மத்தேயு 3

Matthew 3
அத்தியாயம் 3

யோவான்ஸ்நானனின் பிரசங்கம்

அந்த நாட்களிலே யோவான்ஸ்நானன் யூதேயாவின் வனாந்திரத்தில் வந்து: ஏசா 40:3-6யோவா 1:6-8லூக் 1:13-17லூக் 1:76லூக் 3:1-20மத் 11:11அப் 19:3-4அப் 13:24-25

“மனந்திரும்புங்கள், மாற் 1:15மத் 4:172 கொரி 7:10தானி 2:44லூக் 24:47மத் 10:7மத் 6:10அப் 3:19

பரலோகராஜ்யம் சமீபமாக இருக்கிறது” என்று பிரசங்கம் செய்தான்.

கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்; ஏசா 40:3மல்கி 3:1யோவா 1:23ஏசா 57:14-15லூக் 1:76மாற் 1:3லூக் 1:17லூக் 3:3-6

அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள்” என்று வனாந்திரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டென்று,

ஏசாயா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டவன் இவனே.

இந்த யோவான் ஒட்டகமயிர் ஆடையை அணிந்து, தன் இடுப்பிலே வார்க்கச்சையைக் கட்டிக்கொண்டிருந்தான்; வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் அவனுக்கு ஆகாரமாக இருந்தது. 2இராஜா 1:8லேவி 11:22மத் 11:8மாற் 1:6சகரி 13:4லூக் 1:17மல்கி 4:51 சாமு 14:25-27 அப்பொழுது, எருசலேம் நகரத்தாரும், யூதேயாவில் உள்ள அனைவரும், யோர்தானுக்கு அடுத்த சுற்றுப்புறத்தார் அனைவரும் அவனிடத்திற்குப்போய், மாற் 1:5யோவா 3:23யோவா 5:35லூக் 16:16லூக் 3:7மத் 11:7-12மத் 4:25 தங்களுடைய பாவங்களை அறிக்கைசெய்து, யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள். அப் 19:181 யோவா 1:9மத் 3:13-16அப் 2:38-41எசேக் 36:25எபி 9:10யோவா 1:25-28மத் 3:11 பரிசேயர்களிலும் சதுசேயர்களிலும் அநேகர் தன்னிடத்தில் ஞானஸ்நானம் பெறும்படி வருகிறதை அவன் கண்டு: “விரியன்பாம்புக் குட்டிகளே! வருங்கோபத்திற்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வழிகாட்டினவன் யார்? மத் 12:341 தெச 1:10மத் 22:23மத் 23:33ரோம 5:9மத் 16:6மத் 23:13-28ரோம 1:18 மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள். லூக் 3:8அப் 26:202 பேது 1:4-8கலா 5:22-23எபே 5:9பிலி 1:11ஏசா 1:16-17எரே 36:3 ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லிக்கொள்ள நினைக்காதிருங்கள்; தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராக இருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். லூக் 3:8ரோம 9:7-8கலா 3:27-29யோவா 8:33அப் 13:26கலா 4:22-31ரோம 4:1லூக் 16:24 இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைக்கப்பட்டிருக்கிறது; எனவே, நல்ல கனிகொடுக்காத மரங்களெல்லாம் வெட்டப்பட்டு நெருப்பிலே போடப்படும். யோவா 15:6லூக் 3:9மத் 7:19யோவா 15:2லூக் 13:6-9எசேக் 15:2-7எரே 17:8மல்கி 3:1-3 மனந்திரும்புதலுக்கென்று நான் தண்ணீரினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன்; எனக்குப்பின்பு வருகிறவரோ என்னைவிட வல்லவராக இருக்கிறார், அவருடைய காலணிகளைச் சுமக்கிறதற்குக்கூட நான் தகுதியானவன் இல்லை; அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார். ஏசா 4:4லூக் 3:16அப் 1:5சகரி 13:9அப் 2:2-4மல்கி 3:2-4மாற் 1:7-8தீத் 3:5 தூற்றுக்கூடை அவருடைய கையில் இருக்கிறது; அவர் தமது களத்தை நன்றாக சுத்தம்செய்து, தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அணையாத அக்கினியினால் சுட்டெரிப்பார்” என்றான். மல்கி 4:1மத் 13:30லூக் 3:17ஏசா 41:16எரே 51:2மத் 13:41சங் 1:4எரே 7:20

இயேசுகிறிஸ்துவின் ஞானஸ்நானம்

அப்பொழுது யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு இயேசு கலிலேயாவைவிட்டு யோர்தானுக்கு அருகே அவனிடத்தில் வந்தார். யோவா 1:32-34மத் 2:22மாற் 1:9-11லூக் 3:21-22 யோவான் அவருக்குத் தடைசெய்து: நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா என்றான். யோவா 3:3-7அப் 1:5-8யோவா 13:6-8எபே 2:3-5கலா 3:22கலா 3:27-29கலா 4:6யோவா 1:16 இயேசு அவனுக்கு மறுமொழியாக: இப்பொழுது இதற்கு சம்மதி, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாக இருக்கிறது என்றார். அப்பொழுது அவருக்கு சம்மதித்தான். யோவா 4:34ஏசா 42:21யோவா 13:15யோவா 15:10லூக் 1:6பிலி 2:7-8சங் 40:7-8யோவா 13:7-9 இயேசு ஞானஸ்நானம் பெற்று, தண்ணீரிலிருந்து கரையேறின உடனே, இதோ, வானம் அவருக்குத் திறக்கப்பட்டது; தேவ ஆவியானவர் புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார். ஏசா 11:2லூக் 3:21-22மாற் 1:10ஏசா 42:1யோவா 1:31-34ஏசா 61:1அப் 7:56எசேக் 1:1 அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாக இருக்கிறேன் என்று உரைத்தது. ஏசா 42:1மத் 17:5சங் 2:7லூக் 9:35மத் 12:18மாற் 9:72 பேது 1:17லூக் 3:22