யாத்திராகமம் 14

Exodus 14
அத்தியாயம் 14

செங்கடலைக் கடந்து செல்லுதல்

யெகோவா மோசேயை நோக்கி: யாத் 12:1யாத் 13:1 “நீங்கள் திரும்பி மிக்தோலுக்கும் கடலுக்கும் நடுவே பாகால்செபோனுக்கு முன்பாக இருக்கிற ஈரோத் பள்ளத்தாக்கின் முன்பாக முகாமிடவேண்டும் என்று இஸ்ரவேலர்களுக்குச் சொல்லு; அதற்கு எதிராக கடற்கரையில் முகாமிடுங்கள். எரே 44:1எண் 33:7-8யாத் 13:17-18யாத் 14:9எரே 46:14எசேக் 29:10 அப்பொழுது பார்வோன் இஸ்ரவேலர்களைக்குறித்து: அவர்கள் தேசத்திலே திகைத்துத் திரிகிறார்கள்; வனாந்திரம் அவர்களை அடைத்துப்போட்டது என்று சொல்லுவான். அப் 4:28எசேக் 38:17சங் 139:41 சாமு 23:231 சாமு 23:7உபா 31:21யாத் 7:3-4எசேக் 38:10-11 ஆகையால், பார்வோன் அவர்களைப் பின்தொடரும்படி, நான் அவன் இருதயத்தைக் கடினப்படுத்தி, நானே யெகோவா என்பதை எகிப்தியர்கள் அறியும்படி, பார்வோனாலும் அவனுடைய எல்லா ராணுவத்தாலும் மகிமைப்படுவேன்” என்றார்; அவர்கள் அப்படியே செய்தார்கள். ரோம 9:22-23யாத் 7:5ரோம 9:17யாத் 7:3யாத் 9:16யாத் 4:21-31யாத் 7:17எசேக் 28:22 மக்கள் ஓடிப்போய்விட்டார்கள் என்று எகிப்தின் ராஜாவிற்கு அறிவிக்கப்பட்டபோது, மக்களுக்கு விரோதமாகப் பார்வோனும் அவனுடைய ஊழியக்காரர்களும் மனம் மாறி: “நமக்கு வேலை செய்யாதபடி நாம் இஸ்ரவேலர்களைப் போகவிட்டது என்ன காரியம்” என்றார்கள். சங் 105:25யாத் 12:33எரே 34:10-17லூக் 11:24-262 பேது 2:20-22 அவன் தன்னுடைய இரதத்தைப் பூட்டி, தன்னுடைய மக்களைக் கூட்டிக்கொண்டு, முதல்தரமான அறுநூறு இரதங்களையும், எகிப்திலுள்ள மற்ற எல்லா இரதங்களையும், அவைகள் எல்லாவற்றிற்கும் அதிபதிகளான வீரர்களையும் கூட்டிக்கொண்டு போனான். யாத் 15:4சங் 20:7யாத் 14:23ஏசா 37:24நியாயாதி 4:15நியாயாதி 4:3சங் 68:17யோசு 17:16-18 யெகோவா எகிப்தின் ராஜாவாகிய பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் இஸ்ரவேலர்களைப் பின்தொடர்ந்தான், இஸ்ரவேலர்கள் பலத்த கையுடன் புறப்பட்டுப் போனார்கள். அப் 13:17எண் 33:3உபா 26:8யாத் 13:16யாத் 14:4யாத் 6:1உபா 32:27யாத் 13:18 எகிப்தியர்கள் பார்வோனுடைய எல்லாக் குதிரைகளுடனும், இரதங்களோடும் அவனுடைய குதிரைவீரர்களோடும் சேனைகளோடும் அவர்களைத் தொடர்ந்துபோய், கடலின் அருகிலே பாகால்செபோனுக்கு எதிரே இருக்கிற ஈரோத் பள்ளத்தாக்கின் முன்பாக முகாமிட்டிருக்கிற அவர்களை நெருங்கினார்கள். யாத் 15:9யோசு 24:6யாத் 14:2 பார்வோன் அருகில் வருகிறபோது, இஸ்ரவேலர்கள் தங்களுடைய கண்களை ஏறெடுத்துப்பார்த்து, எகிப்தியர்கள் தங்களுக்குப் பின்னே வருகிறதைக் கண்டு, மிகவும் பயந்தார்கள்; அப்பொழுது இஸ்ரவேலர்கள் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டார்கள். சங் 107:6யோசு 24:7நெகே 9:9சங் 34:17ஏசா 51:12-13மத் 8:25-262 நாளாக 18:31மத் 14:30-31 அன்றியும் அவர்கள் மோசேயை நோக்கி: “எகிப்திலே கல்லறைகள் இல்லையென்றா வனாந்திரத்திலே சாகும்படி எங்களைக் கொண்டுவந்தீர்? நீர் எங்களை எகிப்திலிருந்து புறப்படச்செய்ததால், எங்களுக்கு இப்படிச் செய்தது ஏன்? எண் 14:1-4சங் 106:7-8யாத் 15:23-24யாத் 16:2-3யாத் 17:2-3எண் 11:1எண் 11:15யாத் 5:22 நாங்கள் எகிப்திலே இருக்கும்போது, எகிப்தியர்களுக்கு வேலை செய்ய எங்களைச் சும்மா விட்டுவிடும் என்று சொன்னோம் அல்லவா? நாங்கள் வனாந்திரத்திலே சாவதைவிட எகிப்தியர்களுக்கு வேலைசெய்கிறது எங்களுக்கு நலமாக இருக்குமே” என்றார்கள். யோனா 4:3யாத் 6:9யோனா 4:8யாத் 3:9யாத் 5:21ஓசி 4:17மாற் 1:24மாற் 5:17-18 அப்பொழுது மோசே மக்களை நோக்கி: “பயப்படாதிருங்கள்; நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக் யெகோவா உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியர்களை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள். 2 நாளாக 20:172 நாளாக 20:15யாத் 14:30ஏசா 41:10-142இராஜா 6:16புலம் 3:26ஏசா 35:4சங் 27:1-2 யெகோவா உங்களுக்காக யுத்தம்செய்வார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள்” என்றான். உபா 3:22உபா 20:42 நாளாக 20:17உபா 1:30யோசு 23:3ஏசா 30:15யோசு 23:10யாத் 15:3

அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “நீ என்னிடம் முறையிடுகிறது என்ன? புறப்பட்டுப் போங்கள் என்று இஸ்ரவேலர்களுக்குச் சொல்லு. யோசு 7:10எஸ்றா 10:4-5யாத் 17:4நெகே 9:9 நீ உன்னுடைய கோலை ஓங்கி, உன்னுடைய கையைக் கடலின்மேல் நீட்டி, கடலைப் பிளந்துவிடு; அப்பொழுது இஸ்ரவேல் மக்கள் கடலின் நடுவாக வறண்ட நிலத்தில் நடந்துபோவார்கள். யாத் 7:19யாத் 4:17யாத் 4:2யாத் 4:20யாத் 14:26யாத் 7:9ஏசா 10:26யாத் 14:21-22 எகிப்தியர்கள் உங்களைப் பின்தொடர்ந்து வரும்படி நான் அவர்களின் இருதயத்தைக் கடினப்படுத்தி பார்வோனாலும் அவன் இரதங்கள் குதிரைவீரர்கள் முதலாகிய அவனுடைய எல்லா இராணுவத்தாலும் மகிமைப்படுவேன். யாத் 14:8யாத் 14:4உபா 32:39எசேக் 34:11எசேக் 34:20யாத் 7:13-14எசேக் 5:8எசேக் 6:3 இப்படி நான் பார்வோனாலும் அவனுடைய இரதங்களாலும் அவனுடைய குதிரைவீரர்களாலும் மகிமைப்படும்போது, நானே யெகோவா என்பதை எகிப்தியர்கள் அறிவார்கள் என்றார். யாத் 7:5யாத் 14:4யாத் 7:17 அப்பொழுது இஸ்ரவேலர்களின் சேனைக்கு முன்னாக நடந்த தேவதூதனானவர் விலகி, அவர்களுக்குப் பின்னாக நடந்தார்; அவர்களுக்கு முன்பு இருந்த மேகத்தூணிலும் விலகி, அவர்கள் பின்னே நின்றது. ஏசா 63:9யாத் 32:34யாத் 23:20-21எண் 20:16யாத் 13:21-22யாத் 14:24 அது எகிப்தியர்களின் சேனையும் இஸ்ரவேலர்களின் சேனையும் இரவுமுழுவதும் ஒன்றோடொன்று சேராதபடி அவைகள் நடுவில் வந்தது; எகிப்தியர்களுக்கு அது மேகமும் இருளாகவும் இருந்தது, இஸ்ரவேலர்களுக்கோ அது இரவை வெளிச்சமாக்கிற்று. 2 கொரி 2:15-16ஏசா 8:14நீதி 4:18-19சங் 18:11 மோசே தன்னுடைய கையைக் கடலின்மேல் நீட்டினான்; அப்பொழுது யெகோவா இரவுமுழுவதும் பலத்த கிழக்குக் காற்றினால் கடல் ஒதுங்கும்படிச் செய்து, அதை வறண்டுபோகச்செய்தார்; தண்ணீர் பிளந்து பிரிந்துபோனது. ஏசா 63:12யாத் 15:8சங் 66:6நெகே 9:11ஏசா 51:10யோசு 4:23சங் 74:13சங் 78:13 இஸ்ரவேலர்கள் கடலின் நடுவாக வறண்ட நிலத்தில் நடந்துபோனார்கள்; அவர்களுடைய வலதுபுறத்திலும் அவர்களுடைய இடதுபுறத்திலும் தண்ணீர் அவர்களுக்கு மதிலாக நின்றது. எபி 11:29யாத் 15:19சங் 66:6யாத் 14:29சங் 78:131 கொரி 10:1யாத் 15:8ஏசா 63:13 அப்பொழுது எகிப்தியர்கள் அவர்களைத் தொடர்ந்து, பார்வோனுடைய எல்லாக் குதிரைகளோடும் இரதங்களோடும் குதிரைவீரர்களோடும் அவர்கள் பின்னால் கடலின் நடுவே நடந்துபோனார்கள். யாத் 14:17யாத் 15:191 இராஜா 22:20பிரச 9:3யாத் 15:9ஏசா 14:24-27 காலை நேரத்தில் யெகோவா அக்கினியும் மேகமுமான மண்டலத்திலிருந்து எகிப்தியர்களின் சேனையைப் பார்த்து, அவர்களுடைய சேனையைக் கலங்கடித்து, யாத் 13:21யாத் 14:25சங் 77:16-19யாத் 14:19-20யோபு 23:15-16யோபு 34:20யோபு 34:29யோபு 40:12 அவர்களுடைய இரதங்களிலிருந்து சக்கரங்கள் கழன்றுபோகவும், அவர்கள் தங்களுடைய இரதங்களை வருத்தத்தோடு நடத்தவும் செய்தார்; அப்பொழுது எகிப்தியர்கள்: “இஸ்ரவேலர்களைவிட்டு ஓடிப்போவோம், யெகோவா அவர்களுக்குத் துணைநின்று எகிப்தியர்களுக்கு விரோதமாக யுத்தம்செய்கிறார்” என்றார்கள். யாத் 14:141 சாமு 4:7-8உபா 3:22எரே 51:21யோபு 20:24ஆமோ 5:19ஆமோ 9:1யோபு 11:20

பார்வோனுடைய இராணுவம் அனைத்தையும் மூடிக்கொண்டது

யெகோவா மோசேயை நோக்கி: “தண்ணீர் எகிப்தியர்கள்மேலும் அவர்களுடைய இரதங்களின்மேலும் அவர்களுடைய குதிரைவீரர்களின்மேலும் திரும்பும்படி, உன்னுடைய கையைக் கடலின்மேல் நீட்டு” என்றார். யாத் 14:16யாத் 8:5யாத் 1:22யாத் 7:19யாக் 2:13நியாயாதி 1:6-7மத் 7:2மத் 8:27 அப்படியே மோசே தன்னுடைய கையைக் கடலின்மேல் நீட்டினான்; அதிகாலையில் கடல் பலமாகத் திரும்பி வந்தது; எகிப்தியர்கள் அதற்கு எதிராக ஓடும்போது, யெகோவா அவர்களைக் கடலின் நடுவே அமிழ்த்திப்போட்டார். யோசு 4:18சங் 78:53உபா 11:4எபி 11:29யாத் 14:21-22யாத் 15:1-21நியாயாதி 5:20-21 தண்ணீர் திரும்பிவந்து, இரதங்களையும் குதிரைவீரர்களையும், அவர்கள் பின்னாக கடலில் நுழைந்திருந்த பார்வோனுடைய இராணுவம் அனைத்தையும் மூடிக்கொண்டது; அவர்களில் ஒருவனாகிலும் தப்பவில்லை. சங் 78:53சங் 106:9-11ஆப 3:13ஆப 3:8-10சங் 136:15எபி 11:292 நாளாக 20:24உபா 11:4 இஸ்ரவேலர்களோ கடலின் நடுவாக வறண்ட நிலத்தின் வழியாக நடந்துபோனார்கள்; அவர்களுடைய வலதுபுறத்திலும் அவர்களுடைய இடதுபுறத்திலும் தண்ணீர் அவர்களுக்கு மதிலாக நின்றது. யாத் 14:22ஏசா 43:2ஏசா 51:10ஏசா 51:13ஏசா 63:12-13யோபு 38:8-11யோசு 3:16சங் 77:19-20 இப்படியாகக் யெகோவா அந்த நாளிலே இஸ்ரவேலர்களை எகிப்தியர்களின் கைக்குத் தப்புவித்தார்; கடற்கரையிலே எகிப்தியர்கள் செத்துக்கிடக்கிறதை இஸ்ரவேலர்கள் கண்டார்கள். சங் 106:10சங் 106:8யூதா 1:5சங் 58:10சங் 92:9-111 சாமு 14:23யாத் 14:13சங் 59:10 யெகோவா எகிப்தியர்களில் செய்த அந்த மகத்தான செயல்களை இஸ்ரவேலர்கள் கண்டார்கள்; அப்பொழுது மக்கள் யெகோவாவுக்குப் பயந்து, யெகோவாவிடத்திலும் அவருடைய ஊழியக்காரனாகிய மோசேயினிடத்திலும் நம்பிக்கை வைத்தார்கள். யோவா 2:11யோவா 11:45யோவா 2:23-25யோவா 8:30-32சங் 106:12-131 சாமு 12:182 நாளாக 20:20யாத் 19:9