மேய்ப்பனும், அவனுடைய ஆடுகளும்
உண்மையாகவே உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆட்டுத்தொழுவத்திற்குள் வாசல்வழியாக நுழையாமல், வேறுவழியாக ஏறுகிறவன் திருடனும், கொள்ளைக்காரனுமாக இருக்கிறான். மத் 7:15யோவா 10:8-101 யோவா 4:1ரோம 16:18எபி 5:41 பேது 1:102 பேது 2:1எசேக் 34:2-5 வாசல்வழியாக நுழைகிறவனோ ஆடுகளின் மேய்ப்பனாக இருக்கிறான். அப் 20:28யோவா 10:141 பேது 5:4சங் 23:1ஏசா 40:11பிரச 12:111 தீமோ 4:14யோவா 10:11-12 வாசலைக் காக்கிறவன் அவனுக்குத் திறக்கிறான்; ஆடுகளும் அவன் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது. அவன் தன்னுடைய ஆடுகளைப் பெயர் சொல்லிக் அழைத்து, அவைகளை வெளியே நடத்திக்கொண்டுபோகிறான். எசேக் 34:11-162 தீமோ 2:19யோவா 10:4யோவா 10:14யோவா 10:16சங் 78:52-53வெளி 3:20யோவா 10:26-27 அவன் தன்னுடைய ஆடுகளை வெளியே விட்டபின்பு, அவைகளுக்கு முன்பாக நடந்துபோகிறான், ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறதினால் அவனுக்குப் பின்னே செல்லுகிறது. உபா 1:30யோவா 10:16யோவா 12:261 கொரி 11:11 பேது 2:21யோவா 10:8யோவா 18:371 பேது 5:3 தெரியாதவர்களுடைய சத்தத்தை அறியாதபடியினால் அவைகள் தெரியாதவனுக்குப் பின்னே செல்லாமல், அவனைவிட்டு ஓடிப்போகும் என்றார். 1 யோவா 4:5-6கொலோ 2:6-101 பேது 2:1-3எபே 4:11-15மாற் 4:24நீதி 19:27வெளி 2:21 யோவா 2:21 இந்த உவமையை இயேசு அவர்களிடம் சொன்னார்; அவர்களோ அவர் சொன்னவைகளின் கருத்தை அறியவில்லை. ஏசா 56:11நீதி 28:5சங் 82:5தானி 12:10ஏசா 6:9-10யோவா 16:25மத் 13:51சங் 106:7 ஆதலால் இயேசு மீண்டும் அவர்களைப் பார்த்து: நானே ஆடுகளுக்கு வாசல் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். யோவா 14:6எபே 2:18யோவா 10:1யோவா 10:9எசேக் 34:31சங் 79:13எபி 10:19-22சங் 100:3 எனக்கு முன்பே வந்தவர்கள் எல்லோரும் திருடர்களும், கொள்ளைக்காரர்களுமாக இருக்கிறார்கள்; ஆடுகள் அவர்களுக்குச் செவிகொடுக்கவில்லை. எசேக் 34:2எரே 23:1யோவா 10:1அப் 5:36எசேக் 22:25-28ஏசா 56:10-12யோவா 10:27யோவா 10:5 நானே வாசல், என்வழியாக ஒருவன் உள்ளே பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும், வெளியும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான். யோவா 14:6எபே 2:18யோவா 10:7யோவா 10:1ரோம 5:1-2சங் 100:3-4சங் 95:7சங் 23:1-6 திருடன், திருடவும், கொல்லவும், அழிக்கவும் வருகிறானே அன்றி வேறொன்றுக்கும் வரமாட்டான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன். லூக் 19:10யோவா 6:51யோவா 12:47யோவா 3:17யோவா 6:331 தீமோ 1:15மத் 20:28யோவா 10:1 நானே நல்ல மேய்ப்பன்: நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான். சங் 23:1யோவா 10:14-15யோவா 15:13வெளி 7:17ஏசா 40:111 பேது 2:24-251 யோவா 3:16எசேக் 34:23 மேய்ப்பனாக இல்லாதவனும், ஆடுகள் தனக்குச் சொந்தம் இல்லாதவனுமான கூலியாள் ஓநாய் வருகிறதைப் பார்த்து ஆடுகளைவிட்டு ஓடிப்போகிறான்; அப்பொழுது ஓநாய் ஆடுகளைப்பீறி, அவைகளைச் சிதறடிக்கும். 2 பேது 2:3அப் 20:29எசேக் 34:2-6சகரி 11:16-17மத் 10:161 பேது 5:21 தீமோ 3:31 தீமோ 3:8 வேலையாள் கூலிக்காக வேலைசெய்கிறவன், ஆகவே, ஓடிப்போகிறான், ஆடுகளுக்காக அவன் கவலைப்படமாட்டான். பிலி 2:20யோவா 12:6அப் 18:17 நானே நல்ல மேய்ப்பன்; பிதா என்னை அறிந்திருக்கிறதுபோலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறதுபோலவும், யோவா 10:272 தீமோ 2:19யோவா 10:111 யோவா 5:20எபே 1:17யோவா 17:32 தீமோ 1:12சங் 1:6 நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டும் இருக்கிறேன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன். கலா 1:4யோவா 10:11மத் 11:271 யோவா 2:21 பேது 3:18ஏசா 53:101 தீமோ 2:5-6சகரி 13:7 இந்தத் தொழுவத்தில் உள்ளவைகள் அல்லாமல் வேறு ஆடுகளும் எனக்கு இருக்கிறது; அவைகளையும் நான் கொண்டுவரவேண்டும், அவைகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கும், அப்பொழுது ஒரே மந்தையும், ஒரே மேய்ப்பனுமாகும். ஏசா 56:8யோவா 11:521 பேது 2:25எசேக் 34:23எபே 2:13-18எசேக் 37:241 பேது 2:10யோவா 6:37 நான் என் ஜீவனை மீண்டும் பெற்றுக்கொள்ளும்படிக்கு அதைக் கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாக இருக்கிறார். யோவா 10:18யோவா 10:15எபி 2:9யோவா 10:11ஏசா 53:7-12யோவா 15:9-10யோவா 17:4-5ஏசா 42:1 ஒருவனும் அதை என்னிடத்தில் இருந்து எடுத்துக்கொள்ளமாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் இருக்கிறது, அதை மீண்டும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் இருக்கிறது. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன் என்றார். எபி 2:9தீத் 2:14யோவா 10:17யோவா 2:19-21யோவா 14:31எபி 5:6-9ஏசா 53:10-12யோவா 6:38 இந்த வசனங்களினால் யூதர்களுக்குள்ளே மீண்டும் பிரிவினை உண்டானது. யோவா 9:161 கொரி 3:3யோவா 7:40-43அப் 14:4அப் 23:7-101 கொரி 11:18லூக் 12:51-53மத் 10:34-35 அவர்களில் அநேகர்: இவன் பிசாசு பிடித்தவன், பைத்தியக்காரன்; ஏன் இவனுக்குச் செவி கொடுக்கிறீர்கள் என்றார்கள். யோவா 7:20மாற் 3:21யோவா 8:52யோவா 8:47-48அப் 18:14-15அப் 25:19-20அப் 26:24அப் 26:30-32 வேறுசிலர்: இவைகள் பிசாசு பிடித்தவனுடைய வசனங்கள் இல்லை. குருடருடைய கண்களைப் பிசாசு திறக்கக்கூடுமா என்றார்கள். யாத் 4:11ஏசா 35:5-6மத் 11:5சங் 94:9யாத் 8:19யோவா 9:32-33யோவா 9:6மத் 4:24
யூதர்களின் அவிசுவாசம்
பின்பு எருசலேமிலே தேவாலயப் பிரதிஷ்டை பண்டிகை வந்தது; குளிர்காலமுமாக இருந்தது. இயேசு தேவாலயத்தில் சாலொமோனுடைய மண்டபத்திலே நடந்துகொண்டிருந்தார். அப் 3:11அப் 5:12 அப்பொழுது யூதர்கள் அவரை சூழ்ந்துகொண்டு: எவ்வளவு காலம்வரைக்கும் எங்களுடைய ஆத்துமாவிற்குச் சந்தேகம் உண்டாக்குகிறீர், நீர் கிறிஸ்துவானால் எங்களுக்குத் தெளிவாக சொல்லும் என்றார்கள். யோவா 1:19லூக் 22:67-701 இராஜா 18:21யோவா 8:25யோவா 8:53மத் 11:32 கொரி 3:12யோவா 16:25 இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: அதை உங்களுக்குச் சொன்னேன், நீங்கள் விசுவாசிக்கவில்லை; என் பிதாவின் நாமத்தினாலே நான் செய்கிற செயல்களே என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறது. யோவா 10:38யோவா 8:58எபி 2:3யோவா 14:11யோவா 5:17-43அப் 10:38யோவா 10:32யோவா 11:47 ஆனாலும், நான் உங்களுக்குச் சொன்னபடியே, நீங்கள் என் மந்தையின் ஆடுகளாக இல்லாததினால் விசுவாசிக்காமல் இருக்கிறீர்கள். யோவா 8:472 கொரி 4:3-4யோவா 10:27யோவா 12:37-40யோவா 6:65ரோம 11:7-81 யோவா 4:6யோவா 10:4 என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப்பின் செல்லுகிறது. யோவா 10:16யோவா 10:141 கொரி 8:3வெளி 3:20யோவா 10:3-4எபி 3:7யோவா 5:25யோவா 8:12 நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருபோதும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்ளுவதும் இல்லை. யோவா 6:39-40யோவா 6:37யோவா 3:15-16எபி 7:25யோவா 18:9ரோம 8:29ஏசா 54:17பிலி 1:6 அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லோரையும்விட பெரியவராக இருக்கிறார்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது. யோவா 6:37யோவா 17:2யோவா 17:9யோவா 14:28யோவா 17:6மல்கி 1:14யோவா 17:11யாத் 18:11 நானும் பிதாவும் ஒன்றாக இருக்கிறோம் என்றார். யோவா 1:1-2யோவா 14:9யோவா 17:21-23யோவா 5:23யோவா 8:58மத் 11:27மத் 28:19யோவா 5:17 அப்பொழுது யூதர்கள் மீண்டும் அவர்மேல் கல்லெறியும்படி, கற்க்களை எடுத்துக்கொண்டார்கள். யோவா 5:18யோவா 8:591 சாமு 30:6யாத் 17:4யோவா 11:8அப் 7:52அப் 7:58-59மத் 21:35 இயேசு அவர்களைப் பார்த்து: நான் என் பிதாவினாலே அநேக நற்செயல்களை உங்களுக்குக் காட்டினேன், அவைகளில் எந்தச் செயலுக்காக என்மேல் கல்லெறிகிறீர்கள் என்றார். 1 யோவா 3:121 சாமு 19:4-62 நாளாக 24:20-22அப் 10:38அப் 2:22பிரச 4:4யோவா 10:37யோவா 5:19-20 யூதர்கள் அவருக்கு மறுமொழியாக: நற்செயலினால் நாங்கள் உன்மேல் கல்லெறிகிறதில்லை; நீ மனிதனாக இருக்க, உன்னை தேவன் என்று சொல்லி, இந்தவிதமாக தேவ அவமதிப்பு சொல்லுகிறதினால் உன்மேல் கல்லெறிகிறோம் என்றார்கள். யோவா 5:18யோவா 10:30லேவி 24:16பிலி 2:6சங் 82:6ரோம 13:11 இராஜா 21:10லேவி 24:14 இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: தேவர்களாக இருக்கிறீர்கள் என்று நான் சொன்னேன் என்பதாக உங்களுடைய வேதத்தில் எழுதவில்லையா? சங் 82:6-7யாத் 7:1சங் 82:1யாத் 4:16சங் 138:1யாத் 22:28யோவா 12:34யோவா 8:17 தேவவசனத்தைப் பெற்றுக் கொண்டவர்களைத் தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க, வேதவாக்கியமும் ஒழிந்துபோகாததாக இருக்க, மத் 24:35ரோம 13:1ஆதி 15:1லூக் 16:17லூக் 24:44-46அப் 1:16யோவா 19:36-37மத் 26:53-56 பிதாவினால் பரிசுத்தமாக்கப்பட்டும், உலகத்தில் அனுப்பப்பட்டும் இருக்கிற நான் என்னைத் தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவ அவமதிப்பு சொன்னேன் என்று நீங்கள் சொல்லலாமா? யோவா 3:17எரே 1:5யோவா 5:17-18யோவா 10:30-33யோவா 20:28யோவா 20:31யோவா 6:27ஏசா 61:1-3 என் பிதாவின் செயல்களை நான் செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்க வேண்டியதில்லை. யோவா 15:24யோவா 10:25யோவா 10:32யோவா 12:37-40யோவா 14:10யோவா 5:31மத் 11:20-24 அவைகளை செய்தால், நீங்கள் என்னை விசுவாசியாமல் இருந்தாலும், பிதா என்னிலும் நான் அவரிலும் இருக்கிறதை நீங்கள் அறிந்து விசுவாசிக்கும்படி அந்தச் செயல்களை விசுவாசியுங்கள் என்றார். யோவா 10:30யோவா 14:20யோவா 10:25யோவா 14:9-11அப் 2:22யோவா 17:21-23யோவா 3:2அப் 4:8-12 இதனால் அவர்கள் மீண்டும் அவரைப் பிடிக்கத் தேடினார்கள், அவரோ அவர்கள் கைக்குத் தப்பி, யோவா 7:30யோவா 8:59யோவா 7:44லூக் 4:29-30யோவா 10:31 யோர்தானுக்கு அக்கரையிலே முன்னே யோவான் ஞானஸ்நானம் கொடுத்துக்கொண்டிருந்த இடத்திற்குத் திரும்பிப்போய், அங்கே தங்கினார். யோவா 1:28யோவா 11:54யோவா 3:26யோவா 7:1 அநேகர் அவரிடத்தில் வந்து: யோவான் ஒரு அற்புதத்தையும் செய்யவில்லை; ஆனாலும் இவரைக்குறித்து யோவான் சொன்னது எல்லாம் உண்மையாக இருக்கிறது என்றார்கள். யோவா 1:33-34யோவா 1:29-30யோவா 1:27யோவா 2:11யோவா 3:26-36லூக் 12:1லூக் 5:1லூக் 7:26-30 அந்த இடத்தில் அநேகர் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள். யோவா 4:41யோவா 12:42யோவா 11:45யோவா 2:23யோவா 4:39யோவா 7:31யோவா 8:30