பாபிலோனிலிருந்து வந்த பிரதிநிதிகள்
அக்காலத்திலே பலாதானின் மகனாகிய மெரோதாக்பலாதான் என்னும் பாபிலோனின் ராஜா, எசேக்கியா வியாதிப்பட்டிருந்து ஆரோக்கியமானதைக் கேள்விப்பட்டு, அவனிடத்திற்கு கடிதங்களையும் வெகுமானத்தையும் அனுப்பினான். 2இராஜா 20:12-192 நாளாக 32:232 சாமு 10:22 சாமு 8:10ஏசா 13:19ஏசா 39:1-82 நாளாக 32:31ஏசா 13:1 எசேக்கியா அவர்களைக் கண்டு சந்தோஷப்பட்டு, தன் பொக்கிஷசாலையையும், வெள்ளியையும், பொன்னையும், கந்தவர்க்கங்களையும், நல்ல பரிமள தைலத்தையும், தன் ஆயுதசாலை அனைத்தையும், தன் பொக்கிஷசாலைகளில் உள்ளதெல்லாவற்றையும் அவர்களுக்குக் காண்பித்தான்; எசேக்கியா தன் அரண்மனையிலும், தன் ராஜ்யத்தில் எங்கும் அவர்களுக்குக் காண்பிக்காத பொருள் ஒன்றும் இல்லை. 2 நாளாக 32:252 நாளாக 32:31எரே 17:9யோபு 31:25சங் 146:3-41 இராஜா 10:101 இராஜா 10:151 இராஜா 10:2 அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசி எசேக்கியா ராஜாவினிடத்தில் வந்து: அந்த மனிதர்கள் என்ன சொன்னார்கள் எங்கேயிருந்து உம்மிடத்தில் வந்தார்கள் என்று கேட்டான். அதற்கு எசேக்கியா: பாபிலோன் என்னும் தூரதேசத்திலிருந்து என்னிடத்திற்கு வந்தார்கள் என்றான். உபா 28:492 நாளாக 16:72 சாமு 12:1எரே 5:152 நாளாக 25:152இராஜா 20:14-15ஏசா 38:1ஏசா 38:5 அப்பொழுது அவன்: உம்முடைய வீட்டில் எவைகளைப் பார்த்தார்கள் என்று கேட்டான். அதற்கு எசேக்கியா: என் வீட்டிலுள்ள எல்லாவற்றையும் பார்த்தார்கள்; என் பொக்கிஷங்களில் நான் அவர்களுக்குக் காண்பிக்காத பொருள் ஒன்றும் இல்லை என்றான். 1 யோவா 1:9யோபு 31:33யோசு 7:19நீதி 23:5நீதி 28:13 அப்பொழுது ஏசாயா எசேக்கியாவை நோக்கி: சேனைகளுடைய யெகோவாவின் வார்த்தையைக் கேளும். 1 சாமு 13:13-141 சாமு 15:16 இதோ, நாட்கள் வரும்; அப்பொழுது உன் வீட்டில் உள்ளதிலும், உன் முன்னோர்கள் இந்நாள் வரைக்கும் சேர்த்ததிலும் ஒன்றும் மீதியாக வைக்கப்படாமல் அனைத்தும் பாபிலோனுக்குக் கொண்டுபோகப்படும். 2இராஜா 25:13-152இராஜா 24:13எரே 20:5தானி 1:22 நாளாக 36:102 நாளாக 36:182இராஜா 20:17-19எரே 27:21-22 நீ பெறப்போகிற உன் சந்ததியாகிய உன் மகன்களிலும் சிலர் பாபிலோன் ராஜாவின் அரண்மனையிலே அரண்மனை வேலைக்காரராயிருப்பார்கள் என்று யெகோவா சொல்கிறார் என்றான். தானி 1:1-72 நாளாக 36:102இராஜா 24:122 நாளாக 33:112 நாளாக 36:202இராஜா 24:152இராஜா 25:6-7எசேக் 17:12-20 அப்பொழுது எசேக்கியா ஏசாயாவை நோக்கி: நீர் சொன்ன யெகோவாவுடைய வார்த்தை நல்லதுதான் என்று சொல்லி, என் நாட்களிலாவது சமாதானமும் உண்மையும் இருக்குமே என்றான். 2 நாளாக 32:262 நாளாக 34:281 பேது 5:61 சாமு 3:18யோபு 1:21புலம் 3:39லேவி 10:3சங் 39:9