சங்கீதங்கள் 82

Psalms 82
சங்கீதம் 82

ஆசாபின் பாடல்.

தேவசபையிலே தேவன் எழுந்தருளியிருக்கிறார்; யோவா 10:352 நாளாக 19:6-7சங் 82:6-7ஏசா 3:13பிரச 5:8சங் 58:11சங் 138:1யாத் 21:6

தெய்வங்களின் நடுவிலே அவர் நியாயம் விசாரிக்கிறார்.

எதுவரைக்கும் நீங்கள் அநியாயத் தீர்ப்புச்செய்து, உபா 1:17நீதி 18:5சங் 58:1-2யாத் 10:3கலா 2:61 இராஜா 18:212 நாளாக 19:7யாத் 23:6-7

துன்மார்க்கர்களுக்கு முகதாட்சிணியம் செய்வீர்கள். (சேலா)

ஏழைக்கும் திக்கற்றபிள்ளைக்கும் நியாயஞ்செய்து, யாக் 1:27எரே 22:3சங் 10:18ஏசா 1:17எரே 5:28உபா 10:18உபா 24:17எரே 22:16

சிறுமைப்பட்டவனுக்கும் திக்கற்றவனுக்கும் நீதி செய்யுங்கள்.

பலவீனனையும் எளியவனையும் விடுவித்து, நீதி 24:11-12யோபு 29:12யோபு 5:15-16சங் 140:12சங் 72:12-14யோபு 29:16-17நெகே 5:1-13

துன்மார்க்கர்களின் கைக்கு அவர்களைத் தப்புவியுங்கள்.

அறியாமலும் உணராமலும் இருக்கிறார்கள், நீதி 2:13சங் 11:3ரோம 1:28மீகா 3:1யோவா 12:35யோவா 3:19நீதி 1:291 யோவா 2:11

இருளிலே நடக்கிறார்கள்; தேசத்தின் அஸ்திபாரங்களெல்லாம் அசைகிறது.

நீங்கள் தெய்வங்கள் என்றும், யோவா 10:34-36சங் 82:1யாத் 22:28யாத் 22:9

நீங்களெல்லோரும் உன்னதமான தேவனுடைய மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன்.

ஆனாலும் நீங்கள் மனிதர்களைப்போலச் செத்து, சங் 49:12எசேக் 31:14யோபு 21:32சங் 83:11

உலகப்பிரபுக்களில் ஒருவனைப்போல விழுந்து போவீர்கள்.

தேவனே, எழுந்தருளும், பூமிக்கு நியாயத்தீர்ப்புச் செய்யும்; வெளி 11:15சங் 2:8சங் 96:13சங் 22:28சங் 102:13செப்ப 3:8மீகா 7:2மீகா 7:7

நீரே எல்லா தேசங்களையும் சுதந்தரமாகக் கொண்டிருப்பவர்.