பயனில்லாத திராட்சைசெடியாகிய எருசலேம்
யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: மனிதகுமாரனே, காட்டிலிருக்கிற செடிகளுக்குள் மற்ற எல்லாச் செடிகொடிகளைவிட திராட்சைச்செடிக்கு மேன்மை என்ன? ஓசி 10:1ஏசா 5:1-7சங் 80:8-16எரே 2:21யோவா 15:1-6லூக் 20:9-16உன்னத 2:15உன்னத 6:11 ஏதாவது ஒரு வேலைசெய்ய அதிலே ஒரு கட்டை எடுக்கப்படுமோ? ஏதாவது ஒரு பொருட்களை தூக்கிவைக்கும்படி ஒரு முளையை அதினால் செய்வார்களோ? லூக் 14:34-35எரே 24:8மத் 5:13மாற் 9:50 இதோ, அது நெருப்பிற்கு இரையாக எறியப்படும்; அதின் இரண்டுமுனைகளையும் நெருப்பு எரித்துப்போடும்; அதின் நடுத்துண்டும் வெந்துபோகும்; அது எந்த வேலைக்காவது உதவுமோ? யோவா 15:6ஏசா 27:11சங் 80:16ஆமோ 4:11எசேக் 19:14எபி 12:29எபி 6:8ஏசா 1:31 இதோ, அது வேகாமல் இருக்கும்போதே ஒரு வேலைக்கும் உதவாமல் இருக்க, நெருப்பு அதை எரித்து, அது வெந்துபோனபின்பு, அது இனி ஒரு வேலைக்கு உதவுவது எப்படி? எரே 3:16 ஆதலால், யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: காட்டுச்செடிகளுக்குள் இருக்கிற திராட்சைச்செடியை நான் நெருப்பிற்கு இரையாக ஒப்புக்கொடுத்ததுபோல, எருசலேமின் குடிகளையும் அப்படியே ஒப்புக்கொடுத்து, எசேக் 15:2எசேக் 17:3-10ஏசா 5:1-6ஏசா 5:24-25எரே 21:7எரே 24:8-10எரே 25:18எரே 25:9-11 என்னுடைய முகத்தை அவர்களுக்கு விரோதமாகத் திருப்புவேன்; அவர்கள் ஒரு நெருப்பிலிருந்து நீங்கித் தப்பினாலும், வேறே நெருப்பு அவர்களை எரிக்கும்; அப்படியே நான் என்னுடைய முகத்தை அவர்களுக்கு விரோதமாகத் திருப்பும்போது, நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்கள். எசேக் 14:8ஆமோ 9:1-4ஏசா 24:18சங் 34:161 இராஜா 19:17எசேக் 6:7எரே 21:10லேவி 26:17 அவர்கள் துரோகம்செய்தபடியினால், நான் தேசத்தைப் பாழாய்ப் போகச்செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார் என்றார். எசேக் 6:142 நாளாக 36:14-16எசேக் 14:13-21எசேக் 17:20எசேக் 33:29ஏசா 24:3-12ஏசா 6:11எரே 25:10-11