தாவீதின் பாடல்.
யெகோவா என் மேய்ப்பராக இருக்கிறார்; பிலி 4:19யோவா 10:11ஏசா 40:11யோவா 10:27-30யோவா 10:14வெளி 7:17மத் 6:331 பேது 2:25
நான் தாழ்ச்சி அடையமாட்டேன்.
அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, வெளி 7:17வெளி 22:1எசேக் 34:13-14சங் 46:4வெளி 21:6ஏசா 49:9-10ஏசா 30:23வெளி 22:17
அமர்ந்த தண்ணீர்கள் அருகில் என்னைக் கொண்டுபோய்விடுகிறார்.
அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய பெயரினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார். ஏசா 42:16சங் 31:3சங் 19:7சங் 51:10சங் 143:8-10சங் 5:8சங் 51:12யோபு 33:30
நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் ஏசா 41:10சங் 118:6சங் 138:7ஏசா 43:1-2சங் 3:6சங் 46:1-3லூக் 1:791 கொரி 15:55-57
பொல்லாப்புக்குப் பயப்படமாட்டேன்;
ஏனெனில் தேவனே நீர் என்னோடு இருக்கிறீர்;
உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்.
என்னுடைய எதிரிகளுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, எபே 3:20சங் 92:10சங் 45:7சங் 16:51 யோவா 2:20சங் 31:19-20யோபு 36:161 யோவா 2:27
என்னுடைய தலையை எண்ணெயால் அபிஷேகம்செய்கிறீர்;
என்னுடைய பாத்திரம் நிரம்பி வழிகிறது 1.
என் உயிருள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; சங் 27:42 தீமோ 4:182 கொரி 5:1சங் 36:7-10சங் 16:11சங் 73:24-262 கொரி 1:10சங் 103:17
நான் யெகோவாவுடைய வீட்டிலே நீடித்த நாட்களாக நிலைத்திருப்பேன்.