சங்கீதங்கள் 46

Psalms 46
சங்கீதம் 46

அலமோத் என்னும் கருவியில் வாசிக்கும்படி கொடுக்கப்பட்ட கோராகின் குடும்பத்தின் இராகத் தலைவனுக்கு, ஒரு பாடல்.

தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், சங் 145:18சங் 9:9நீதி 18:10சங் 62:7-8சங் 91:1-9சங் 142:5உபா 4:7சங் 46:11

ஆபத்துக்காலத்தில் அனுகூலமான துணையுமானவர்.

ஆகையால் பூமி நிலைமாறினாலும், மலைகள் நடுக்கடலில் சாய்ந்துபோனாலும், சங் 23:4எபி 13:6சங் 27:3லூக் 21:9-11மத் 21:21லூக் 21:33சங் 18:72 பேது 3:10-14

அதின் தண்ணீர்கள் கொந்தளித்துப் பொங்கி, அதின் பெருக்கினால் மலைகள் அதிர்ந்தாலும், எரே 5:22சங் 93:3-4யோபு 9:5-6நியாயாதி 5:4-5மீகா 1:4நாகூ 1:5சங் 114:4-7வெளி 16:20

நாம் பயப்படமாட்டோம். (சேலா)

ஒரு நதியுண்டு, அதின் நீரோடைகள் தேவனுடைய நகரத்தையும், வெளி 22:1-3எசேக் 47:1-12சங் 36:8-9சங் 48:8சங் 87:3ஏசா 60:142 நாளாக 6:6சங் 23:2

உன்னதமான தேவன் தங்கும் பரிசுத்தஸ்தலத்தையும் சந்தோஷப்படுத்தும்.

தேவன் அதின் நடுவில் இருக்கிறார், அது அசையாது; சகரி 2:5யோவே 2:27செப்ப 3:15சகரி 2:10-11எசேக் 43:7சங் 62:2ஏசா 12:6சங் 112:6

அதிகாலையிலே தேவன் அதற்கு உதவி செய்வார்.

தேசங்கள் கொந்தளித்தது, ராஜ்ஜியங்கள் தத்தளித்தது; ஆமோ 9:5சங் 18:13ஆப 3:5-6நாகூ 1:5மீகா 1:42 பேது 3:10-12ஆமோ 9:13யோவே 2:11

அவர் தமது சத்தத்தை முழங்கச்செய்தார், பூமி உருகிப்போனது.

சேனைகளின் யெகோவா நம்மோடிருக்கிறார்; ரோம 8:31சங் 9:9எண் 14:92 நாளாக 13:12மத் 28:20ஏசா 8:102 தீமோ 4:22சங் 46:11

யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர். (சேலா)

பூமியிலே அழிவுகளை நடப்பிக்கிற யெகோவாவுடைய செய்கைகளை வந்துபாருங்கள். சங் 66:5ஏசா 24:1ஏசா 61:4சங் 92:4-6ஏசா 34:2-17சங் 111:2-32 நாளாக 20:23-24யாத் 12:30

அவர் பூமியின் கடைசிவரை யுத்தங்களை ஓயச்செய்கிறார்; ஏசா 2:4மீகா 4:3-4மீகா 5:10ஏசா 60:18யோசு 11:91 சாமு 2:4ஏசா 11:9சங் 76:3-6

வில்லை ஒடித்து, ஈட்டியை முறிக்கிறார்;

இரதங்களை 1நெருப்பினால் சுட்டெரிக்கிறார்.

நீங்கள் யுத்தம் செய்யாமலிருந்து, சங் 100:3ஆப 2:20எசேக் 38:23சகரி 2:13சங் 83:18ஏசா 2:17சங் 57:51 நாளாக 29:11

நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள் என்று தேவன் சொல்லுகிறார்;

தேசங்களுக்குள்ளே உயர்ந்திருப்பேன், பூமியிலே உயர்ந்திருப்பேன்.

சேனைகளின் யெகோவா நம்மோடிருக்கிறார், உபா 33:27எரே 16:19சங் 46:1சங் 46:7சங் 48:3

யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர் (சேலா).