பாவம் செய்கிற ஆத்துமா சாகும்
யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: பிதாக்கள் திராட்சைக்காய்களை சாப்பிட்டார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப்போனது என்னும் பழமொழியை நீங்கள் இஸ்ரவேல் தேசத்தைக்குறித்துச் சொல்லுகிறது என்ன? எரே 31:29-30புலம் 5:7எசேக் 37:11எசேக் 37:19எசேக் 17:12எசேக் 37:25ஏசா 3:15எசேக் 25:3 இனி இஸ்ரவேலில் இந்தப் பழமொழியைச் சொல்வது இல்லை என்பதை என்னுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். எசேக் 18:19-20எசேக் 18:30எசேக் 33:11-20எசேக் 36:31-32ரோம 3:19 இதோ, எல்லா ஆத்துமாக்களும் என்னுடையவைகள்; தகப்பனின் ஆத்துமா எப்படியோ, அப்படியே மகனின் ஆத்துமாவும் என்னுடையது; பாவம்செய்கிற ஆத்துமாவே சாகும். எசேக் 18:20ரோம 6:23எண் 16:22எபி 12:9கலா 3:10-13சகரி 12:1கலா 3:22எண் 27:16 ஒருவன் நீதிமானாக இருந்து, நியாயத்தையும் நீதியையும் செய்து, எசேக் 33:141 யோவா 3:7நீதி 21:31 யோவா 2:291 யோவா 2:31 யோவா 5:2-5ஆதி 18:19யாக் 1:22-25 மலைகளின்மேல் சாப்பிடாமலும், இஸ்ரவேல் மக்களின் அசுத்தமான சிலைகளுக்கு நேராகத் தன்னுடைய கண்களை ஏறெடுக்காமலும் தன்னுடைய அயலானுடைய மனைவியைத் தீட்டுப்படுத்தாமலும் மாதவிடாயுள்ள பெண்ணுடன் சேராமலும், எசேக் 18:15உபா 4:19எசேக் 18:11-12எசேக் 20:24எசேக் 22:9-11எசேக் 6:13லேவி 20:10லேவி 20:18 ஒருவனையும் ஒடுக்காமலும், கொள்ளையிடாமலும் இருந்து, கடன் வாங்கினவனுக்கு அடைமானத்தைத் திரும்பக்கொடுத்து, தன்னுடைய அப்பத்தைப் பசித்தவனுக்குப் பங்கிட்டு, ஆடையில்லாதவனுக்கு ஆடை அணிவித்து, எசேக் 18:16யாத் 22:26எசேக் 18:12உபா 24:12-13எசேக் 33:15ஆமோ 2:8ஆமோ 3:10யாத் 22:21-24 வட்டிக்குக் கொடுக்காமலும், அதிக லாபம் வாங்காமலும், அநியாயத்திற்குத் தன்னுடைய கையை விலக்கி, மனிதர்களுக்குள்ள வழக்கை உண்மையாகத் தீர்த்து, யாத் 22:25சகரி 8:16உபா 23:19-20லேவி 25:35-37உபா 1:16-17உபா 16:18-20எசேக் 18:13எசேக் 18:17 என்னுடைய கட்டளைகளின்படி நடந்து, என்னுடைய நியாயங்களைக் கைக்கொண்டு, உண்மையாக இருந்தால் அவனே நீதிமான்; அவன் பிழைக்கவே பிழைப்பான் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். எசேக் 20:11ஆப 2:4ஆமோ 5:41 யோவா 2:29உபா 10:12-13ரோம 1:171 யோவா 3:7எசேக் 18:17 ஆனாலும் அவனுக்கு ஒரு மகன் பிறந்து, அவன் கள்ளனும் இரத்தம் சிந்துகிறவனும், மேற்சொல்லிய கடமைகளின்படி நடக்காமல், யாத் 21:121 யோவா 3:12யாத் 22:2ஆதி 9:5-6யோவா 18:40லேவி 19:13மல்கி 3:8-9எண் 35:31 இவைகளில் ஒன்றுக்கு ஒப்பானதைச் செய்கிறவனுமாக இருந்து, மலைகளின்மேல் சாப்பிட்டு, தன்னுடைய அயலானுடைய மனைவியைத் தீட்டுப்படுத்தி, 1 யோவா 3:221 இராஜா 13:221 இராஜா 13:8எசேக் 18:15எசேக் 18:6-7யாக் 2:17யோவா 13:17யோவா 15:14 சிறுமையும் எளிமையுமானவனை ஒடுக்கி, கொள்ளைக்காரனாக இருந்து, அடைமானத்தைத் திரும்பக் கொடுக்காமல், அசுத்தமான சிலைகளுக்கு நேராக தன்னுடைய கண்களை ஏறெடுத்து, அருவருப்பானதைச் செய்து, எசேக் 8:17எசேக் 8:62இராஜா 21:11ஆமோ 4:1எசேக் 18:16எசேக் 18:6-7சகரி 7:102இராஜா 23:13 வட்டிக்குக் கொடுத்து, அதிகமாக வட்டி வாங்கினால், அவன் பிழைப்பானோ? அவன் பிழைப்பதில்லை; இந்த எல்லா அருவருப்புகளையும் செய்தானே; அவன் இறக்கவே இறப்பான்; அவன் இரத்தப்பழி அவன்மேல் இருக்கும். யாத் 22:25எசேக் 18:8லேவி 20:9அப் 18:6எசேக் 18:17எசேக் 18:24எசேக் 18:28எசேக் 18:32 பின்னும், இதோ, அவனுக்கு ஒரு மகன் பிறந்து, அவன் தன்னுடைய தகப்பன் செய்த எல்லாப் பாவங்களையும் கண்டு, தான் அவைகளின்படி செய்யாதபடி எச்சரிக்கையாக இருந்து, 2 நாளாக 34:21நீதி 23:241 பேது 1:182 நாளாக 29:3-11எசேக் 18:10எசேக் 18:28எசேக் 20:18ஆகா 1:5 மலைகளின்மேல் சாப்பிடாமலும், இஸ்ரவேல் மக்களின் அசுத்தமான சிலைகளுக்கு நேராகத் தன்னுடைய கண்களை ஏறெடுக்காமலும், தன்னுடைய அயலானுடைய மனைவியைத் தீட்டுப்படுத்தாமலும், எசேக் 18:6-7எசேக் 18:11-13 ஒருவனையும் ஒடுக்காமலும், அடைமானத்தை வைத்துக்கொண்டிருக்காலும், கொள்ளையடிக்காமலும், தன்னுடைய ஆகாரத்தை பசித்தவனுக்குப் பங்கிட்டு, ஆடை இல்லாதவனுக்கு ஆடை அணிவித்து, எசேக் 18:7பிரச 11:1-2ஏசா 58:7-10யோபு 22:7யோபு 31:19லூக் 11:41லூக் 14:13நீதி 22:9 சிறுமையானவனை துன்பப்படுத்தாதபடித் தன்னுடைய கையை விலக்கி, வட்டியும் அதிகமாக வாங்காமலிருந்து என்னுடைய நியாயங்களின்படி செய்து, என்னுடைய கட்டளைகளில் நடந்தால், அவன் தன் தகப்பனுடைய அக்கிரமத்தினால் சாகாமல் பிழைக்கவே பிழைப்பான். எசேக் 18:8-9தானி 4:27எசேக் 18:13எசேக் 18:19-21எசேக் 18:28எசேக் 20:18எசேக் 20:30எசேக் 3:21 அவனுடைய தகப்பனோவென்றால் கொடுமைசெய்து, சகோதரனைக் கொள்ளையிட்டு, தகாததைத் தன்னுடைய மக்களின் நடுவிலே செய்தபடியினால், இதோ, இவன் தன்னுடைய அக்கிரமத்திலே மரிப்பான். எசேக் 3:18எசேக் 18:20எசேக் 18:24எசேக் 18:26எசேக் 18:4ஏசா 3:11யோவா 8:21யோவா 8:24 இதெப்படி, மகன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமக்கிறதில்லையா என்று நீங்கள் கேட்டால், மகன் நியாயத்தையும் நீதியையும் செய்து, என்னுடைய கட்டளைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்ததினால், அவன் பிழைக்கவே பிழைப்பான். யாத் 20:5சகரி 1:3-6உபா 5:9எசேக் 18:2எசேக் 18:9எசேக் 20:18-20எரே 15:42இராஜா 23:26 பாவம்செய்கிற ஆத்துமாவே சாகும்; மகன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை, தகப்பன் மகனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை; நீதிமானுடைய நீதி அவன்மேல் தான் இருக்கும், துன்மார்க்கனுடைய துன்மார்க்கமும் அவன்மேல் தான் இருக்கும். 2இராஜா 14:6உபா 24:16எசேக் 18:4எரே 31:29-302 நாளாக 25:4மத் 16:271 இராஜா 8:32ரோம 2:6-9 துன்மார்க்கன் தான் செய்த எல்லாப் பாவங்களையும் விட்டுத் திரும்பி, என்னுடைய கட்டளைகளையெல்லாம் கைக்கொண்டு, நியாயத்தையும் நீதியையும் செய்தால், அவன் பிழைக்கவே பிழைப்பான், அவன் மரிப்பதில்லை. எசேக் 33:19தீத் 2:11-14எசேக் 18:27-28அப் 3:19ரோம 8:13எசேக் 18:9நீதி 28:131 தீமோ 1:13-16 அவன் செய்த எல்லா மீறுதல்களும் நினைக்கப்படுவதில்லை; அவன் தான் செய்த நீதியிலே பிழைப்பான். மீகா 7:19எசேக் 33:16ஏசா 43:25எசேக் 18:24சங் 18:20-24எபி 8:12எரே 50:20சங் 103:12 துன்மார்க்கன் மரணமடைகிறது எனக்கு எவ்வளவேனும் பிரியமோ? அவன் தன்னுடைய வழிகளை விட்டுத் திரும்பிப் பிழைப்பது அல்லவோ எனக்குப் பிரியம் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். எசேக் 33:111 தீமோ 2:42 பேது 3:9எசேக் 18:32லூக் 15:10லூக் 15:32சங் 147:11லூக் 15:22-24 நீதிமான் தன்னுடைய நீதியைவிட்டு விலகி, அநீதி செய்து, துன்மார்க்கன் செய்கிற எல்லா அருவருப்புகளின்படியும் செய்தால், அவன் பிழைப்பானோ? அவன் செய்த அவனுடைய எல்லா நீதிகளும் நினைக்கப்படுவதில்லை; அவன் செய்த தன்னுடைய துரோகத்திலேயும் அவன் செய்த தன்னுடைய பாவத்திலேயும் மரிப்பான். எசேக் 33:18நீதி 21:162 யோவா 1:8எசேக் 33:12-132 நாளாக 24:17-22கலா 3:4வெளி 3:111 யோவா 2:19 நீங்களோ, ஆண்டவருடைய வழி சரியாக இருக்கவில்லை என்கிறீர்கள்; இஸ்ரவேல் மக்களே, கேளுங்கள்; என்னுடைய வழி சரியாக இருக்காதோ? உங்களுடைய வழிகள் அல்லவோ சரியில்லாததாக இருக்கிறது. எசேக் 33:17மல்கி 3:13-15எசேக் 33:20ஆதி 18:25எரே 12:1மல்கி 2:17செப்ப 3:5எசேக் 18:29 நீதிமான் தன்னுடைய நீதியைவிட்டு விலகி, அநீதிசெய்து அதிலே இறந்தால், அவன் செய்த தன்னுடைய அநீதியினால் அவன் மரிப்பான். துன்மார்க்கன் தான் செய்த துன்மார்க்கத்தைவிட்டு விலகி, நியாயத்தையும் நீதியையும் செய்தால், அவன் தன்னுடைய ஆத்துமாவைப் பிழைக்கச்செய்வான். எசேக் 18:21ஏசா 1:18ஏசா 55:7அப் 3:191 தீமோ 4:16அப் 2:40அப் 20:21அப் 26:20 அவன் எச்சரிப்படைந்து, தான் செய்த எல்லா மீறுதல்களையும் விட்டுத் திரும்புகிறபடியினாலே அவன் பிழைக்கவே பிழைப்பான், அவன் மரிப்பதில்லை. உபா 32:29லூக் 15:17-18கொலோ 3:5-9யாக் 2:10-12எசேக் 12:3எசேக் 18:14எசேக் 18:21எசேக் 18:31 இஸ்ரவேல் மக்களோ: ஆண்டவருடைய வழி ஒழுங்காக இருக்கவில்லை என்கிறார்கள்; இஸ்ரவேல் மக்களே, என்னுடைய வழிகள் ஒழுங்காக இருக்காதோ? உங்களுடைய வழிகள் அல்லவோ ஒழுங்கில்லாததாக இருக்கிறது. எசேக் 18:25நீதி 19:3எசேக் 18:2 ஆகையால் இஸ்ரவேல் மக்களே, நான் உங்களில் அவனவனை அவனவன் வழிகளுக்குத் தகுந்தபடி நியாயந்தீர்பேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்; நீங்கள் மனந்திரும்புங்கள், உங்களுடைய எல்லா மீறுதல்களையும் விட்டுத் திரும்புங்கள்; அப்பொழுது அக்கிரமம் உங்களுடைய பொல்லாப்புக்கு காரணமாக இருப்பதில்லை. எசேக் 18:21மத் 16:27மத் 3:2எசேக் 14:6லூக் 13:3எசேக் 7:3தானி 9:13ஓசி 12:6 நீங்கள் துரோகம்செய்த உங்களுடைய எல்லாத் துரோகங்களையும் உங்கள்மேல் இல்லாமல் விலக்கி, உங்களுக்குப் புது இருதயத்தையும் புது ஆவியையும் உண்டாக்கிக்கொள்ளுங்கள்; இஸ்ரவேல் மக்களே, நீங்கள் ஏன் இறக்கவேண்டும்? சங் 51:10எசேக் 36:26எசேக் 11:19ரோம 8:13ஏசா 1:16-17ரோம 12:2எசேக் 33:111 பேது 2:1 மனந்திரும்புங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்; மரணமடைகிறவனுடைய மரணத்தை நான் விரும்புவதில்லை என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். 2 பேது 3:9எசேக் 18:23எசேக் 33:11புலம் 3:33