1 தெசலோனிக்கேயர் 2

1 Thessalonians 2
அத்தியாயம் 2

தெசலோனிக்கேயாவில் பவுலின் ஊழியம்

சகோதரர்களே, நாங்கள் உங்களிடம் வந்தது பிரயோஜனமில்லாததாக இருக்கவில்லையென்று நீங்களே அறிந்திருக்கிறீர்கள். 2 தெச 3:11 கொரி 15:21 கொரி 15:581 தெச 2:13ஆப 2:13பிலி 2:161 கொரி 15:101 தெச 1:3-10 உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, முன்னே பிலிப்பிப்பட்டணத்திலே நாங்கள் பாடுகள்பட்டு நிந்தையடைந்திருந்தும், மிகுந்த போராட்டத்தோடு தேவனுடைய நற்செய்தியை உங்களுக்குச் சொல்லும்படி, நம்முடைய தேவனுக்குள் தைரியங்கொண்டிருந்தோம். அப் 16:22-24அப் 4:132 தீமோ 1:12அப் 17:2-91 பேது 2:14-16அப் 16:37எபி 12:2-31 தெச 1:5 எங்களுடைய போதகம் வஞ்சகத்தினாலும் தவறான விருப்பத்தினாலும் உண்டாகவில்லை, அது தந்திரமுள்ளதாகவும் இருக்கவில்லை. 2 கொரி 2:172 கொரி 4:21 தெச 4:71 தெச 2:5-62 கொரி 12:16-182 கொரி 7:21 சாமு 12:32 கொரி 4:5 தேவன் எங்களை நேர்மையானவர்கள் என்று நம்பி நற்செய்தியை எங்களிடம் ஒப்புவித்தார். நாங்கள் மனிதர்களுக்கு அல்ல, எங்களுடைய இருதயங்களைச் சோதித்தறிகிற தேவனுக்கே பிரியமுண்டாகப் பேசுகிறோம். கலா 1:10ரோம 8:27கலா 2:72 தீமோ 1:14சங் 17:32 கொரி 4:2எபே 6:61 நாளாக 29:17 உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நாங்கள் ஒருபோதும் முகத்துதியான வசனங்களைச் சொல்லவுமில்லை, பொருளாசையுள்ளவர்களாக மாயம்பண்ணவும் இல்லை; தேவனே சாட்சி. ரோம 1:92 கொரி 12:17அப் 20:33கலா 1:202 பேது 2:31 பேது 5:21 தெச 2:102 கொரி 7:2 நாங்கள் கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களாக உங்களுக்குப் பாரமாக இருக்கக்கூடியவர்களானாலும், உங்களிடத்திலாவது, மற்றவர்களிடத்திலாவது, மனிதர்களால் வரும் மகிமையை நாங்கள் தேடவில்லை. கலா 1:10யோவா 5:44யோவா 5:411 தெச 2:9பிலே 1:8-92 கொரி 10:1-22 கொரி 13:10கலா 5:26 பால் கொடுக்கிற தாயானவள் தன் பிள்ளைகளைக் காப்பாற்றுகிறதுபோல நாங்கள் உங்களிடம் கனிவாக நடந்துகொண்டோம்; ஏசா 66:132 தீமோ 2:24-251 தெச 2:11ஏசா 49:232 கொரி 10:1கலா 5:22-23யாக் 3:171 கொரி 9:22 நாங்கள் உங்கள்மேல் வாஞ்சையாக இருந்து, தேவனுடைய நற்செய்தியை உங்களுக்குக் கொடுத்ததுமல்லாமல், நீங்கள் எங்களுக்குப் பிரியமானவர்களானபடியினாலே, எங்களுடைய உயிரையும் உங்களுக்குக் கொடுக்க விருப்பமாக இருந்தோம். 1 யோவா 3:162 கொரி 12:15பிலி 2:17ரோம 1:11-122 கொரி 6:1கலா 4:19எபி 13:17பிலி 4:1 சகோதரர்களே, நாங்கள் பட்ட பிரயாசமும் வருத்தமும் உங்களுக்கு ஞாபகமாக இருக்கும்; உங்களில் ஒருவனுக்கும் பாரமாக இல்லாதபடிக்கு, இரவும் பகலும் நாங்கள் வேலைசெய்து, தேவனுடைய நற்செய்தியை உங்களுக்குப் பிரசங்கித்தோம். 2 தெச 3:7-92 கொரி 11:9அப் 18:32 கொரி 12:13-141 கொரி 9:151 கொரி 9:181 கொரி 9:6-71 தெச 2:6 விசுவாசிகளாகிய உங்களுக்குள்ளே நாங்கள் எவ்வளவு பரிசுத்தமும் நீதியும் பிழையில்லாமலும் நடந்தோம் என்பதற்கு நீங்களும் சாட்சி, தேவனும் சாட்சி. 1 பேது 5:31 தெச 1:52 கொரி 1:12தீத் 2:7-82 தீமோ 3:10அப் 20:181 சாமு 12:3-51 தெச 2:5 மேலும், தம்முடைய ராஜ்யத்திற்கும் மகிமைக்கும் உங்களை அழைத்த தேவனுக்கு நீங்கள் தகுதியுள்ளவர்களாக நடக்கவேண்டுமென்று, 1 கொரி 4:14-15எபி 13:221 தீமோ 5:212 தெச 3:122 தீமோ 4:1-21 நாளாக 28:201 தெச 2:71 தெச 5:11 தகப்பன் தன் பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல, நாங்கள் உங்களில் ஒவ்வொருவனுக்கும் புத்தியும், பாராட்டுதலும், எச்சரிப்புமாகச் சொன்னதை அறிந்திருக்கிறீர்கள். 1 யோவா 2:6எபே 4:11 யோவா 1:6-72 தெச 2:13-141 தெச 4:121 பேது 5:101 தெச 5:242 தெச 1:11-12 ஆகவே, நீங்கள் தேவவசனத்தை எங்களாலே கேள்விப்பட்டு ஏற்றுக்கொண்டபோது, அதை மனித வசனமாக ஏற்றுக்கொள்ளாமல், தேவவசனமாகவே ஏற்றுக்கொண்டதினாலே நாங்கள் இடைவிடாமல் தேவனுக்கு நன்றி செலுத்துகிறோம்; அது மெய்யாகவே தேவவசனம்தான், விசுவாசிக்கிற உங்களுக்குள்ளே அது பெலனாக இருக்கிறது. எபி 4:12ரோம 10:171 பேது 1:231 பேது 1:251 பேது 2:2லூக் 11:28அப் 13:481 யோவா 3:3 எப்படியென்றால், சகோதரர்களே, யூதேயா நாட்டில் கிறிஸ்து இயேசுவிற்குள்ளான தேவனுடைய சபைகளை நீங்கள் பின்பற்றினவர்களாகி, அவர்கள் யூதர்களாலே எப்படிப் பாடுகள்பட்டார்களோ, அப்படியே நீங்களும் உங்களுடைய சொந்த மக்களாலே பாடுகள்பட்டீர்கள். 1 தெச 3:4எபி 10:33-34எபி 5:7-82 தெச 1:42 கொரி 8:1-2கலா 1:221 கொரி 7:171 தெச 1:6 அந்த யூதர்கள் கர்த்தராகிய இயேசுவையும், தங்களுடைய தீர்க்கதரிசிகளையும், கொலை செய்தவர்களும், எங்களைத் துன்பப்படுத்தினவர்களும், தேவனுக்கு விருப்பமில்லாதவர்களும், மனிதர்கள் அனைவருக்கும் விரோதிகளுமாக இருந்து, மத் 5:12அப் 7:52லூக் 11:48-53அப் 2:23லூக் 13:33-34அப் 3:15லூக் 24:20மத் 23:31-35 யூதரல்லாதவர்கள் இரட்சிக்கப்படுவதற்கு நாங்கள் அவர்களோடு பேசாதபடிக்குத் தடை செய்கிறார்கள்; இவ்விதமாக எக்காலத்திலும் தங்களுடைய பாவங்களை முழுமையாக்குகிறார்கள்; அவர்கள்மேல் கோபம் பூரணமாக வந்திருக்கிறது. அப் 17:13அப் 14:19அப் 14:5மல்கி 4:1மத் 23:32மாற் 16:162 தெச 2:10அப் 13:50

பவுல் தெசலோனிக்கேயர்களைக் காண விரும்புதல்

சகோதரர்களே, நாங்கள் இருதயத்தின்படி உங்களோடிருந்து, சரீரத்தின்படி கொஞ்சநாட்கள் உங்களைவிட்டுப் பிரிந்திருந்ததினாலே, உங்களுடைய முகத்தைப் பார்க்கவேண்டுமென்று மிகுந்த ஆசையோடு அதிகமாக முயற்சி செய்தோம். கொலோ 2:51 கொரி 5:31 தெச 3:61 தெச 3:10-11ரோம 1:132 சாமு 13:39லூக் 22:15சங் 63:1 ஆகவே, நாங்கள் உங்களிடம் வர ஒன்று இரண்டுமுறை விருப்பமாக இருந்தோம். பவுலாகிய நானே வர விருப்பமாக இருந்தேன்; சாத்தானோ எங்களைத் தடைசெய்தான். ரோம 15:22ரோம 1:13வெளி 2:10சகரி 3:1-22 கொரி 11:12-14யோபு 33:14மத் 4:10வெளி 12:9-12 எங்களுக்கு நம்பிக்கையும் சந்தோஷமும் மகிழ்ச்சியின் கிரீடமுமாக இருப்பவர்கள் யார்? நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது அவருடைய சந்நிதானத்திலே நீங்களல்லவா அப்படியிருப்பீர்கள்; பிலி 4:11 தெச 3:131 தெச 5:23பிலி 2:162 கொரி 1:141 கொரி 15:23மத் 16:271 யோவா 2:28 நீங்களே எங்களுக்கு மகிமையும் சந்தோஷமுமாக இருக்கிறீர்கள். 2 கொரி 1:141 கொரி 11:7நீதி 17:6