ஆதியாகமம் 3

Genesis 3
அத்தியாயம் 3

பாவத்தின் ஆரம்பம்

தேவனாகிய யெகோவா படைத்த அனைத்து காட்டு உயிரினங்களைவிட பாம்பானது தந்திரமுள்ளதாக இருந்தது. அது பெண்ணை நோக்கி: “நீங்கள் தோட்டத்திலுள்ள அனைத்து மரங்களின் பழங்களையும் சாப்பிடக்கூடாது என்று தேவன் சொன்னாரா” என்றது. 2 கொரி 11:32 கொரி 11:14வெளி 12:9வெளி 20:2மத் 4:3ஆதி 3:13-15மத் 10:16மத் 4:6 பெண், பாம்பை நோக்கி: “நாங்கள் தோட்டத்திலுள்ள மரங்களின் பழங்களைச் சாப்பிடலாம்; சங் 58:4 ஆனாலும், தோட்டத்தின் நடுவில் இருக்கிற மரத்தின் பழத்தைக்குறித்து, தேவன்: நீங்கள் சாகாமலிருக்க அதை சாப்பிடவும் அதைத் தொடவும் வேண்டாம் என்று சொன்னார்” என்றாள். ஆதி 2:16-172 கொரி 6:17யாத் 19:12-13ஆதி 20:6யோபு 1:111 நாளாக 16:22கொலோ 2:21யோபு 19:21 அப்பொழுது பாம்பு, பெண்ணை நோக்கி: “நீங்கள் சாகவே சாவதில்லை; யோவா 8:442 கொரி 11:31 தீமோ 2:142 கொரி 2:11ஆதி 3:132இராஜா 1:162இராஜா 1:42இராஜா 1:6 நீங்கள் இதை சாப்பிடும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார்” என்றது. எசேக் 28:22 தெச 2:42 கொரி 11:13-152 கொரி 4:4ஆதி 2:172 கொரி 11:3அப் 12:22-23அப் 26:18 அப்பொழுது அந்தப் பெண், அந்த மரத்தின் பழம் சாப்பிடுவதற்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு ஆசைப்படத்தக்க பழமுமாக இருக்கிறது என்று கண்டு, அந்தப் பழத்தைப் பறித்து, சாப்பிட்டு, தன் கணவனுக்கும் கொடுத்தாள்; அவனும் சாப்பிட்டான். 1 யோவா 2:16யாக் 1:14-151 தீமோ 2:142 சாமு 11:2யோசு 7:21ரோம 5:12-19ஆதி 6:2எசேக் 24:16 அப்பொழுது அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டது; அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து, அத்தி இலைகளைத் சேர்த்து, தங்களுடைய இடுப்புகளை மறைத்துக்கொண்டார்கள். ஆதி 2:25ஏசா 59:6ஆதி 3:5யோபு 9:29-31ஆதி 3:10-11ஏசா 28:202இராஜா 6:20உபா 28:34 பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய யெகோவாவுடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள். அப்பொழுது ஆதாமும் அவனுடைய மனைவியும் தேவனாகிய யெகோவாவுக்கு முன்பாக விலகி, தோட்டத்தின் மரங்களுக்குள்ளே ஒளிந்துகொண்டார்கள். எரே 23:24எபி 4:13நீதி 15:3யோபு 34:21-22சங் 139:1-12ஆதி 3:10யோனா 1:9-10ரோம 2:15 அப்பொழுது தேவனாகிய யெகோவா ஆதாமைக் கூப்பிட்டு: “நீ எங்கே இருக்கிறாய்” என்றார். ஆதி 4:9ஆதி 16:8ஆதி 11:5ஆதி 18:20-21யோசு 7:17-19வெளி 20:12-13 அதற்கு அவன்: “நான் தேவரீருடைய சத்தத்தைத் தோட்டத்திலே கேட்டு, நான் நிர்வாணியாக இருப்பதால் பயந்து, ஒளிந்துகொண்டேன்” என்றான். ஆதி 2:25சங் 119:120ஏசா 57:11ஏசா 47:31 யோவா 3:20யாத் 3:6யோபு 23:15ஏசா 33:14 அப்பொழுது அவர்: “நீ நிர்வாணி என்று உனக்குச் சொன்னது யார்? சாப்பிடவேண்டாம் என்று நான் உனக்குச் சொன்ன மரத்தின் பழத்தை சாப்பிட்டாயோ” என்றார். ரோம 3:20ஆதி 4:10சங் 50:21 அதற்கு ஆதாம்: “என்னுடன் இருப்பதற்காக தேவரீர் தந்த பெண்ணே, அந்த மரத்தின் பழத்தை எனக்குக் கொடுத்தாள், நான் சாப்பிட்டேன்” என்றான். நீதி 28:13யாக் 1:13-15யோபு 31:33ரோம 10:31 சாமு 15:20-24ஆதி 2:18லூக் 10:29நீதி 19:3 அப்பொழுது தேவனாகிய யெகோவா பெண்ணை நோக்கி: “நீ ஏன் இப்படிச் செய்தாய் என்றார். அந்தப் பெண்: “பாம்பு என்னை ஏமாற்றியது, நான் சாப்பிட்டேன்” என்றாள். 2 கொரி 11:31 தீமோ 2:14ஆதி 3:4-6ஆதி 4:10-12யோவா 18:352 சாமு 12:9-122 சாமு 3:24ஆதி 44:15 அப்பொழுது தேவனாகிய யெகோவா பாம்பை நோக்கி: “நீ இதைச் செய்ததால் அனைத்து நாட்டுமிருகங்களிலும் அனைத்து காட்டுமிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ உன் வயிற்றினால் நகர்ந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய்; மீகா 7:17ஏசா 65:25சங் 72:9ஏசா 29:4உபா 28:15-20ஆதி 9:6லேவி 20:25யாத் 21:28-32 உனக்கும் பெண்ணுக்கும், உன் சந்ததிக்கும் அவளுடைய சந்ததிக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிகாலை நசுக்குவாய்” என்றார். ரோம 16:201 யோவா 3:8வெளி 12:17ஏசா 7:14எபி 2:14-15கலா 4:4யோவா 8:44மத் 1:23 அவர் பெண்ணை நோக்கி: “நீ கர்ப்பவதியாக இருக்கும்போது உன் வேதனையை மிகவும் அதிகப்படுத்துவேன்; வேதனையோடு பிள்ளை பெறுவாய்; உன் ஆசை உன்னுடைய கணவனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான்” என்றார். தீத் 2:5கொலோ 3:181 கொரி 11:31 கொரி 14:341 தீமோ 2:15எபே 5:22-241 தீமோ 2:11-121 கொரி 7:4 பின்பு அவர் ஆதாமை நோக்கி: “நீ உன்னுடைய மனைவியின் வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுத்து, சாப்பிடவேண்டாம் என்று நான் உனக்குச் சொன்ன மரத்தின் பழத்தை சாப்பிட்டதால், பூமி உன்னால் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாட்களெல்லாம் வருத்தத்தோடு அதின் பலனைச் சாப்பிடுவாய். ரோம 8:20-22ஆதி 5:29ஏசா 24:5-6பிரச 2:22-23யோவா 16:33யோபு 14:1எரே 7:23-24பிரச 5:17 அது உனக்கு முட்செடிகளை முளைப்பிக்கும்; நிலத்தின் பயிர்வகைகளைச் சாப்பிடுவாய். ஏசா 7:23யோபு 5:5மத் 13:7சங் 104:14-15எபி 6:8ஏசா 32:13ஏசா 5:6எரே 4:3 நீ மண்ணிலிருந்து எடுக்கப்பட்டதால், நீ மண்ணுக்குத் திரும்பும்வரைக்கும் உன் முகத்தின் வியர்வையைச் சிந்தி ஆகாரம் சாப்பிடுவாய்; நீ மண்ணாக இருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய்” என்றார். பிரச 12:7யோபு 34:15சங் 104:29ஆதி 2:7சங் 90:3எபே 4:28பிரச 3:201 கொரி 15:21-22 ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் 1 என்று பெயரிட்டான்; ஏனென்றால், அவள் உயிருள்ள அனைவருக்கும் தாயானவள். மத் 1:23ஆதி 2:23ஆதி 2:20ஆதி 5:29ஆதி 16:111 சாமு 1:20அப் 17:26யாத் 2:10 தேவனாகிய யெகோவா ஆதாமுக்கும் அவனுடைய மனைவிக்கும் தோல் உடைகளை உண்டாக்கி அவர்களுக்கு உடுத்தினார். ஏசா 61:102 கொரி 5:212 கொரி 5:2-3ஆதி 3:7ரோம 3:22

ஆதாமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்தை விட்டு துரத்தபட்டார்கள்.

பின்பு தேவனாகிய யெகோவா: “இதோ, மனிதன் நன்மை தீமை அறியத்தக்கவனாகி நம்மில் ஒருவரைப்போல் ஆனான்; இப்பொழுதும் அவன் தன் கையை நீட்டி வாழ்வளிக்கும் மரத்தின் பழத்தையும் பறித்து சாப்பிட்டு, என்றைக்கும் உயிரோடு இல்லாதபடிச் செய்யவேண்டும்” என்று, வெளி 2:7வெளி 22:14நீதி 3:18ஆதி 11:6-7வெளி 22:2ஆதி 2:9யோவா 6:48-58ஆதி 1:26 அவன் எடுக்கப்பட்ட மண்ணைப் பண்படுத்த தேவனாகிய யெகோவா அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து அனுப்பிவிட்டார். ஆதி 4:2ஆதி 3:19ஆதி 4:12பிரச 5:9ஆதி 2:5ஆதி 9:20 அவர் மனிதனைத் துரத்திவிட்டு, வாழ்வளிக்கும் மரத்திற்குப் போகும் வழியைக் காவல்செய்ய ஏதேன் தோட்டத்திற்குக் கிழக்கே கேருபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளிப் பட்டயத்தையும் வைத்தார். எபி 1:7சங் 104:4யாத் 25:18-221 நாளாக 21:16-17எபி 10:18-22யோவா 14:6எசேக் 10:2-22ஆதி 2:8-9