கற்பலகைகள்
அக்காலத்திலே யெகோவா என்னை நோக்கி: “நீ முன்னிருந்ததைப் போலவே இரண்டு கற்பலகைகளை வெட்டிக்கொண்டு, மலையின்மேல் ஏறி, என்னிடத்திற்கு வா; ஒரு மரப்பெட்டியையும் செய்வாயாக. யாத் 34:1-2யாத் 25:10-15உபா 10:3-4யாத் 34:4எபி 9:4 நீ உடைத்துப்போட்ட முந்தின பலகைகளில் இருந்த வார்த்தைகளை நான் அந்தப் பலகைகளில் எழுதுவேன்; நீ அவைகளைப் பெட்டியிலே வைப்பாயாக என்றார். 1 இராஜா 8:9உபா 10:5உபா 4:13யாத் 25:16-22யாத் 40:20எபி 9:4 அப்படியே நான் சீத்திம் மரத்தினால் ஒரு பெட்டியைச் செய்து, முன்னிருந்ததைப் போலவே இரண்டு கற்பலகைகளை வெட்டி, அவைகளை என் கையிலே எடுத்துக்கொண்டு மலையில் ஏறினேன். யாத் 34:4யாத் 25:10யாத் 25:5யாத் 37:1-9உபா 10:1 முன்னே சபைகூடிவந்த நாளில் யெகோவா, மலையில் அக்கினி நடுவிலிருந்து உங்களுக்குச் சொன்ன பத்துக்கற்பனைகளையும் முன்பு அவர் எழுதியிருந்ததுபோலவே அந்தப் பலகைகளில் எழுதி, அவைகளை என்னிடத்தில் தந்தார். உபா 9:10யாத் 34:28உபா 18:16உபா 4:11-15எபி 12:18-19உபா 5:4-26யாத் 19:17-18யாத் 20:1-17 அப்பொழுது நான் திரும்பி மலையிலிருந்து இறங்கி, அந்தப் பலகைகளை நான் செய்த பெட்டியிலே வைத்தேன்; யெகோவா எனக்குக் கட்டளையிட்டபடியே அவைகள் அதிலே வைக்கப்பட்டிருக்கிறது. யாத் 34:29யாத் 40:20உபா 10:21 இராஜா 8:8-9உபா 9:15யாத் 25:16யாத் 32:15யோசு 4:9 பின்பு இஸ்ரவேல் மக்கள் பெனெயாக்கானுக்கடுத்த 1 பேரோத்திலேயிருந்து மோசெராவுக்குப் பிரயாணம்செய்தார்கள்; அங்கே ஆரோன் மரணமடைந்து, அடக்கம் செய்யப்பட்டான்; அவனுடைய இடத்திலே அவன் மகனாகிய எலெயாசார் ஆசாரியனானான். எண் 33:38எண் 20:23-28எண் 33:30-33எண் 10:12-13எண் 10:6எண் 33:1-2 அங்கேயிருந்து குத்கோதாவுக்கும், குத்கோதாவிலிருந்து ஆறுகளுள்ள நாடாகிய யோத்பாத்திற்கும் பிரயாணம்செய்தார்கள். எண் 33:32-34 அக்காலத்திலே யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமப்பதற்கும், இந்நாள்வரைக்கும் நடந்துவருகிறதுபோல, யெகோவாவுடைய சந்நிதியிலே நின்று அவருக்கு ஆராதனை செய்வதற்கும், அவருடைய நாமத்தைக்கொண்டு ஆசீர்வதிப்பதற்கும், யெகோவா லேவியின் கோத்திரத்தைத் தேர்ந்தெடுத்தார். உபா 21:5உபா 18:5எண் 3:6எண் 4:15எண் 6:23-262 நாளாக 30:27எரே 15:19யோவா 15:16 ஆகையால் லேவிக்கு அவன் சகோதரர்களுடன் பங்கும் சொத்தும் இல்லை; உன் தேவனாகிய யெகோவா அவனுக்குச் சொன்னபடியே, யெகோவாவே அவனுக்கு சொத்து. எசேக் 44:28உபா 18:1-2எண் 18:20-24யோசு 14:3எண் 26:62 “நான் முன்புபோலவே நாற்பது நாட்கள் இரவும்பகலும் மலையில் இருந்தேன்; யெகோவா அந்த முறையும் என் மன்றாட்டைக் கேட்டு, உன்னை அழிக்காமல் விட்டார். உபா 9:18-19உபா 9:25யாத் 34:28யாத் 32:33-34யாத் 33:17உபா 3:23-27யாத் 24:18யாத் 32:14 யெகோவா என்னை நோக்கி: நான் கொடுப்பேன் என்று அவர்களுடைய முற்பிதாக்களுக்கு வாக்களித்த தேசத்தில் அவர்கள் போய் அதைச் சொந்தமாக்கிக்கொள்வதற்காக, நீ எழுந்து, மக்களுக்கு முன்பாகப் பிரயாணப்பட்டுப் போ என்றார். யாத் 33:1யாத் 32:34
யெகோவாவுக்குப் பயப்படுதல்
“இப்பொழுதும் இஸ்ரவேலே, நீ உன் தேவனாகிய யெகோவாவுக்குப் பயந்து, அவருடைய வழிகளிலெல்லாம் நடந்து, அவரிடத்தில் அன்புசெலுத்தி, உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் தேவனாகிய யெகோவாவைப் பணிந்துகொண்டு, மீகா 6:8உபா 6:5லூக் 10:27உபா 5:33உபா 11:13மாற் 12:29-33மத் 22:37எரே 32:39-40 நான் இன்று உனக்குக் கற்பிக்கிற யெகோவாவுடைய கற்பனைகளையும் அவருடைய கட்டளைகளையும் உனக்கு நன்மையுண்டாவதற்கு கைக்கொள்ளவேண்டும் என்பதையே அல்லாமல், வேறே எதை உன் தேவனாகிய யெகோவா உன்னிடத்தில் கேட்கிறார். எரே 32:39உபா 6:24யாக் 1:25நீதி 9:12 இதோ, வானங்களும் வானாதிவானங்களும், பூமியும் அதிலுள்ள யாவும், உன் தேவனாகிய யெகோவாவுடையவைகள். யாத் 19:5சங் 24:1சங் 115:16நெகே 9:61 இராஜா 8:27சங் 148:42 நாளாக 6:18யாத் 9:29 ஆனாலும் யெகோவா உன் முற்பிதாக்கள்மேல் அன்புசெலுத்துவதற்காக அவர்களிடத்தில் பிரியம் வைத்து, அவர்களுக்குப் பின் அவர்களுடைய சந்ததியாகிய உங்களை, இந்நாளில் இருக்கிறபடியே, சகல மக்களுக்குள்ளும் தமக்கென்று தெரிந்துகொண்டார். உபா 4:37உபா 7:7-8எண் 14:8ரோம 9:13-23 ஆகையால் நீங்கள் இனி நீங்கள் பிடிவாதம் செய்யாமல், உங்கள் இருதயத்தை சுத்தம் செய்யுங்கள். எரே 4:4உபா 30:6லேவி 26:41கொலோ 2:11ரோம 2:28-29உபா 9:6எரே 4:14உபா 9:13 உங்கள் தேவனாகிய யெகோவா தேவாதி தேவனும், கர்த்தாதி கர்த்தரும், மகத்துவமும் வல்லமையும் பயங்கரமுமான தேவனுமாக இருக்கிறார்; அவர் பட்சபாதம்செய்கிறவரும் அல்ல, லஞ்சம் வாங்குகிறவரும் அல்ல. அப் 10:34ரோம 2:11தானி 2:47யோபு 34:19கலா 2:6நெகே 9:32உபா 7:21எபே 6:9 அவர் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் நியாயம்செய்கிறவரும், அந்நியன்மேல் அன்புவைத்து அவனுக்கு உணவும் உடையும் கொடுக்கிறவருமாக இருக்கிறார். சங் 146:9சங் 68:5எரே 49:11ஏசா 1:17சங் 145:9சங் 103:6யாத் 22:22ஓசி 14:3 நீங்களும் எகிப்துதேசத்தில் அந்நியர்களாக இருந்ததினால், அந்நியர்களைச் சிநேகிப்பீர்களாக. யாத் 22:21லேவி 19:33-341 யோவா 3:17-18கலா 6:10யாக் 2:15-16லூக் 17:18லூக் 10:28-37லூக் 6:35 உன் தேவனாகிய யெகோவாவுக்குப் பயந்து, அவரைப் பணிந்துகொண்டு, அவரைப் பற்றிக்கொண்டிருந்து, அவருடைய நாமத்தைக்கொண்டு ஆணையிடுவாயாக. உபா 6:13உபா 13:4லூக் 4:8உபா 11:22மத் 4:10சங் 63:11ஏசா 45:23உபா 4:4 அவரே உன் புகழ்ச்சி; உன் கண்கள் கண்ட இந்தப் பெரிய பயங்கரமான காரியங்களை உன்னிடத்தில் செய்த உன்னுடைய தேவன் அவரே. எரே 17:14யாத் 15:2வெளி 21:232 சாமு 7:23உபா 4:32-35சங் 22:31 சாமு 12:24ஏசா 12:2-6 உன் முற்பிதாக்கள் எழுபதுபேராக எகிப்திற்குப் போனார்கள்; இப்பொழுதோ உன் தேவனாகிய யெகோவா உன்னுடைய பெருக்கத்திலே வானத்தின் நட்சத்திரங்களைப் போலாக்கினார். ஆதி 46:27யாத் 1:5ஆதி 15:5உபா 1:10உபா 28:62நெகே 9:23அப் 7:14எண் 26:51