தமிழ் வேதாகமம் Tamil Bible

1 தெசலோனிக்கேயர் 4

1 Thessalonians 4
அத்தியாயம் 4

தேவனுக்குப் பிரியமாக வாழ்வது

அன்றியும், சகோதரர்களே, நீங்கள் இந்தவிதமாக நடக்கவும், தேவனுக்குப் பிரியமாக இருக்கவும்வேண்டுமென்று, நீங்கள் எங்களால் கேட்டு ஏற்றுக்கொண்டபடியே, அதிகமதிகமாக முன்னேறும்படிக்கு, கர்த்தராகிய இயேசுவிற்குள் உங்களை வேண்டிக்கொண்டு புத்திசொல்லுகிறோம். கொலோ 1:102 தெச 1:32 பேது 3:18எபி 13:162 பேது 1:5-10பிலி 1:91 தெச 4:10-12ரோம 12:1-2 கர்த்தராகிய இயேசுவினாலே நாங்கள் உங்களுக்குக் கொடுத்த வழிமுறைகளை அறிந்திருக்கிறீர்களே. மத் 28:20எசேக் 3:171 கொரி 9:212 தெச 3:102 தெச 3:6 நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாக வேண்டுமென்பதே தேவனுடைய விருப்பமாக இருக்கிறது. அந்தப்படி, நீங்கள் வேசித்தனத்திற்கு விலகியிருந்து, 1 பேது 4:2ரோம 12:21 தெச 5:23எபி 13:4கொலோ 3:5எபே 5:171 தெச 4:4எபே 5:3-5 தேவனை அறியாத மக்களைப்போல மோக இச்சைக்குட்படாமல், 1 கொரி 7:9ரோம 12:1எபி 13:41 கொரி 6:151 பேது 3:7ரோம 6:191 கொரி 6:18-201 கொரி 7:2 உங்களில் அவனவன் தன்தன் சரீரத்தைப் பரிசுத்தமாகவும் மரியாதையாகவும் ஆண்டுகொள்ளும்படி அறிந்து: கலா 4:8அப் 17:30-31எபே 4:17-192 தெச 1:8கொலோ 3:51 கொரி 15:341 பேது 4:3எபே 2:12 இந்தக் காரியத்தில் ஒருவனும் தன் சகோதரனை ஏமாற்றாமலும் கெடுதல் செய்யாமலும் இருக்கவேண்டும்; முன்னமே நாங்கள் உங்களுக்குச் சொல்லி, சாட்சியாக எச்சரித்தபடியே இப்படிப்பட்டக் காரியங்கள் எல்லாவற்றையும்குறித்துக் கர்த்தர் நீதியை நிலைநாட்டுகிறவராக இருக்கிறார். எபி 13:4யாத் 20:15யாத் 20:17ரோம 12:19நீதி 28:24ரோம 1:18உபா 32:35எசேக் 22:13 தேவன் நம்மை அசுத்தத்திற்கு அல்ல பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார். லேவி 11:441 பேது 2:9-12எபே 1:41 பேது 1:14-161 பேது 2:21-22லேவி 19:2ரோம 8:29-302 பேது 2:10 ஆகவே, புறக்கணிக்கிறவன் மனிதர்களை அல்ல, தமது பரிசுத்த ஆவியானவரை நமக்குத் தந்தருளின தேவனையே புறக்கணிக்கிறான். 1 யோவா 3:24லூக் 10:161 சாமு 8:7யோவா 12:482 பேது 1:21நீதி 1:7நீதி 23:9ரோம 5:5 சகோதர அன்பைக்குறித்து நான் உங்களுக்கு எழுதவேண்டியதில்லை; நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாக இருப்பதற்கு தேவனால் போதிக்கப்பட்டவர்களாக இருக்கிறீர்களே. 1 யோவா 3:11ரோம 12:101 யோவா 3:231 யோவா 4:21எபி 13:1யோவா 13:34-351 யோவா 2:101 பேது 4:8 அந்தப்படி நீங்கள் மக்கெதோனியா நாடெங்கிலும் உள்ள சகோதரர்களெல்லோருக்கும் செய்துவருகிறீர்கள். சகோதரர்களே, அன்பிலே நீங்கள் இன்னும் அதிகமாகப் பெருகவும்; பிலி 1:91 தெச 3:122 தெச 1:31 தெச 1:72 கொரி 8:1-22 கொரி 8:8-10பிலி 3:13-151 தெச 4:1 அவிசுவாசிகளிடத்தில் ஒழுக்கமாக நடந்து, ஒன்றிலும் உங்களுக்குக் குறைவில்லாதிருக்கும்படிக்கு, பிரச 4:6எபே 4:281 பேது 3:4தீத் 3:14நீதி 17:1புலம் 3:261 தீமோ 2:21 கொரி 4:12 நாங்கள் உங்களுக்குக் கட்டளையிட்டபடியே, அமைதலுள்ளவர்களாக இருக்கவிரும்பவும், உங்களுடைய சொந்த வேலைகளைப் பார்க்கவும், உங்களுடைய சொந்தக் கைகளினாலே வேலைசெய்யவும் வேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறோம். கொலோ 4:51 பேது 2:12ரோம 12:171 தீமோ 3:7ரோம 13:131 பேது 3:16-17மாற் 4:111 தெச 5:22

கர்த்தருடைய வருகை

அன்றியும், சகோதரர்களே, மரித்துப்போனவர்களுக்காக நீங்கள் நம்பிக்கை இல்லாதவர்களான மற்றவர்களைப்போல துக்கப்பட்டு, அறிவில்லாமலிருக்க எனக்கு மனதில்லை. தானி 12:21 தெச 4:151 தெச 5:101 கொரி 15:18-192 பேது 3:41 கொரி 15:6அப் 7:60எபே 2:12 இயேசுவானவர் மரித்து, பின்பு உயிரோடு எழுந்திருந்தாரென்று நம்புகிறோமே; அப்படியே இயேசுவிற்குள் மரித்தவர்களையும் தேவன் அவரோடு கொண்டுவருவார். ரோம 8:11பிலி 3:20-21ஏசா 26:192 கொரி 4:13-141 தெச 4:131 தெச 3:131 தெச 4:17வெளி 1:18 கர்த்தருடைய வார்த்தையை முன்னிட்டு நாங்கள் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கர்த்தருடைய வருகைவரைக்கும் உயிரோடிருக்கும் நாம் மரித்தவர்களுக்கு முந்திக்கொள்வதில்லை. 1 கொரி 15:51-532 கொரி 4:141 தெச 2:191 இராஜா 13:17-18சங் 88:131 இராஜா 13:11 இராஜா 20:35மத் 17:25 ஏனென்றால், கர்த்தர்தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் பரலோகத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவிற்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். 1 கொரி 15:51-52வெளி 1:7மத் 24:30-311 கொரி 15:23மத் 16:27மத் 25:312 தெச 1:7ஏசா 27:13 பின்பு, உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டு போக, மேகங்கள்மேல் அவர்களோடு ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாக எப்பொழுதும் கர்த்தரோடு இருப்போம். 1 கொரி 15:52வெளி 11:12யோவா 14:31 தெச 4:15வெளி 1:7வெளி 7:14-17தானி 7:13யோவா 17:24 ஆகவே, இந்த வார்த்தைகளினாலே நீங்கள் ஒருவரையொருவர் தேற்றுங்கள். 1 தெச 5:111 தெச 5:14லூக் 21:28எபி 10:24-25ஏசா 40:1-2எபி 12:12