யோவான் 8

John 8
அத்தியாயம் 8

இயேசு ஒலிவமலைக்குப் போனார். மத் 21:1மாற் 11:1லூக் 19:37மாற் 13:3 மறுநாள் காலையில் அவர் திரும்பி தேவாலயத்திற்கு வந்தபோது, மக்கள் எல்லோரும் அவரிடத்தில் வந்தார்கள். அவர் உட்கார்ந்து அவர்களுக்கு உபதேசம் செய்தார். மத் 26:55லூக் 21:37லூக் 4:20லூக் 5:3மத் 5:1-2பிரச 9:10எரே 25:3எரே 44:4 அப்பொழுது விபசாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பெண்ணை வேதபண்டிதர்களும், பரிசேயர்களும் அவரிடத்தில் அழைத்துவந்து, அவளை நடுவே நிறுத்தி: போதகரே, இந்த பெண் விபசாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிக்கப்பட்டாள். இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டும் என்று மோசே நியாயப்பிரமாணத்தில் நமக்குக் கட்டளைக் கொடுத்திருக்கிறாரே, நீர் என்ன சொல்லுகிறீர் என்றார்கள். லேவி 20:10உபா 22:21-24எசேக் 16:38-40மத் 5:17மத் 19:6-8மத் 22:16-18எசேக் 23:47 அவர்மேல் குற்றஞ்சுமத்துவதற்கான காரணம் உண்டாக்குவதற்கு, அவரைச் சோதிக்கும்படி இப்படிச் சொன்னார்கள் இயேசுவோ குனிந்து, விரலினால் தரையிலே எழுதினார். எரே 17:13லூக் 10:25பிரச 3:7சங் 38:12-14ஆமோ 5:10மத் 19:31 கொரி 10:9ஆமோ 5:13 அவர்கள் தொடர்ந்து அவரைக் கேட்டுக்கொண்டிருக்கும்போது, அவர் நிமிர்ந்துபார்த்து: உங்களில் பாவமில்லாதவன் இவள்மீது முதலாவது கல்லெறியட்டும் என்று சொல்லி, மத் 7:1-5ரோம 2:21-25ரோம 2:1-3உபா 17:6-7மத் 23:25-28கொலோ 4:6எபி 4:12-13சங் 50:16-20 அவர் மறுபடியும் குனிந்து, தரையிலே எழுதினார். அவர்கள் அதைக்கேட்டு, தங்களுடைய மனச்சாட்சியில் உணர்த்தப்பட்டு, பெரியோர் முதல் சிறியோர் வரைக்கும் ஒவ்வொருவராக போய்விட்டார்கள். இயேசு தனித்திருந்தார், அந்த பெண் நடுவே நின்றாள். பிரச 7:22ரோம 2:151 யோவா 3:20ஆதி 42:21-22ரோம 2:22யோவா 8:10யோபு 5:12-13சங் 71:13 இயேசு நிமிர்ந்து அந்த பெண்ணைத்தவிர வேறொருவரையும் காணாமல்: பெண்ணே, உன்மேல் குற்றஞ்சுமத்தினவர்கள் எங்கே? ஒருவன்கூட உன்னைத் தண்டனைக்குள்ளாகத் தீர்க்கவில்லையா என்றார். ஏசா 41:11-12 அதற்கு அவள்: இல்லை, ஆண்டவரே, என்றாள். இயேசு அவளைப் பார்த்து: நானும் உன்னைத் தண்டனைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனிப் பாவம் செய்யாதே என்றார். யோவா 3:17யோவா 5:14ஏசா 1:16-18யோவா 8:15லூக் 15:7லூக் 5:32யோபு 34:31நீதி 28:13

உலகத்தின் ஒளி

மறுபடியும் இயேசு மக்களைப் பார்த்து: நான் உலகத்திற்கு ஒளியாக இருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடக்காமல் ஜீவ ஒளியை அடைந்திருப்பான் என்றார். யோவா 12:46யோவா 9:5யோவா 12:35மத் 5:14யோபு 33:28யோவா 1:4-9சங் 18:28யோவா 3:19 அப்பொழுது பரிசேயர்கள் அவரைப் பார்த்து: உன்னைக்குறித்து நீயே சாட்சி கொடுக்கிறாய்; உன்னுடைய சாட்சி உண்மையானதல்ல என்றார்கள். யோவா 5:31-47 இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: என்னைக்குறித்து நானே சாட்சி கொடுத்தாலும், என் சாட்சி உண்மையாக இருக்கிறது; ஏனென்றால், நான் எங்கே இருந்து வந்தேன் என்றும், எங்கே போகிறேன் என்றும் அறிந்திருக்கிறேன்; நீங்களோ நான் எங்கே இருந்து வருகிறேன் என்றும், எங்கே போகிறேன் என்றும் உங்களுக்குத் தெரியாது. யோவா 13:3யோவா 16:28யோவா 14:10யோவா 8:42யோவா 17:8எண் 12:3வெளி 3:142 கொரி 11:31 நீங்கள் மனித வழக்கத்திற்கு ஏற்றபடி நியாயந்தீர்க்கிறீர்கள், நான் ஒருவனையும் நியாயந்தீர்க்கிறதில்லை; 1 சாமு 16:7யோவா 12:47யோவா 3:17யோவா 7:24யோவா 18:36ரோம 2:11 கொரி 2:151 கொரி 4:3-5 நான் நியாயந்தீர்த்தால், என் தீர்ப்பு சத்தியத்தின்படி இருக்கும்; ஏனென்றால், நான் தனித்திருக்கவில்லை, நானும் என்னை அனுப்பின பிதாவுமாக இருக்கிறோம். யோவா 8:29அப் 17:311 சாமு 16:7ஏசா 32:1-2யோவா 16:32யோவா 5:22-30ஏசா 11:2-5எரே 23:5-6 இரண்டு பேருடைய சாட்சி உண்மை என்று உங்களுடைய நியாயப்பிரமாணத்திலும் எழுதி இருக்கிறதே. உபா 19:15உபா 17:6எபி 10:28மத் 18:16கலா 3:242 கொரி 13:1கலா 4:21வெளி 11:3 நான் என்னைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறவனாக இருக்கிறேன், என்னை அனுப்பின பிதாவும் என்னைக்குறித்துச் சாட்சிக் கொடுக்கிறார் என்றார். யோவா 8:38யோவா 8:58வெளி 1:17-181 யோவா 5:6-12எபி 2:4யோவா 10:11யோவா 10:14யோவா 10:9 அப்பொழுது அவர்கள்: உம்முடைய பிதா எங்கே என்றார்கள். இயேசு மறுமொழியாக: என்னையும் அறியீர்கள். என் பிதாவையும் அறியீர்கள்; நீங்கள் என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிவீர்கள் என்றார். யோவா 16:3யோவா 8:54-55யோவா 14:6-92 கொரி 4:4-61 கொரி 15:34யோவா 1:10யோவா 7:28மத் 11:25 தேவாலயத்திலே இயேசு உபதேசம் செய்கிறபோது, காணிக்கைப்பெட்டி இருக்கும் இடத்தில் இந்த வசனங்களைச் சொன்னார். அவருடைய வேளை இன்னும் வராதபடியினால் ஒருவனும் அவரைப் பிடிக்கவில்லை. யோவா 7:30யோவா 7:8மாற் 12:41யோவா 7:44மத் 27:6மாற் 12:431 நாளாக 9:26யோவா 10:39 இயேசு மறுபடியும் அவர்களைப் பார்த்து: நான் போகிறேன், நீங்கள் என்னைத் தேடி உங்களுடைய பாவங்களிலே மரித்துப்போவீர்கள்; நான் போகிற இடத்திற்கு உங்களால் வர முடியாது என்றார். யோவா 7:34யோவா 8:241 கொரி 15:17-18எசேக் 3:18-19யோவா 13:331 இராஜா 18:102இராஜா 2:16-17ஏசா 65:20 அப்பொழுது யூதர்கள்: நான் போகிற இடத்திற்கு உங்களால் வர முடியாது என்கிறானே, தன்னைத்தானே கொலைசெய்து கொள்ளுவானோ என்று பேசிக்கொண்டார்கள். யோவா 8:52சங் 22:6எபி 12:3யோவா 8:48சங் 31:18எபி 13:13யோவா 10:20யோவா 7:20 அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் கீழேயிருந்து உண்டானவர்கள், நான் மேலேயிருந்து உண்டானவன்; நீங்கள் இந்த உலகத்திலிருந்து உண்டானவர்கள், நான் இந்த உலகத்திலிருந்து உண்டானவன் இல்லை. யோவா 3:311 யோவா 2:15-16யோவா 17:14யோவா 17:161 யோவா 4:5-6சங் 17:41 யோவா 5:19-20யாக் 4:4 ஆகவே, நீங்கள் உங்களுடைய பாவங்களில் மரித்துப்போவீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன்; நானே அவர் என்று நீங்கள் விசுவாசிக்காவிட்டால் உங்களுடைய பாவங்களிலே மரித்துப்போவீர்கள் என்றார். யோவா 3:36மாற் 16:16யோவா 3:18எபி 10:26-29எபி 12:25நீதி 8:36எபி 2:3யோவா 13:19 அதற்கு அவர்கள்: நீர் யார் என்றார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: நான் ஆரம்ப முதலாக உங்களுக்குச் சொல்லியிருக்கிறவர் தான். யோவா 5:17-29யோவா 1:22யோவா 8:12லூக் 22:67யோவா 10:24யோவா 19:9யோவா 1:19 உங்களைக்குறித்துப் பேசவும் நியாயந்தீர்க்கவும் எனக்கு அநேக காரியங்கள் இருக்கிறது; என்னை அனுப்பினவர் சத்தியமானவர்; நான் அவரிடத்தில் கேட்டவைகளை உலகத்திற்குச் சொல்லுகிறேன் என்றார். யோவா 15:15யோவா 12:47-50யோவா 8:40யோவா 17:8யோவா 7:282 கொரி 1:18எபி 5:11-12யோவா 16:12 பிதாவைக்குறித்துப் பேசினார் என்று அவர்கள் அறியாதிருந்தார்கள். ஏசா 6:9ஏசா 59:102 கொரி 4:3-4ஏசா 42:18-20யோவா 8:43யோவா 8:47ரோம 11:7-10 ஆதலால் இயேசு அவர்களைப் பார்த்து: நீங்கள் மனிதகுமாரனை உயர்த்தினபின்பு, நானே அவர் என்றும், நான் என் சொந்தமாக ஒன்றும் செய்யாமல், என் பிதா எனக்குப் போதித்தபடியே இவைகளைச் சொன்னேன் என்றும் அறிவீர்கள். யோவா 5:19யோவா 5:30யோவா 6:38யோவா 12:49-50யோவா 3:141 தெச 2:15-16யோவா 12:32-34அப் 2:41 என்னை அனுப்பினவர் என்னுடனே இருக்கிறார், பிதாவிற்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறதினால் அவர் என்னைத் தனியே இருக்கவிடவில்லை என்றார். யோவா 6:38யோவா 16:32யோவா 15:10யோவா 4:34யோவா 5:30ஏசா 42:1யோவா 8:16யோவா 14:10-11 இவைகளை அவர் சொன்னபோது, அநேகர் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள். யோவா 7:31யோவா 2:23யோவா 10:42யோவா 11:45யோவா 6:14

ஆபிரகாமின் பிள்ளைகள்

இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களைப் பார்த்து: நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் உண்மையாகவே என் சீடராக இருப்பீர்கள்; 2 யோவா 1:9யோவா 15:4-92 தீமோ 3:141 தீமோ 4:16யாக் 1:25கொலோ 1:231 சாமு 12:14யோவா 6:66-71 சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார். ரோம 8:2யோவா 8:36யோவா 17:171 பேது 2:16யோவா 14:6ரோம 6:22ரோம 6:14-18ஏசா 61:1 அவர்கள் அவருக்கு மறுமொழியாக: நாங்கள் ஆபிரகாமின் சந்ததியாக இருக்கிறோம், நாங்கள் ஒருபோதும் ஒருவனுக்கும் அடிமைகளாக இருக்கவில்லை; விடுதலையாவீர்கள் என்று நீர் எப்படிச் சொல்லுகிறீர் என்றார்கள். மத் 3:9யோவா 8:39நெகே 5:4-8ஆதி 15:13யோவா 8:37நெகே 9:27-28யாத் 1:13-14எஸ்றா 9:9 இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: பாவம் செய்கிறவன் எவனும் பாவத்திற்கு அடிமையாக இருக்கிறான் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ரோம 6:162 பேது 2:19நீதி 5:221 யோவா 3:8-10ரோம 6:12ரோம 6:6தீத் 3:3ரோம 6:19-20 அடிமையானவன் என்றைக்கும் வீட்டிலே நிலைத்திரான்; குமாரன் என்றைக்கும் நிலைத்திருக்கிறார். கலா 4:4-7லூக் 15:31ஆதி 21:10ரோம 8:15-17கலா 4:30-31எசேக் 46:17எபி 3:5-61 பேது 1:2-5 ஆகவே, குமாரன் உங்களை விடுதலை ஆக்கினால் உண்மையாகவே விடுதலை ஆவீர்கள். 2 கொரி 3:17கலா 5:1ரோம 8:2யோவா 8:31-32லூக் 4:18சகரி 9:11-12ஏசா 61:1ஏசா 49:24-25 நீங்கள் ஆபிரகாமின் சந்ததியார் என்று அறிவேன்; ஆனாலும் உங்களுக்குள்ளே என் உபதேசம் இடம் பெறாததினால், என்னைக் கொலைசெய்யத் தேடுகிறீர்கள். 1 கொரி 2:14யோவா 8:45-47ரோம 9:7யோவா 7:1யோவா 8:59அப் 13:26யோவா 8:43யோவா 11:53 நான் என் பிதாவினிடத்தில் பார்த்ததைச் சொல்லுகிறேன், நீங்களும் உங்களுடைய பிதாவினிடத்தில் பார்த்ததைச் செய்கிறீர்கள் என்றார். யோவா 5:19யோவா 8:44யோவா 12:49-50யோவா 5:30யோவா 8:411 யோவா 3:8-10யோவா 14:10யோவா 14:24 அதற்கு அவர்கள்: ஆபிரகாமே எங்களுடைய பிதா என்றார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: நீங்கள் ஆபிரகாமின் பிள்ளைகளாக இருந்தால் ஆபிரகாமின் செயல்களைச் செய்வீர்களே. கலா 3:7யோவா 8:37ரோம 9:7ரோம 2:28-29மத் 3:9மத் 5:45கலா 3:29யாக் 2:22-24 தேவனிடத்தில் கேட்டிருக்கிற சத்தியத்தை உங்களுக்குச் சொன்ன மனிதனாகிய என்னைக் கொல்லத் தேடுகிறீர்கள், ஆபிரகாம் இப்படிச் செய்யவில்லையே. யோவா 8:26கலா 4:29கலா 4:16சங் 37:32வெளி 12:12-131 யோவா 3:12-15யோவா 8:37-38யோவா 8:56 நீங்கள் உங்களுடைய பிதாவின் செயல்களைச் செய்கிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: நாங்கள் வேசித்தனத்தினால் பிறந்தவர்கள் இல்லை; ஒரே பிதா எங்களுக்கு இருக்கிறார், அவர் தேவன் என்றார்கள். ஏசா 64:8ஏசா 63:16யோவா 8:38யோவா 8:44மல்கி 2:11உபா 14:1உபா 32:6யாத் 4:22

பிசாசின் பிள்ளைகள்

இயேசு அவர்களைப் பார்த்து: தேவன் உங்களுடைய பிதாவாக இருந்தால் என்னிடத்தில் அன்பாக இருப்பீர்கள். ஏனென்றால், நான் தேவனிடத்தில் இருந்து வந்திருக்கிறேன்; நான் நானாக வரவில்லை, அவரே என்னை அனுப்பினார். யோவா 12:49யோவா 14:10யோவா 17:8யோவா 17:25யோவா 15:23-24மல்கி 1:6யோவா 1:141 யோவா 5:1-2 என் வசனத்தை நீங்கள் ஏன் அறியாமல் இருக்கிறீர்கள்? என் உபதேசத்தைக் கேட்க மனதில்லாமல் இருக்கிறதினால் அல்லவா? யோவா 12:39-40யோவா 5:43யோவா 7:17ரோம 8:7-8நீதி 28:5அப் 7:51எரே 6:10யோவா 6:60 நீங்கள் உங்களுடைய தகப்பனாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்களுடைய தகப்பனின் ஆசைகளின்படி செய்ய விருப்பமாக இருக்கிறீர்கள்; அவன் ஆரம்ப முதற்கொண்டு மனித கொலைபாதகனாக இருக்கிறான்; சத்தியம் அவனிடத்தில் இல்லாததினால் அவன் சத்தியத்திலே நிலை நிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் தகப்பனுமாக இருக்கிறதினால் அவன் பொய் பேசும்போது தன்னுடைய சுபாவத்தின்படி அப்படிப் பேசுகிறான். அப் 13:101 யோவா 3:121 யோவா 3:8-102 கொரி 11:3வெளி 12:9யோவா 8:38வெளி 20:7-10யோவா 8:41 நான் உங்களுக்குச் சத்தியத்தைச் சொல்லுகிறதினால் நீங்கள் என்னை விசுவாசிக்கிறதில்லை. 2 தீமோ 4:3-42 தெச 2:10கலா 4:16யோவா 18:37யோவா 3:19-20யோவா 7:7 என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தமுடியும்? நான் சத்தியத்தைச் சொல்லியிருந்தும், நீங்கள் ஏன் என்னை விசுவாசிக்கவில்லை. எபி 4:15யோவா 16:81 பேது 2:222 கொரி 5:21யோவா 15:10யோவா 8:7மத் 21:25எபி 7:26 தேவனால் உண்டானவன் தேவனுடைய வசனங்களுக்குச் செவிகொடுக்கிறான்; நீங்கள் தேவனால் உண்டாகாததினால் செவிகொடுக்காமல் இருக்கிறீர்கள் என்றார். 2 யோவா 1:9யோவா 10:26-27யோவா 18:371 யோவா 3:10யோவா 6:45-46யோவா 8:37யோவா 8:451 யோவா 4:1-6

இயேசு தன்னைக்குறித்துச் சொல்லுதல்

அப்பொழுது யூதர்கள் அவருக்கு மறுமொழியாக: உன்னைச் சமாரியன் என்றும், பிசாசு பிடித்தவன் என்றும் நாங்கள் சொல்லுகிறது சரிதானே என்றார்கள். யோவா 7:20யோவா 8:52யாக் 2:19யோவா 10:20யோவா 4:9மத் 10:25மத் 10:5மத் 12:24 அதற்கு இயேசு: நான் பிசாசு பிடித்தவன் இல்லை, நான் என் பிதாவை மதிக்கிறேன், நீங்கள் என்னை மதிக்காமலிருக்கிறீர்கள். 1 பேது 2:23பிலி 2:6-11ஏசா 49:3யோவா 11:4யோவா 12:28யோவா 13:31-32யோவா 14:13யோவா 17:4 நான் எனக்கு மகிமையைத் தேடுகிறதில்லை; அதைத் தேடி, நியாயந்தீர்க்கிறவர் ஒருவர் இருக்கிறார். யோவா 5:41யோவா 8:54யோவா 5:20-23யோவா 7:18யோவா 12:47-48யோவா 5:45 ஒருவன் என் வார்த்தையைக் கடைபிடித்தால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைப் பார்ப்பதில்லை என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். யோவா 11:25-26யோவா 5:24யோவா 3:15-16யோவா 15:20யோவா 6:50எபி 11:5லூக் 2:26யோவா 8:55 அப்பொழுது யூதர்கள் அவரைப் பார்த்து: நீ பிசாசு பிடித்தவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறோம்; ஆபிரகாமும் தீர்க்கதரிசிகளும் மரித்தார்கள். நீயோ: ஒருவன், என் வார்த்தையைக் கடைபிடித்தால் என்றென்றைக்கும் மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்கிறாய். எபி 2:9யோவா 8:48யோவா 8:51யோவா 9:24எபி 11:13சகரி 1:5-6 எங்களுடைய பிதாவாகிய ஆபிரகாமிலும் நீ பெரியவனோ? அவர் மரித்தார், தீர்க்கதரிசிகளும் மரித்தார்கள்; உன்னை நீ யார் என்று நினைக்கிறாய் என்றார்கள். யோவா 4:12எபி 7:1-7ஏசா 9:6ரோம 9:5எபி 3:2-3யோவா 10:29-30யோவா 10:33யோவா 12:34 இயேசு மறுமொழியாக: என்னை நானே மகிமைப்படுத்தினால் அந்த மகிமை வீணாயிருக்கும், என் பிதா என்னை மகிமைப்படுத்துகிறவர், அவரை உங்களுடைய தேவன் என்று நீங்கள் சொல்லுகிறீர்கள். யோவா 8:50நீதி 25:272 பேது 1:172 கொரி 10:18யோவா 16:14-15சங் 110:1-4அப் 3:13தானி 7:13-14 ஆனாலும் நீங்கள் அவரை அறியவில்லை, நான் அவரை அறிந்திருக்கிறேன்; அவரை அறியேன் என்று சொன்னால் உங்களைப்போல நானும் பொய்யனாக இருப்பேன்; அவரை நான் அறிந்து, அவருடைய வார்த்தையைக் கடைபிடிக்கிறேன். யோவா 8:19யோவா 7:28-29யோவா 8:44யோவா 8:51மத் 11:27வெளி 3:91 யோவா 5:10எரே 4:22 உங்களுடைய தகப்பனாகிய ஆபிரகாம் என்னுடைய நாளைக் காண ஆசையாக இருந்தான்; பார்த்து மகிழ்ந்தான் என்றார். எபி 11:13கலா 3:7-9ஆதி 22:18யோவா 8:39மத் 13:17லூக் 10:241 பேது 1:10-12எபி 11:39 அப்பொழுது யூதர்கள் அவரைப் பார்த்து: உனக்கு இன்னும் ஐம்பது வயதாகவில்லையே, நீ ஆபிரகாமைப் பார்த்தாயோ என்றார்கள். அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாவதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். யாத் 3:14கொலோ 1:17யோவா 17:5யோவா 1:1-2ஏசா 44:6யோவா 17:24வெளி 1:8எபி 13:8 அப்பொழுது அவர்மேல் எறியும்படி கற்களை எடுத்துக்கொண்டார்கள். இயேசு மறைந்து, அவர்கள் நடுவே கடந்து, தேவாலயத்தைவிட்டுப்போனார். யோவா 11:8யோவா 10:30-33யோவா 10:39-40லேவி 24:16லூக் 4:29-302இராஜா 6:18-20அப் 7:57அப் 8:39-40