தேவனிடம் திரும்பாத இஸ்ரவேலர்கள்
சமாரியாவின் மலைகளிலுள்ள பாசானின் 1 மாடுகளே, நீங்கள் இந்த வார்த்தைகளைக் கேளுங்கள்; தரித்திரர்களை ஒடுக்கி, எளியவர்களை நொறுக்கி, அவர்களுடைய எஜமான்களை நோக்கி: நாங்கள் குடிக்கும்படி கொண்டுவாருங்கள் என்று சொல்லுகிறீர்கள். சங் 22:12ஆமோ 6:1ஆமோ 5:11எசேக் 39:18பிரச 4:11 இராஜா 16:24ஆமோ 2:6-8ஆமோ 3:9-10 இதோ, யெகோவாகிய ஆண்டவர் உங்களை கொக்கிகளாலும், உங்களுடைய பின் சந்ததியை மீன்பிடிக்கிற தூண்டில்களாலும் இழுத்துக்கொண்டுபோகும் நாட்கள் வருமென்று அவர் தம்முடைய பரிசுத்தத்தைக்கொண்டு ஆணையிட்டார். எரே 16:16சங் 89:35ஆப 1:15-16ஆமோ 6:8ஏசா 37:29எசேக் 39:4-5 அப்பொழுது நீங்கள் ஒவ்வொருவனும் அரண்மனைக்குச் சுமந்துகொண்டு போவதை எறிந்துவிட்டு 2, தனக்கு எதிரான திறப்புகளின் வழியாகப் புறப்பட்டுப்போவீர்கள் என்று யெகோவா சொல்லுகிறார். எசேக் 12:5எசேக் 12:12ஏசா 31:7மத் 16:262இராஜா 25:42இராஜா 7:152இராஜா 7:7-8ஏசா 2:20 பெத்தேலுக்குப் போய்த் துரோகம்செய்யுங்கள், கில்காலுக்கும் போய் துரோகத்தைப் பெருகச்செய்து, காலைதோறும் உங்களுடைய பலிகளையும், மூன்றாம் வருடத்திலே உங்களுடைய தசமபாகங்களையும் செலுத்தி, எசேக் 20:39ஓசி 4:15எண் 28:3-4ஆமோ 5:5ஓசி 12:11ஓசி 9:15மத் 23:32ஆமோ 3:14 புளித்தமாவுள்ள ஸ்தோத்திரபலியோடு தூபம் காட்டி, உற்சாகபலிகளைக் கூறித் தெரியப்படுத்துங்கள்; இஸ்ரவேல் மக்களே, இப்படிச் செய்வதே உங்களுக்குப் பிரியம் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். லேவி 22:18-21சங் 81:12ஓசி 9:10ஓசி 9:1லேவி 7:12-13மத் 15:13-14மத் 23:23மத் 6:2 ஆகையால் நான் உங்களுடைய பட்டணங்களில் எல்லாம் உங்களுடைய பற்களுக்கு ஓய்வையும், உங்களுடைய இடங்களில் எல்லாம் ஆகாரக்குறைவையும் கட்டளையிட்டேன்; ஆகிலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமல்போனீர்கள் என்று யெகோவா சொல்லுகிறார். ஆகா 2:17எரே 5:3ஏசா 9:13வெளி 16:10-11ஓசி 5:15லேவி 26:26வெளி 2:211 இராஜா 17:1 இதுவும் இல்லாமல், அறுப்புக்காலம் வருவதற்கு இன்னும் மூன்றுமாதங்கள் இருக்கும்போதே மழையை நான் தடுத்தேன், ஒரு பட்டணத்தின்மேல் மழைபெய்யவும் ஒரு பட்டணத்தின்மேல் மழைபெய்யாமல் இருக்கவும் செய்தேன்; ஒரு வயலின்மேல் மழைபெய்தது, மழைபெய்யாத மற்ற வயல் காய்ந்துபோனது. யாத் 9:26எரே 3:32 நாளாக 7:13-14யாத் 10:23யாத் 9:4ஏசா 5:61 இராஜா 8:35-36உபா 11:17 இரண்டு மூன்று பட்டணங்களின் மனிதர்கள் தண்ணீர் குடிக்க ஒரே பட்டணத்திற்குப் போய் அலைந்தும் தாகம் தீர்த்துக்கொள்ளவில்லை; ஆகிலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமல்போனீர்கள் என்று யெகோவா சொல்லுகிறார். ஆமோ 4:61 இராஜா 18:5ஆகா 1:6ஆமோ 4:9-11எசேக் 4:16-17ஓசி 7:10ஏசா 41:17-18எரே 14:3-4 நோயினாலும் விஷப்பனியினாலும் உங்களைத் தண்டித்தேன்; உங்களுடைய சோலைகளிலும் திராட்சைத்தோட்டங்களிலும் அத்திமரங்களிலும் ஒலிவமரங்களிலும் மிகுதியானதைப் பச்சைப்புழு அரித்துப்போட்டது; ஆகிலும் என்னிடத்தில் திரும்பாமல்போனீர்கள் என்று யெகோவா சொல்லுகிறார். உபா 28:22ஆகா 2:17யோவே 1:4ஆமோ 4:6ஆமோ 7:1-21 இராஜா 8:372 நாளாக 6:28ஆமோ 4:8 எகிப்திலே உண்டானதற்கு ஒப்பான கொள்ளைநோயை உங்களுக்குள் அனுப்பினேன்; உங்களுடைய வாலிபர்களை வாளாலே கொன்றேன்; உங்களுடைய குதிரைகளை அழித்துப்போட்டேன்; உங்களுடைய முகாம்களின் நாற்றத்தை உங்களுடைய நாசிகளிலும் ஏறச்செய்தேன்; ஆகிலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமல்போனீர்கள் என்று யெகோவா சொல்லுகிறார். உபா 28:60லேவி 26:252இராஜா 13:7யோவே 2:20உபா 28:26-27உபா 7:15யாத் 9:3-6சங் 78:49-50 சோதோமையும் கொமோராவையும் தேவன் கவிழ்த்துப்போட்டதுபோல, உங்களைக் கவிழ்த்துப்போட்டேன்; நீங்கள் நெருப்பிலிருந்து பறிக்கப்பட்ட கொள்ளியைப்போல இருந்தீர்கள்; ஆகிலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமல்போனீர்கள் என்று யெகோவா சொல்லுகிறார். ஏசா 13:19சகரி 3:2ஆதி 19:24-25எரே 23:142 பேது 2:6ஆமோ 4:6எசேக் 22:17-22யூதா 1:23 ஆகையால் இஸ்ரவேலே, இப்படியே உனக்குச் செய்வேன்; இஸ்ரவேலே, நான் இப்படி உனக்குச் செய்யப்போகிறதினால் உன்னுடைய தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு. 1 தெச 5:2-4யாக் 4:1-10ஆமோ 9:1-4மாற் 13:32-37எசேக் 13:5ஆமோ 5:4-15ஏசா 47:3லூக் 21:3-36 அவர் மலைகளை உருவாக்கினவரும், காற்றை உருவாக்கினவரும், மனிதனுடைய நினைவுகள் இன்னதென்று அவனுக்கு வெளிப்படுத்துகிறவரும், அதிகாலையை இருளாக்குகிறவரும், பூமியினுடைய உயர்ந்த இடங்களின்மேல் உலாவுகிறவருமாக இருக்கிறார்; சேனைகளின் தேவனாகிய யெகோவா என்பது அவருடைய நாமம். ஆமோ 5:8மீகா 1:3ஆமோ 9:6ஏசா 47:4சங் 65:6தானி 2:28உபா 33:29ஏசா 40:12