யாத்திராகமம் 11

Exodus 11
அத்தியாயம் 11

10 வது-தலைப்பிள்ளைகளின் மரண வாதை

அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “இன்னும் ஒரு வாதையைப் பார்வோன்மேலும் எகிப்தின்மேலும் வரச்செய்வேன்; அதற்குப்பின்பு அவன் உங்களை இந்த இடத்திலிருந்து போகவிடுவான்; முழுவதுமாக உங்களைப் போகவிடுவதும் மட்டுமின்றி, உங்களை இந்த இடத்திலிருந்து துரத்தியும் விடுவான். ஆதி 15:14லேவி 26:21யாத் 3:20யாத் 9:14உபா 4:34யாத் 12:31-39வெளி 16:91 சாமு 6:4 இப்பொழுது ஒவ்வொருவனும் அவனவன் அயலானிடத்திலும், ஒவ்வொருத்தியும் அவளவள் அயலாளிடத்திலும் வெள்ளியுடைமைகளையும் பொன்னுடைமைகளையும் கேட்கும்படி மக்களுக்குச் சொல்” என்றார். யாத் 3:22யாத் 12:35-36ஆகா 2:8மத் 20:15நீதி 13:22சங் 105:37சங் 24:1யாத் 12:1-2 அப்படியே யெகோவா மக்களுக்கு எகிப்தியர்களின் கண்களில் தயவுகிடைக்கும்படிச் செய்தார். மோசே என்பவன் எகிப்து தேசத்தில் பார்வோனுடைய ஊழியக்காரர்களின் பார்வைக்கும் மக்களின் பார்வைக்கும் மிகவும் பெரியவனாக இருந்தான். யாத் 12:36யாத் 3:21ஆதி 39:21ஏசா 60:14சங் 106:46வெளி 3:92 சாமு 7:9அப் 7:22

அப்பொழுது மோசே: “யெகோவா உரைக்கிறதாவது, நடு இரவிலே நான் எகிப்திற்குள்ளே புறப்பட்டுப்போவேன். யாத் 12:29ஆமோ 4:10யாத் 12:12யோபு 34:20சங் 60:102 சாமு 5:24ஆமோ 5:17யாத் 12:23 அப்பொழுது சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கும் பார்வோனுடைய தலைப்பிள்ளைமுதல் எந்திரம் அரைக்கும் அடிமைப்பெண்ணுடைய தலைப்பிள்ளைவரைக்கும், எகிப்து தேசத்திலிருக்கிற முதற்பேறனைத்தும் மிருகஜீவன்களின் தலையீற்றனைத்தும் சாகும் என்று சொன்னதுமன்றி, சங் 78:51யாத் 12:12யாத் 12:29யாத் 13:15யாத் 4:23மத் 24:41சங் 105:36சங் 135:8 அதினால் எகிப்து தேசம் எங்கும் முன்னும் பின்னும் ஒருபோதும் உண்டாகாத பெரிய கூக்குரல் உண்டாகும். யாத் 12:30ஆமோ 5:17யாத் 3:7ஏசா 15:4-5ஏசா 15:8எரே 31:15புலம் 3:8லூக் 13:28 ஆனாலும் யெகோவா எகிப்தியர்களுக்கும் இஸ்ரவேலர்களுக்கும் செய்கிற வித்தியாசத்தை நீங்கள் அறியும்படி, இஸ்ரவேல் மக்கள் அனைவருக்குள்ளும் மனிதர்கள்முதல் மிருகஜீவன்கள் வரைக்கும் ஒரு நாய் கூட தன்னுடைய நாவை அசைப்பதில்லை. யோசு 10:21யாத் 8:22யாத் 10:23மல்கி 3:18யாத் 9:4யோபு 5:161 கொரி 4:7யாத் 7:22 அப்பொழுது உம்முடைய வேலைக்காரர்களாகிய இவர்கள் எல்லோரும் என்னிடம் வந்து, பணிந்து. நீயும் உன்னைப் பின்பற்றுகிறவர்கள் எல்லோரும் புறப்பட்டுப்போங்கள் என்று சொல்லுவார்கள்; அதின்பின்பு புறப்படுவேன்” என்று சொல்லி, கடுங்கோபத்தோடு பார்வோனை விட்டுப் புறப்பட்டான். யாத் 12:31-33தானி 3:19எசேக் 3:141 இராஜா 20:102இராஜா 3:9உபா 29:24உபா 32:24ஏசா 49:23

யெகோவா மோசேயை நோக்கி: “எகிப்து தேசத்தில் என்னுடைய அற்புதங்கள் அநேகமாகும்படி, பார்வோன் உங்களுக்குச் செவிகொடுக்கமாட்டான்” என்று சொல்லியிருந்தார். யாத் 7:3-4யாத் 10:1யாத் 3:19ரோம 9:16-18 மோசேயும் ஆரோனும் இந்த அற்புதங்களையெல்லாம் பார்வோனுக்கு முன்பாகச் செய்தார்கள். யெகோவா பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தியதால், அவன் இஸ்ரவேல் மக்களைத் தன்னுடைய தேசத்திலிருந்து போகவிடவில்லை. யாத் 4:21யாத் 10:20யாத் 10:271 சாமு 6:6உபா 2:30யாத் 7:13-14யோபு 9:4ரோம 2:4-5