மத்தேயு 24

Matthew 24
அத்தியாயம் 24

கடைசிக்கால அடையாளங்கள்

இயேசு தேவாலயத்தைவிட்டுப் புறப்பட்டுப்போகும்போது, அவருடைய சீடர்கள் தேவாலயத்தின் கட்டிடங்களை அவருக்குக் காண்பிக்க அவரிடத்தில் வந்தார்கள். மாற் 13:1-37எசேக் 8:6லூக் 21:5-36எரே 6:8யோவா 2:20மத் 21:23மத் 23:39ஓசி 9:12 இயேசு அவர்களைப் பார்த்து: இவைகளையெல்லாம் பார்க்கிறீர்களே, இந்த இடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல் இல்லாதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். லூக் 19:44எரே 26:18மீகா 3:12எசேக் 7:20-221 இராஜா 9:7-8தானி 9:26-272 பேது 3:11 பின்பு, அவர் ஒலிவமலையின்மேல் உட்கார்ந்திருக்கும்போது, சீடர்கள் அவரிடத்தில் தனிமையில் வந்து: இவைகள் எப்பொழுது நடக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவிற்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்கள். மாற் 13:3-4அப் 1:71 தெச 5:1-11மத் 13:49மத் 24:37தானி 12:6-8லூக் 21:7மத் 13:39-40 இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: ஒருவனும் உங்களை ஏமாற்றாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள்; 1 யோவா 4:12 தெச 2:3எரே 29:8கொலோ 2:8எபே 5:6மாற் 13:22லூக் 21:8மாற் 13:5-6 ஏனென்றால், அநேகர் வந்து, என் நாமத்தை வைத்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை ஏமாற்றுவார்கள். மத் 24:11மத் 24:24எரே 14:141 யோவா 2:18அப் 5:36-37அப் 8:9-10எரே 23:25எரே 23:21 யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்; கலங்காதபடி எச்சரிக்கையாக இருங்கள்; இவைகளெல்லாம் நடக்கவேண்டியதே; ஆனாலும், முடிவு உடனே வராது. மாற் 13:7-8லூக் 21:91 பேது 3:14-15ஏசா 8:12-14யோவா 14:12 தெச 2:2யோவா 14:27சங் 112:7 மக்களுக்கு விரோதமாக மக்களும், ராஜ்யத்திற்கு விரோதமாக ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும். லூக் 21:11வெளி 6:8ஏசா 19:2சகரி 14:132 நாளாக 15:6அப் 11:28வெளி 6:12யோவே 2:30-31 இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம். 1 தெச 5:31 பேது 4:17-18உபா 28:59ஏசா 10:4ஏசா 9:17ஏசா 9:12ஏசா 9:21லேவி 26:18-29 அப்பொழுது, உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களைக் கொலைசெய்வார்கள்: என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லா மக்களாலும் பகைக்கப்படுவீர்கள். யோவா 16:2யோவா 15:19-20லூக் 21:16-17வெளி 2:10லூக் 21:12மத் 10:17-22மாற் 13:9-13வெளி 6:9-11 அப்பொழுது, அநேகர் இடறலடைந்து, ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்து, ஒருவரையொருவர் பகைப்பார்கள். மீகா 7:5-6லூக் 21:16மத் 11:6மாற் 13:12மாற் 4:172 தீமோ 4:16யோவா 6:66-67மத் 10:21 அநேகக் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை ஏமாற்றுவார்கள். மத் 24:24மத் 7:15மத் 24:51 தீமோ 4:1மாற் 13:221 யோவா 2:18யூதா 1:4வெளி 19:20 அக்கிரமம் பெருகுவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோகும். வெளி 2:4-5யாக் 4:1-4வெளி 3:15வெளி 2:10யாக் 5:1-6 இறுதிவரை நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான். மத் 10:22மாற் 13:13வெளி 2:10எபி 10:39எபி 3:14ரோம 2:71 கொரி 1:8லூக் 8:15 ராஜ்யத்தினுடைய இந்த நற்செய்தி பூலோகமெங்கும் உள்ள எல்லா மக்களுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும். வெளி 14:6ரோம 10:18ரோம 16:25-26லூக் 24:47மாற் 16:15-16கொலோ 1:23மத் 10:7மத் 9:35 மேலும், பாழாக்குகிற அருவருப்பைக்குறித்து தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே, வாசிக்கிறவன் சிந்திக்கவேண்டும். நீங்கள் அதைப் பரிசுத்த இடத்தில் நிற்பதைப் பார்க்கும்போது, தானி 9:27தானி 12:11மாற் 13:14லூக் 21:20தானி 11:31தானி 9:23வெளி 1:3லூக் 19:43 யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகவேண்டும். ஆதி 19:15-17எபி 11:7லூக் 21:21-22நீதி 22:3யாத் 9:20-21எரே 37:11-12எரே 6:1 வீட்டின்மேல் இருக்கிறவன் தன் வீட்டிலே எதையாவது எடுப்பதற்கு இறங்காமலிருக்கவேண்டும். லூக் 17:31-33மாற் 13:15-16மத் 10:27அப் 10:9லூக் 12:31 சாமு 9:25உபா 22:8லூக் 5:19 வயலில் இருக்கிறவன் தன் ஆடைகளை எடுப்பதற்குத் திரும்பாமலிருக்கவேண்டும். அந்த நாட்களிலே கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ. லூக் 23:29-30உபா 28:53-56லூக் 21:23மாற் 13:17-18புலம் 4:10ஓசி 13:16புலம் 4:3-42 சாமு 4:4 நீங்கள் ஓடிப்போவது மழைக் காலத்திலாவது, ஓய்வுநாளிலாவது, நடக்காதபடிக்கு வேண்டிக்கொள்ளுங்கள். யாத் 16:29அப் 1:12 ஏனென்றால், உலகம் உண்டானதுமுதல் இதுவரைக்கும் நடக்காததும், இனிமேலும் நடைபெறாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும். தானி 12:1யோவே 2:2மல்கி 4:1சகரி 14:2-3ஏசா 66:15-16லூக் 19:43-44லூக் 21:24மத் 24:29 அந்த நாட்கள் குறைக்கப்படாமலிருந்தால், ஒருவன்கூட தப்பிப்போவதில்லை; தெரிந்துகொள்ளப்பட்டவர்களினிமித்தம் அந்த நாட்கள் குறைக்கப்படும். மாற் 13:202 தீமோ 2:10மத் 24:24மத் 24:31லூக் 18:7மத் 22:14ஏசா 65:8-9ரோம 11:25-31 அப்பொழுது, இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ, அங்கே இருக்கிறார் என்று எவனாவது சொன்னால் நம்பாதீர்கள். லூக் 21:8லூக் 17:23-24உபா 13:1-3மாற் 13:21யோவா 5:43 ஏனென்றால், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். 2 தெச 2:9-11மாற் 13:22வெளி 13:13-14மத் 24:112 பேது 2:1-3மத் 7:15மத் 24:52 பேது 3:17 இதோ, முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன். யோவா 16:1லூக் 21:13ஏசா 44:7-8ஏசா 46:10-11ஏசா 48:5-6 ஆகவே: அதோ, வனாந்திரத்தில் இருக்கிறார் என்று சொல்வார்களானால், புறப்படாமலிருங்கள்; இதோ, அறைவீட்டிற்குள் இருக்கிறார் என்று சொல்வார்களானால் நம்பாதீர்கள். அப் 21:38ஏசா 40:3லூக் 3:2-3மத் 3:1 மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்குவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனிதகுமாரனுடைய வருகையும் இருக்கும். லூக் 17:24-37சகரி 9:14ஏசா 30:30யாக் 5:8யோபு 37:3மல்கி 3:22 பேது 3:4மல்கி 4:5 பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும். லூக் 17:37யோபு 39:27-30ஆமோ 9:1-4உபா 28:49எரே 16:16 அந்தநாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் இருளடையும், சந்திரன் ஒளியைக் கொடுக்காமல் இருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் வல்லமைகள் அசைக்கப்படும். ஆமோ 8:9யோவே 3:15ஏசா 13:10ஏசா 24:23மாற் 13:24-25அப் 2:19-20யோவே 2:30-31வெளி 6:12-17 அப்பொழுது மனிதகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனிதகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதை பூமியிலுள்ள எல்லாக் கோத்திரத்தார்களும் கண்டு புலம்புவார்கள். வெளி 1:7தானி 7:13லூக் 21:27அப் 1:11மத் 26:64மத் 16:27-28மாற் 13:26சகரி 12:10 வலுவாகத் தொனிக்கும் எக்காளசத்தத்தோடு அவர் தமது தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒருமுனைமுதல் மறுமுனைவரைக்கும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச்சேர்ப்பார்கள். 1 தெச 4:16மாற் 13:27ஏசா 27:131 கொரி 15:52ஏசா 11:12மத் 13:412 தெச 2:1எபே 1:10 அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளை தோன்றி, துளிர்விடும்போது, வசந்தகாலம் நெருங்கிவிட்டது என்று அறிவீர்கள். மாற் 13:28-29லூக் 21:29-30 அப்படியே இவைகளையெல்லாம் நீங்கள் பார்க்கும்போது அவர் நெருக்கமாக வாசலின் அருகே வந்திருக்கிறார் என்று தெரிந்துகொள்ளுங்கள். யாக் 5:9எபி 10:37எசேக் 7:2-141 பேது 4:7வெளி 3:20 இவைகளெல்லாம் சம்பவிக்கும் முன்னே இந்தச் சந்ததி ஒழிந்துபோகாது என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். மாற் 13:30-31லூக் 21:32-33மத் 16:28மத் 23:36லூக் 11:50மத் 12:45 வானமும் பூமியும் ஒழிந்துபோகும், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை. ஏசா 40:81 பேது 1:25எண் 23:19ஏசா 55:11மத் 5:18நீதி 30:5ஏசா 51:6ஏசா 54:10

விழித்திருங்கள்

அந்த நாளையும் அந்த நேரத்தையும் என் பிதா ஒருவர்தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள். மாற் 13:32அப் 1:7மத் 24:442 பேது 3:101 தெச 5:2மத் 24:42வெளி 16:15மத் 25:13 நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனிதகுமாரன் வரும்காலத்திலும் நடக்கும். லூக் 17:26-27ஆதி 6:1-72 பேது 2:5எபி 11:72 பேது 3:6மத் 24:391 பேது 3:20-21ஆதி 7:6-23 எப்படியென்றால், பெருவெள்ளத்திற்கு முன்னான காலத்திலே நோவா கப்பலுக்குள் பிரவேசிக்கும் நாள்வரை, மக்கள் புசித்தும் குடித்தும், பெண் எடுத்தும் பெண் கொடுத்தும், லூக் 17:26-28ரோம 13:13-14லூக் 14:18-20ஆதி 6:2லூக் 12:451 கொரி 7:29-31ஆமோ 6:3-6ஏசா 22:12-14 பெருவெள்ளம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகும்வரை உணராமல் இருந்தார்கள்; அப்படியே மனிதகுமாரன் வரும்காலத்திலும் நடக்கும். யோவா 3:20மத் 24:37அப் 13:41ஏசா 44:18-19நீதி 24:122 பேது 3:5நீதி 29:7ஏசா 42:25 அப்பொழுது, இரண்டுபேர் வயலில் இருப்பார்கள்; ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், ஒருவன் கைவிடப்படுவான். லூக் 17:34-372 பேது 2:7-92 பேது 2:52 நாளாக 33:12-24லூக் 23:39-431 கொரி 4:7 இரண்டு பெண்கள் மாவு அரைத்துக்கொண்டிருப்பார்கள்; ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், ஒருத்தி கைவிடப்படுவாள். யாத் 11:5ஏசா 47:2லூக் 17:35 உங்களுடைய ஆண்டவர் எந்த நேரத்திலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள். லூக் 21:361 தெச 5:6மத் 25:13வெளி 16:151 கொரி 16:13மத் 24:36லூக் 12:35-40மத் 24:44 திருடன் இரவிலே எந்த நேரத்திலே வருவானென்று வீட்டெஜமான் அறிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கொள்ளையடிக்கவிடமாட்டான் என்று அறிவீர்கள். லூக் 12:39மத் 24:441 தெச 5:2-62 பேது 3:10-11மத் 20:11யாத் 22:2-3நீதி 7:19 நீங்கள் நினைக்காத நேரத்திலே மனிதகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாக இருங்கள். மத் 25:10மத் 24:42மத் 25:13லூக் 12:40பிலி 4:5மத் 24:27வெளி 19:7யாக் 5:9 ஏற்ற நேரத்திலே தன் வேலைக்காரர்களுக்கு ஆகாரங்கொடுத்து அவர்களை விசாரிக்கும்படி எஜமான் வைத்த உண்மையும் விவேகமுமுள்ள வேலைக்காரன் யார்? மத் 25:211 கொரி 4:1-2லூக் 12:41-43லூக் 16:10-12மத் 25:232 தீமோ 2:2மத் 25:35-401 தீமோ 1:12 எஜமான் வரும்போது அப்படிச் செய்கிறவனாகக் காணப்படுகிற வேலைக்காரனே பாக்கியவான். வெளி 16:15லூக் 12:43லூக் 12:372 பேது 1:13-152 தீமோ 4:6-8மத் 25:34பிலி 1:21-23வெளி 2:19 தன் ஆஸ்திகள் எல்லாவற்றின்மேலும் அவனை விசாரணைக்காரனாக வைப்பான் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். மத் 25:23மத் 25:21லூக் 12:37லூக் 12:442 தீமோ 2:12லூக் 19:17வெளி 21:7வெளி 3:21 அந்த வேலைக்காரனோ பொல்லாதவனாக இருந்து: என் எஜமான் வர நாளாகும் என்று தன் உள்ளத்திலே சொல்லிக்கொண்டு, 2 பேது 3:3-5மத் 18:32ஏசா 32:6லூக் 12:45அப் 5:3உபா 9:4யோவா 13:2மாற் 7:21 தன் உடன்வேலைக்காரர்களை அடிக்கவும், குடிகாரர்களோடு புசிக்கவும் குடிக்கவும் தொடங்கினால், மத் 7:15மீகா 3:5வெளி 17:61 பேது 5:31 சாமு 2:13-161 சாமு 2:292 கொரி 11:202 பேது 2:13-14 அந்த வேலைக்காரன் நினைக்காத நாளிலும், அறியாத நேரத்திலும், அவனுடைய எஜமான் வந்து, 1 தெச 5:2-3வெளி 3:3மத் 24:42-44நீதி 29:1 அவனைக் கடினமாகத் தண்டித்து, மாயக்காரர்களோடு அவனுக்குப் பங்கை நியமிப்பான்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும். மத் 8:12லூக் 12:46மத் 22:13ஏசா 33:14யோபு 20:29லூக் 13:28மத் 25:30