யாத்திராகமம் 31

Exodus 31
அத்தியாயம் 31

பெசலெயேலும் அகோலியாபும். யாத். 35:30-36:1

பின்னும் யெகோவா மோசேயை நோக்கி: “நான் யூதாவின் கோத்திரத்தில் ஊருடைய மகனான ஊரியின் மகன் பெசலெயேலைப் பெயர்சொல்லி அழைத்து, யோவா 3:27யாத் 35:30யாத் 36:1யாத் 33:17ஏசா 45:3-41 நாளாக 2:19-20யாத் 33:12யாத் 37:1 வித்தியாசமான வேலைகளை அவன் யோசித்துச் செய்கிறதற்கும், பொன்னிலும் வெள்ளியிலும் வெண்கலத்திலும் வேலைசெய்வதற்கும், யாத் 35:311 இராஜா 7:14ஏசா 28:261 கொரி 12:4-11ஏசா 28:61 இராஜா 3:9 இரத்தினங்களை முத்திரைவெட்டாக வெட்டிப் பதிக்கிறதற்கும், மரத்தில் அலங்காரவேலைகளைச் செய்வதற்கும், 1 இராஜா 7:142 நாளாக 2:13-142 நாளாக 2:7யாத் 25:32-35யாத் 26:1யாத் 28:15 மற்றும் எல்லாவித வேலைகளையும் யூகித்துச் செய்வதற்கும் வேண்டிய ஞானமும், புத்தியும், அறிவும் அவனுக்கு உண்டாக, அவனை தேவஆவியினால் நிரப்பினேன். யாத் 28:9-21 மேலும், தாண் கோத்திரத்திலுள்ள அகிசாமாகின் மகனாகிய அகோலியாபையும் அவனுடன் துணையாகக் கூட்டினதுமட்டுமல்லாமல், ஞான இருதயமுள்ள யாவருடைய இருதயத்திலும் ஞானத்தை அருளினேன்; நான் உனக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் அவர்கள் செய்வார்கள். யாத் 28:3யாத் 35:10யாத் 35:34அப் 13:2யாக் 1:16-17லூக் 10:11 இராஜா 3:12பிரச 4:9-12 ஆசரிப்புக்கூடாரத்தையும் சாட்சிப்பெட்டியையும் அதின்மேலுள்ள கிருபாசனத்தையும், கூடாரத்திலுள்ள எல்லா பணிப்பொருட்களையும், யாத் 36:8யாத் 25:10-22யாத் 26:1-37யாத் 27:9-19 மேஜையையும் அதின் பணிப்பொருட்களையும், சுத்தமான குத்துவிளக்கையும் அதின் எல்லா கருவிகளையும், தூபபீடத்தையும், யாத் 37:10-28யாத் 25:23-40யாத் 30:1-10 தகனபலிபீடத்தையும் அதின் எல்லா பணிப்பொருட்களையும், தொட்டியையும் அதின் பாதத்தையும், யாத் 38:1-8யாத் 27:1-8யாத் 30:18-21யாத் 40:11 ஆராதனை ஆடைகளையும், ஆசாரிய ஊழியம் செய்வதற்கான ஆசாரியனாகிய ஆரோனின் பரிசுத்த ஆடைகளையும், அவனுடைய மகன்களின் ஆடைகளையும், யாத் 28:1-43யாத் 39:1-43லேவி 8:13லேவி 8:7-8எண் 4:5-14 அபிஷேக தைலத்தையும், பரிசுத்த ஸ்தலத்திற்கு வாசனைப்பொருட்களாகிய தூபவர்க்கத்தையும், நான் உனக்குக் கட்டளையிட்டபடி, அவர்கள் செய்யவேண்டும் என்றார். யாத் 37:29யாத் 30:23-38

ஓய்வுநாளின் பிரமாணம்

மேலும், யெகோவா மோசேயிடம்: “நீ இஸ்ரவேலர்களை நோக்கி, நீங்கள் என்னுடைய ஓய்வுநாட்களை அனுசரிக்க வேண்டும்; உங்களைப் பரிசுத்தப்படுத்துகிற யெகோவா நான் என்பதை நீங்கள் அறியும்படி, இது உங்கள் தலைமுறைதோறும் எனக்கும் உங்களுக்கும் அடையாளமாக இருக்கும். எசேக் 20:12எசேக் 20:20லேவி 19:301 தெச 5:23யாத் 20:8-11யாத் 31:17லேவி 20:8யோவா 17:17 ஆகையால், ஓய்வுநாளை அனுசரிக்க வேண்டும்; அது உங்களுக்குப் பரிசுத்தமானது; அதின் பரிசுத்தத்தை கெடுக்கிறவன் கொலைசெய்யப்படவேண்டும்; அந்த நாளிலே வேலைசெய்கிற எந்த ஆத்துமாவும் தன்னுடைய மக்களின் நடுவில் இல்லாதபடி துண்டிக்கப்பட்டுபோவான். யாத் 35:2-3எண் 15:32-36உபா 5:12-15யாத் 20:8எசேக் 20:12-13எசேக் 20:16எசேக் 20:21எசேக் 20:24 ஆறுநாட்களும் வேலைசெய்யலாம்; ஏழாம் நாளோ வேலை செய்யாமல் ஓய்ந்திருக்கும் ஓய்வுநாள்; அது யெகோவாவுக்குப் பரிசுத்தமானது; ஓய்வுநாளில் வேலைசெய்கிறவன் எவனும் கொலைசெய்யப்படவேண்டும். ஆதி 2:2யாத் 16:23லேவி 23:3யாத் 34:21யாத் 31:17யாத் 35:2எரே 17:24-27லூக் 13:14 ஆகையால், இஸ்ரவேலர்கள் தங்களுடைய தலைமுறைதோறும் ஓய்வுநாளை நித்திய உடன்படிக்கையாக அனுசரிக்கும்படி, அதைக் கைக்கொள்ளவேண்டும். எரே 50:5ஆதி 17:11ஆதி 9:13 அது என்றைக்கும் எனக்கும் இஸ்ரவேலர்களுக்கும் அடையாளமாக இருக்கும்; ஆறுநாட்களுக்குள்ளே யெகோவா வானத்தையும் பூமியையும் உண்டாக்கி, ஏழாம் நாளிலே வேலைகளை முடித்து ஓய்ந்திருந்தார் என்றார். யாத் 31:13ஆதி 1:31ஆதி 2:2-3எசேக் 20:12எபி 4:10எசேக் 20:20எபி 4:3-4எரே 32:41

சீனாய்மலையில் அவர் மோசேயோடு பேசி முடிந்தபின்பு, தேவனுடைய விரலினால் எழுதப்பட்ட கற்பலகைகளாகிய இரண்டு சாட்சி பலகைகளை அவனிடம் கொடுத்தார். உபா 4:13யாத் 32:15-16உபா 5:22யாத் 24:122 கொரி 3:3யாத் 8:19உபா 9:9-11யாத் 34:1-4