2 கொரிந்தியர் 9

2 Corinthians 9
அத்தியாயம் 9

பரிசுத்தவான்களின் ஊழியத்திற்கு செய்யவேண்டிய உதவிகளைக்குறித்து, நான் அதிகமாக உங்களுக்கு எழுதவேண்டியதில்லை. கலா 6:101 தெச 4:9-102 கொரி 8:4-151 தெச 5:12 கொரி 9:12-14கலா 2:101 யோவா 2:271 சாமு 20:23 உங்களுடைய மனவிருப்பத்தை அறிந்திருக்கிறேன்; அகாயாவில் உள்ளவர்கள் ஒருவருடமாக ஆயத்தமாக இருக்கிறார்கள் என்று, நான் மக்கெதோனியரிடம் சொல்லி, உங்களைப் புகழ்ந்தேனே; உங்களுடைய வாஞ்சை அநேகரை செயலில் ஈடுபடவைத்தது. 2 கொரி 8:102 கொரி 8:82 கொரி 8:241 கொரி 16:15எபி 10:241 தெச 1:72 கொரி 1:12 கொரி 7:4 அப்படியிருந்தும், உங்களைக்குறித்து நாங்கள் சொன்ன புகழ்ச்சி இந்தக் காரியத்தில் வீணாகப்போகாமல், நான் சொன்னபடி நீங்கள் ஆயத்தப்பட்டவர்களாக இருப்பதற்கு, இந்தச் சகோதரர்களை அனுப்பினேன். 2 கொரி 8:61 கொரி 16:1-42 கொரி 7:142 கொரி 8:17-242 கொரி 9:4-5தீத் 3:1 மக்கெதோனியர்கள் என்னோடு வந்து, நீங்கள் ஆயத்தப்படாதவர்களாக இருப்பதைப் பார்த்தால், இவ்வளவு உறுதியாக உங்களைப் புகழ்ந்ததற்காக, நீங்கள் வெட்கப்படுவீர்கள் என்று நாங்கள் சொல்லாமல், நாங்களே வெட்கப்படவேண்டியதாக இருக்கும். 2 கொரி 11:172 கொரி 8:1-52 கொரி 8:242 கொரி 9:2ரோம 15:26 ஆகவே, வாக்குறுதிபண்ணப்பட்டிருக்கிற உங்களுடைய தர்ம உதவியானது கட்டாயப்படுத்திக் கொடுக்கப்பட்டதாக இல்லாமல், தாராளமாகக் கொடுக்கப்பட்டதாக இருப்பதற்காக அதை ஆயத்தப்படுத்துகிறதற்குச் சகோதரர்களை முதலில் உங்களிடம் அனுப்புவது அவசியம் என்று எனக்குத் தோன்றியது. 1 சாமு 25:27ஆதி 33:11பிலி 4:171 கொரி 16:21 சாமு 30:262 கொரி 12:17-182 கொரி 8:62இராஜா 5:15

விதைப்பதும் அறுப்பதும்

பின்னும் நான் சொல்லுகிறது என்னவென்றால், கொஞ்சம் விதைக்கிறவன் கொஞ்சம் அறுப்பான், அதிகமாக விதைக்கிறவன் அதிகமாக அறுப்பான். நீதி 11:24-25லூக் 6:38நீதி 22:9நீதி 19:172 கொரி 9:10கலா 6:7-9எபி 6:10நீதி 11:18 அவனவன் வருத்தத்தோடும் அல்ல, கட்டாயமாகவும் அல்ல, தன் மனதில் திட்டமிட்டபடியே கொடுக்கவேண்டும்; உற்சாகமாகக் கொடுக்கிறவனிடம் தேவன் பிரியமாக இருக்கிறார். 2 கொரி 8:12அப் 20:351 நாளாக 29:17யாத் 25:2நீதி 11:25உபா 15:7-11நீதி 22:91 பேது 4:9 மேலும், நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாகவும், எல்லாவித நல்ல செயல்களிலும் பெருகுகிறவர்களாகவும் இருப்பதற்காக, தேவன் உங்களில் எல்லாவிதமான கிருபையையும் பெருகச்செய்ய வல்லவராக இருக்கிறார். எபே 3:20பிலி 4:18-19நீதி 10:22மல்கி 3:10ஆகா 2:8நீதி 28:27சங் 84:11நீதி 3:9 வாரி இறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும் என்று எழுதியிருக்கிறபடியே ஆகும். சங் 112:9சங் 112:3நீதி 21:21கலா 5:5-6நீதி 8:18ஏசா 51:81 கொரி 13:13 விதைக்கிறவனுக்கு விதையையும், சாப்பிடுகிறதற்கு ஆகாரத்தையும் கொடுக்கிறவர் உங்களுக்கு விதையைக் கொடுத்து, அதைப் பெருகப்பண்ணி, உங்களுடைய நீதியின் விளைச்சலைப் பெருகச்செய்வார். ஏசா 55:10ஓசி 10:122 கொரி 9:6பிரச 11:61 தெச 3:12நீதி 11:18மத் 6:1பிலி 1:11 நீங்கள் எல்லா வகையிலும் செல்வந்தராகி தாராளகுணத்திலே சம்பூரணமுள்ளவர்களாவீர்கள். இதனால் தேவனுக்கு எங்கள் மூலமாக ஸ்தோத்திரமுண்டாகும். 1 தீமோ 6:17-181 நாளாக 29:12-142 கொரி 4:152 கொரி 9:122 கொரி 1:11நீதி 3:9-102 கொரி 8:192 கொரி 8:2-3 இந்த தர்ம உதவியாகிய பணிவிடை பரிசுத்தவான்களுடைய குறைவுகளை நீக்குகிறதுமட்டுமல்லாமல், அநேகர் தேவனை ஸ்தோத்திரிப்பதினாலே சம்பூரண பலன் உள்ளதாகவும் இருக்கும். 2 கொரி 8:14-15பிலே 1:4-7பிலி 2:251 யோவா 3:17யாக் 2:14-162 கொரி 8:4பிலி 4:18-192 கொரி 1:11 அவர்கள் இந்த தர்ம உதவிகளாகிய நன்மையை அனுபவித்து, நீங்கள் கிறிஸ்துவின் நற்செய்தியைக் கீழ்ப்படிதலோடு அறிக்கையிட்டதினால், தங்களுக்கும் மற்ற அனைவருக்கும் நீங்கள் தாராளமாக தர்ம உதவிகள் செய்கிறதினாலும், அவர்கள் தேவனை மகிமைப்படுத்தி; எபி 13:16மத் 5:162 கொரி 2:12கலா 1:241 பேது 2:91 பேது 4:111 தீமோ 6:122 கொரி 10:5 உங்களுக்காக வேண்டுதல்செய்து, தேவன் உங்களுக்கு அளித்த மிகவும் விசேஷித்த கிருபையினால் உங்கள்மேல் வாஞ்சையாக இருக்கிறார்கள். 1 தீமோ 1:14பிலி 4:12 தீமோ 1:16-182 கொரி 8:12 கொரி 8:6-7பிலி 1:8பிலி 4:18-19ரோம 1:11 தேவன் அருளிய சொல்லிமுடியாத ஈவுக்காக அவருக்கு ஸ்தோத்திரம். 2 கொரி 2:14எபே 5:20யோவா 3:16ரோம 8:32யாக் 1:171 கொரி 15:57வெளி 4:91 யோவா 5:11-12