1 நாளாகமம் 10

1 Chronicles 10
அத்தியாயம் 10

சவுலின் மரணம்

பெலிஸ்தர்கள் இஸ்ரவேலர்களோடு யுத்தம் செய்தார்கள்; இஸ்ரவேல் பெலிஸ்தர்களுக்கு முன்பாக பயந்தோடி, கில்போவா மலையிலே வெட்டப்பட்டு விழுந்தார்கள். 1 நாளாக 10:81 சாமு 31:1-131 சாமு 28:42 சாமு 1:212 சாமு 1:61 சாமு 28:11 சாமு 29:1-22 சாமு 21:12 பெலிஸ்தர்கள் சவுலையும் அவனுடைய மகன்களையும் நெருங்கித் தொடர்ந்து, சவுலின் மகன்களாகிய யோனத்தானையும் அபினதாபையும் மல்கிசூவாவையும் வெட்டிப்போட்டார்கள். 1 நாளாக 9:39ஏசா 57:1-21 நாளாக 8:331 சாமு 14:39-401 சாமு 14:491 சாமு 14:62இராஜா 23:292இராஜா 25:7 சவுலுக்கு விரோதமாக போர் பலத்தது; வில்வீரர்கள் அவனைக்கண்டு நெருங்கினார்கள்; அப்பொழுது சவுல் வில்வீரர்களுக்கு மிகவும் பயந்து, 1 சாமு 31:3-62 சாமு 1:4-10ஆமோ 2:14ஆதி 49:23-24 தன்னுடைய ஆயுததாரியை நோக்கி: அந்த விருத்தசேதனம் இல்லாதவர்கள் வந்து என்னை அவமானப்படுத்தாதபடி, நீ உன்னுடைய பட்டயத்தை உருவி, என்னைக் குத்திப்போடு என்றான்; அவனுடைய ஆயுததாரி மிகவும் பயப்பட்டதால் அப்படி செய்யமாட்டேன் என்றான். அப்பொழுது சவுல் பட்டயத்தை ஊன்றி அதின்மேல் விழுந்தான். 1 சாமு 31:4அப் 1:181 நாளாக 10:51 இராஜா 16:181 சாமு 14:61 சாமு 17:261 சாமு 17:362 சாமு 1:14-16 சவுல் செத்துப்போனதை அவனுடைய ஆயுததாரி கண்டபோது, அவனும் பட்டயத்தின்மேல் விழுந்து செத்துப்போனான். அப்படியே சவுலும், அவனுடைய மூன்று மகன்களும், அவனுடைய வீட்டு மனிதர்கள் அனைவரும் ஒன்றாக இறந்துபோனார்கள். 1 சாமு 12:25பிரச 9:1-2ஓசி 13:10-111 சாமு 4:10-111 சாமு 4:18 மக்கள் பயந்தோடியதையும், சவுலும் அவனுடைய மகன்களும் இறந்துபோனதையும், பள்ளத்தாக்கிலுள்ள இஸ்ரவேலர்கள் எல்லோரும் கண்டபோது தங்களுடைய பட்டணங்களைவிட்டு ஓடிப்போனார்கள்; அப்பொழுது பெலிஸ்தர்கள் வந்து, அவைகளில் குடியிருந்தார்கள். 1 சாமு 13:61 சாமு 31:7உபா 28:33உபா 28:43நியாயாதி 6:2லேவி 26:31லேவி 26:36

வெட்டப்பட்டவர்களின் ஆடைகளை எடுத்துக்கொள்ளப் பெலிஸ்தர்கள் மறுநாளில் வந்தபோது, அவர்கள் சவுலையும் அவனுடைய மகன்களையும் கில்போவா மலையிலே விழுந்துகிடக்கக்கண்டு, 1 சாமு 31:82 நாளாக 20:252இராஜா 3:23 அவனுடைய ஆடைகளையும், அவனுடைய தலையையும், அவனுடைய ஆயுதங்களையும் எடுத்துக்கொண்டு, தங்களுடைய விக்கிரகங்களுக்கும் மக்களுக்கும் அதை அறிவிக்கும்படி பெலிஸ்தர்களுடைய தேசத்தைச்சுற்றிலும் செய்தி அனுப்பி, 1 சாமு 31:9-102 சாமு 1:201 நாளாக 10:4தானி 5:2-4தானி 5:23நியாயாதி 16:23-24மத் 14:11 அவனுடைய ஆயுதங்களைத் தங்களுடைய தெய்வங்களின் கோவிலிலே வைத்து, அவனுடைய தலையைத் தாகோன் கோவிலிலே தூக்கிவைத்தார்கள். 1 சாமு 31:101 சாமு 5:2-7 பெலிஸ்தர்கள் சவுலுக்கு செய்த எல்லாவற்றையும் கீலேயாத்தேசத்து யாபேஸ் பட்டணத்தார்கள் எல்லோரும் கேட்டபோது, 2 சாமு 2:4-71 சாமு 11:1-111 சாமு 31:11-13 பெலசாலிகள் எல்லோரும் எழுந்துபோய், சவுலின் உடலையும், அவனுடைய மகன்களின் உடல்களையும் எடுத்து, யாபேசுக்குக் கொண்டுவந்து, அவர்களுடைய எலும்புகளை யாபேசிலிருக்கிற ஒரு கர்வாலி மரத்தின்கீழ் அடக்கம்செய்து, ஏழுநாட்கள் உபவாசம் இருந்தார்கள். 2 சாமு 21:12-142 சாமு 3:35ஆதி 35:8ஆதி 50:10 அப்படியே சவுல் யெகோவாவுடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமல், யெகோவாவுக்குச் செய்த தன்னுடைய துரோகத்தினாலும், அவன் யெகோவாவை தேடாமல் குறி சொல்லுகிறவர்களைக் கேட்கும்படி தேடியதாலும் செத்துப்போனான். லேவி 20:6லேவி 19:311 சாமு 15:23ஏசா 8:191 சாமு 28:7-20உபா 18:10-141 சாமு 15:2யாத் 22:18 அதற்காக அவர் அவனைக் கொன்று, ராஜ்ஜியபாரத்தை ஈசாயின் மகனாகிய தாவீதிடம் ஒப்படைத்தார். 1 சாமு 15:281 சாமு 13:141 சாமு 16:11 சாமு 28:171 நாளாக 12:231 சாமு 28:62 சாமு 3:9-10நியாயாதி 10:11-16