சாலொமோன் தேவனிடத்தில் ஞானத்தைக் கேட்டல்
தாவீதின் மகனாகிய சாலொமோன் தன் ராஜ்ஜியத்தில் பலப்பட்டான்; அவனுடைய தேவனாகிய யெகோவா அவனோடு இருந்து அவனை மிகவும் பெரியவனாக்கினார். 1 நாளாக 29:251 இராஜா 2:12ஆதி 39:2ஆதி 21:221 நாளாக 17:81 இராஜா 2:46யாத் 3:12ஆதி 39:21 சாலொமோன், இஸ்ரவேலில் உள்ள ஆயிரம்பேருக்கு அதிபதிகளோடும், நூறுபேருக்கு அதிபதிகளோடும், நியாயாதிபதிகளோடும், இஸ்ரவேல் எங்குமிருக்கிற வம்சங்களின் தலைவர்களாகிய அனைத்துப் பிரபுக்களோடும் பேசி, 1 நாளாக 28:11 நாளாக 27:11 நாளாக 13:11 நாளாக 15:121 நாளாக 15:31 நாளாக 24:311 நாளாக 24:41 நாளாக 29:1 அவனும் அவனோடுகூட சபையார் அனைவரும், கிபியோனிலிருக்கிற மேடைக்குப் போனார்கள். 1 நாளாக 16:391 நாளாக 21:291 இராஜா 3:4-15உபா 34:5யாத் 26:1-37யாத் 36:8யாத் 40:2யாத் 40:34 தாவீது தேவனுடைய பெட்டிக்கு எருசலேமிலே கூடாரம்போட்டு ஆயத்தம்செய்த இடத்திற்குக் கீரியாத்யாரீமிலிருந்து அதைக் கொண்டுவந்தான்; யெகோவாவின் தாசனாகிய மோசே வனாந்திரத்திலே செய்த தேவனுடைய ஆசரிப்புக்கூடாரம் அங்கே இருந்தது. 1 நாளாக 15:25-282 சாமு 6:172 சாமு 6:21 நாளாக 15:11 நாளாக 16:11 நாளாக 13:5-6சங் 132:5-6 ஊரின் மகனாகிய ஊரியின் மகன் பெசலெயேல் உண்டாக்கிய வெண்கலப் பலிபீடமும் அங்கே யெகோவாவின் வாசஸ்தலத்திற்கு முன்பாக இருந்தது; சாலொமோனும் சபையாரும் அதை நாடிப்போனார்கள். யாத் 31:2யாத் 38:1-71 நாளாக 13:31 நாளாக 2:19-20யாத் 27:1-8 அங்கே சாலொமோன் ஆசரிப்புக்கூடாரத்திற்கு முன்பாகக் யெகோவாவின் சந்நிதியிலிருக்கிற வெண்கலப் பலிபீடத்தின்மேல் ஆயிரம் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தி பலியிட்டான். 1 இராஜா 3:41 நாளாக 29:211 இராஜா 8:63ஏசா 40:16
அன்று இரவிலே தேவன் சாலொமோனுக்குக் காட்சியளித்து: நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள் என்றார். மத் 7:7-81 யோவா 5:14-15யோவா 16:23நீதி 3:5-61 இராஜா 3:5-15மாற் 10:36-37மாற் 10:51 சாலொமோன் தேவனை நோக்கி: தேவரீர் என் தகப்பனாகிய தாவீதுக்குப் பெரிய கிருபை செய்து, என்னை அவனுடைய இடத்திலே ராஜாவாக்கினீர். 1 நாளாக 28:5ஏசா 55:31 நாளாக 29:232 சாமு 12:7-82 சாமு 22:512 சாமு 7:8-9சங் 86:13சங் 89:20-28 இப்போதும் தேவனாகிய யெகோவாவே, நீர் என் தகப்பனாகிய தாவீதுக்குக் கொடுத்த உமது வாக்குத்தத்தம் உறுதிப்படுவதாக; தேவரீர் பூமியின் தூளைப்போன்ற ஏராளமான மக்களின்மேல் என்னை ராஜாவாக்கினீர். 2 சாமு 7:12-16ஆதி 13:16ஆதி 22:17சங் 132:11-12சங் 89:35-371 நாளாக 17:11-141 நாளாக 17:23-271 நாளாக 28:6-7 இப்போதும் நான் இந்த மக்களுக்கு முன்பாகப் போக்கும் வரத்துமாயிருக்கத்தக்க ஞானத்தையும் அறிவையும் எனக்குத் தந்தருளும்; ஏராளமாயிருக்கிற இந்த உம்முடைய மக்களை நியாயம் விசாரிக்கத் தகுதியுள்ளவன் யார் என்றான். 1 இராஜா 3:9யாக் 1:5நீதி 2:2-6நீதி 4:72 சாமு 5:2நீதி 3:13-18சங் 119:342 கொரி 3:5 அப்பொழுது தேவன் சாலொமோனை நோக்கி: இந்த விருப்பம் உன் இருதயத்தில் இருந்ததாலும், நீ ஐசுவரியத்தையும் சொத்துக்களையும் கனத்தையும், உன் எதிரிகளின் உயிரையும், நீடித்த ஆயுளையும் கேட்காமல், நான் உன்னை அரசாளச்செய்த என் மக்களை நியாயம் விசாரிப்பதற்கேற்ற ஞானத்தையும் விவேகத்தையும் நீ கேட்டதாலும், யாக் 3:17நீதி 23:71 சாமு 16:71 நாளாக 29:17-181 இராஜா 3:11-131 இராஜா 3:28யாக் 3:131 நாளாக 28:2 ஞானமும் விவேகமும் தந்திருக்கிறதுமல்லாமல், உனக்கு முன்னும் பின்னும் இருந்த ராஜாக்களுக்கு இல்லாத ஐசுவரியத்தையும் சொத்துக்களையும் கனத்தையும் உனக்குத் தருவேன் என்றார். யாக் 1:52 நாளாக 9:22மத் 6:33எபே 3:201 நாளாக 29:25பிரச 2:9 இப்படி சாலொமோன் கிபியோனிலிருக்கிற மேட்டிற்குப் போய், ஆசரிப்புக்கூடாரத்தின் சந்நிதியிலிருந்து எருசலேமுக்கு வந்து, இஸ்ரவேலை ஆட்சிசெய்தான். 1 இராஜா 4:24-252 நாளாக 1:3
சாலொமோன் இரதங்களையும் குதிரைவீரர்களையும் சேர்த்தான்; அவனுக்கு ஆயிரத்து நானூறு இரதங்கள் இருந்தன; பனிரெண்டாயிரம் குதிரைவீரர்களும் இருந்தார்கள்; அவைகளை இரதங்களின் பட்டணங்களிலும், அவர்களை ராஜாவாகிய தன்னிடத்தில் எருசலேமிலும் வைத்திருந்தான். 1 இராஜா 4:261 இராஜா 10:26-291 இராஜா 9:192 நாளாக 9:251 இராஜா 10:16உபா 17:16 ராஜா எருசலேமிலே வெள்ளியையும் பொன்னையும் கற்கள்போலவும், கேதுருமரங்களைப் பள்ளத்தாக்கில் இருக்கிற காட்டத்தி மரங்கள்போலவும் அதிகமாக்கினான். 2 நாளாக 9:271 இராஜா 10:27-292 நாளாக 1:12ஆமோ 7:14ஏசா 60:17ஏசா 9:10யோபு 22:24-25 சாலொமோனுக்கு இருந்த குதிரைகளும், புடவைகளும் எகிப்திலிருந்து கொண்டுவரப்பட்டன; ராஜாவின் வியாபாரிகள் புடவைகளை ஒப்பந்த விலைக்கிரயத்திற்கு வாங்கினார்கள். 1 இராஜா 10:28-292 நாளாக 9:28 அவர்கள் எகிப்திலிருந்து ஒரு இரதத்தை அறுநூறு வெள்ளிக்காசுகளுக்கும், ஒரு குதிரையை நூற்றைம்பது வெள்ளிக்காசுகளுக்கும் கொண்டுவருவார்கள்; அந்தப்படியே ஏத்தியர்களின் அனைத்து ராஜாக்களுக்கும், சீரியாவின் ராஜாக்களுக்கும் அவர்கள் மூலமாகக் கொண்டுவரப்பட்டன. 2இராஜா 10:29