யாத்திராகமம் 2

Exodus 2
அத்தியாயம் 2

மோசேயின் பிறப்பு

லேவியின் கோத்திரத்தாரில் ஒருவன் லேவியின் மகள்களில் ஒருத்தியைத் திருமணம்செய்தான். எண் 26:591 நாளாக 23:12-14யாத் 6:16-201 நாளாக 6:1-3 அந்த பெண் கர்ப்பவதியாகி, ஒரு ஆண்பிள்ளையைப் பெற்று, அது அழகுள்ளது என்று கண்டு, அதை மூன்று மாதங்கள் ஒளித்துவைத்தாள். எபி 11:23அப் 7:20சங் 112:5 அதன்பின்பு அவள் பிள்ளையை ஒளித்துவைக்கமுடியாமல், ஒரு நாணல்பெட்டியை எடுத்து, அதற்குப் பிசினும் தாரும் பூசி, அதிலே பிள்ளையை வைத்து, நைல் நதியோரமாக நாணலுக்குள்ளே வைத்தாள். யாத் 1:22அப் 7:19ஆதி 6:14ஏசா 18:2மத் 2:16மத் 2:13ஆதி 11:3ஆதி 14:10 அதற்கு என்ன சம்பவிக்கும் என்பதை அறியும்படி அதின் சகோதரி தூரத்திலே நின்றுகொண்டிருந்தாள். எண் 26:59யாத் 15:20மீகா 6:4எண் 20:1எண் 12:1-15 அப்பொழுது பார்வோனுடைய மகள் நதியில் குளிக்க வந்தாள்; அவளுடைய பணிப்பெண்கள் நதியோரத்தில் உலாவினார்கள்; அவள் நாணலுக்குள்ளே இருக்கிற பெட்டியைக் கண்டு, தன்னுடைய பணிப்பெண்ணை அனுப்பி அதைக் கொண்டுவரும்படிச் செய்தாள். அப் 7:21சங் 12:5சங் 9:9யாத் 8:20சங் 46:1யாத் 7:15நீதி 21:1சங் 76:10 அதைத் திறந்தபோது பிள்ளையைக்கண்டாள்; பிள்ளை அழுதது; அவள் அதின்மேல் இரக்கமுற்று, “இது எபிரெயர்களின் பிள்ளைகளில் ஒன்று” என்றாள். 1 இராஜா 8:501 பேது 3:8அப் 7:21நெகே 1:11சங் 106:46நீதி 21:1 அப்பொழுது அப்பிள்ளையின் சகோதரி பார்வோனின் மகளை நோக்கி: “உமக்கு இந்தப் பிள்ளையை வளர்க்கும்படி எபிரெய பெண்களில் பால்கொடுக்கிற ஒருத்தியை நான் போய் உம்மிடத்தில் அழைத்துக்கொண்டு வரட்டுமா” என்றாள். யாத் 2:4எண் 26:59எண் 12:1யாத் 15:20 அதற்குப் பார்வோனுடைய மகள்: “அழைத்துக்கொண்டுவா” என்றாள். இந்தப் பெண் போய்ப் பிள்ளையின் தாயையே அழைத்துக்கொண்டு வந்தாள். ஏசா 46:3-4சங் 27:10யாத் 6:20எசேக் 16:8 பார்வோனுடைய மகள் அவளை நோக்கி: “நீ இந்தப் பிள்ளையை எடுத்துக்கொண்டுபோய், அதை எனக்காக வளர்த்திடு, நான் உனக்குச் சம்பளம் கொடுக்கிறேன்” என்றாள். அந்தப் பெண், பிள்ளையை எடுத்துக்கொண்டுபோய், அதை வளர்த்தாள். பிள்ளை பெரிதானபோது, அவள் அதைப் பார்வோனுடைய மகளிடம் கொண்டுபோய் விட்டாள். அவளுக்கு அவன் மகனானான். அவள்: “அவனை தண்ணீரிலிருந்து எடுத்தேன்” என்று சொல்லி, அவனுக்கு மோசே என்று பெயரிட்டாள். அப் 7:21-22எபி 11:241 சாமு 1:20ஆதி 16:111 யோவா 3:1கலா 4:5மத் 1:21ஆதி 4:25

மோசே மீதியான் தேசத்திற்குத் தப்பியோடுதல்

மோசே பெரியவனான காலத்தில், அவன் தன்னுடைய சகோதரர்களிடம் போய், அவர்கள் சுமைசுமக்கிறதைப் பார்த்து, தன்னுடைய சகோதரர்களாகிய எபிரெயர்களில் ஒருவனை ஒரு எகிப்தியன் அடிக்கிறதைக் கண்டு, எபி 11:24-26அப் 7:22-24யாத் 1:11லூக் 4:18மத் 11:28யாத் 3:7ஏசா 58:6யாத் 5:14 அங்கும் இங்கும் பார்த்து, ஒருவரும் இல்லை என்று அறிந்து, எகிப்தியனை வெட்டி, அவனை மணலிலே புதைத்துப்போட்டான். அப் 7:24-26 அவன் மறுநாளிலும் வெளியே போனபோது, எபிரெய மனிதர்கள் இருவர் சண்டையிட்டுக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது அவன் அநியாயம் செய்கிறவனை நோக்கி: “நீ உன்னுடைய தோழனை அடிக்கிறது ஏன்” என்று கேட்டான். அப் 7:26-281 கொரி 6:7-8 அதற்கு அவன்: “எங்கள்மேல் உன்னை அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் ஏற்படுத்தினவன் யார்? நீ எகிப்தியனைக் கொன்றுபோட்டதுபோல, என்னையும் கொன்றுபோட நினைக்கிறாயோ” என்றான். அப்பொழுது மோசே காரியம் நிச்சயமாக வெளிப்பட்டது என்று பயந்தான். லூக் 12:14மத் 21:23ஆதி 19:9ஆதி 37:19-20லூக் 19:14சங் 2:2-6அப் 7:26-28அப் 7:35 பார்வோன் அந்தக் காரியத்தைக் கேள்விப்பட்டபோது, மோசேயைக் கொலைசெய்ய முயற்சித்தான். மோசே பார்வோனிடத்திலிருந்து தப்பியோடி, மீதியான் தேசத்தில் போய்த் தங்கி, ஒரு கிணற்றின் அருகில் உட்கார்ந்திருந்தான். அப் 7:29எபி 11:27ஆதி 24:11ஆதி 29:21 இராஜா 19:1-31 இராஜா 19:13-14யோவா 4:6மத் 10:23 மீதியான் தேசத்து ஆசாரியனுக்கு ஏழு மகள்கள் இருந்தார்கள்; அவர்கள் தங்கள் தகப்பனுடைய ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டும்படி அங்கே வந்து, தண்ணீர் எடுத்து, தொட்டிகளை நிரப்பினார்கள். யாத் 3:1ஆதி 24:111 சாமு 9:11ஆதி 24:14-20ஆதி 29:6-10ஆதி 41:45ஆதி 14:18 அப்பொழுது மேய்ப்பர்கள் வந்து, அவர்களைத் துரத்தினார்கள்; மோசே எழுந்து, அவர்களுக்குத் துணை நின்று, அவர்களுடைய ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டினான். ஆதி 29:10ஆதி 21:25யாத் 2:12ஆதி 26:15-22 அவர்கள் தங்களுடைய தகப்பனாகிய ரெகுவேலிடம் வந்தபோது, அவன்: “நீங்கள் இன்று இத்தனை சீக்கிரமாக வந்தது ஏன்” என்று கேட்டான். யாத் 3:1யாத் 4:18எண் 10:29யாத் 18:1-12எண் 19:20 அதற்கு அவர்கள்: “எகிப்தியன் ஒருவன் மேய்ப்பர்களின் கைகளுக்கு எங்களைத் தப்புவித்து, எங்களுக்குத் தண்ணீர் எடுத்துக் கொடுத்து, ஆடுகளுக்கும் தண்ணீர் காட்டினான்” என்றார்கள். ஆதி 29:10ஆதி 50:11 அப்பொழுது அவன் தன்னுடைய மகள்களைப் பார்த்து, “அவன் எங்கே? அந்த மனிதனை நீங்கள் விட்டுவந்தது ஏன்? சாப்பிடும்படி அவனை அழைத்துக்கொண்டு வாருங்கள்” என்றான். ஆதி 31:54ஆதி 43:251 தீமோ 5:10ஆதி 18:5ஆதி 19:2-3ஆதி 24:31-33எபி 13:2யோபு 31:32 மோசே அந்த மனிதனிடம் தங்கியிருக்கச் சம்மதித்தான். அவன் சிப்போராள் என்னும் தன்னுடைய மகளை மோசேக்குக் கொடுத்தான். ஆதி 31:38-40எபி 13:51 தீமோ 6:6யாத் 18:2-6யாத் 2:10யாத் 4:20-25எபி 11:25யாக் 1:10 அவள் ஒரு மகனைப் பெற்றாள். “நான் அந்நிய தேசத்தில் பரதேசியாக இருக்கிறேன்” என்று சொல்லி, அவனுக்கு கெர்சோம் என்று பெயரிட்டான். அப் 7:29எபி 11:13-14யாத் 22:211 நாளாக 16:201 நாளாக 29:15சங் 119:19சங் 39:121 நாளாக 23:14-17

சிலகாலம் சென்றபின்பு, எகிப்தின் ராஜா இறந்தான். இஸ்ரவேலர்கள் அடிமைத்தனத்தினால் தவித்து, முறையிட்டுக்கொண்டிருந்தார்கள்; அவர்கள் அடிமைத்தனத்திலிருந்து முறையிடும் சத்தம் தேவசந்நிதியில் எட்டினது. ஆதி 18:20-21யாக் 5:4யாத் 3:7-9அப் 7:30உபா 26:6-7யாத் 22:22-27ஆதி 16:11ஏசா 19:20 தேவன் அவர்கள் பெருமூச்சைக்கேட்டு, தாம் ஆபிரகாமோடும், ஈசாக்கோடும் யாக்கோபோடும் செய்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்தார். ஆதி 26:3சங் 105:42யாத் 6:5ஆதி 15:14-18லூக் 1:72-73சங் 22:24ஆதி 26:24சங் 106:45 தேவன் இஸ்ரவேலர்களைப் பார்த்தார்; தேவன் அவர்களை நினைத்தருளினார். யாத் 4:31சங் 55:22யாத் 3:7-8லூக் 1:25சங் 1:62 சாமு 16:12மத் 7:231 சாமு 1:11