைத் தகுதியானவனாக நினைக்கவில்லை; ஒரு வார்த்தைமட்டும் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சுகம் பெறுவான். சங் 107:20சங் 33:9லூக் 4:36மாற் 1:27உபா 32:39லூக் 5:131 சாமு 2:6யாத் 15:26 நான் அதிகாரத்திற்குக் கீழ்ப்பட்டவனாக இருந்தாலும், எனக்குக் கீழ்ப்படிந்து நடக்கிற போர்வீரர்களும் உண்டு; நான் ஒருவனைப் போ என்றால் போகிறான், மற்றொருவனை வா என்றால் வருகிறான், என் வேலைக்காரனை, இதைச் செய் என்றால் செய்கிறான் என்று நான் சொன்னதாகச் சொல்லுங்கள் என்று அவர்களை அனுப்பினான். 1 தீமோ 6:1-2அப் 10:7-8அப் 22:25-26அப் 23:17கொலோ 3:22அப் 23:23அப் 23:26அப் 24:23 இயேசு இவைகளைக் கேட்டு அவனைக்குறித்து ஆச்சரியப்பட்டு, அவருக்குப் பின்னே வருகிற மக்களைப் பார்த்து: இஸ்ரவேலரிடத்தில் இப்படிப்பட்ட விசுவாசத்தை நான் இதுவரை கண்டதில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். மத் 15:28மத் 8:10ரோம 3:1-3மத் 9:33ரோம 9:4-5சங் 147:19-20 அனுப்பப்பட்டவர்கள் வீட்டிற்குத் திரும்பிவந்தபோது, வியாதியாகக்கிடந்த வேலைக்காரன் சுகம் பெற்றிருந்ததைக் கண்டார்கள். யோவா 4:50-53மத் 8:13மத் 15:28மாற் 9:23
விதவையின் மகனை உயிரோடு எழுப்புதல்
மறுநாளிலே இயேசு நாயீன் என்னும் ஊருக்குப் போனார்; அவருடைய சீடர்களும் திரளான மக்களும் அவரோடு போனார்கள். அப் 10:38 அவர், அந்த ஊரின் தலைவாசலுக்கு அருகில் வந்தபோது, மரித்துப்போன ஒருவனை அடக்கம்பண்ணுவதற்காக கொண்டுவந்தார்கள்; அவன் தன் விதவைத் தாய்க்கு ஒரே மகனாக இருந்தான்; அந்த ஊரில் உள்ள அநேக மக்கள் அவளோடு வந்தார்கள். லூக் 8:42லூக் 8:521 இராஜா 17:121 இராஜா 17:181 இராஜா 17:91 தீமோ 5:4-52இராஜா 4:162இராஜா 4:20 இயேசு அவளைப் பார்த்து, அவள்மேல் மனமிரங்கி: அழவேண்டாம் என்று சொல்லி, ஏசா 63:9சங் 103:13எபி 4:15புலம் 3:32-33சங் 86:15எரே 31:20லூக் 8:52சங் 86:5 அருகில் வந்து, பாடையைத் தொட்டார்; அதைச் சுமந்துகொண்டுவந்தவர்கள் நின்றார்கள்; அப்பொழுது அவர்: வாலிபனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார். யோவா 11:43-44யோவா 5:25அப் 9:40-41யோவா 11:251 இராஜா 17:21யோவா 5:28-29லூக் 8:54-55யோவா 5:21 மரித்தவன் உயிரோடு எழுந்து உட்கார்ந்து, பேசத்தொடங்கினான். அவனை அவன் தாயாரிடம் ஒப்படைத்தார். 2இராஜா 13:211 இராஜா 17:23-242இராஜா 4:32-37 எல்லோரும் பயந்து: மகா தீர்க்கதரிசியானவர் நமக்குள்ளே தோன்றியிருக்கிறார் என்றும், தேவன் தமது மக்களைச் சந்தித்தார் என்றும் சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள். மத் 9:8எரே 33:9லூக் 1:68லூக் 7:39யாத் 4:31லூக் 1:65லூக் 2:20லூக் 5:26 இந்தச் செய்தி யூதேயா நாடு முழுவதும் சுற்றியிருக்கிற பகுதிகள் எல்லாவற்றிலும் பிரசித்தமானது. லூக் 7:14மத் 4:24மத் 9:26மத் 9:31மாற் 1:28மாற் 6:14
இயேசுவும் யோவான்ஸ்நானனும்
இவைகளையெல்லாம் யோவானுடைய சீடர்கள் அவனுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது யோவான் தன் சீடர்களில் இரண்டுபேரை அழைத்து, யோவா 3:26மத் 11:2-19 நீங்கள் இயேசுவினிடத்திற்குப்போய்: வருகிறவர் நீர்தானா? அல்லது வேறொருவர் வர நாங்கள் காத்திருக்கவேண்டுமா? என்று கேளுங்கள் என்று சொல்லி அனுப்பினான். ஏசா 9:6-7யோவா 4:25அப் 10:7-8தானி 9:24-26உபா 18:15-18ஆதி 22:18ஆதி 3:15ஆதி 49:10 அப்படியே அவர்கள் இயேசுவிடம் வந்து: வருகிறவர் நீர்தானா? அல்லது வேறொருவர் வர நாங்கள் காத்திருக்கவேண்டுமா? என்று கேட்கும்படி யோவான்ஸ்நானன் எங்களை உம்மிடம் அனுப்பினார் என்றார்கள். லூக் 7:19 அந்த நேரத்திலே நோய்களையும் கொடிய வியாதிகளையும் பொல்லாத ஆவிகளையும் கொண்டிருந்த அநேகரை அவர் குணமாக்கி, அநேக குருடர்களுக்குப் பார்வையளித்தார். மாற் 3:101 கொரி 11:30-321 இராஜா 8:37எபி 12:6யாக் 5:14-15மத் 4:23மாற் 5:29மாற் 5:34 இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: நீங்கள் போய், பார்த்தவைகளையும் கேட்டவைகளையும் யோவானுக்கு சொல்லுங்கள்; பார்வையற்றோர் பார்வையடைகிறார்கள், சப்பாணிகள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், காதுகேளாதோர் கேட்கிறார்கள், மரித்தோர் உயிரோடு எழுந்திருக்கிறார்கள், தரித்திரர்களுக்கு நற்செய்தி பிரசங்கிக்கப்படுகிறது. ஏசா 35:5-6ஏசா 61:1-3லூக் 4:18ஏசா 29:18-19யாக் 2:5அப் 14:8-10அப் 26:18லூக் 7:14-15 என்னிடத்தில் என் செயல்களைக்குறித்து சந்தேகமில்லாமல் விசுவாசிக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான் என்றார். 1 பேது 2:7-8ஏசா 8:14-15மத் 11:6ரோம 9:32-33மத் 13:57-581 கொரி 1:21-281 கொரி 2:14யோவா 6:60-66 யோவானால் அனுப்பப்பட்டவர்கள் போனபின்பு அவர் யோவானைப்பற்றி மக்களுக்குச் சொன்னது என்னவென்றால்: எதைப்பார்க்க வனாந்திரத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசைகின்ற புல்லையோ? எபே 4:14யோவா 1:23லூக் 1:80லூக் 3:22 கொரி 1:17-202 பேது 2:172 பேது 3:17யாக் 1:6-8 இல்லையென்றால், எதைப்பார்க்கப் போனீர்கள்? விலையுயர்ந்த ஆடை அணிந்த மனிதனையோ? அலங்கார ஆடை அணிந்து சுகபோகமாக வாழ்கிறவர்கள் அரசருடைய மாளிகைகளிலே இருக்கிறார்கள். 1 இராஜா 10:52இராஜா 1:82 சாமு 19:35எஸ்த 1:11எஸ்த 1:3எஸ்த 4:2எஸ்த 8:15ஏசா 59:17 இல்லையென்றால், எதைப்பார்க்கப் போனீர்கள்? தீர்க்கதரிசியையோ? ஆம், தீர்க்கதரிசியைவிட உயர்ந்தவனையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். லூக் 1:76யோவா 5:35லூக் 20:6யோவா 3:26-30லூக் 16:16மத் 11:9-14
இதோ, நான் என் தூதுவனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்; மல்கி 3:1லூக் 1:76மாற் 1:2யோவா 1:23லூக் 1:15-17மல்கி 4:5-6மத் 11:10ஏசா 40:3
அவன் உமக்குமுன்னேபோய்,
உமது வழியை ஆயத்தம்பண்ணுவான்
என்று எழுதிய வாக்கியத்தில் சொல்லப்பட்டவன் இவன்தான்.
பெண்களிடத்திலே பிறந்தவர்களில் யோவான்ஸ்நானனைவிட பெரிய தீர்க்கதரிசி ஒருவனும் இல்லை; ஆனாலும், தேவனுடைய ராஜ்யத்தில் சிறியவனாக இருக்கிறவன் அவனைவிட பெரியவனாக இருக்கிறான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். எபி 11:39-40மத் 11:11மத் 13:16-17கொலோ 1:25-271 பேது 1:10-12எபே 3:8-9லூக் 10:23-24லூக் 9:48 யோவானுடைய உபதேசத்தைக் கேட்ட வரி வசூலிப்பவர்களும், மக்களும் அவனிடம் ஞானஸ்நானம் பெற்று, தேவன் நீதியுள்ளவர் என்று அறிக்கை செய்தார்கள். லூக் 3:12லூக் 7:35அப் 18:25அப் 19:3மத் 21:31-32மத் 3:5-6சங் 51:4வெளி 15:3 ஆனால், பரிசேயர்களும் நியாயப்பண்டிதர்களும் அவனிடம் ஞானஸ்நானம் பெறாமல் தேவனுடைய ஆலோசனையைத் தள்ளிவிட்டார்கள். லூக் 13:342 கொரி 6:1எரே 8:8மத் 22:35அப் 20:27எபே 1:11கலா 2:21ரோம 10:21 மறுபடியும் இயேசு சொன்னது என்னவென்றால்: இந்த வம்சத்தை யாருக்கு ஒப்பிடுவேன்? இவர்கள் யாருக்கு ஒப்பாக இருக்கிறார்கள்? மத் 11:16-19புலம் 2:13மாற் 4:30 சந்தைகளில் உட்கார்ந்து, ஒருவரையொருவர் பார்த்து: உங்களுக்காக புல்லாங்குழல் ஊதினோம், நீங்கள் கூத்தாடவில்லை; உங்களுக்காகப் புலம்பினோம், நீங்கள் அழவில்லை என்று குறைசொல்லுகிற குழந்தைகளுக்கு ஒப்பாக இருக்கிறார்கள். மத் 11:16-19எரே 5:3-5நீதி 17:16ஏசா 28:9-13ஏசா 29:11-12சகரி 8:5 யோவான்ஸ்நானன் அப்பம் புசியாதவனும் திராட்சைரசம் குடிக்காதவனுமாக வந்தான்; அதற்கு நீங்கள்: அவன் பிசாசு பிடித்திருக்கிறவன் என்கிறீர்கள். லூக் 1:15மாற் 1:6அப் 2:13எரே 16:8-10யோவா 10:20யோவா 8:48யோவா 8:52மத் 3:4 மனிதகுமாரன் சாப்பிட வந்தார்; அதற்கு நீங்கள்: இதோ, சாப்பாட்டுப்பிரியனும் மதுபானப்பிரியனுமான மனிதன், வரி வசூலிப்பவர்களுக்கும் பாவிகளுக்கும் சிநேகிதன் என்கிறீர்கள். லூக் 15:2லூக் 7:36யோவா 12:2லூக் 14:1லூக் 19:7மத் 9:11யோவா 2:2லூக் 11:37 ஆனாலும் ஞானமானது அதின் குழந்தைகளால் நீதியுள்ளதென்று நிரூபிக்கப்படும் என்றார். நீதி 8:32-36மத் 11:191 கொரி 2:14-15ஓசி 14:9நீதி 17:16லூக் 7:29
பாவியான பெண் இயேசுவை அபிஷேகித்தல்
பரிசேயர்களில் ஒருவன் தன்னுடனே சாப்பிடவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டான்; அவர் அந்தப் பரிசேயனுடைய வீட்டிற்குச் சென்று சாப்பிட உட்கார்ந்தார். மாற் 14:3-9மத் 26:5-6லூக் 14:1யோவா 11:2-16லூக் 11:37லூக் 7:34 அப்பொழுது அந்த ஊரிலிருந்த பாவியாகிய ஒரு பெண் அவர் பரிசேயன் வீட்டிலே உண்பதை அறிந்து, ஒரு பாத்திரத்தில் பரிமளதைலம் கொண்டுவந்து, மாற் 14:3-9மத் 26:6-13லூக் 5:30லூக் 7:37-39மத் 21:311 பேது 4:181 தீமோ 1:9யோவா 12:1-8 அவருடைய பாதங்களின் அருகே நின்று அழுதுகொண்டு, அவருடைய பாதங்களைத் தன் கண்ணீரினால் நனைத்து, தன் தலைமயிரினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தம் செய்து, பரிமளதைலத்தைப் பூசினாள். சங் 126:5-6சங் 51:17ஆதி 18:4பிரச 9:8ஏசா 61:3லூக் 7:44-46சங் 6:6-82 கொரி 7:10-11 அவரை அழைத்த பரிசேயன் அதை பார்த்தபோது, இவர் தீர்க்கதரிசியாக இருந்தால் தம்மைத் தொடுகிற பெண் எப்படிப்பட்டவள் என்று அறிந்திருப்பார்; இவள் பாவியாக இருக்கிறாளே என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான். லூக் 7:16லூக் 15:2ஏசா 65:5மாற் 7:21நீதி 23:72இராஜா 5:20யோவா 4:19யோவா 7:12 இயேசு அவனை நோக்கி: சீமோனே, உனக்கு நான் ஒரு விஷயம் சொல்லவேண்டும் என்றார் அதற்கு அவன்: போதகரே, சொல்லும் என்றான். எசேக் 33:31யோவா 13:13யோவா 16:19யோவா 16:30யோவா 3:2லூக் 18:18லூக் 20:20-21லூக் 5:22 அப்பொழுது அவர்: ஒருவனிடத்தில் இரண்டுபேர் கடன்பட்டிருந்தார்கள்; ஒருவன் ஐந்நூறு வெள்ளிக்காசும், மற்றவன் ஐம்பது வெள்ளிக்காசும் கொடுக்கவேண்டியதாயிருந்தது. லூக் 7:47மத் 18:28மத் 6:12ரோம 5:201 யோவா 1:8-10லூக் 11:4ரோம 3:231 தீமோ 1:15-16 வாங்கிய கடனை திரும்பக்கொடுக்க அவர்களுக்கு முடியாததால், இருவருடைய கடன்களையும் மன்னித்துவிட்டான். இப்படியிருக்க, அவர்களில் எவன் அவனிடத்தில் அதிக அன்பாக இருப்பான்? அதைச் சொல் என்றார். அப் 13:38-39கொலோ 3:13தானி 9:18-19எபே 1:7எபே 4:32கலா 3:10ஏசா 43:25ஏசா 44:22 சீமோன் மறுமொழியாக: எவனுக்கு அதிகமாக மன்னித்துவிட்டானோ அவனே அதிக அன்பாக இருப்பான் என்று நினைக்கிறேன் என்றான்; அதற்கு அவர்: சரியாக நினைத்தாய் என்று சொல்லி, சங் 116:16-181 கொரி 15:9-101 தீமோ 1:13-162 கொரி 5:14-15லூக் 10:38லூக் 7:47மாற் 12:34 பெண்ணின் பக்கம் அவர் திரும்பி, சீமோனை நோக்கி: இந்தப் பெண்ணைப் பார்க்கிறாயே; நான் உன் வீட்டிற்கு வந்தேன், நீ என் கால்களைக் கழுவத் தண்ணீர் தரவில்லை, இவளோ, கண்ணீரினால் என் கால்களை நனைத்து, தன் தலைமயிரினால் அவைகளைத் துடைத்தாள். 1 தீமோ 5:10ஆதி 18:4ஆதி 19:2நியாயாதி 19:21ஆதி 43:241 சாமு 25:41யாக் 2:6 நீ என்னை முத்தம் செய்யவில்லை, இவளோ, நான் இங்கு வந்தது முதல், என் பாதங்களை ஓயாமல் முத்தம் செய்தாள். 2 சாமு 15:5ரோம 16:161 தெச 5:262 சாமு 19:391 கொரி 16:20ஆதி 33:4மத் 26:48ஆதி 29:11 நீ என் தலையில் எண்ணெய் பூசவில்லை, இவளோ என் பாதங்களில் பரிமளதைலம் பூசினாள். சங் 23:5பிரச 9:8மத் 6:172 சாமு 14:2தானி 10:3சங் 104:15ரூத் 3:3ஆமோ 6:6 ஆதலால் நான் உனக்குச் சொல்லுகிறேன்: இவள் செய்த அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டது; இவள் மிகவும் அன்புகூர்ந்தாளே. எவனுக்குக் கொஞ்சம் மன்னிக்கப்படுகிறதோ, அவன் கொஞ்சமாக அன்பு செலுத்துவான் என்று சொல்லி; 1 யோவா 4:191 யோவா 3:18கலா 5:6ஏசா 1:18ரோம 5:20யோவா 21:15-17எபே 6:24ஏசா 55:7 அவளை நோக்கி: உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்றார். மத் 9:2மாற் 2:5லூக் 5:20 அப்பொழுது அவரோடு சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்கள்: பாவங்களை மன்னிக்கிற இவன் யார் என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள். லூக் 5:20-21மத் 9:3மாற் 2:7 இயேசு அந்தப் பெண்ணைப் பார்த்து: உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடு போ என்றார். மாற் 5:34லூக் 8:48லூக் 18:42மத் 9:22மாற் 10:52எபே 2:8-10ரோம 5:1-2யாக் 2:14-26