2 சாமுவேல் 16

2 Samuel 16
அத்தியாயம் 16

தாவீதும் சீபாவும்

தாவீது மலை உச்சியிலிருந்து சற்றுதூரம் நடந்துபோனபோது, இதோ, மேவிபோசேத்தின் வேலைக்காரனான சீபா, பொதிகளைச் சுமக்கிற இரண்டு கழுதைகளை ஓட்டிக்கொண்டுவந்து, அவனை சந்தித்தான்; அவைகளில் இருநூறு அப்பங்களும், உலர்ந்த நூறு திராட்சைப்பழக் குலைகளும், வசந்தகாலத்து கனிகளான நூறு அத்திக் குலைகளும், ஒரு தோல்பை திராட்சைரசமும் இருந்தது. 1 சாமு 25:182 சாமு 15:321 நாளாக 12:401 சாமு 10:31 சாமு 16:201 சாமு 17:17-182 சாமு 15:302 சாமு 17:27-29 ராஜா சீபாவைப்பார்த்து: இவைகள் எதற்கு என்று கேட்டதற்கு, சீபா: கழுதைகள் ராஜாவின் குடும்பத்தார்கள் ஏறுகிறதற்கும், அப்பங்களும் பழங்களும், வாலிபர்கள் சாப்பிடுவதற்கும், திராட்சைரசம் வனாந்திரத்தில் களைத்துப்போனவர்கள் குடிக்கிறதற்குமே என்றான். 2 சாமு 17:29நியாயாதி 10:4நியாயாதி 5:101 சாமு 14:281 சாமு 25:272 சாமு 15:12 சாமு 15:232 சாமு 19:26 அப்பொழுது ராஜா: உன் ஆண்டவனுடைய மகன் எங்கே என்று கேட்டதற்கு, சீபா ராஜாவை நோக்கி: எருசலேமில் இருக்கிறான்; இன்று இஸ்ரவேல் குடும்பத்தார்கள் என் தகப்பனுடைய ராஜ்ஜியத்தை என் பக்கமாகத் திரும்பச்செய்வார்கள் என்றான் என்று சொன்னான். 2 சாமு 9:9-101 தீமோ 6:9-102 சாமு 19:24-30யாத் 20:16யூதா 1:11மீகா 7:5நீதி 1:19நீதி 21:28 அப்பொழுது ராஜா சீபாவை நோக்கி: மேவிபோசேத்திற்கு உரியதையெல்லாம் உனக்கு தருகிறேன் என்றான். அதற்குச் சீபா: ராஜாவான என்னுடைய ஆண்டவனே, உம்முடைய கண்களில் எனக்குத் தயவு கிடைக்கவேண்டும் என்று நான் பணிந்து கேட்டுக்கொள்ளுகிறேன் என்றான். நீதி 18:13நீதி 18:17உபா 19:15யாத் 23:8நீதி 19:22 சாமு 14:10-112 சாமு 14:222 சாமு 14:4

சீமேயி தாவீதை சபித்தல்

தாவீது ராஜா பகூரிம்வரை வந்தபோது, இதோ, சவுல் வீட்டு வம்சத்தானாக இருக்கிற கேராவின் மகனான சீமேயி என்னும் பெயருள்ள ஒரு மனிதன் அங்கேயிருந்து புறப்பட்டு, சபித்துக்கொண்டே நடந்துவந்து, 2 சாமு 3:161 இராஜா 2:8-91 சாமு 17:43யாத் 22:281 இராஜா 2:36-462 சாமு 17:182 சாமு 19:16-23பிரச 10:20 எல்லா மக்களும், எல்லா பலசாலிகளும், தாவீதின் வலதுபுறமாகவும் இடதுபுறமாகவும் நடக்கும்போது, தாவீதின்மேலும், தாவீது ராஜாவுடைய எல்லா அதிகாரிகளின் மேலும் கற்களை எறிந்தான். சீமேயி அவனை சபித்து: இரத்தப்பிரியனே, பாவியான மனிதனே, தொலைந்துபோ, தொலைந்துபோ. 1 இராஜா 21:101 இராஜா 21:131 சாமு 2:121 சாமு 25:172 சாமு 11:15-172 சாமு 12:92 சாமு 3:37உபா 13:13 சவுலின் இடத்தில் ராஜாவான உன்மேல் யெகோவா சவுல் குடும்பத்தார்களின் இரத்தப்பழியைத் திரும்பச் செய்வார்; யெகோவா ராஜ்ஜியபாரத்தை உன்னுடைய மகனான அப்சலோமின் கையில் ஒப்புக்கொடுத்தார்; இப்போதும் இதோ, உன்னுடைய அக்கிரமத்தில் சிக்கிக்கொண்டாய்; நீ இரத்தப்பிரியனான மனிதன் என்றான். 2 சாமு 1:161 இராஜா 2:32-332 சாமு 3:28-29நியாயாதி 9:24நியாயாதி 9:56-572 சாமு 21:92 சாமு 4:8-12அப் 28:4-5 அப்பொழுது செருயாவின் மகன் அபிசாய் ராஜாவை நோக்கி: அந்தச் செத்த நாய் ராஜாவான என்னுடைய ஆண்டவனை ஏன் சபிக்கவேண்டும்? நான் போய் அவனுடைய தலையை வெட்டிப்போடட்டும் என்றான். யாத் 22:282 சாமு 9:81 சாமு 24:142 சாமு 3:81 பேது 2:171 சாமு 26:6-112 சாமு 3:30அப் 23:5 அதற்கு ராஜா: செருயாவின் மகன்களே, எனக்கும் உங்களுக்கும் என்ன? அவன் என்னை சபிக்கட்டும்; தாவீதை சபிக்கவேண்டும் என்று யெகோவா அவனுக்குச் சொன்னார்; ஆகையால் ஏன் இப்படிச் செய்கிறாய் என்று கேட்பவன் யார் என்றான். 2 சாமு 19:22ரோம 9:20யோவா 18:111 பேது 2:232 சாமு 3:39தானி 4:35ஆதி 50:20மத் 16:23 பின்னும் தாவீது அபிசாயையும் தன்னுடைய வேலைக்காரர்கள் எல்லோரையும் பார்த்து: இதோ, என்னுடைய கர்ப்பத்தின் பிறப்பான என்னுடைய மகனே என்னுடைய உயிரை எடுக்கத் தேடும்போது, இந்தப் பென்யமீனன் எத்தனை அதிகமாகச் செய்வான், அவன் சபிக்கட்டும்; அப்படிச் செய்ய யெகோவா அவனுக்குக் கட்டளையிட்டிருக்கிறார். 2 நாளாக 32:212இராஜா 19:372 சாமு 12:11-12எசேக் 14:9எசேக் 20:25ஆதி 15:4ஆதி 45:5ஏசா 10:5-7 ஒருவேளை யெகோவா என்னுடைய சிறுமையைப் பார்த்து, இந்த நாளில் அவன் சபித்த சாபத்திற்குப் பதிலாக எனக்கு நன்மை செய்வார் என்றான். உபா 23:5எபி 12:10யாத் 2:24-25மத் 5:11-12சங் 25:18ரோம 8:281 சாமு 1:112 தெச 1:7 அப்படியே தாவீதும் அவனுடைய மனிதர்களும் வழியிலே நடந்துபோனார்கள்; சீமேயியும் மலையின் பக்கத்திலே அவனுக்கு எதிராக நடந்து சபித்து, அவனுக்கு எதிராகக் கற்களை எறிந்து, மண்ணைத் தூற்றிக்கொண்டே வந்தான். அப் 23:232 சாமு 16:5-6 ராஜாவும் அவனோடு இருந்த எல்லா மக்களும் களைத்தவர்களாக, தங்குமிடத்திலே சேர்ந்து, இளைப்பாறினார்கள்.

அகித்தோப்பேல் மற்றும் ஊசாயின் ஆலோசனை

அப்சலோமும் இஸ்ரவேல் மனிதர்களான எல்லா மக்களும் அவனோடு அகித்தோப்பேலும் எருசலேமிற்கு வந்தார்கள். 2 சாமு 15:372 சாமு 15:12 அற்கியனான ஊசாய் என்னும் தாவீதின் நண்பன் அப்சலோமிடத்தில் வந்தபோது, ஊசாய் அப்சலோமை நோக்கி: ராஜாவே வாழ்க, ராஜாவே வாழ்க என்றான். 1 சாமு 10:242இராஜா 11:121 இராஜா 1:251 இராஜா 1:342 சாமு 15:37தானி 2:4தானி 5:10தானி 6:21 அப்பொழுது அப்சலோம் ஊசாயைப் பார்த்து: உன்னுடைய நண்பன்மேல் உனக்கு இருக்கிற தயவு இதுதானோ? உன்னுடைய நண்பனோடு நீ போகாமல்போனது என்ன என்று கேட்டான். 2 சாமு 19:252 சாமு 15:32-37உபா 32:6நீதி 17:17நீதி 18:24 அதற்கு ஊசாய் அப்சலோமை நோக்கி: அப்படி அல்ல, யெகோவாவும் இந்த மக்களும் இஸ்ரவேல் மனிதர்கள் அனைவரும் தெரிந்துகொள்ளுகிறவரோடு நான் சேர்ந்து அவரோடு இருப்பேன். 1 சாமு 16:132 சாமு 5:1-3 இதுவும் அல்லாமல், நான் யாருக்கு பணிவிடை செய்வேன்? அவருடைய மகனிடம் தானே? உம்முடைய தகப்பனிடம் எப்படி பணிவிடை செய்தோனோ, அப்படியே உம்மிடமும் பணிவிடை செய்வேன் என்றான். 2 சாமு 15:34சங் 55:211 சாமு 28:21 சாமு 29:8கலா 2:13 அப்சலோம் அகித்தோப்பேலைப் பார்த்து, நாங்கள் செய்யவேண்டியது என்னவென்று ஆலோசனை சொல்லும் என்றான். அப் 4:23-28யாத் 1:10ஏசா 29:15ஏசா 8:10மத் 27:1நீதி 21:30சங் 2:2சங் 37:12-13 அப்பொழுது அகித்தோப்பேல் அப்சலோமை நோக்கி: வீட்டைக்காக்க உம்முடைய தகப்பன் வைத்துப்போன அவருடைய மறுமனையாட்டிகளிடம் உறவுகொள்ளும், அப்பொழுது உம்முடைய தகப்பனால் வெறுக்கப்பட்டீர் என்பதை இஸ்ரவேலர்கள் எல்லோரும் கேள்விப்பட்டு, உம்மோடிருக்கிற எல்லோருடைய கைகளும் பெலனடையும் என்றான். 2 சாமு 20:32 சாமு 15:162 சாமு 2:7லேவி 18:8சகரி 8:131 கொரி 5:11 இராஜா 2:171 இராஜா 2:22 அப்படியே அப்சலோமுக்கு மாடியின்மேல் ஒரு கூடாரத்தைப் போட்டார்கள்; அங்கே அப்சலோம் எல்லா இஸ்ரவேலர்களின் கண்களுக்கும் முன்பாக, தன் தகப்பனுடைய மறுமனையாட்டிகளிடத்தில் உறவுகொண்டான். 2 சாமு 12:11-122 சாமு 15:162 சாமு 20:32 சாமு 11:2எசேக் 24:7ஏசா 3:9எரே 3:3எரே 8:12 அந்த நாட்களில் அகித்தோப்பேல் சொல்லும் ஆலோசனை தேவனுடைய வாக்கைப்போல இருந்தது; அப்படி அகித்தோப்பேலின் ஆலோசனையெல்லாம் தாவீதுக்கும் இருந்தது, அப்சலோமுக்கும் அப்படியே இருந்தது. 2 சாமு 15:122 சாமு 17:142 சாமு 17:231 கொரி 3:19-201 பேது 4:111 சாமு 30:8பிரச 10:1எரே 4:22