மோசே தேவனால் அடக்கம் செய்யப்படுதல்
பின்பு மோசே மோவாபின் சமவெளிகளிலிருந்து எரிகோவுக்கு எதிரான நேபோ மலையிலிருக்கும் பிஸ்காவின் மலையுச்சியில் ஏறினான்; அப்பொழுது யெகோவா அவனுக்கு, தாண்வரை உள்ள கீலேயாத் தேசம் அனைத்தையும், உபா 32:49எசேக் 40:2யோசு 19:47எண் 27:12வெளி 21:10உபா 3:27உபா 32:52உபா 34:4 நப்தலி தேசம் அனைத்தையும், எப்பிராயீம் மனாசே என்பவர்களின் தேசத்தையும், கடைசி மத்திய தரை சமுத்திரம்வரை உள்ள யூதா தேசம் அனைத்தையும், உபா 11:24யாத் 23:31யோசு 15:12எண் 34:6 தென்புறத்தையும், சோவார்வரை உள்ள பேரீச்சமரங்களின் பட்டணம் என்னும் ஊர் முதற்கொண்டு எரிகோவின் பள்ளத்தாக்காகிய சமமான பூமியையும் காண்பித்தார். 2 நாளாக 28:15நியாயாதி 1:16நியாயாதி 3:13ஆதி 14:2ஆதி 19:22ஆதி 14:8எண் 34:3 அப்பொழுது யெகோவா அவனை நோக்கி: “நான் உங்களுடைய சந்ததிக்குக் கொடுப்பேன் என்று ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும், யாக்கோபுக்கும் வாக்களித்த தேசம் இதுதான், இதை உன்னுடைய கண் காணும்படி செய்தேன்; ஆனாலும் நீ அந்த இடத்திற்குக் கடந்துபோவதில்லை” என்றார். உபா 32:52ஆதி 12:7ஆதி 28:13உபா 3:26-27ஆதி 13:15ஆதி 15:18-21ஆதி 26:3எண் 20:12 அப்படியே யெகோவாவின் தாசனாகிய மோசே மோவாப் தேசமான அந்த இடத்திலே யெகோவாவுடைய வார்த்தையின்படியே மரணமடைந்தான். உபா 32:50யோசு 1:1-2எபி 3:3-6வெளி 15:32 பேது 1:12 தீமோ 2:25உபா 31:14யோவா 8:35-36 அவர் அவனை மோவாப் தேசத்திலுள்ள பெத்பேயோருக்கு எதிரான பள்ளத்தாக்கிலே அடக்கம் செய்தார். ஒருவனுக்கும் அவனுடைய பிரேதக்குழி எங்கேயென்று இந்நாள்வரைக்கும் தெரியாது. யூதா 1:9உபா 3:29 மோசே மரணமடைகிறபோது 120 வயதாயிருந்தான்; அவனுடைய கண்கள் இருளடையவுமில்லை, அவன் பெலன் குறையவுமில்லை. உபா 31:2யோசு 14:10-11ஆதி 27:1ஆதி 48:10அப் 7:36அப் 7:30அப் 7:23 இஸ்ரவேல் மக்கள் மோவாபின் சமவெளிகளில் மோசேக்காக முப்பது நாட்கள் அழுதுகொண்டிருந்தார்கள்; மோசேக்காக அழுது துக்கங்கொண்டாடின நாட்கள் முடிந்தது. ஆதி 50:3எண் 20:29ஆதி 50:101 சாமு 25:1அப் 8:2ஏசா 57:1 மோசே நூனின் மகனாகிய யோசுவாவின்மேல் தன் கைகளை வைத்ததால் அவன் ஞானத்தின் ஆவியினால் நிரப்பப்பட்டான்; இஸ்ரவேல் மக்கள் அவனுக்குக் கீழ்ப்படிந்து, யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்தார்கள். ஏசா 11:2தானி 6:3அப் 8:17-19யோவா 3:34அப் 6:61 இராஜா 3:121 இராஜா 3:92இராஜா 2:15 மோசே எகிப்துதேசத்திலே பார்வோனுக்கும், அவனுடைய எல்லா வேலைக்காரர்களுக்கும், அவனுடைய தேசம் அனைத்திற்கும் செய்யும்படி யெகோவா அவனை அனுப்பி நடப்பித்த சகல அடையாளங்களையும் அற்புதங்களையும், யாத் 33:11எண் 12:6-8உபா 18:15-18அப் 3:22-23உபா 5:4-5எபி 3:5-6அப் 7:37 அவன் இஸ்ரவேலர்கள் எல்லோருக்கும் வெளிப்படையாகச் செய்த சகல வல்லமையான செயல்களையும், மகா பயங்கரமான செய்கைகளையும் பார்த்தால், உபா 4:34உபா 7:19சங் 105:26-38சங் 78:43-58 யெகோவாவை முகமுகமாக அறிந்த மோசேயைப்போல, ஒரு தீர்க்கதரிசியும் இஸ்ரவேலில் அவனுக்குப்பின்பு எழும்பினதில்லை என்று விளங்கும்.