எசேக்கியேல் 28

Ezekiel 28
அத்தியாயம் 28

தீருவின் ராஜாவுக்கு எதிரான தீர்க்கதரிசனம்

யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி அவர்: மனிதகுமாரனே, நீ தீருவின் அதிபதியை நோக்கி: யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், உன்னுடைய இருதயம் மேட்டிமைகொண்டு: நான் தேவன், நான் கடலின் நடுவே தேவாசனத்தில் வீற்றிருக்கிறேன் என்று நீ சொல்லி, உன்னுடைய இருதயத்தைத் தேவனின் இருதயத்தைப்போல ஆக்கினாலும், நீ மனிதனேயல்லாமல் தேவனல்ல. எசேக் 28:92 தெச 2:4ஏசா 14:13-14ஏசா 31:3நீதி 16:18சங் 9:20அப் 12:22-23ஏசா 2:12 இதோ, தானியேலைவிட நீ ஞானவான்; இரகசியமானதொன்றும் உனக்கு மறைபொருள் அல்ல. தானி 1:20தானி 2:22தானி 2:27-281 இராஜா 10:31 இராஜா 4:29-32தானி 5:11-12யோபு 15:8சங் 25:14 நீ உன்னுடைய ஞானத்தினாலும் உன்னுடைய புத்தியினாலும் பொருள் சம்பாதித்து, பொன்னையும் வெள்ளியையும் உன்னுடைய கருவூலங்களில் சேர்த்துக்கொண்டாய். உபா 8:17-18நீதி 18:11நீதி 23:4-5பிரச 9:11எசேக் 29:3ஆப 1:16சகரி 9:2-4 உன்னுடைய வியாபாரத்தினாலும் உன்னுடைய மகா ஞானத்தினாலும் உன்னுடைய பொருளைப் பெருகச்செய்தாய்; உன்னுடைய இருதயம் உன்னுடைய செல்வத்தினால் மேட்டிமையானது. சங் 52:7சங் 62:10எசேக் 28:2ஓசி 13:6ஓசி 12:7-8யாக் 4:13-14நீதி 11:281 தீமோ 6:17 ஆகையால் யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ உன்னுடைய இருதயத்தைத் தேவனின் இருதயத்தைப்போல ஆக்குகிறபடியினால், எசேக் 28:2யாத் 9:171 கொரி 10:222 தெச 2:4யாக் 1:11யோபு 40:9-12யோபு 9:4 இதோ, தேசங்களில் மகா பலவான்களாகிய மறுதேசத்தாரை உனக்கு விரோதமாக வரச்செய்வேன்; அவர்கள் உன்னுடைய ஞானத்தின் அழகுக்கு விரோதமாகத் தங்களுடைய வாள்களை உருவி, உன்னுடைய சிறப்புகளைக் குலைத்துப்போடுவார்கள். எசேக் 31:12எசேக் 30:11எசேக் 32:12ஆப 1:6-8ஆமோ 3:6தானி 7:7உபா 28:49-50எசேக் 26:7-14 உன்னைக் குழியிலே விழத்தள்ளுவார்கள்; நீ கடலின் நடுவே கொலை செய்யப்பட்டு மரணமடைகிறவர்கள்போல் மரணமடைவாய். எசேக் 27:26-27எசேக் 27:34எசேக் 32:18-30ஏசா 38:17யோபு 17:16யோபு 33:18யோபு 33:28நீதி 1:12 உன்னைக் கொல்லுகிறவனுக்கு முன்பாக: நான் தேவனென்று நீ சொல்வாயோ? உன்னைக் குத்திப்போடுகிறவன் கைக்கு நீ மனிதனேயல்லாமல் தேவனல்லவே. எசேக் 28:2ஏசா 31:3சங் 82:7அப் 12:22-23தானி 4:31-32தானி 5:23-30 மறுதேசத்தாரின் கையினால் நீ விருத்தசேதனமில்லாதவர்கள் மரணமடைகிறதுபோல மரிப்பாய்; நான் இதைச் சொன்னேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்று சொல் என்றார். எசேக் 31:18எசேக் 32:191 சாமு 17:261 சாமு 17:36எசேக் 32:21பிலி 3:3அப் 7:51எசேக் 11:9 பின்னும் யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: மனிதகுமாரனே, நீ தீரு ராஜாவைக்குறித்துப் புலம்பி, அவனை நோக்கி: யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், நீ கடவுளின் சாயலில் செய்யப்பட்ட முத்திரை மோதிரம்; நீ ஞானத்தால் நிறைந்தவன்; பூரண அழகுள்ளவன். எசேக் 19:1எசேக் 26:172 கொரி 1:22கொலோ 1:9கொலோ 2:3யாக் 3:13-181 கொரி 1:19-201 கொரி 3:19 நீ தேவனுடைய தோட்டமாகிய ஏதேனில் இருந்தவன்; பத்மராகம், புஷ்பராகம், வைரம், படிகப்பச்சை, கோமேதகம், யஸ்பி, இந்திரநீலம், மரகதம், மாணிக்கம் முதலான எல்லாவித இரத்தினங்களும் பொன்னும் உன்னை மூடிக்கொண்டிருக்கிறது; நீ உருவாக்கப்பட்ட நாளில் உன்னுடைய மேளவாத்தியங்களும் உன்னுடைய நாதசுரங்களும் உன்னிடத்தில் ஆயத்தப்பட்டிருந்தது. எசேக் 28:15எசேக் 27:16ஆதி 2:8ஏசா 54:11-12ஏசா 51:3யாத் 28:17-20யாத் 39:10-21எசேக் 31:8-9 நீ காப்பாற்றுகிறதற்காக அபிஷேகம்செய்யப்பட்ட கேருப்; தேவனுடைய பரிசுத்த பர்வதத்தில் உன்னை வைத்தேன்; நெருப்புபோன்ற கற்களின் நடுவே உலாவினாய். யாத் 30:26ஏசா 14:12-15யாத் 40:9எசேக் 20:40எசேக் 28:13யாத் 25:17-20யாத் 9:16சங் 75:5-7 நீ உருவாக்கப்பட்ட நாள் முதல் உன்னில் அநியாயம் கண்டுபிடிக்கப்பட்டதுவரை, உன்னுடைய வழிகளில் குறையில்லாமல் இருந்தாய். 2 பேது 2:4எசேக் 28:17-18ஆதி 1:26-27ரோம 7:9எசேக் 27:3-4எசேக் 28:12எசேக் 28:3-6புலம் 5:16 உன்னுடைய வியாபாரத்தின் மிகுதியினால், உன்னுடைய கொடுமை அதிகரித்து நீ பாவம்செய்தாய்; ஆகையால் நான் உன்னை தேவனுடைய மலையிலிருந்து ஆகாதவனென்று தள்ளி, காப்பாற்றுகிற கேருபாக இருந்த உன்னை நெருப்புபோன்ற கற்களின் நடுவே இல்லாமல் அழித்துப்போடுவேன். 1 தீமோ 6:9-10ஆப 2:8ஆப 2:17ஆதி 3:24யோவா 2:16எசேக் 8:17மீகா 2:22 பேது 2:4-6 உன்னுடைய அழகினால் உன்னுடைய இருதயம் மேட்டிமையானது; உன்னுடைய மாட்சிமையினால் உன்னுடைய ஞானத்தைக் கெடுத்தாய்; உன்னைத் தரையிலே தள்ளிப்போடுவேன்; ராஜாக்கள் உன்னைப் பார்ப்பதற்காக உன்னை அவர்களுக்கு முன்பாக வேடிக்கையாக்குவேன். எசேக் 28:5எசேக் 31:10யாக் 4:6நீதி 16:18எசேக் 28:2லூக் 14:11எசேக் 32:10நீதி 11:2 உன்னுடைய அக்கிரமங்களின் மிகுதியினாலும், உன்னுடைய வியாபாரத்தின் அநீதத்தினாலும் உன்னுடைய பரிசுத்த ஸ்தலங்களைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினாய்; ஆகையால் உன்னைச் சுட்டெரிப்பதற்காக ஒரு நெருப்பை நான் உன் நடுவிலிருந்து புறப்படச்செய்து, உன்னைப்பார்க்கிற எல்லாருடைய கண்களுக்கு முன்பாகவும் உன்னைப் பூமியின்மேல் சாம்பலாக்குவேன். மல்கி 4:3வெளி 18:8ஆமோ 1:9-10எசேக் 28:16எசேக் 28:22 பேது 2:6ஆமோ 1:14ஆமோ 2:2 மக்களில் உன்னை அறிந்த அனைவரும் உனக்காக திகைப்பார்கள்; மகா பயங்கரமாவாய்; இனி ஒருபோதும் இருக்கமாட்டாய் என்று சொல்லுகிறார் என்று சொல் என்றார். எசேக் 26:21வெளி 18:15-19வெளி 18:21எசேக் 26:14எசேக் 27:35-36ஏசா 14:16-19எரே 51:63-64சங் 76:12 பின்னும் யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: மனிதகுமாரனே, நீ உன்னுடைய முகத்தைச் சீதோனுக்கு முன்பாக திருப்பி, அதற்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லி, சொல்லவேண்டியது என்னவென்றால்: எசேக் 6:2ஆதி 10:15எசேக் 25:2எசேக் 27:8எரே 25:22எசேக் 29:2எசேக் 32:30ஏசா 23:12 யெகோவாகிய தேவன் சொல்லுகிறார்; சீதோனே, இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து, உன் நடுவிலே மகிமைப்படுவேன்; நான் அதிலே நியாயத்தீர்ப்புகளைச் செய்து, அதிலே பரிசுத்தரென்று விளங்கும்போது, நான் யெகோவா என்று அறிந்துகொள்வார்கள். எசேக் 39:13யாத் 14:17யாத் 14:4எசேக் 20:41எசேக் 30:191 சாமு 17:45-47யாத் 15:21யாத் 9:16 நான் அதிலே கொள்ளைநோயையும், அதின் வீதிகளில் இரத்தத்தையும் வரச்செய்வேன்; அதற்கு விரோதமாகச் சுற்றிலும் வந்த வாளினால் காயம்பட்டவர்கள் அதின் நடுவிலே வெட்டப்பட்டு விழுவார்கள்; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வார்கள். எசேக் 38:22எசேக் 25:11எசேக் 25:17எசேக் 25:7எசேக் 26:6எசேக் 5:12எரே 15:2 இஸ்ரவேல் மக்களை இகழ்ந்த அவர்களுடைய சுற்றுப்புறத்தாராகிய அனைவரிலும், இனிக் குத்துகிற முள்ளும் வலியுண்டாக்குகிற நெரிஞ்சிலும் அவர்களுக்கு இருக்காது; அப்பொழுது நான் யெகோவாகிய ஆண்டவரென்று அறிந்துகொள்வார்கள். யோசு 23:13எண் 33:552 கொரி 12:7எசேக் 2:6ஏசா 55:13எசேக் 28:23எசேக் 28:26எசேக் 36:36-38 யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், நான் இஸ்ரவேல் வீட்டாரை, அவர்கள் சிதறடிக்கப்பட்டிருக்கிற மக்களிடத்திலிருந்து சேர்த்துக்கொண்டுவந்து, அவர்களால் தேசகளின் கண்களுக்கு முன்பாகப் பரிசுத்தரென்று விளங்கும்போது, அவர்கள் என்னுடைய ஊழியக்காரனாகிய யாக்கோபுக்கு நான் கொடுத்த தங்களுடைய தேசத்திலே குடியிருப்பார்கள். எரே 32:37எசேக் 20:41எசேக் 11:17எசேக் 36:28எசேக் 37:25எரே 23:8சங் 106:47எசேக் 28:22 அவர்களுடைய சுற்றுப்புறத்தாரில் அவர்களை இகழ்ந்த அனைவரிலும் நான் நியாயத்தீர்ப்புகளைச் செய்யும்போது, அவர்கள் அதிலே சுகமாகக் குடியிருந்து, வீடுகளைக் கட்டி, திராட்சைத்தோட்டங்களை நாட்டி, சுகமாக வாழ்ந்து, நான் தங்களுடைய தேவனாகிய யெகோவா என்று அறிந்துகொள்வார்கள் என்கிறார் என்று சொல் என்றார். எசேக் 28:24எசேக் 28:22ஆமோ 9:13-14எசேக் 34:25-28எசேக் 38:8எரே 32:15நீதி 14:261 இராஜா 4:25