உபாகமம் 33

Deuteronomy 33
அத்தியாயம் 33

மோசே இஸ்ரவேல் கோத்திரங்களை ஆசீர்வதித்தல்

தேவனுடைய மனிதனாகிய மோசே தான் மரணமடைவதற்கு முன்னே இஸ்ரவேல் மக்களை ஆசீர்வதித்த ஆசீர்வாதமாவது: யோசு 14:61 இராஜா 13:11 இராஜா 13:61 சாமு 2:271 சாமு 9:6-71 தீமோ 6:112 பேது 1:212 தீமோ 3:17

“யெகோவா சீனாயிலிருந்து எழுந்தருளி, ஆப 3:3யூதா 1:14வெளி 5:11அப் 7:53நியாயாதி 5:4-5சங் 68:17சங் 68:7-8எபி 2:2

சேயீரிலிருந்து அவர்களுக்கு உதயமானார்;

பாரான் மலையிலிருந்து பிரகாசித்து,

பத்தாயிரங்களான பரிசுத்தவான்களுடன் வெளிப்பட்டார்;

அவர்களுக்காக அக்கினிமயமான பிரமாணம் அவருடைய வலதுகரத்திலிருந்து புறப்பட்டது.

உண்மையாகவே அவர் மக்களை நேசிக்கிறார்; லூக் 10:39உபா 7:6-8மல்கி 1:21 பேது 1:5அப் 22:3கொலோ 3:3-4எபே 2:4-5லூக் 8:35

அவருடைய பரிசுத்தவான்கள் எல்லோரும் உம்முடைய கையில் இருக்கிறார்கள்;

அவர்கள் உம்முடைய பாதத்தில் விழுந்து,

உம்முடைய வார்த்தைகளினால் போதிக்கப்படுவார்கள்.

மோசே நமக்கு ஒரு நியாயப்பிரமாணத்தைக் கற்பித்தான்; யோவா 1:17யோவா 7:19சங் 119:111உபா 9:26-29சங் 119:72

அது யாக்கோபின் சபைக்குச் சொந்தமானது.

மக்களின் தலைவர்களும் இஸ்ரவேலின் கோத்திரங்களும் ஒன்றாகக்கூடினபோது உபா 32:15நியாயாதி 17:6யாத் 18:16யாத் 18:19ஆதி 36:31நியாயாதி 8:22நியாயாதி 9:2எண் 16:13-15

அவர் யெஷூரனுக்கு ராஜாவாயிருந்தார்.

“ரூபன் மரணமடையாமல் பிழைப்பானாக; ஆதி 49:8எண் 32:31-32யோசு 22:1-9ஆதி 49:3-4

அவன் மக்கள் குறைவாக இருக்கமாட்டார்கள்” என்றான்.

அவன் யூதாவைக்குறித்து: “யெகோவாவே, யூதாவின் சத்தத்தைக் கேட்டு, ஆதி 49:8-12சங் 20:2சங் 21:81 கொரி 15:252 சாமு 7:9-12எபி 7:14ஏசா 9:17லூக் 19:27

அவன் தன்னுடைய மக்களிடத்திற்கு திரும்பிவரச் செய்யும்;

அவனுடைய கை பலப்படுவதாக;

அவனுடைய எதிரிகளுக்கு அவனைப் பாதுகாத்து விடுவிக்கிற உதவி செய்கிறவராக இருப்பீராக” என்றான்.

லேவியர்களைக்குறித்து: “நீ மாசாவிலே பரீட்சைபார்த்து, யாத் 17:7யாத் 28:30எண் 20:13லேவி 8:8சங் 106:161 சாமு 28:62 நாளாக 23:6உபா 8:16

மேரிபாவின் தண்ணீரின் அருகில் வாக்குவாதம்செய்த உன் பரிசுத்த மனிதனிடம்

உன்னுடைய தும்மீம் ஊரீம் என்பவைகள் இருப்பதாக.

தன்னுடைய தகப்பனையும், யாத் 32:25-29மத் 10:37எரே 18:18லேவி 21:11லூக் 14:26மத் 12:481 நாளாக 17:172 கொரி 5:16

தாயையும் குறித்து நான் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கமாட்டேன் என்று சொல்லி,

தன் சகோதரர்களையும், பிள்ளைகளையும்

ஏற்றுக்கொள்ளாமல் இருக்கிறவனிடத்தில் அவைகள் இருப்பதாக;

அவர்கள் உம்முடைய வார்த்தைகளைக் கைக்கொண்டு,

உம்முடைய உடன்படிக்கையைக் காக்கிறவர்கள்.

அவர்கள் யாக்கோபுக்கு உம்முடைய நியாயங்களையும், லேவி 10:11சங் 51:191 சாமு 2:28உபா 17:9-11யாத் 30:7-8எசேக் 43:272 நாளாக 17:8-102 நாளாக 26:18

இஸ்ரவேலுக்கு உம்முடைய பிரமாணத்தையும் கற்பித்து,

உமது சந்நிதானத்திலே தூபவர்க்கத்தையும்,

உமது பலிபீடத்தின்மேல் சர்வாங்க தகனபலிகளையும் செலுத்துவார்கள்.

யெகோவாவே, அவனுடைய ஆஸ்தியை ஆசீர்வதித்து, 2 சாமு 24:23எசேக் 20:40-41எசேக் 43:271 தெச 4:8ஆமோ 5:10உபா 18:1-5ஏசா 29:21எரே 15:10

அவன் கையின் செயல்களின்மேல் பிரியமாயிரும்;

அவனைப் பகைத்து அவனுக்கு விரோதமாக எழும்புகிறவர்கள்

திரும்ப எழுந்திருக்காதபடி அவர்களுடைய இடுப்புகளை நொறுக்கிவிடும்” என்றான்.

பென்யமீனைக்குறித்து: 2 நாளாக 15:2மத் 23:37சங் 91:4ஏசா 51:161 இராஜா 12:212 நாளாக 11:12 நாளாக 17:17-19உபா 12:10

“யெகோவாவுக்குப் பிரியமானவன்,

அவருடன் சுகமாகத் தங்கியிருப்பான்;

அவனை எந்நாளும் அவர் காப்பாற்றி,

அவனுடைய எல்லைக்குள்ளே தங்கியிருப்பார்” என்றான்.

யோசேப்பைக்குறித்து: “யெகோவாவால் அவனுடைய தேசம் ஆசீர்வதிக்கப்படுவதாக; ஆதி 49:22-26மீகா 5:7ஆதி 27:28-29ஓசி 14:5ஏசா 18:4நீதி 19:12நீதி 3:20உபா 32:2

அது வானத்தின் செல்வத்தினாலும், பனியினாலும், ஆழத்திலுள்ள நீரூற்றுகளினாலும்,

சூரியன் பக்குவப்படுத்தும் அருமையான பழங்களினாலும், 1 1 தீமோ 6:172 சாமு 23:4அப் 14:17உபா 28:8லேவி 26:4மல்கி 4:2மத் 5:45சங் 104:19

சந்திரன் பக்குவப்படுத்தும் அருமையான பலன்களினாலும்,

பழமையான மலைகளில் உண்டாகும் விலையுயர்ந்த பொருட்களினாலும், ஆப 3:6ஆதி 49:26யாக் 5:7

நித்திய மலைகளில் கிடைக்கும் அரிதான பொருட்களினாலும்,

நாடும் அதின் நிறைவும் கொடுக்கும் அருமையான தானியங்களினாலும் ஆசீர்வதிக்கப்படுவதாக. அப் 7:35யாத் 3:2-4ஆதி 49:26சங் 24:12 கொரி 12:7-10அப் 7:30-33ஆதி 37:28ஆதி 37:36

முட்செடியில் காட்சியளித்தவரின் தயவு யோசேப்புடைய தலையின்மேலும்,

தன் சகோதரர்களில் விசேஷித்தவனுடைய உச்சந்தலையின்மேலும் வருவதாக.

அவனுடைய அலங்காரம் அவன் முதற்பிறந்த காளையினுடைய அலங்காரத்தைப்போலவும், எண் 23:221 இராஜா 22:11சங் 44:5ஆதி 48:191 நாளாக 5:1எண் 24:8சங் 92:102 நாளாக 18:10

அவன் கொம்புகள் காண்டாமிருகத்தின் கொம்புகளைப்போலவும் இருக்கும்;

அவைகளாலே மக்கள் அனைவரையும் தேசத்தின் கடைசிவரை முட்டித் துரத்துவான்;

அவைகள் எப்பிராயீமின் பத்தாயிரங்களும் மனாசேயின் ஆயிரங்களுமானவைகள்” என்றான்.

“செபுலோனைக்குறித்து: செபுலோனே, ஆதி 49:13-15நியாயாதி 5:14யோசு 19:11

நீ வெளியே புறப்பட்டுப்போகும்போதும், இசக்காரே,

நீ உன் கூடாரங்களில் தங்கும்போதும் சந்தோஷமாயிரு.

அவர்கள், மக்களை மலையின்மேல் வரவழைத்து, ஏசா 2:3ஏசா 60:5சங் 4:5யாத் 15:17சங் 50:13-15சங் 51:16-171 பேது 2:5உபா 32:13

அங்கே நீதியின் பலிகளைச் செலுத்துவார்கள்;

கடல்களிலுள்ள சம்பூரணத்தையும் மணலுக்குள்ளே மறைந்திருக்கும் பொருட்களையும் அநுபவிப்பார்கள்” என்றான்.

“காத்தைக்குறித்து: 1 நாளாக 12:8-14ஆதி 49:191 நாளாக 12:37-381 நாளாக 4:101 நாளாக 5:18-21ஆதி 9:26-27யோசு 13:10யோசு 13:24-28

காத்திற்கு விசாலமான இடத்தைக் கொடுக்கிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்;

அவன் சிங்கத்தைப்போல் தங்கியிருந்து,

புயத்தையும் உச்சந்தலையையும் பீறிப்போடுவான்.

அவன் தனக்காக முதல் இடத்தைப் பார்த்துக்கொண்டான்; யோசு 4:12-13நியாயாதி 5:11நியாயாதி 5:2யோசு 1:14யோசு 22:1-4எண் 32:1-6எண் 32:16-42

அங்கே தனக்கு நியாயப்பிரமாணிகன் கொடுத்த பங்கு பத்திரமாயிருக்கிறது;

ஆனாலும் அவன் மக்களுக்கு முன்பாக வந்து,

மற்ற இஸ்ரவேலுடனே யெகோவாவின் நீதியையும் அவருடைய நியாயங்களையும் செய்வான்” என்றான்.

“தாணைக்குறித்து: தாண் ஒரு பாலசிங்கம், யோசு 19:47நியாயாதி 18:271 நாளாக 12:35ஆதி 49:16-17நியாயாதி 13:2நியாயாதி 13:24-25நியாயாதி 14:19நியாயாதி 14:6

அவன் பாசானிலிருந்து பாய்வான்” என்றான்.

“நப்தலியைக்குறித்து: நப்தலி யெகோவாவுடைய தயவினாலே திருப்தியடைந்து, ஆதி 49:21எரே 31:14மத் 4:16சங் 36:8மத் 4:13யோசு 19:32-39சங் 90:14ஏசா 9:1-2

அவருடைய ஆசீர்வாதத்தினாலே நிறைந்திருப்பான்.

நீ மேற்குத் திசையையும் தெற்குத் திசையையும் சொந்தமாக்கிக்கொள்” என்றான்.

ஆசேரைக்குறித்து: “ஆசேர் குழந்தை பாக்கியமுடையவனாக, தன் சகோதரர்களுக்குப் பிரியமாயிருந்து, ஆதி 49:20யோபு 29:6நீதி 3:3-4ரோம 14:18சங் 128:6அப் 7:10சங் 128:3யாத் 12:10

தன் காலை எண்ணெயிலே தோய்ப்பான்.

இரும்பும் வெண்கலமும் உன் காலணியின் கீழிருக்கும்; ஏசா 41:10கொலோ 1:11ஏசா 40:29பிலி 4:13சங் 138:32 நாளாக 16:9எபே 6:102 கொரி 12:9-10

உன் நாட்களுக்குத்தக்கதாக உன் பெலனும் இருக்கும் என்றான்.

“யெஷூரனுடைய தேவனைப்போல் ஒருவரும் இல்லை; யாத் 15:11ஏசா 43:11-13ஆப 3:8எரே 10:6ஏசா 19:1சங் 104:3சங் 68:33-34உபா 32:15

அவர் உனக்கு உதவியாக வானங்களின்மேலும்

தமது மாட்சிமையோடு ஆகாய மண்டலங்களின் மேலும் ஏறிவருகிறார்.

அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; சங் 90:1-2சங் 18:2ஏசா 25:4சங் 46:1சங் 91:1-2நீதி 18:10சங் 91:9ரோம 16:20

அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம்;

அவர் உனக்கு முன்னின்று எதிரிகளைத் துரத்தி,

அவர்களை அழித்துப்போடு என்று கட்டளையிடுவார்.

இஸ்ரவேல் சுகமாகத் தனித்து குடியிருப்பான்; எண் 23:9ஆதி 27:28யாத் 33:16எரே 23:6வெளி 21:27உபா 11:11எரே 33:16சங் 68:26

யாக்கோபின் ஊற்றானது 2 தானியமும் திராட்சைரசமும் உள்ள தேசத்திலே இருக்கும்;

அவருடைய வானமும் பனியைப் பெய்யும்.

இஸ்ரவேலே, நீ பாக்கியவான்; யெகோவாவால் இரட்சிக்கப்பட்ட மக்களே, ஏசா 12:2ஏசா 45:17உபா 4:7-8சங் 115:9-112 சாமு 7:23ஆதி 15:1எண் 23:20-242 சாமு 22:45

உனக்கு ஒப்பானவன் யார்?

உனக்கு உதவிசெய்யும் கேடகமும் உனக்கு மகிமை பொருந்திய பட்டயமும் அவரே;

உன் எதிரிகள் உன்னை நிந்தித்துப் பேசி அடங்குவார்கள்;

அவர்களுடைய மேடுகளை 3 மிதிப்பாய்” என்று சொன்னான்.