மீகா 7

Micah 7
அத்தியாயம் 7

இஸ்ரவேலுடைய பாவத்தினால் வந்த துயரம்

ஐயோ, கோடைக்காலத்தின் பழங்களைச் சேர்த்து, திராட்சைபழங்களை அறுத்தபின்பு வருகிறவனைப்போல் இருக்கிறேன்; சாப்பிடுவதற்கு ஒரு திராட்சைக்குலையும் என் ஆத்துமா விரும்பிய முதல் அறுப்பின் பழமும் இல்லை. ஏசா 28:4ஓசி 9:10ஏசா 24:13ஏசா 17:6ஏசா 24:16ஏசா 6:5எரே 15:10எரே 4:31 தேசத்தில் பக்தியுள்ளவன் அற்றுப்போனான்; மனிதர்களில் செம்மையானவன் இல்லை; அவர்களெல்லோரும் இரத்தம் சிந்தப் பதுங்கியிருக்கிறார்கள்; அவனவன் தன்தன் சகோதரனை வலையிலே பிடிக்க வேட்டையாடுகிறான். சங் 12:1ஏசா 57:1ஏசா 59:7எரே 5:26சங் 14:1-3நீதி 1:11எரே 16:161 சாமு 24:11 பொல்லாப்புச் செய்வதற்கு அவர்களுடைய இரண்டு கைகளும் ஒன்றாகச் சேரும்; அதிபதி கொடு என்கிறான்; நியாயாதிபதி கைக்கூலி கேட்கிறான்; பெரியவன் தன் தகாத ஆசையைத் தெரிவிக்கிறான்; இவ்விதமாகப் புரட்டுகிறார்கள். மீகா 3:11நீதி 4:16-17ஆமோ 5:12எரே 8:101 கொரி 4:51 இராஜா 21:9-14எசேக் 22:27எசேக் 22:6 அவர்களில் நல்லவன் முட்செடியைப்போன்றவன், செம்மையானவன் நெரிஞ்சிலைவிட மிகவும் கூர்மையானவன்; உன் காவற்காரர்கள் அறிவித்த உன் தண்டனையின் நாள் வருகிறது; இப்பொழுதே அவர்களுக்குக் கலக்கம் உண்டு. ஏசா 22:5எசேக் 2:6ஏசா 10:32 சாமு 23:6-7ஓசி 9:7-8ஆமோ 8:2எசேக் 12:23-24எபி 6:8 சிநேகிதனை விசுவாசிக்கவேண்டாம், வழிகாட்டியை நம்பவேண்டாம்; உன் மடியிலே படுத்துக்கொள்ளுகிறவளுக்கு முன்பாக உன் வாயைத் திறக்காமல் எச்சரிக்கையாயிரு. எரே 9:4சங் 118:8-9மத் 10:16யோபு 6:14-15நியாயாதி 16:5-20 மகன் தகப்பனைக் கனவீனப்படுத்துகிறான்; மகள் தன் தாய்க்கு விரோதமாகவும், மருமகள் தன் மாமியாருக்கு விரோதமாகவும் எழும்புகிறார்கள்; மனிதனுடைய எதிரிகள் அவன் வீட்டார்தானே. மத் 10:35-36லூக் 12:53மத் 10:21சங் 41:92 தீமோ 3:2-3எசேக் 22:7சங் 55:12-14லூக் 21:16 நானோவென்றால் யெகோவாவை நோக்கிக்கொண்டு, என் இரட்சிப்பின் தேவனுக்குக் காத்திருப்பேன்; என் தேவன் என்னைக் கேட்டருளுவார். புலம் 3:25-26சங் 37:71 யோவா 5:14-15ஏசா 45:22ஏசா 25:9சங் 27:12-14சங் 34:5-6சங் 40:1-3

அறிக்கையிடுதலும் தேற்றப்படுதலும்

என் எதிரியே, எனக்கு விரோதமாகச் சந்தோஷப்படாதே; நான் விழுந்தாலும் எழுந்திருப்பேன்; நான் இருளிலே உட்கார்ந்தால், யெகோவா எனக்கு வெளிச்சமாயிருப்பார். யோவா 8:12சங் 27:1ஏசா 9:2சங் 112:4நீதி 24:16-18சங் 107:10-15ஒபதி 1:122 கொரி 4:6 நான் யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம்செய்தேன்; அவர் எனக்காக வழக்காடி என் நியாயத்தை விசாரிக்கும்வரை அவருடைய கோபத்தைச் சுமப்பேன்; அவர் என்னை வெளிச்சத்திலே கொண்டுவருவார், அவருடைய நீதியைப் பார்ப்பேன். 1 கொரி 4:5சங் 37:61 சாமு 24:152 தெச 1:5-10எபி 12:6-72 தீமோ 4:8புலம் 3:39-42மல்கி 3:18 உன் தேவனாகிய யெகோவா எங்கே என்று என்னோடே சொல்லுகிற என் எதிரியானவள் அதைப் பார்க்கும்போது வெட்கம் அவளை மூடும்; என் கண்கள் அவளைக் காணும்; இனி வீதிகளின் சேற்றைப்போல மிதிக்கப்படுவாள். எரே 50:33-34சங் 42:10சகரி 10:52 சாமு 22:43யோவே 2:17சங் 18:42சங் 35:26வெளி 18:20 உன் மதில்களை எடுப்பிக்கும் நாள் வருகிறது; அந்நாளிலே பிரமாணம் வெகுதூரம் பரவிப்போகும். ஆமோ 9:11-15நெகே 2:8எஸ்றா 4:12-24ஏசா 54:11நெகே 2:17நெகே 3:1-16நெகே 4:3நெகே 4:6 அந்நாளிலே அசீரியா முதல் எகிப்தின் பட்டணங்கள் வரைக்கும், எகிப்து முதல் நதிவரைக்கும், ஒரு சமுத்திரமுதல் மறு சமுத்திரம்வரைக்கும், ஒரு மலைமுதல் மறு மலைவரைக்குமுள்ள மக்கள் உன்னிடத்திற்கு வருவார்கள். ஏசா 19:23-25ஓசி 11:11ஏசா 11:16எசேக் 29:21எசேக் 37:21ஏசா 27:12-13ஏசா 43:6ஏசா 49:12 ஆனாலும் தன் குடிமக்களினிமித்தமும் அவர்கள் செயல்களுடைய பலன்களினிமித்தமும் தேசம் பாழாயிருக்கும். ஏசா 3:10-11எரே 25:11எரே 17:10மீகா 6:13தானி 4:26-27கலா 6:7-8ஏசா 24:3-8ஏசா 6:11-13 கர்மேலின் நடுவிலே தனித்து வனவாசமாயிருக்கிற உமது சுதந்தரமான மந்தையாகிய உம்முடைய ஜனத்தை உமது கோலினால் மேய்த்தருளும்; பூர்வநாட்களில் மேய்ந்தது போலவே அவர்கள் பாசானிலும் கீலேயாத்திலும் மேய்வார்களாக. சங் 23:1-4மீகா 5:4சங் 100:3ஏசா 40:11ஏசா 49:10யோவா 10:27-30ஆமோ 9:11ஏசா 37:24 நீ எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டநாளில் நடந்ததுபோலவே உன்னை அதிசயங்களைக் காணச்செய்வேன். சங் 78:12-72யாத் 3:20ஏசா 51:9ஏசா 11:16ஏசா 63:11-15எரே 23:7-8சங் 68:22 அந்நியமக்கள் கண்டு தங்களுடைய எல்லாப் பராக்கிரமத்தையுங்குறித்து வெட்கப்படுவார்கள்; கையை வாயின்மேல் வைத்துக்கொள்வார்கள்; அவர்கள் காதுகள் செவிடாகிவிடும். ஏசா 26:11ஏசா 52:15யோபு 29:9-10யோபு 40:4எசேக் 38:23எசேக் 39:17-21ஏசா 66:18யோபு 21:5 பாம்பைப்போல மண்ணை நக்குவார்கள்; பூமியின் ஊர்வனவற்றைப்போலத் தங்கள் மறைவிடங்களிலிருந்து நடுநடுங்கிப் புறப்படுவார்கள்; நமது தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திகிலோடே சேர்ந்து, உனக்குப் பயப்படுவார்கள். ஏசா 49:23சங் 72:9சங் 18:45ஆதி 3:14-15வெளி 6:15-171 சாமு 14:11யாத் 15:14-16ஏசா 2:19-21 தமக்குச் சொந்தமானவர்களில் மீதியானவர்களுடைய அக்கிரமத்தைப் பொறுத்து, மீறுதலை மன்னிக்கிற தேவரீருக்கு ஒப்பான தேவன் யார்? அவர் கிருபை செய்ய விரும்புகிறபடியால் அவர் என்றென்றைக்கும் கோபப்படமாட்டார். ஏசா 43:25ஏசா 44:22எபே 2:4-5சங் 103:8-9எரே 50:20அப் 13:38-39எரே 32:41யாத் 15:11 அவர் மீண்டும் நம்மேல் இரங்குவார்; நம்முடைய அக்கிரமங்களை நீக்கி, நம்முடைய பாவங்களையெல்லாம் சமுத்திரத்தின் ஆழங்களில் போட்டுவிடுவார். ஏசா 38:17ஏசா 43:25ரோம 6:14எரே 31:34எரே 50:20சங் 103:12தீத் 2:141 யோவா 3:8 தேவரீர் ஆரம்பநாட்கள்முதல் எங்கள் முன்னோர்களுக்கு ஆணையிட்ட சத்தியத்தை யாக்கோபுக்கும், கிருபையை ஆபிரகாமுக்கும் கட்டளையிடுவீராக. ஆதி 28:13-14லூக் 1:72-74அப் 3:25-26உபா 7:8ஆதி 12:2-3ஆதி 17:7-8ஆதி 22:16-18ஆதி 26:3-4